தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 25, 2019

கனவு மெய்ப்பட்டது



  அபுதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார் அதன் காரணமாக நானும் சில காலம் மதுரையில் தங்கி இருந்தேன் இதன் காரணமாகவே பதிவுகளுக்கு உடனுக்குடன் வர இயலாத சூழல் தீபாவளிக்கு முதல் வாரம் ஐந்து தினங்கள் குடும்பத்துடன் விடுமுறையில் வந்து வீடு கிரஹபிரவேசம் முடிந்து பிறகு தீபாவளியையும் புதிய வீட்டில் என்னோடு கொண்டாடி விட்டு மறுநாள் மதுரையிலிருந்து அபுதாபி பறந்து விட்டனர்.









முன்னேற்பாடான அனைத்து வேலைகளும் நான்தான் செய்ய வேண்டியது இருந்தது இதில் இரண்டு குடும்பங்களை இணைத்து வைத்த திருப்தியும் எனக்கு. ஒரு விழாவை நடத்தி முடிப்பதில் எனக்கு அபுதாபியில் ஏற்கனவே நிறைய அனுபவங்கள் உள்ளது அதன் காரணமாகவே எனது வீட்டு திருமணங்களை சிறப்பாகவே நடத்தி முடித்தேன் இறைவனுக்கு தன்யவாத்.. ஹிந்தி எதிர்ப்பாளர்கள் மன்னிக்கவும் விஷேசத்திற்கு உறவுகளை அழைக்கவில்லை அதற்குப் பதிலாக எனது ஆலோசனைப்படி மதுரை அழகர்கோவில் போகும் வழியில் உள்ள இமானுவேல் ட்ரஸ்ட்டில் இருக்கும் மனவளர்ச்சியற்ற சுமார் நூறு நபர்களுக்கு மதிய உணவளிக்க ஏற்பாடு செய்து வைத்தேன்.

நான் கொடுக்காவிட்டாலும் நண்பரை கொடுக்க வைத்த புண்ணியம் எனக்கு. இதில் அவருக்கும் உடன்பாடு இருந்ததே சிறப்பு. அங்கு சென்று அவர்களை காணும்போது மனதுக்கு திருப்தியாக இருப்பினும் மனதில் ஓரத்தில் ஈரம் கசிகிறது உண்மையே இறைவன் எம்மை இந்நிலையில் வைக்காதிருந்தமைக்கு நன்னி. மலையாள எதிர்ப்பாளர்கள் மன்னிக்கவும் பிற குடும்ப உறவுகளை இணைக்கும் பக்குவத்தை எனக்கு கொடுத்த இறைவன் எனது குடும்பத்தை சரி செய்யும் வல்லமையை எனக்கு கொடுக்க மனமில்லாமல் நசுக்கி விட்டான்.

பல வகையான வேலைகளை செய்ததில் சற்றே கண் அயர்ந்த தருணத்தில் எனது நண்பர் பட்டாசு வாங்குவதற்காக என்னை உறங்க வைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு பறந்து விட்டார் சிவகாசிக்கு. நான் வாழ்வில் சிவகாசி சென்றதில்லை என்னை அழைக்காமல் சென்று விட்டதில் வருத்தமெனினும் என்னை ஓய்வெடுக்க வைத்த நண்பருக்கு தன்னிவாதம். தெலுங்கு எதிர்ப்பாளர்கள் மன்னிக்கவும் கிரஹப்பிரவேஷத்துக்கு குடும்பத்தில் எல்லோருக்கும் உடைகள் எடுக்கச் சொல்லி இருந்தார் நான்தான் தங்கைகளை அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள தேனி ஆனந்தம் போனோம்.






