தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 31, 2019

UAE to AUSTRALIA


Place: Australia Sydney Banks town Airport Me & My Frantz Mr. Chokkan

ஸ்திரேலியாவில் இருக்கும் நமது இனிய நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள் நான் அபுதாபியிலிருக்கும் பொழுது மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் விடுமுறை கிடைத்தால் வாங்களேன் ஆஸியை சுற்றிப் பார்த்து விட்டு போகலாம் என்று... மனதுக்குள் என்ன நினைத்திருந்தாரோ.... நண்பரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பது நட்பின் இலக்கணம் அல்லவா ஆகவே எமிரேட்ஸில் தேசியதினம் அரசு தினத்தோடு சேர்ந்து ஐந்து தினங்கள் விடுமுறை கொடுத்தார்கள். மேலும் ஐந்து நாட்கள் விடுமுறை எடுத்து மணிகண்டனுக்கு வேஷ்டி சட்டை எடுத்துக் கொண்டு விசிட் அடித்தேன்.

வாங்க கில்லர்ஜி சௌக்கியமா ? பயணமெல்லாம் எப்படி ?
நல்லா இருக்கேன். நீங்க சௌக்கியமா ?
சௌக்கியம் கில்லர்ஜி எங்கேயிருந்து வர்றீங்க ?
கிளிநொச்சியிலிருந்து...
ஏன்... அபுதாபியிலிருந்து வரலியா ?
அபுதாபியில்தான் ஃப்ளைட் ஏறுனேன், வழியில் பஞ்சராயிடுச்சு அப்படியே கிளிநொச்சியில் இறக்கி பஞ்சர் பார்த்துட்டு வர்றோம்.
யாருக்கு பஞ்சர் ஆச்சு ?
யாருக்கா ? ஃபிளைட்டுக்குத்தான்.
ஃபிளைட் எப்படி பஞ்சராகும் ?
அதுக்கு டயர் இல்லையா ? ஏதோ கருவேலமுள் குத்திடுச்சாம்.
கருவேலமுள் குத்த ஃபிளைட் எங்கே போச்சு அதான் ரன்வேயில் சிமெண்ட் ரோடு போட்டு இருப்பாங்களே... ?
ஏதோ அந்தப்பக்கமா பறந்து போன குருவி போட்டு இருக்கும்.
குருவியா... இப்பத்தான் செல்போன் டவர் வச்சதுல குருவி எல்லாம் அழிஞ்சு போச்சே ?
என்ன நீங்க விசு மாதிரி வழ வழன்னு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கீங்க பசிக்குது வீட்டுக்கு கூட்டிட்டு போயி சகோ உமையாள் காயத்ரி மாதிரி எனக்கு பிடிச்ச பாகற்காய் பொரியல், கத்தரிக்காய் கூட்டு. கொத்தவரங்காய் அவியல், காலி ஃளவர் பாயா, வடை, பாயசத்தோடு சாப்பிடச் சொல்வீங்கன்னு பார்த்தால் கேள்வி கேட்டே கொன்னுருவீங்க போலயே... ?
ஆமா, ஆமா நானும் உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன். ஆஸ்திரேலியா டாலரில் சாப்பிட்டு, போரடிச்சுப் போச்சு பத்து நாளைக்கு எமிரேட்ஸ் திர்ஹாம்ஸ்ல சாப்பிடுவோம்
திர்ஹாம்ஸ்தான் இங்கே செல்லாதே ?
எக்சேஞ்ல கொடுத்து ஆஸி டாலராக மாத்திடுவோம்.
அப்படினாலும் ரெண்டும் ஒன்றுதானே ?
அதெப்படி ஒன்றாகும்.... டாலராக மாற்றினாலும் பூர்வீகம் திர்ஹாம்தானே ?
பூர்ணிமாவா என்ன குழப்புறீங்க ?
பூர்ணிமாவும் இல்லை, பிரவீணாவும் இல்லை இப்ப தெளிவாக சொல்றேன். நீங்க அபுதாபியிலிருந்து வந்தாலும், அபுதாபிக்காரன்னு சொல்ல முடியுமா ? பூர்வீகம் தேவகோட்டைதானே... அதனால நீங்க தேவகோட்டையான்தான்
.
என்ன இவரு நம்ம யாஹூ ஐடி பேரை சொல்லாரு... ஹும் என்ன இருந்தாலும் இவரும் நம்ம காரைக்குடிகாரர்தானே... நம்மளை மாதிரித்தானே இருப்பார். ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்விஸ் போனப்பக்கூட இந்த மாதிரி கிராக்கிகிட்டே நாம மாட்டவில்லையே... சரி இவரை கழட்டி விட்டுப்புட்டு ஹோட்டல்ல தங்கிடுவோம் செலவு நமக்கு மட்டும்தானே வரும்... இவரும் கூடவே இருந்தால் சேர்த்தே செலவு செய்யணும் அந்தக்காசுக்கு போகும்போது ஆஸ்திரேலியாவுல கோவணம் பேமஸாமுள்ள நாலு டஜன் வாங்கிட்டு போகலாம்.
என்ன... யோசனை பலமாக இருக்கும் போலயே.... ?
இல்லையில்லை நீங்க பாக்கியராஜ் சொந்தக்காரரோ.... ?
ஆ... மா...மா
பாக்கியராஜ் உங்களுக்கு மாமாவா ?
ஆ.... அப்படித்தான்
அந்த மாதிரி நாட்கள் படத்துல நீங்க நடிச்சு இருக்கியலோ... ?
இல்லை அந்த ஏழு நாட்கள்
ஏழு நாட்கள்தான் நடிச்சீங்களா ?
இல்லை படத்தோட பேரு அந்த ஏழு நாட்கள்
உங்கள்ட்ட பேசுனதுல பசி பறந்து போச்சு.
ஆனா எனக்கு பறக்கலையே...
என்ன சொல்றீங்க ?
எனக்கு பசிக்குதுனு சொல்றேன்.
அப்ப வாங்க உங்க வீட்டுக்கு போயி சகோதரி உமையா....
போயி பிரயோசனம் இல்லையே...
ஏன் ?
என் மனைவி, ஓவியா, இனியா, மணிகண்டன் எல்லோரும் ஸ்கூல் லீவுல காரைக்குடி போயிட்டாங்க...
நீங்க சொல்லவே இல்லையே...
நீங்க கேட்கவே இல்லையே...
சரி வாங்க நல்ல ஹோட்டலா பாருங்க...
ஹோட்டலுக்கா பஞ்சம்... வாங்க பக்கத்திலேயே இருக்கு நடந்தே போவோம்.
எப்பவுமே நீங்க கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பீங்களோ... ?

