தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 24, 2020

செங்கல்பட்டு, செங்கல்சூளை செங்கல்வராயன்



வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு ? எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னிடம் நிரந்தரமாய் இருந்ததில்லை. கல்யாணத்திற்குப் போனால் திரும்பும்போது செருப்பு இருக்காது. இதனாலேயே எனக்கும், மனைவி செங்கமலத்துக்கும் தினம் சண்டை வரும். ஆத்திரமாய் வந்தது. இந்தச் செருப்பாலே என்னோட சொத்தில் பாதி அழிந்திருக்கும். நான் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறேன். நானும் மனைவியும்தான் பார்த்துக் கொள்கிறோம். திடீரென்று எனக்கு ஒரு யோசனை வந்தது. செங்கமலமும் சரி என்றாள்.

இதுதான் சரியென இரண்டு பெரிய அளவு செங்கலை LATHEக்கு எடுத்துப் போய் DRILLING MACHINE ல் HOLE போட்டு வார் வைத்து மாட்டி விட்டேன். என்ன கொஞ்சம் நடக்க சிரமமாக இருந்தது. கொஞ்சம் நேரமும் ஆகியது. தெருவில் போகும் பொழுது ஒரு மாதிரியாக பார்த்தார்கள். மற்றபடி ஒன்றுமில்லை. இப்பொழுது மூன்று மாதமாகி விட்டது. எந்த திருட்டுப்பயலும் எடுக்கவே இல்லை. ஆறு மாதமும் ஓடி விட்டது. நடப்பதற்கு இப்பொழுது நன்றாகப் பழக்கமாகி விட்டது. எனக்கு மீண்டும் ஒரு யோசனை. இதையே ஒரு மாடலாக தயார் செய்து ஏதாவது ஒரு வளர்ந்து வரும் CINEMA ACTORரை வைத்து அறிமுகப்படுத்தி விட்டால் மக்களும் இதையே பயன் படுத்துவார்கள். நாம கோடீஸ்வரனாக ஆயிடலாம். இதுதான் சரியென முடிவெடுத்து விட்டேன்.

மக்கள்தான் திரைப்பட நடிகர் மடையனாக இருந்தாலும் அவன் சொன்னால் வாங்கி விடுவார்களே! இப்படித்தான் சும்மா கிடந்த கே. பாக்கியராஜை வச்சு ஈமு கோழி வளர்த்தால் கோடீஸ்வரன் ஆகலாம்னு சொல்ல வச்சாங்கே. வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போச்சு. ஆனால், ஈமு கோழிப் பண்ணை வச்சவங்க இன்றைக்கு தெருக்கோடியில் நிற்கிறாங்கே. அதுக்காக இதை வளர்க்கச் சொன்னதற்காக கே. பாக்கியராஜை உகாண்டா கோர்ட்டில் நிறுத்தணும், அப்பத்தான் எந்தக் கூத்தாடியும்ம் இந்த மாதிரி வெட்டி விளம்பரத்துல நடிக்க மாட்டான் அப்படினு ‘’இலக்கிய தும்மல்’’ அதிரா நினைக்காதீங்க அதெல்லாம் மாபெரும் தவறு.

சரி விசயத்துக்கு வர்றேன். என்னமோ தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாகவே காலிலிருந்து தொடைவரை வலித்துக் கொண்டே இருந்தது. சரியென Dr. 7 மலையிடம் போனேன் அவர் எனது செருப்பை பார்த்தவுடன் இதுயேன் இப்படி ? எனக்கேட்டார். நானும் எல்லா விசயத்தையும் சொல்லி FUTURE PLANனையும் சொன்னேன் X-RAY SCAN எல்லாத்தையும் செக் செய்து விட்டு FUTURE PLAN இருக்கட்டும். முதல்ல நான் சொல்ற மதுரை ORTHO SPECIALIST Dr. தேவராஜனைப் போய் பாருங்க, என்றார். போய் பார்த்தேன்.

ஒரு வாரம் பெட்டில் இருந்து இரண்டு குதிகாலிலும் OPERATION நடந்தது. பிறகு மூன்று வாரம் நடக்க TRAINING கொடுத்தார்கள். பிறகு வீட்டில் ஒரு மாதம் REST. செலவு கணக்கு எவ்வளவு எனப் பார்த்தேன்.  Rs 1,38,500.00 மலைத்தேன்... சே.... ரோட்டோரமா ஒரு சின்ன செருப்புக் கடையே வச்சுருக்கலாமோ ?