வாயிலில் செக்யூரிட்டி எனது மகிழுந்துக்கு இடமில்லை அதோ அந்த குப்பை மேட்டில் நிறுத்தி வாருங்கள் என்றார். பரவாயில்லை என்று மகிழுந்தை எதிர்புறம் திருப்பினேன் ஏன் ஸார் ? என்றார் குப்பை மேட்டில்தான் நிறுத்த வேண்டுமென்றால் எனக்கு வியாபாரமே வேண்டாம் எத்தனையோ கடைகள் இருக்கிறது ஸார் ஒரு நிமிஷம் வாக்கிடாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு ஸார் உள்ளே போங்க என்றார். கார் கண்ணாடியோடு மீசையை சற்றே ஏற்றிவிட்டு உள்ளே சென்றேன் நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்திக் கொள்ளச்சொல்லி பார்த்துக் கொள்கிறோம் ஸார் என்றனர் காரணம் அடுத்த பத்தடியில் மின்தூக்கி (லிப்ட்) ஜவுளிக்கடலில் மூழ்கி உடைகளை தேர்ந்தெடுத்தோம் இதில் எனக்கும் நண்பருக்கும், ஒரேபோல் மூன்று வேட்டி-சட்டைகள் எனக்கும் உடைகள் எடுத்தமைக்கு ஒல்லது. கன்னட எதிர்ப்பாளர்கள் மன்னிக்கவும். சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேல் பில் தீபாவளிக் கூட்டத்திலிருந்து நீந்தி வெளியேறினோம்.

கிரஹப்பிரவேஷம் எந்தவிதமான இடையூறும் வராமல் நிகழ்ந்ததில் மகிழ்ச்சி குழறுபடிகள் நடந்திருந்தால் அதற்கு நானும் காரணமாக இருந்திருப்பேன் ஏனெனில் இரு துருவங்களை இணைப்பது பெரிய காரியம் இரண்டு வீட்டு பெரியவர்களும் எனது சொல்லுக்கு மதிப்பளித்தமைக்கு இஸ்தூத்தி. சிங்கள எதிர்ப்பாளர்கள் மன்னிக்கவும். பிற குடும்ப உறவுகள், நட்புறவுகள் என்னை புரிந்து கொண்ட அளவு எனது ரத்த உறவுகள் புரிந்து கொள்வதில்லையே என்ற மனவருத்தம் உண்டு என்ன செய்வது ? காரணமின்றி காரியமில்லை.

இந்த நிகழ்வுக்கு சிறப்பாக உணவு தயார் செய்து கொடுத்ததோடு மதுரை புதூர் மனநலம் குன்றியவர்களின் இல்லத்தை எமக்கு அடையாளம் காட்டிய கேட்டரிங் சர்வீஸ் நடத்தும் இனியவர் நண்பர் விஜயன் அவர்களுக்கு எமது ஸுக்ரான். அரபு எதிர்ப்பாளர்கள் மன்னிக்கவும். நான் கொடுத்திருந்த ஆர்டரோடு அவரது செலவில் நூறு நபர்களுக்கும் முட்டைகள் கொடுத்த பெருமனம் படைத்தவர்.






கிரஹபிரவேஷம் நிகழ்ந்து முடிந்ததும் நானும், நண்பரும், குடும்பத்தினரோடு மதிய உணவு வழங்கிய இமானுவேல் ட்ரஸ்டுக்கு சென்று உணவு வழங்கினோம் அதன் நிறுவனர் அன்பர் திரு. பாபு அவர்களையும் சந்தித்தோம் அவருக்கு எமது தாங்க்ஸ். ஆங்கில எதிர்ப்பாளர்கள் மன்னிக்கவும்.  இனி நானும் மதுரை சென்றால் இங்கு சென்று வருவேன் பிரார்த்தனையில் அவர்கள் அல்லேலூலியா என்றனர் எதைச் சொன்னால் எமக்கென்ன ? அன்னம் தானமாகியது இதுவே எமது திண்ணமான எண்ணம்.

இந்த நிகழ்வுகளின் தொடக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு எல்லா வகையிலும் உதவிகள் செய்து தொலைக்காட்சி பெட்டி வாங்குவதற்கு மாலுக்கு அழைத்து சென்று, பணம் மாற்றுவதற்கு புரோக்கர்களை காண்பித்து நல்ல உறவுகளை, இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த மதுரையைச் சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வதனநூலின் வழியில் வந்த எமது அபுதாபி நண்பர் திரு. ஷாகுல் ஹமீது அவர்களுக்கு எமது சலாமத். தகாலன் எதிர்ப்பாளர்கள் மன்னிக்கவும். அவர்தம் குடும்பத்தினருக்கு படைத்தவன் அருள் புரிவானாக ஆமென்.