அப்படி இல்லை கிளிநொச்சியிலிருந்து வர்றேனு சொல்லவும் நான்கூட நினைச்சேன்...
என்ன நினைச்சீங்க... ?
அ.... தாவுது
என்ன... தாவுதா ?
இல்லைங்க...
இப்பத்தான் தாவுதுன்னு சொன்னீங்க... அதுக்குள்ளே இல்லைங்கிறீங்க... ?
நான் நினைச்சது என்னன்னா....
உங்க அண்ணனா... ?
இல்லைங்க.
என்ன முதல தாவுதுனு சொன்னீங்க...
முதலை இல்லை முதல்ல.
அப்படி தெளிவாக பேசுங்க...
தெளிவா பேசாம உங்களை மாதிரி ஃபிளைட்டுல தண்ணியடிச்சுட்டு வந்தா பேசுறோம் ?
பேசுறோம் இல்லை. பேசுறேன் அப்படினு சொல்லுங்க... உங்க பேச்சே குழப்பமாக இருக்கே...
நான் குழப்பவில்லை, நீங்கதான் குழம்புறீங்க... ஃபிளைட்டுல எங்கே உட்கார்ந்து இருந்தீங்க ?
கடைசில மூலையோரமா ஸீட் கொடுத்து இருந்தாங்கே..
அதான் குழம்பிட்டீங்க...
சரி நேற்று நீங்க என்ன சாப்பிட்டீங்க ?
மூளைக்கறி சாப்பிட்டேன்.
அதானே பார்த்தேன்
என்னத்த பார்த்தீங்க ?
இல்லை அதான் நீங்களும் குழம்பிட்டீங்க..
எனக்கும் சந்தேகமாகத்தான் இருந்துச்சு
சரி என்னமோ நினைச்சேன்னு சொன்னீங்களே...
அ... தாவுது
மறுபடியும் ஒன்னுலருந்தா.... டக்குனு சொல்லுமோய்.
டக்
என்ன டக்கு ?
நீங்கதானே டக்குனு சொல்லச் சொன்னீங்க... ?
விசயத்தை சொல்லச் சொன்னேன்.

