தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 25, 2019

விழுப்புரம், விளக்கவுரை விவேக்



அண்ணே வணக்கம்ணே..
வாடா... தம்பி நல்லாயிருக்கியா ?

ஏண்ணே எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்லுவியலாமே...
ஆமாடா உனக்கு என்ன தெரியணும் ?

அண்ணே எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு வெளக்கம் சொல்லுங்கண்ணே...
கேளுடா தம்பி அண்ணேஞ் சொல்றேன்.


பேருக்கு முன்னாலே திரு. அப்படினு எழுதுறாங்களே ஏண்ணே ?
அடேய். திரு அப்படிங்கிறது மரியாதையான வார்த்தை அப்படி எழுதும்போதுதான் படிக்கிறவங்க சந்தோஷப்படுவாங்க.

கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கண்ணே...
தம்பி... அண்ணன் பேரு விவேக் இதை பேருக்கு முன்னாலே திரு. விவேக் அப்படினு எழுதுனா சமுதாயம் மரியாதையா என்னைப் பார்க்கும்டா...

அப்படினா மாலுக்கு ஏண்ணே... ரெண்டு தடவை திரு திருனு எழுதுறாங்க ?
மால்.... லா... எந்த மாலுடா ?

அதானே போனவாரம் கொடியேத்த வந்தாரே கவுன்சிலரு நோட்டீசுலகூட திரு. திருமால் அப்படினு எழுதியிருந்தாங்கே...
? ? ?

இன்னொரு சந்தேகம்ணே...
கே.... கேளுடா...

களவாணிப்பயல்கள் பேரு டன் னா ?
இல்லையே ஏன் ?

அப்ப, எதுக்குணே... பேருக்கு முன்னாலே திரு. டன் அப்படினு எழுதுறாங்கே ?
? ? ?

சொல்லுங்கண்ணே ?
? ? ?

என்னண்ணே... திரு’’த்திரு’’னு முழிக்கிறீங்க ?
மேலத்தெரு மாரியாத்தா மேல சத்தியம்டா இனிமேல் இந்த ஊருல எவனுக்குமே வாயைத்திறந்து வெளக்கம் சொல்ல மாட்டேன்டா.

55 கருத்துகள்:

  1. கில்லர்ஜி..... திருநிறை அதாவது “நிறைந்த செல்வமுடையவர்”-செல்வம், கல்வி, அனுபவம் எதுனாலும் இருக்கலாம், என்ற வாழ்த்துதான் அது. ஶ்ரீ என்பதும் செல்வம்தான். அதன் தமிழ் “திரு”. பெண்களுக்கு, ஶ்ரீமதி அல்லது திருமதி. சின்னவங்களுக்கு “திருநிறைச் செல்வன்/செல்வி”

    நல்லவேளை... ஆங்கிலத்தில் Miss Thamanna என்றால் காணாமல்போன தமன்னான்னு சொல்லாம்ப் போனீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நெல்லை இதுக்கும் தமன்னாக்காதானா! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!

      தமன்னாக்கா காணாமப் போயி கொஞ்ச நாளாச்சே..

      மிஸ் அனுஷ் னு சொன்னாலாவது அர்த்தம் உண்டு! ஹிஹிஹிஹி

      கில்லர்ஜி இப்ப கோடரி எடுத்துட்டு வந்துருவாரு ஓடிப் போயிடறேன்..

      கீதா

      நீக்கு
    2. தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி தமிழரே...
      இப்பொழுது ஸ்ரீராம்ஜியை வம்புக்கு இழுப்பது ஏன் ?

      நீக்கு
    3. தமன்னா அக்காவா ?

      நீக்கு
    4. தமன்னாவைக் காணோம்னு நெல்லை feel செய்கிறார். அதுதான் சட்டென அவருக்கு அந்த உதா 'ரணம்' நினைவுக்கு வருகிறது!!!! அனுஷ் இங்கதானே இருக்காங்க! பிக் பாஸ் தெலுங்கில் செய்யப் போறாங்களாம்... ஆமாம் தெலுங்கில் எந்த சேனலில் பிக் பாஸ் வரும் பாஸ்?!!!!

      நீக்கு
    5. நெல்லையார் ரணமுடன் வாழ்கின்றாரா... ?

      ஸ்மால்பீஸ் இந்தக்கேள்வி நீங்கள் மக்கள் நீதி மய்யத்திடம் கேட்கவேண்டும்.

      நீக்கு
    6. புது ஹோட்டல் செட் ஆகறவரைல, நாம 'கும்பகோணம் மங்களாம்பிகா', 'மைலாப்பூர் ராயர் கஃபே' என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லையா? அந்த எஃபெக்ட்தான் கீதா ரங்கன், ஸ்ரீராம், கில்லர்ஜி....