தீபாவளியன்று சின்னவனுக்கு பிறந்தநாளும் வந்தது எமது நண்பரது கனவு இனியும் மெய்ப்படல் வேண்டும் மென்மேலும் வளர்ந்து இல்லங்கள் பல கட்டி பெருவாழ்வு வாழ வாழ்த்தும் அன்பு உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றி. தமிழ் பற்றாளர்கள் ஆதரவளிக்கவும். நண்பரது குடும்பம் வாழ்க வளமுடன் நாளும் நலமுடன் – கில்லர்ஜி தேவகோட்டை






காணொளிகள்

58 கருத்துகள்:

  1. உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்.   மதுரையில் புதூரிலா வீடு?  சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கிறீர்கள்.  ஒவொரு பாஷையிலும் நன்றி நவின்றிருப்பது சிறப்போ சிறப்பு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      வீடு ஃபாத்திமா காலேஜ் ஏரியா கூடல் புதூர்.

      நீக்கு
    2. வாழ்த்துகள். இன்றைய சூழலில் வீடு கட்டுவது என்பது மகத்தான சாதனை தான்.

      நீக்கு
    3. வருக நண்பரே நன்றி.

      நீக்கு
  2. 3D படத்தைப் புகைப்படம் எடுத்தால் அதன் எபெக்ட் தெரியாதே...   அந்த யானைப்படத்தை எப்படி புகைப்படத்தில் அழகாகக்கொண்டு வந்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த யானை படம் டைல்ஸ்தான் அதன் விலை 6000/ ரூபாய்.
      எனது அலைபேசியில் எடுத்த படங்களே...

      நீக்கு
    2. ஓ அது ரைல்ஸ் ஆ.. அவ்வ்வ்வ் சூப்பராக இருக்கு.. இப்படி ஒரு பெண் முறைப்பதைப்போல, அல்லது மிரட்டுவதைப்போல எல்லாம் ரைல்ஸ் இல்லையோ கில்லர்ஜி?:), அதனை வீட்டு சுவரில பொருத்தினால் இன்னும் சூப்பராக இருக்கும் ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. யானை முகப்பில் வைப்பது வீட்டுக்கு நல்லதாம் ஆகவே இந்த டைல்ஸ் படம்.

      நீக்கு
    4. வாவ் !! சூப்பரா இருக்கு அந்த டைல்ஸ் !!! இதே மாதிரி பூனை டைல்ஸ் இருக்குமான்னு தேடி பார்க்கணும் :)

      நீக்கு
    5. இருக்குமே... தேடுங்கள்

      நீக்கு
  3. அச்சா க்கியா.சேட்டா நன்னி. நமஸ்தேஜி

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. நண்பருக்கு இவ்வளவு உதவிகள் செய்த தங்களது பண்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    படங்களும் பதிவும் தங்கள் நண்பர் வீட்டு கிரஹப்பிரவேசத்தில் நாங்களும் உடனிருந்து கலந்து கொண்ட நிறைவை தந்தது. தங்கள் நண்பருக்கும், நண்பர் குடும்பத்திற்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தங்கள் நட்பு இதுபோல் வாழ்வில் என்றும் தொடர்ந்து சிறக்க வேண்டுமென நானும் இறைவனை மனநிறைவுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    காணொளிகளும் நன்றாக உள்ளன. இரண்டாவது காணொளியில் பிறந்த நாள் கொண்டாடிய குழந்தைக்கு என்னுடைய மனமார்ந்த ஆசிகளுடன் கூடிய வாழ்த்துக்களை தெரிவிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நண்பரையும், குடும்பத்தினரையும், குழந்தையையும் வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  5. நண்பர் வீட்டு கிரஹபிரவேசத்திற்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
    உங்களைப் போன்ற நல்ல நண்பர் கிடைத்து இருப்பது உங்கள் நண்பர் பாக்கியசாலி.
    சிவகாசி என்றதும் என் சிறு வயதில் அங்கு இருந்தது நினைவு வருது, அருமையான ஊர். நண்பர் அழைத்து செல்லவில்லையென்றால் என்ன? நீங்கள் ஒரு முறை போய் வாருங்கள், தீபெட்டி தொழிற்சாலை, காலண்டர், வண்ணபடங்கள் அடிக்கும் அச்சாஆபீஸ் எல்லாம் போய் பாருங்கள் குட்டி ஜப்பான் என்று அழைப்பார்கள். சுறு சுறுப்பான ஊர்.