அப்படியா... இல்லை கிளிநொச்சியிலிருந்து வரவும் நீங்க மொட்டையா வேற இருக்கீங்களா... ஜெயில்லருந்து வந்துருக்கியலோனு....
சரிதான் அப்படினா திருப்பதி கோயிலுக்கு போயிட்டு வர்றவங்க எல்லோரும் ஜெயில்லருந்து வர்றவங்களா ?
அப்படி....... இல்லே...
ஹோட்டல் வந்தது டேபிளில் உட்கார்ந்த சொக்கன் மெனுகார்டை கையில் வைத்துக் கொண்டு இந்தப்பார்ட்டி நம்மளையே சத்தாய்க்கிதே... இதை வச்சு எப்படி பத்து நாளைக்கு காலத்தை ஓட்டுறது ? ஹோட்டலோட கழட்டி விடுவோமாஇ ? ல்லை மோல்டன் ப்ரிட்ஜ் கூட்டிட்டு போயி கூட்டத்துல கோர்த்து விட்டுட்டு எஸ் ஆயிடலாமா ? என யோசித்துக் கொண்டு இருக்க...

டேபிளில் உட்கார்ந்து மெனு கார்டில் படம் பார்த்துக் கொண்டு இருந்த கில்லர்ஜியிடம்....
Excuse me Sir என்றான் சர்வர்
சொக்கன் உங்களுக்கு என்ன வேணும் ?
சிக்கன் பிரியாணி உங்களுக்கு ?
இட்லி போதும் பரவாயில்லையே... இட்லி கிடைக்குதே...
இங்கே இடியாப்பம்கூட கிடைக்கும்.
சொக்கனுக்கு சிக்கன் பிரியாணியும், கில்லர்ஜிக்கு இட்லியும் வர சாப்பிட்டார்கள்.
என்ன சொக்கன் சிட்னியில் சட்னி சரியில்லையே... ?
மெதுவாக பேசுங்க தமிழ்க்காரன் யாராவது கேட்டால் கிட்னியை எடுத்துட்டு விட்ருவாங்கே...
சாப்பிட்டு முடித்ததும் கை கழுவி விட்டு மீண்டும் டேபிளுக்கு வர, சர்வர் பில்லை புக்கோடு வைத்தான். கில்லர்ஜியும், சொக்கனும் மணிபர்ஸை எடுத்து திறந்து கொண்டு...
நான் கொடுக்கிறேன்.
இல்லை நான் கொடுக்கிறேன்.
இல்லையில்லை நான்தான் கொடுப்பேன்.
நான்தான் கொடுப்பேன்.
நான் கொடுக்கிறேனே...
நான் கொடுக்கிறேனே..