      நீக்கு
    7. ஹோட்டல் நிலைக்கு கொண்டு போயிட்டீங்களே...

      நீக்கு
    8. அவர் சொல்லலேன்னாலும் இப்ப நீங்க வந்து மிஸ் பண்ணாம சொல்லிட்டீங்களே! நெல்லை!

      நீக்கு
    9. நண்பரின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. ஊர்களுக்கும் திரு அடைமொழி உண்டு. திருவனந்தபுரம், திருவிடைமருதூர், திருநெல்வேலி போன்று. அபூர்வமா ஶ்ரீ சேர்த்து ஶ்ரீவில்லிபுத்தூர் போன்றும் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்காமல் உங்களது ஊரையும் சொல்லி விடுகின்றீர்களே....

      நீக்கு
    2. உங்க ஊர்ல 'திரு' வருதான்னு பார்த்தா, பரமக்'குடி', காரைக்'குடி' ன்னு வருது... என்ன செய்ய?

      நீக்கு
    3. 'திரு' என்பதைவிட 'தேவ' உயர்வான சொல்லாடல்தானே...

      நீக்கு
    4. ஆஹா ! ஊசி கேப்ல கூட நுழைச்சுருவாரே தேவ வை!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. கில்லர்ஜி செம!!

    கவுண்டமணி செந்தில் காமெடி போல!! ஹா ஹா ஹா ஹா ஹா..நல்ல கேள்விகள் விவேக் எனும் கில்லர்ஜி திரு திருனு முழிச்சதையும் ரசிச்சோம்ல!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானெங்கே... முழித்தேன் ? கதையின் நாயகன் விவேக்தானே.. முழித்தது.

      நீக்கு
  4. என்ன கமெண்ட் போடறதுன்னு திருதிருன்னு முழிக்க வச்சுட்டீங்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... அதான் கருத்துரை போட்டு விட்டீர்களே....

      நீக்கு
  5. இப்படிலாம் எடக்கு மடக்கா கேக்குறவங்க சகவாசம் இனி வேணாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சகோ பட்டுனு இப்படி சொல்லிட்டீங்க...?

      நீக்கு
  6. செந்தில் கவுண்டமணியிடம் கேட்பது போல் இருக்கிறது.
    நல்ல நகைச்சுவை.
    கடைசியில் விவேக் திரு திரு என்று முழித்து ஒட்டம் எடுத்து விட்டார் போலும்.
    இப்படி அதி புத்திசாலியாக தம்பி இருந்தால் அண்ணங்கள் பாடு திண்டாட்டம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அண்ணன் தம்பி உரையாடல் நன்றாக அருமையாக உள்ளது. பாவம்.! அண்ணனை இந்த வெயிலில் தம்பி வறுத்தெடுத்து விட்டார். ஒன்று மட்டும் உறுதி.. அண்ணனின் "திருமதி"கூட இருந்திருந்தால், இந்த"திரு" பேச்சுக்கு தன்"மதி"யாலேயே ஒரு முற்றுப்புள்ளி வைத்திருப்பார். அதனால்தான் "திரு"வுடன் "மதி"யும் அவருடன் அடைமொழியாக ஒன்றாக சேர்ந்ததோ என்னவோ? ஹா ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ரசிக்கும்படியான கருத்துரை சகோ இதை உபயோப்படுத்தியும் பதிவு எழுதலாம் போலயே...

      நீக்கு
  8. நான் என்ன கருத்து எழுதுவது என "திரு" "திரு" என விழித்தேன். எல்லோரும் எல்லாக் கருத்தையும் சொல்லிட்டாங்க! ஆனால் நெ.த. சொன்னதில் திருவனந்தபுரத்தை ஸ்ரீஅனந்தபுரம்னு சொல்ல முடியாது/முடியலை! மற்ற ஊர்களுக்குத் திரு பொருத்தம். இதிலே எங்க திருவரங்கத்தை விட்டுட்டீங்க எல்லோருமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே உங்கள் திருவரங்கம் மட்டுமா ? நிறைய ஊர்கள் திரு'வில் தொடங்ஙுகிறதே...

      ஸ்ரீவில்லிப்புத்தூர்
      ஸ்ரீரங்கம்
      ஸ்ரீராமபுரம்

      நீக்கு
  9. கடவுளே, கடவுளே, இந்த "திரு" கில்லர்ஜி, ஏன் இப்படி எங்களை கொடுமை படுத்துறாருண்ணே தெரியலையே.
    அவருக்கு சீக்கிரம் நல்ல புத்தியை கொடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ தம்பிக்காரன் கேட்டால் அவனைத் திட்டாமல் என்னைப்போய் கடவுளிடம் கம்ப்ளைண்ட் பண்ணுறீங்க...