    இமானுவல் டிரஸ்ட் பற்றி தெரிந்து கொண்டேன். அங்கு இருப்பவர்களுக்கு உணவு அளித்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
      இமானுவேல் ட்ரஸ்ட் நானும் முதன்முறையாகத்தான் சென்று வந்தேன்.

      சிவகாசி ஒருமுறையாவது சென்று வரவேண்டும்.

      நீக்கு
  6. குழந்தைகளின் உற்சாக வாணம் விட்டு விளையாட்டு, வீட்டுவேலை எல்லாம் அடங்கிய காணொளி அருமை.

    நண்பரின் இரண்டாவது பையன் பிறந்தநாள் விழா காணொளி , மதிய உணவு வழங்கியைடம் அவர்களின் ஜபம் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையை வாழ்த்தியமைக்கும், காணொளி கண்டமைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  7. பலமொழிகள் தெரிந்த சகலகாலாவல்லவர்தான் சகோ தேவகோட்டை ஜி
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. மிக மகிழ்ச்சியான பதிவு.
      நண்பருக்கு உதவிய அன்புக்கு வாழ்த்துகள்.

      நன்மைகள் செய்யச் செய்ய மனம் தன் குடும்பத்திற்கு அப்பாலும் இருக்கும் உலகத்தை
      அடையாளம் கண்டு நெகிழ்கிறது
      உங்கள் மகிழ்ச்சியும் பெருகி நிலைக்க வேண்டும்.

      வீடும் குழந்தைகளும் அற்புதம்.
      வீடியோ காட்சி உற்சாகம் தருகிறது. நண்பர் குடும்பத்தினர்க்கும் உங்களுக்கும் இனிய க்றிஸ்மஸ்,
      புத்தாண்டு வாழ்த்துகள். நலமே விளைக.

      நீக்கு
    3. வாங்க அம்மா தங்களது வரவும், வாழ்த்துகளும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  8. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஜி... உங்களுக்கும், நம் நண்பருக்கும் வாழ்த்துகள்...

    உங்களின் பரந்த மனதிற்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

      நீக்கு
  9. தங்களின் நண்பருக்கு வாழ்த்துகள்
    தங்களைப் போைன்ற நண்பரைப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

    பதிலளிநீக்கு
  10. ஓ உங்கட இரு பிள்ளைகளின் திருமணத்துக்குக்கூட நீங்க இப்பூடிப் பாடுபட்டதுபோல தெரியவில்லையே ஹா ஹா ஹா. ஒருவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அதை மிகச் சிறப்பாக செய்து முடிக்கோணும், இல்லை எனில் ஏற்றுக்கொள்ளக்கூடாது.. இதுதான் என் கொள்கையும், அழகாக உங்கள் வீட்டு விஷேசம்போல முடிச்சு வச்சிட்டீங்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முடிந்தால் சிறப்பாக செய்யணும் அல்லது ஒதுங்கி விடணும் இதுதான் எமது கொள்கை.

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. எனக்கு அந்த அவிச்ச முட்டையேதான் கண்ணில தெரியுது... ஹா ஹா ஹா.

    ஏன் தமிழை மட்டும்.. ஆதரவாளர்கள் எனச் சொல்லி டக்குப்பக்கென சரண்டராகிட்டீங்க.. சே..சே... டமில் ரேர்ன் வரும்போது பொயிங்கலாம் எனக் காத்திருந்தேன்.. இப்பூடி சரண்டராகிட்டீங்களே உங்கள் மீசை துடிக்கவில்லையோ.. ஹா ஹா ஹா... மீ ரன்னிங்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர்களைப்பற்றி நான் நன்கு அறிந்தவன்.

      அது வெஜிடபிள் பிரியாணி.

      கடைசியில் ஜகா வாங்கிட்டோம்ல எப்பூடி ?

      நீக்கு
  12. உங்கள் பர்சில் ஓட்டை விழுந்ததா

    பதிலளிநீக்கு
  13. நண்பர் குடும்பத்து விழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுத்து இருவீட்டாரையும் இணைத்தது குறித்து வாழ்த்துகள். "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்பார்கள். அதைப் போலவே கிரஹப்ரவேசத்துக்கு உறவினரையும் அழைத்திருக்கலாம். உறவும் தேவை தானே!மன வளர்ச்சி குன்றியோர் ஆசிரமத்திற்கும் உணவளிக்கலாம். இரண்டுமே நல்லது தான் செய்யும். ஒரு மிகப் பெரிய பொறுப்பை எடுத்துக்கொண்டு அதை வெற்றிகரமாக நடத்தி இருப்பதற்குப் பாராட்டுகள். விரைவில் உங்கள் குடும்பத்தினரிடம் சுமுகமான உறவு ஏற்படவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைப்பதற்கு நேரமில்லை என்பது முக்கிய காரணம் விடுமுறையே ஆறு தினங்கள் மட்டுமே இதில் கிரஹபிரவேஷம், தீபாவளி இரண்டையும் கொண்டாட வேண்டும்.

      உறவுகளை அழைக்க வேண்டாம் என்பது அவர்களது விருப்பம்.

      என்னைப் பொருத்தவரை வீட்டில் திருமணம் மற்ற விஷேசங்களுக்கு சொல்லலாம் திருமணத்தை எப்படி நடத்தினாலும் பொறாமைப்பட மாட்டார்கள்.

      பிள்ளைக்கு திருமணம் முடித்தான் என்ற நோக்கில் பார்ப்பார்கள்.

      இந்த மாதிரி விஷேசங்களில் உறவினர் எல்லோருமே வாழ்த்துவார்கள் என்று கருத இயலாது. வந்தவர்களில் சிலர்... இவனுக்கு இவ்வளவு பணம் ஏது ?
      என்ற குறுக்கு வினாக்களை எழுப்பி விட்டு போய் விடுவார்கள். இந்த வகையான கண்ணேறுகளை தவிர்க்கலாம்.

      ஆனால் ஆஸ்ரமத்தில் உணவை உண்டவர்கள் உண்மையாகவே இறைவனிடம் பிரார்த்திப்பர்.

      எமக்காகவும் பிரார்த்திப்பமைக்கு நன்றிகள் கோடி.

      நீக்கு
  14. அழகான வீடு. உங்களின் நல்ல குணத்திறகும், உதவும் மனபான்மைக்கும் நன்றாக இருப்பீங்க அண்ணா ஜீ. நணபருக்கும், பிறந்தநாளை கொண்டாடிய சின்னவருக்கும் வாழ்த்துக்கள் .
    படங்கள் அழகா இருக்கு.
    , ட்ரஸ்ட் ல் இருக்கும் பிள்ளைகளின் வாழ்த்துகள் கண்டிப்பாக உண்மையாக இருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  15. நண்பருக்காக கிருகப்பிரவேசம் நடத்தி முடித்த கதையை மிக இனிமையாக சொல்லியிருக்கிறீர்கள். கடல் தாண்டி மலரும் சினேகிதங்கள் மிகவும் வலிமையாக இருக்கும். அதுவும் உறவுகளைப்பிரிந்து கண் காணாத தொலைவில் வாழும்போது ஏற்படும் சினேகிதங்கள் மனதுக்கு மிகவும் நெருங்கி விடும் வல்லமை படைத்தவை. அதனால் தான் நண்பருக்காக இத்தனை சிரமங்களை மேற்கொண்டிருக்கிறீர்கள்! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே நேரம் உங்கள் நட்பிற்கும் வாழ்த்து சொல்லுகிறேன்.
    இங்கு இருப்பதால் ஏற்படும் நன்மை பல மொழிகள் கற்பது. அதனால் தான் நிறைய மொழிகளில் நன்றி சொல்லியிருக்கிறீர்கள்.
    ஒரு சின்ன திருத்தம். சுக்ரியா உருது மொழிச்சொல். பாகிஸ்தானியர், பஞ்சாபியர் சொல்வார்கள். ஹிந்தியில் ' தன்யவாத் ' என்று சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான அழகான கருத்துரைக்கு நன்றி.

      சுக்ரியா என்பது புழக்கத்தில் உள்ளது என்பதால் சொன்னேன் தாங்கள் சொன்னதும் சரியே இதோ தங்களுக்காக மாற்றுகிறேன்.

      நீக்கு
  16. நல்ல மனங்களின் சங்கமம்...
    ஆல் போல் தழைக்கட்டும் தங்கள் நட்பு...

    விசேஷ நாளில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட விதம் சிறப்புக்குரியது...

    மீண்டும் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  17. ஒலகத்துலருக்கற எல்லா மொழிகளும் உங்களுக்கு அத்துப்படி போல?

    பதிலளிநீக்கு
  18. மிக  சிறப்பா நண்பர் வீட்டு வைபவத்தை கூட இருந்து நடத்தி இருக்கீங்க .மனமார்ந்த பாராட்டுக்கள் 

    பதிலளிநீக்கு
  19. மிக மகிழ்ச்சி ...தங்கள் நண்பருக்கு வாழ்த்துக்களும் ..

    படங்கள் அனைத்தும் மகிழ்ச்சியை பகிர்கின்றன ...

    பதிலளிநீக்கு
  20. வீட்டைக் கட்டிப்பார்... உண்மை தான். வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்த உங்களுக்கு பாராட்டுகள். உங்கள் நட்புக்கு ஒரு சலாம்! நண்பருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் நட்பு வட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  21. புதுமனை புகுவிழாவிற்கு வீணே செலவு செய்யாமல் தங்களின் மேலான ஆலோசனைப்படி மதுரை இமானுவேல் அறக்கட்டளை உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மதிய உணவு அளித்து கொண்டாடிய த ங்கள் நண்பருக்கு பாராட்டுகள்! அவரது வீடு கட்டும் பணிக்கு உதவியும் புகுமனை புகுவிழாவை சிறப்பாக நடத்த உதவிய தங்களுக்கும் பாராட்டுகள்! தங்களின் பன்மொழித் திறமைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  22. நண்பரின் வீட்டு கிரஹப்ரவேசத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. உங்கள் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்! உங்கள் நட்பு இதே போல நிலைத்திருக்கவும் வாழ்த்துகிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  23. மதுரையிலிருந்து அபுதாபிக்கு டைரக்ட் ஃபிளைட் இருக்கிறது என்பதும், மதுரையில் இத்தனை பெரிய விமான நிலையம் இருக்கிறது என்பதும் எனக்கு புதிய செய்திகள்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஸ்ரீலங்கா பிளைட் துபாய் ட்டூ மதுரை நேரடி விமானம் உண்டு.

      நீக்கு
  24. நட்புக்கு இலக்கணமாக, நண்பர்களை அரவணைத்துச் செல்கின்ற உங்களின் பாணி போற்றுதற்குரியது.
    இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
      தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  25. தாங்கள் நட்பிற்கு அளிக்கும் மரியாதையும் உங்களின் உதவும் குணமும் இப்பதிவின் வழியாக தெரிகிறது. பாராட்டுக்கள் நண்பரே.

    தகாலன் என்ற மொழி இருப்பது தங்கள் மூலமாக தான் எனக்கு தெரிகிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தகாலன் பிலிப்பைன்ஸ் நாட்டு மொழி.

      நீக்கு