முக்கால் மணி நேரமாகியும் பர்ஸிலிருந்து யாரும் பணம் எடுக்காததால் சூழ்நிலையை புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய நாட்டு சர்வர் சொன்னான்.
Excuse me Get out I will pay my self
மறுநொடியே வெளியே நின்றிருந்தார்கள் இருவரும் நினைத்தார்கள் ஒரு அடிமை சிக்கினான் என்று. டாக்ஸியை கை காண்பித்து முதலில் கில்லர்ஜி ஏற, அடுத்து ஏறுவது போல் சொக்கன் கதவைப் பிடித்துக் கொண்டு நிற்க, சாப்பிடும்போது கில்லர்ஜிக்கு தெரியாமல் சொக்கன் மிஸஸுக்கு கொடுத்திருந்த மிஸ்ட் காலுக்கு இப்போது அழைப்பு வர, செல்போனை எடுத்து வடக்கு திசையை பார்த்து பேசிக்கொண்டு இருக்க, கில்லர்ஜி டாக்ஸி டிரைவருக்கு கண் அசைக்க, கார் தெற்கு திசை நோக்கி பறந்தது...
Driver go to Sheraton Hotel
OK Sir
நாளைப்பின்னே வலைப்பதிவு கருத்துரையில் சொக்கன் கேட்டால் நீங்க வண்டியில் ஏறாததால டிரைவர் கோபப்பட்டு வண்டியை கிளப்பிட்டான் எனக்கு ஒன்னுமே புரியலை கால் பண்ணலாம்னா... போன் நம்பர் எழுதி வைத்திருந்த பேப்பர் தொலைஞ்சு போச்சு. செல்லில் நம்பர் ஏற்றி வைக்கலை அப்படினு பின்னூட்டம் இட்டுக்கிறலாம் என்று கில்லர்ஜி நினைக்க...

அரைமணி நேரம் கழித்து ஏற்கனவே கட் செய்த போனில் பேசிக்கொண்டு இருந்த சொக்கன் திரும்பிப் பார்க்க, டாக்ஸி இல்லை அப்பாடா செலவு செய்து ஏர்போட்டுக்கு வந்த சொக்கனுக்கு சோக்கான சிக்கன் பிரியாணி கிடைச்சுச்சு. பத்து நாளைக்கு செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு மனைவி செல்லை யூஸ் பண்ணிக்குவோம். நாளைப்பின்னே கருத்துரையில் கில்லர்ஜி கேட்டால் டாக்ஸியில் நீங்க ஏறும்போது போன் பேசிக்கிட்டு இருந்தேனா... அப்போ ஒருத்தன் ஓடிவந்து மோதிட்டான் போன் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு. திரும்பி பார்த்தால் உங்களைக் காணோம். போலீஸ் ஸ்டேஷன் போகலாம்னா... உங்களுக்கு பேரே சரியில்லையா... என்னைப் புடிச்சு உள்ளே போட்ருவாங்களோன்னு பயந்துக்கிட்டு வீட்டுக்கு போயிட்டேன் ஆமா நீங்க எங்கே போனீங்க ? அப்படினு பின்னூட்டம் போட்டால் போச்சு என சொக்கன் நினைத்து வீட்டுக்கு போயிருப்பாருன்னு நினைச்சுகங்க.. பதிவு நீளுதுல....


சாம்பசிவம்-
விடாக்கண்டனும், கொடாக்கண்டனும் சேர்ந்து சிட்னிக்காரனை சீட்டிங் போட்டுட்டீங்க...

72 கருத்துகள்:

  1. ஹா... ஹா... ஹா... கற்பனை உரையாடல் கலக்கல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ இம்முறை ஸ்ரீராமோ 1ஸ்ட்டூஊஊஊஊஊ:).

      நீக்கு
  2. காலிப்ளவர் பாயாவா!!! அப்படி எல்லாம் வேற செய்வார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் சூட்டி வைப்போம் அதிரா செய்து பார்க்கட்டுமே...

      நீக்கு
  3. சொக்கன் திருவிளையாடல்! கில்லர்ஜி உரையாடல்... ஸூப்பர் போங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... இதுவும் அவர் திருவிளையாடல்தானா...

      நீக்கு
  4. அட கடவுக்கே இன்னைக்கு நீங்கள் கலாய்ப்பதற்கு நான் தான் கிடைச்சேனா.
    ஆனாலும் உங்களுக்கு செம காண்டு நண்பரே. நான் அமலாபாலுடன் புட்பால் விளையாடுனதுக்கு நீங்கள் ஏன் பொறாமை படுகிறீர்கள் அதுவும் இந்த வயசில பொறாமை படுகிறீர்களே என்று கூறியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
    ஆமா, நன் அபுதாபி வந்தால் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா ?