      நீக்கு
  10. ரசித்தேன் நண்பரே

    நண்பரே, நூறு ஆண்டுகளுக்கு முன் வரை, சீமான், சீமாட்டி, விவாக சுபமுகூர்த்தப் பத்திரிக்கை, பொக்கிஷத்தார் என்றெல்லாம் அழைப்பதுதான் நடைமுறையில் இருந்தது.
    கரந்தைத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்ட இடையறா பணியின் காரணமாகத்தான், சீமான் போய் திரு என்னும்வார்த்தை வந்தது, சீமாட்டி போய் திருமதி என்னும் வார்த்தை வந்தது, விவாக சுபமுகூர்த்தப் பத்திரிக்கை போய் திருமண அழைப்பிதழ் என்னும் தனித்தமிழ் வார்த்தை வந்தது. எண்ணற்ற சொற்கள் தமிழ்ப் படுத்தப்பட்டன....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      மிகவும் பெருமையான விடயங்களை அழகாக பட்டியலிட்டு சொன்னீர்கள் நன்றியும், வாழ்த்துகளும்...

      நீக்கு
  11. திரு..டன் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. வில்லங்கக் கேள்விகளுக்கு விழுப்புரம் விவேக்கின் பதில் இப்படித்தான் இருக்க முடியும்!...

    எனக்கென்னவோ - கில்லர் ஜி அவர்களின் துள்ளலும் துடுக்கும் குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது...

    என்ன காரணம்!?...

    அதுவாக இருக்குமோ!...

    ஆமாம்.. ஆமாம்!.. அதுவாகத் தான் இருக்கும்!...

    (அப்பா... வந்தவேலை நல்லபடியாக முடிந்தது!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா வாங்க ஜி
      புதுப்பதிவுக்கு அடி எடுத்து கொடுக்குறீங்க...

      //எனக்கென்னவோ - கில்லர் ஜி அவர்களின் துள்ளலும் துடுக்கும் குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது...//

      வயசு பதினாறை கடந்து விட்டதே காரணம் ஜி

      நீக்கு
    2. /வயசு பதினாறை கடந்து விட்டதே காரணம் ஜி
      ​//
      பார்றா....!​

      இதை ஒத்துக்கொள்ளவும் தைரியம் வேண்டும்.

      நீக்கு
    3. எனக்கு பொய் சொல்லும் பழக்கம் இல்லை ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  13. திருவாளர் என்று பெயருக்கு முன்னால் போடவேண்டும் என விவேக் சொல்லியிருந்தால் 'தம்பி' க்கு மேலே கேள்வி கேட்கத் தோன்றியிருக்காது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. அதற்கும்கூட ஏதாவது கோக்குமாக்கு கேள்விகள் வரலாம் நண்பரே...

      நீக்கு
  14. புதுக் கோட்டை வலைப்பதிவர் சந்திப்பில் திரு என்பதை விட திருமிகு என்பதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும் என்று சொன்னது நினைவு [

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா எனக்கும் நினைவு உள்ளது. இப்பொழுது நானும்கூட உபயோகிக்கின்றேன்.

      நீக்கு
  15. திரு. டன் பொருள் வேறு
    திருடன் பொருள் வேறு
    இப்படி எல்லாம்
    மூளைக்கு வேலைப் பயிற்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மூளைக்கு வேலை கொடுக்காவிட்டால் உறங்கி விடுமே...

      நீக்கு
  16. ஹாஹா எப்பூடி?? ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்லதான் அறை இருக்கிறதே... அதனுள்தான் கணினி இருக்கிறது.

      நீக்கு
  17. கில்லர்ஜி! ரொம்ப நல்லா யோக்கித்திருக்கிறீர்கள்.

    ரொம்ப ரசித்தேன் கேள்விகளை நானே ஆமாம் இல்லையா என்றும் சொல்லிக் கொண்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.

      நீக்கு
  18. திரு என்ற அடைமொழி பற்றி வித்தியாசமான சிந்தனை.

    பதிலளிநீக்கு
  19. பாவம்தான்,பரிதவிக்க விட்டுட்டீங்களே நண்பரே விளக்க வந்தவரை விளக்கி விட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு பூங்கொத்தும், நன்றியும்.

      நீக்கு
  20. அண்ணே எனக்கொரு டவுட்டுண்ணே...அண்ணனுக்கு மேலத் தெரு மாரியாத்தா மட்டும்தான் பிடிக்குமோ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழத்தெரு காளியம்மாளையும் பிடிக்குமே...

      நீக்கு