காணொளி

60 கருத்துகள்:

  1. இந்தச் செருப்பு மாடல் நல்லாருக்கே... ஏன் இன்னும் இதுக்கு நடிகை தமன்னா விளம்பரம் செய்யலைனு முந்தாநாள் தேவகோட்டை கோவில் வாசலில் செங்கல் மாடல் செருப்பைப் பார்த்தபோது தோன்றியது. அது உங்களுதா?

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டை வந்தீர்களா ?
      தமன்னா யாரு நண்பரே ?

      நீக்கு
    2. தமனாவைத் தெரியாதோ கில்லர்ஜி... அது நெ தமிழனை நம்பி இப்போ ஏமாந்து போயிருக்கும் அபலைப்பெண் என ஓல் இந்தியா ரேடியோவில் ஜொன்னாங்கோ:).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)

      நீக்கு
    3. அப்படியா ? இது எப்போ....?

      நீக்கு
  2. காணொளி நல்லா இருந்தது. அதைவிட செங்கல் செருப்பு கிராபிக்ஸ் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செருப்பு படம் இணையத்தில் கிடைத்ததால் இந்த பதிவு.

      எனது சித்து வேலை சிறிய அளவே.

      நீக்கு
  3. செங்கல் செருப்பு...!   எனக்கு கருங்கல்லை மெலிதாக எடுத்து இழைத்து செருப்பு செய்யலாமோ என்று தோன்றியது!  செலவு இரண்டு லட்சம் ஆகுமோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருங்கல் இன்னும் கனம் கூடுதலாகுமே ஜி

      நீக்கு
    2. அதனால்தான் பின் செலவும்கூடுமோ என்று சொல்லியிருக்கிறேன்...   அதனால்தான் நன்றாக மெலிதாக இழைத்து என்றும் சொல்லி இருக்கிறேன்!  ஹிஹிஹி...

      நீக்கு
    3. இருந்தாலும் இது ரிஸ்க்தான்.
      டாடாவைவிட, பாட்டாவை நம்புங்கள்.

      நீக்கு
    4. ஶ்ரீராம்.. சில வருடங்களுக்கு முன்பு பெங்களூர் அல்லது சென்னை ஏர்போர்ட்ல, துறவுகள் அணியும் மரக்கட்டை செருப்பு இணுந்து வேஷ்டி கட்டிய, ஸ்படிக, ருத்ராட்ச மாலைகள் அணிந்த ஒருவர் டக் டக்கன செருப்பு அதீத சப்தமிட நடந்துவந்தார்.

      வீட்டுக்கு மார்பிள் (ஸ்லேப்) கட் பண்ணியதைப் பார்த்து, தூக்கிப் பார்த்ததால் சொல்றேன். கருங்கல் மெலிது அணிய முடியாது, தடிமனானதை தூக்கி நடக்க முடியாது

      நீக்கு
    5. ரொம்ப சீரியஸாகவே பதில் சொல்லி வருவதற்கு நன்றி!!!

      நீக்கு
  4. காணொளியில் அந்தப் பெண் வியக்க வைக்கிறாள்.

    பதிலளிநீக்கு
  5. அந்தக் காலங்களில் (இப்போதும்) சில, பல துறவிகள் மரக்கட்டையில் பாதரக்ஷை செய்யச் சொல்லிப் போட்டுப்பார்கள். அதுமாதிரிப் போட்டுக்கொண்டிருந்தால் இவ்வளவு செலவு ஆகி இருக்காது! :)))))) நல்ல வேலை செய்தீர்கள். அந்த நடிகரை இதுக்கு விளம்பரம் கொடுக்கச் சொல்லி இருந்தால் அப்புறம் அவருக்கு ஏதேனும் ஆகி அது வேறே தண்டச் செலவு இல்லாமல் பிழைச்சீங்களே! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு கடைசிவரை அவரே செய்து போட்டு இருந்தார்.

      நல்லவேளை தப்பித்தேன் தண்டச்செலவு கூடியிருக்கும்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    செங்கல்வராயானுக்கு ஏற்ற செருப்பு கதை நன்றாக உள்ளது. ஆனால் நிறைய நஷ்டம் (உடம்புக்கும் சேர்த்து) வந்த பின்தான் செங்கல் செருப்பின் கஸ்டத்தை உணர்ந்து கொள்கிறார். அவர் உங்கள் கற்பனைபடி நிறைய செலவுசெய்து நொந்து போகாமல், அந்தளவிற்கு தப்பித்துக் கொண்டார். ஹா ஹா.