    ஆனாலும் படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன். (விழுவது என்றால் உட்கார்ந்தபடியே விழுவது-உங்கள் பாணியில் சொல்வது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான் ஏன் அமலாபாலுடன் விளையாடணும் ? நாங்களெல்லாம் பஸ் ஃபுட் போர்டுலயே... ஃபுட்பால் விளையாடுற பரம்பரை.

      விருந்தோம்பலில் காரைக்குடியைவிட, தேவகோட்டை ரெண்டரை இஞ்சி உயரம்தான்.

      விடுமுறைக்கு வரும்போது ஒருமுறை வீட்டுக்கு வாங்க...

      நீக்கு
  5. ஹாஹா, எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? நல்லா ரசிச்சுச் சிரிச்சேன். சொக்கனும் இதற்கு என்ன பதில் சொல்லப் போறார்னு பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிரித்தமைக்கு நன்றி.
      சொல்லிட்டாரே.... பார்த்தீர்களா...

      நீக்கு
    2. பார்த்தேன், பார்த்தேன், இப்போத் தானே தெரியுது, விஷயம் அமலாபாலிலே ஆரம்பிச்சதுனு! :))))

      நீக்கு
    3. ஆவின்பாலாக இருந்தால் பிரச்சனை இல்லை. அமலாபால் என்பதால் பிரச்சனை வந்து விட்டது.
      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. எதுக்கு சாப்பிட்டுகிட்டு.நீங்க வரும்போதே சாப்பிட்டுதானே வந்திருப்பீங்கேன்னு சொல்லாமே விட்டாரே..அதுவரை சந்தோசம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே இப்படியும் சொல்வாங்களா...

      நீக்கு
    2. திருநெல்வேலி விருந்தோம்பலை (அதாவது அவங்க சிக்கனம் என்பதை) இப்படிச் சொல்வாங்க. விருந்தினர்கள் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.

      "வாங்க வாங்க... ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க. ஒரு பத்துநாள் தங்கிட்டுப் போகும்படியா நீங்க எங்க வந்திருக்கப்போறீங்க. சுடுகஞ்சியை காலில் கொட்டிக்கிட்டது மாதிரி இன்னைக்கே போகணும்னு சொல்வீங்க"

      அடுத்து சாப்பாட்டுக்கு,

      "சாப்பிடறீங்களான்னு கேட்டா... இல்லை சாப்பிட்டுத்தான் வந்தோம்பீங்க. சரி காபித் தணியவாவது குடிக்கலாம்னா அதுவும் வேண்டாம்னு சொல்வீங்க... இந்தாங்க பானைத் தண்ணீர். குளிச்சியா இருக்கும். இதையாவது குடீங்க"


      கில்லர்ஜி... நானும் நெல்லைதான். அதுனால யோசிச்சு வீட்டுக்கு வாங்க. ஹா ஹா ஹா

      நீக்கு
    3. ஆஹா இப்ப நான்தான் உங்கள் வீட்டுக்கு வர யோசிக்கணுமோ...?

      நீக்கு
  7. நல்லவேளை நடந்த சம்பவத்தைப் போட்டிருக்கீங்க. போன வருஷம் நீங்க கூப்பிட்டபோது நான் அபுதாபி வந்திருந்தால் என் கதி என்னாயிருக்கும்?

    உரையாடல்கள் ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. அது சரி.... பரமக்குடிக்கு திருமணத்துக்கு நம்பி வரலாமா? இல்லை இட்லி சட்னி பார்சலோட தான் வரணுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அபுதாபி வந்து இருந்தால் லீ மெரிடியன் அழைத்துப் போயிருப்பேன் நண்பரே...

      பரமக்குடி வாருங்கள் எமது விருந்தோம்பலை அனுபவிக்கலாம் நண்பரே...

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆஆஆஆ டக்கென செல்ஃபி எடுத்துப், பக்கென இங்கு போட்டிடுங்கோ கில்லர்G:)..

      நீக்கு
    3. எது லீ மெரிடியன் ஹோட்டலையா ?

      நீக்கு
    4. என்னை ஆரும் தடுக்காதீங்கோஓஒ மீ டேம்ஸ்ல.. ஹையோ டங்கு வேற ஸ்லிப்பாகுதே.. தேம்ஸ்ல குடிக்கிறேன்ன் சே.. சே.. குதிக்கிறேன்ன்ன்ன்ன்ன்...:)

      https://53744bf91d44b81762e0-fbbc959d4e21c00b07dbe9c75f9c0b63.ssl.cf3.rackcdn.com/media/91/91E51D39-5333-47B7-8BEA-898C023237F4/Presentation.Large/Jungle-cat-mid-air-jump.jpg

      நீக்கு
    5. யாரும் தடுக்க வந்தால் ??? அவர்களை நான் தடுப்பேன்.

      நீக்கு
    6. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      நீக்கு
  8. நல்ல நகைச்சுவை உங்களுக்கு நண்பரே.ரசித்தேன்.
    ஆமாம் வீட்டிலே திருமணம்.எங்கேயிருந்து நேரம் கிடைக்குது இப்படி எழுத...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் நொடிப்பொழுதில் பதிவுகள் தயாராகும்...
      சில நேரங்களில் நாட்கணக்கில்கூட பதிவுகள் தயாராகாது நண்பரே.

      நீக்கு
  9. ஹா ஹா ஹா ஹா ஹா சொக்காஆஆஆஆஆஆஆஆ இப்படி மாட்டிக்கிட்டீங்களே!! கொடுவா மீசைக்காரரிடம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கற்பனை உரையாடல் மிக அருமை.
    எப்படி எல்லாம் யோசித்து இருக்கிறீர்கள்?
    காலிப்ள்வர் பாயா அதிரா செய்வாரா? சூப்பர்.

    பதிலளிநீக்கு
  11. உங்களால் மட்டுமே இப்படி எழுமுடியும் அண்ணா ஜீ. சிரிச்சு முடியல.
    ஆ.. கிளிநொச்சியா....?? தெரியுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ கிளிநொச்சி தெரியாமல் இருக்குமா ? பலமுறை அபுதாபி போகும்போது அதன் மேலேயேதான் பறந்து இருக்கிறேன்.

      நீக்கு
    2. கிளிநொச்சியில ஏதும் கிளி:) பார்த்திட்டாரோ ஹா ஹா ஹா ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

      நீக்கு
    3. கிளிநொச்சி லிம்புகேஸ்நகர், 795/2a சாவனி தெரு ஊதாக்கலர் கதவு அந்த வீட்டில் போய் என்னைப்பற்றி கேட்டுப்பாருங்கள்.

      நீக்கு
    4. நம்மை வெள்ளை பஸ் ல ஏத்தாமல் நித்திரை கொள்ள மாட்டார் போலிருக்கே:)

      நீக்கு
    5. முயற்சி செய்து பாருங்களேன்...

      நீக்கு
  12. ஹாஹா..... கலக்கல் கலந்துரையாடல்....

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    நல்ல சுவையான சுவாரஸ்யமான உரையாடல். இப்பவும் இப்படியும் சி(ப)லர் விடாகண்டனாக இருக்கிறார்கள்.மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. சில இடங்கள் வாய் விட்டு சிரிக்கும்படியாக இருக்கிறது. அபிதாபியில் இருக்கும் போது நடந்தவையாக காட்டியதால் ஏற்கனவே எழுத நினைத்ததை இப்போது எழுதியுள்ளீர்களா?இப்படி நகைச்சுவையாக சிந்திக்க எழுத தங்களால்தான் முடியும். தங்கள் நகைச்சுவை உணர்வுக்கு பாராட்டுக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்தமைக்கு நன்றி. காரைக்குடிகாரர்கள் எப்பவுமே இப்படித்தான்...