    செங்கல் செருப்பு படம் அருமை.காணொளி எங்குதான் தேர்ந்து எடுத்தீர்களோ? இருந்த இடத்திலிருந்தே வீட்டை கட்டி முடித்து விடுவார் போலும் அந்த பெண்மணி. பயங்கரமாக ஆச்சரியபடுத்துகிறார். பதிவு நன்றாக உள்ளது. தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்து, காணொளி கண்டு கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. எங்கிருந்து தான் செங்கல் செருப்பு ஐடியாவெல்லாம் வருதோ..நல்லவேளை கால்வலி வந்து பொதூஜனங்களை காப்பாத்திடுச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ எனக்கு கால்வலி வந்தது நல்லதா போயிடுச்சா ?

      நீக்கு
  8. சுண்டக்காய் கால் பணம்... சுமைகூலி முக்கால் பணம் - அந்த கதையால்ல இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      ஹா.. ஹா.. ஹா.. பொருத்தமான பழமொழிதான்.

      நீக்கு
  9. செங்கமலம் செங்கலை அடுக்குவது வியப்பாக உள்லது. இப்படியான கற்பனை பதிவு உங்கள் ஒருவருக்குத்தான் வரும்.ரசித்து படித்தேன்.அருமை

    பதிலளிநீக்கு
  10. செங்கல் செருப்பு அருமை.
    காலுக்கு உதவா செருப்பை போட்டால் அறுவை சிகிட்சை அது இது என்று போக வேண்டியது தான். நான் என் பாதம் ஏற்று கொள்ளும் செருப்பை தேடிக் கொண்டே தான் இருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொந்திரவை தருகிறது. நேற்று கூட பாத வலிக்கு மருத்துவரிடம் போனேன்.

    காணொளி அருமை. இருந்த இடத்தில் இருந்து சுவர் கட்டும் திற்மை வாய்ந்தவராக இருக்கிறாரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், காணொளி கண்டு ரசித்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  11. செங்கல் செருப்பு அதிசயம் அற்புதம். நல்ல கற்பனைத் திறன் உங்களுக்கு.
    செங்கல் செருப்பு போட்டு நடந்தவரின் புத்திசாலித்தனத்தை எங்க போய் சொல்றது.
    காணொளியும் வெகு கச்சிதம்.
    நிறைய பேருக்குப் பொருத்தமான செருப்பு
    அமைவது கடினம். சென்னையில் ஒரு நல்ல மனிதர்
    கால் அளவு எடுத்துக் கொண்டு செய்து கொடுத்தார்.
    வெகு காலம் உபயோகமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. காணொளியில் தோன்றும் பெண்ணி திறமை அதிசயக்க வைக்கிறது. மிக மிக நன்றி அன்பு ஜி.

    பதிலளிநீக்கு
  13. சினிமா ஆக்டருக்கு பதிலாக நம்ம தேம்ஸ் நதிக்கறையோர அழகியை மாடலாக பயன்படுத்தலாமே இந்த் ஐடியா எல்லாம் உங்களுக்கு தோன்றாதா கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே...
      ஆஹா இப்படி ஒன்று இருக்கிறதா ?

      நீக்கு
    2. //நம்ம தேம்ஸ் நதிக்கறையோர அழகியை //
      கர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது அதிராவுக்குப் போட்டியாக முளைச்சிருக்கும் காளான்:) ஹா ஹா ஹா

      நீக்கு
    3. காளான் உங்களுக்கு போட்டியா ?

      நீக்கு
  14. உங்களின் கற்பனைத்திறன் உண்மையிலேயே அசத்ததுகிறது!

    பதிலளிநீக்கு
  15. அதென்ன இருந்தாப்போல பாக்கியராஜ் அங்கிள் மேல பாய்கிறார் கில்லர்ஜி:)... இவ்ளோ காலமும் விட்டுப்போட்டு இப்போ என்ன திடீரென?:)... ஒருவேளை மூன்றாம் தடவையாக முந்தானை முடிச்சைப் பார்த்திருப்பாரோ என்னமோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...

    அதுசரி உகண்டாவில கோர்ட்ஸ் இருக்கோ கில்லர்ஜி?:) இல்ல ச்ச்சும்மா ஒரு பொது அறிவுக்காகக் கேட்டேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாக்கியராஜும் அங்கிள் ஆகிட்டாரா ?
      உலகில் நீதிமன்றங்கள் இல்லாத நாடும் உண்டா ? உகாண்டாவும் விதி விலக்கல்ல!

      ஏதோவொரு நாட்டில் மட்டும் காவல் நிலையங்கள் இல்லையென படித்த ஞாபகம்.

      நீக்கு
  16. ///இலக்கிய தும்மல்’’ அதிரா நினைக்காதீங்க அதெல்லாம் மாபெரும் தவறு.////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு மாஆஆஆபெரும் இலக்கியவாதியைப்(ஆரைத் தேடுறீங்க... இது என்னைச் சொன்னேன்னாக்கும் கர்ர்ர்ர்ர்ர்) பார்த்துத் தும்மியதுக்காக:) 2000 உகண்டா அக்காக்கள் சே சே ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே டொலர்கள் அபராதம் விதிக்கப் படுகிறது.....:),

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு பட்டம் எந்த கடையில் கிடைக்கிறது ?
      அட்ரஸ் ப்ளீஸ்....

      நீக்கு
  17. ஜோக்காக சொன்னீங்களோ இல்லை உண்மையில் ஒபரேசனோ காலில்.. கால் வலிக்காக ஒபரேசன் நடக்குமோ? இதெல்லாம் உகண்டாவில இருப்பிந்தான் சாத்தியம் எனவும் உள்மனம் சொல்லுது... வீடியோ .. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கால் வலிகளுக்கு சவ்வு நீக்கிம் அறுவை சிகிச்சை கேள்வி பட்டதில்லையா...?

      நீக்கு
  18. இப்பொழுது கில்லர்ஜியின் போஸ்ட் எப்போ வருகிறது எனத் தெரிவதில்லை, அதனால பல தடவைகள் தவறிப்போகிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல் ஐந்து தினங்களுக்கு ஓர்முறை இந்திய நேரம் நள்ளிரவு 12:00 மணிக்கு வெளியாகிறது.

      நீக்கு
  19. நேற்று வரத் தவறினேன்.

    பதிவுடன் பின்னூட்டங்களையும் படித்துச் சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
  20. எல்லாம் அனுபவப்பட்டால்தான்தெரியும் போல இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. செங்கல் செருப்பின் நிறமே சிவப்பு...
      வலி தந்த போதும் அதற்கு வாய்த்ததே
      தமிழ் பதிப்பு.. ஆகா அதுவே சிறப்பு...

      நீக்கு
    3. ரொம்பவும் வசதி...
      களவாணிகளோ தெரு நாய்களோ நெருங்க முடியாது...

      கழற்றி வீசினால்
      ஏதோ ஒன்று ரெண்டாயிடும்....

      நீக்கு
    4. வாங்க ஜி கவிதை போன்ற கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  21. நானும் பலருடைய திருமணத்திற்கு சென்றபோது செருப்புகளைத் தொலைத்திருக்கிறேன். ஆனால் இந்த யோசனை எனக்குத் தெரியவில்லை. தங்களின் கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள். கருங்கல்லை மெல்லியதாக இழைத்து Visiting Card கூட செய்திருக்கிறார்கள். எனவே கருங்கல்லின் கன்ம் கூடுதலாக் இருக்கும் என எண்ணவேண்டாம். செருப்பு அளவுக்கு இழைத்து செய்யலாமே. ஆனால் போட்டுக்கொண்டு நடப்பது தான் சிரமமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  22. செங்கல் செருப்பு - :) ஜோசப் ஐயா பழமொழி பொருத்தமாக சொல்லி இருக்கிறார்.

    நெய்வேலியில் சுரங்கத்திலிருந்து அனல்மின்நிலையத்திற்கு கரி அனுப்ப ஒரு Conveyor Belt பயன்படுத்துவார்கள் - நல்ல தடிமனாக இருக்கும்! அதை வைத்து செருப்பு தைத்து தருவார்கள் நெய்வேலியில் சிலர். நான் கூட பயன்படுத்தியதுண்டு! ஒரு முறை தைத்து வாங்கினால் சில வருஷங்கள் வரை பயன்படுத்தலாம்!

    காணொளி பெண்மணி - எத்தனை திறமை அவருக்கு! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  23. வணக்கம் நண்பரே உங்களின் கற்பனை அருமை ... அதைவிட செங்கமலம் கொள்ளை அழகு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே செங்கல்வராயனின் மனைவி செங்க'மலத்தை ரசிப்பது முறையல்ல!

      நீக்கு