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      அப்பவும் காரைக்குடிகார்கள்தானா?ரசித்தேன். ஹா ஹா ஹா. விடாமல் பதிலளிக்கும் திறனுடைய தேவகோட்டைகார்களையும் ரசித்தேன்.

      சகோதரி உமையாள் காயத்திரியை அவர்களின் அற்புதமான சமையல் திறனை கூறி, நினைவுபடுத்தியுள்ளீர்கள். அவர்கள் சார்பாக எனது நன்றிகள். கொஞ்ச நாட்களாக அவர்கள் வலைத்தளத்தில்
      பதிவுகள் ஏதும் தரவில்லை. இந்த பதிவை அவர்கள் படித்தால்,அவர்கள் இந்த பதிவுக்கு பதிலளிக்க வருவார்கள் என நம்புகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. சகோ ஆர்.உமையாள் காயத்ரி எங்கள் தேவகோட்டை ஆகவேதான் சமையல்கலையில் சிறப்பாக இருக்கிறார்கள்.

      மீள் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      ஆகா.. இங்கேயும் வார்த்தையால் தேவகோட்டை பாணியில் விடாமல் மடக்கி விட்டீர்கள். எங்கள் அம்மாவும் அவர்களின் திருமணத்திற்கு முன் வசித்தது தேவகோட்டைதான். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. மகிழ்ச்சியான செய்தி நன்றி சகோ

      நீக்கு
  14. கற்பனை சந்திப்பையும் 'கலகல' என ஆக்குவதில் தாங்கள் வல்லவர் என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  15. படிக்கும்போதே தலையைப் பிய்த்துக் கொள்ளணும் போல் இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உள்ளதை சொன்னதற்கு நன்றி ஐயா.

      நீக்கு
  16. ஹாஹாஹா! நல்ல நகைச்சுவை!

    பதிலளிநீக்கு
  17. நகைச்சுவை இழையோடுகிறது பாராட்டுகள் சார்

    பதிலளிநீக்கு
  18. ஹா ஹா ஹா நான் ஒழுங்காத்தான்.. ஸ்ரெடியாத்தான் போஸ்ட் படிக்க வந்தேன்:) வந்து இவ்ளோ நேரமாப் படிச்சதில என்னமோ ஆகிப் போச்செனக்கு:) என் கிட்னியே ஃபிறீஸ் ஆகிப்போச்சூ.. நான் இப்போ இன்சூரன்ஸ் கிளைம் பண்ணப் போறேன்.. கில்லர்ஜியிடமிருந்து...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உகாண்டா முகவரிக்கு பாலிச்சி நம்பர் அனுப்பி வைங்க...

      நீக்கு
  19. உரையாடல் சூப்பராக இருக்கு.. ஆனாலும் ஒரு குறை.. நீங்க உங்கட காரிலேயே போயிருக்கலாம் அபுத்திரேலியாவுக்கு:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நேரம் கார் சர்வீசுக்கு போயிருந்தது.

      நீக்கு
  20. கடேசி வரைக்கும் கரன்சிய வெளிய எடுக்காம..

    ஆகா என்னா ஒரு கொறளி வித்தை....

    இன்னிக்குக் காலம் இருக்குற இருப்பு..

    இதை மாதிரி பார்க்குறதும் தாராளமயம் ஆகிக்கிட்டு இருக்கு...

    சரி... ஷெரட்டன் ஹோட்டல் பில் இன்னும் செட்டில் ஆகலையாமே!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நான் கொடுக்கத்தான் நினைச்சேன். ஆனா அவரு கொடுக்கிறாரானு டெஸ்ட் பண்ணியதில் முக்கால் மணிநேரம் வீணாப்போச்சு.

      ஷெரட்டன் ஹோட்டல் மேட்டரும் லீக் ஆகிடுச்சா ?

      நீக்கு
  21. கலகலப்பான சந்திப்பு...

    நடக்கட்டும் நடக்கட்டும் ..

    பதிலளிநீக்கு
  22. நகைச்சுவைக்கு என்றுமே உங்களிடம் பஞ்சமில்லை நண்பரே. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  23. கலக்கல் கலந்துரையாடல்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு