தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஏப்ரல் 01, 2020

அமேசனில் தேடுங்கள்...


ங்கள் மனம் கவர்ந்த எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன் அவர்கள் எழுதிக் கொட்டிய கோப்பு மலைகளிலிருந்து...

கொங்காபுரி தேசத்தின் போர் வீரன் கொங்குமுடியின் வீரதீரச்செயல்கள் வெளிவராத உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் அழும் விழிகளும், விழும் துளிகளும்

தனது ஆசைநாயகி பூங்கோதையின் காதல் காலங்கள் குறித்த காவிய நினைவலைகளைப்பற்றி மனம் திறந்து வெளிப்படும் உண்மைக் காதல் காவியம் என்னவள் பூங்கோ(ந்)தை


அலைமகள், கலைமகள், மலைமகள் இவர்கள் விலைபோன கரும்புள்ளி நிகழ்வுகளை நிழல்போல் நிகழ்த்திக்காட்டும் உணர்வோவியம் கொலைமகள்


அவனது வாழ்வில் ஒளிவிளக்காய் ஒளிர்ந்து சிவப்பு விளக்காய் துளிர்விட்ட முத்தழகியை ஒழித்துக்கட்டி வீட்டில் ஒழிந்த விளக்காய் மாற்றிய மாபெரும் காவியம் ஒழிந்த விளக்கு


தனது மணாளன் தில்லாஶங்கடி என்றறிந்து வீச்சருவாளால் வீசிய வீராயியின் வீரகாவியம் வீராணம், வீச்சருவாள் வீராயி


இந்த நூல்கள் இன்று (01.04.2020) முதல் அமேசனில் தேடுங்கள் ஆனால் எந்த மூலையிலும் கிடைக்காது காரணம் எமகண்டன் இன்னும் எழுதவே இல்லையே... பிறகு எப்பூடி ?

56 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கதையின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படி உள்ளன. உங்கள் கற்பனையும், படங்களுடன் முகப்பு அட்டைகளும் பிரமாதம். எழுத்தாளர் எமகண்டம் அவர்கள் படங்களின் முகப்பு அட்டைகளையும், கவர்ச்சி மிகும் இந்த கதை தலைப்புகளையும், ஒரு வேளை நாளை பார்த்தாரானால், எமனேஸ்வரத்திலிருந்து நாளை மறுநாள் முதற் கொண்டு நம்மையெல்லாம் ஏப்ரல் 1 ஆக்கி விட்டு கதைகள் எழுத ஆரம்பித்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. எதற்கும் அசராது காத்திருப்போம் . ஹா. ஹா. ஹா. அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது நீங்கள் வைத்த கதையின் தலைப்புகளும், கதைச் சுருக்கங்களும்.. பதிவை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியமாக உள்ளது. நான்தான் முதலென்று முகம் மறைக்காமல் உடனே காட்டி விட்டதே..! இங்கு ஏப்ரல் ஒன்றை சந்தித்து விட்டேன். ஹா. ஹா. ஹா.

      நீக்கு
    2. வருக சகோ
      பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      இன்றைய முதல் போனி நீங்கள்தான் வாழ்த்துகள்.

      நீக்கு
    3. இந்த நாளில் வாழ்த்துகள் பெற்ற முதல் பாக்கியவதியும் நானாகத்தான் இருப்பேன். ஹா.ஹா.ஹா. நன்றி.

      நீக்கு
    4. ஆம் அதிர்ஷ்டசாலிதான்.

      நீக்கு
  2. ஏப்ரல் ஒன்று சிறப்புப் பதிவா?!!  முதல் புத்தகத்துக்கான படத்தை எதிலிருந்து எடுத்தீர்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.  தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...    இதைதான் கமலா அக்கா சொல்லி இருக்கிறார்களா?  மாடரேஷன் இல்லாமல் உடனே வெளியாகி விட்டதே!

      நீக்கு
    2. வாங்க ஸ்ரீராம்ஜி
      அது படமே அல்ல! எனக்கு கிடைத்தது ஒருபுறத்து கருப்பு கோடுகள் மட்டுமே அதை எனது மனம் போன போக்கில் கொண்டு சென்று இரண்டு தலைகளாக்கி முடிவில் இப்படியானது.

      நீக்கு
  3. ஹ ஹா ஹ ஹா ஹா கில்லர்ஜி ஏப்ரல் 1ற்கான பதிவு...தெரியுது அந்தப் படத்திலிருந்தே..உங்கள் முதல் வரிகளே...!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! இதுவும் சேர்ந்தா!!! ஹா ஹா ஹா ஹா மாடரேஷன் எடுத்ததும் உட்பட...

      கீதா

      நீக்கு
    2. ஆம் எல்லோருக்கும் இன்று டபுள் டக்கர் ஏமாற்றம்தான்.

      நீக்கு
  4. தலைப்பைக் கொடுத்து முகப்பு அட்டையை ரெடி பண்ணி, பிறகு என்ன எழுதலாம் என யோசிக்கும் எழுத்தாளரை இப்போதான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கிச்சு கிச்சு மூட்டாதீங்க எனக்கு கூசுது.

      நீக்கு
  5. தங்கள் படைப்புகள் மின்நூல்களாக வெளிவரவேணும்.
    தேவையென்றால், நானும் வெளியிட்டு வைப்பேன்.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது எண்ணம் ஈடேறட்டும் நண்பரே நன்றி.

      நீக்கு
  6. இன்று காலை நல்ல நகைச்சுவையோடு ஆரம்பிக்கிறது.

    அட்டைப்படங்கள் தத்ரூபமாக இருந்ததால் நானும் ஏமாந்துவிட்டேன். உங்களுக்குள் இப்படி ஒரு டிசைனரா?

    இனிய (இந்திய) காலை வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனது நூலுக்கு அட்டைப்படம் நான்தான் வடிவமைத்தேன்.

      நீக்கு
  7. ஹா... ஹா... இதுவும் நல்லாத்தான் இருக்கு ஜி...

    பதிலளிநீக்கு
  8. கடிப்பதற்கு ஒரு அளவே இல்லையா!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடிக்கணும்னு முடிவு செய்த பிறகு ஸ்கேல் வச்சு அளக்கவா முடியும் ?

      நீக்கு
    2. ஐயோ சாமி முடியலை....

      நீக்கு
  9. ஹாஹா... உங்கள் புத்தகங்கள் வெளியாட்டும் கில்லர்ஜி.

    நல்ல தலைப்புகள்! ஹாஹா... ஒரே டெரரா இல்ல இருக்கு! அமேசானில் வெளியிட்டு விடலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      இப்பவே புக் செய்து வையுங்கள்.

      நீக்கு
  10. ஹா ஹா ஹா என்னாச்சு கில்லர்ஜிக்கு:)) எதுக்கு இப்போ எமன் அங்கிளைத் தேடுறீங்கள்?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே இவரும் உங்களுக்கு அங்கிள்தானா ?

      நீக்கு
  11. எனக்கு அந்த முதல்ப்புத்தகம் வாங்கிப் படிக்கோணும் ஈபேயிலயாவது கிடைக்குமோ?:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எல்லாமே கிடைக்கும் கொழுந்தியாள் கொரானா மனது வைத்தால் ???

      நீக்கு
  12. எனக்கு மட்டும் புத்தகங்களை அனுப்பி வைச்சுடுங்க. விலை கொடுத்தெல்லாம் வாங்கப் போவது இல்லை! :))))) தலைப்புகள், புத்தகங்களின் லே அவுட்டுகள் எல்லாம் அசர அடிக்குது. முதல் படத்தில் காந்தித்தாத்தா ஜாடை தெரியுதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வாங்க நலமா ?
      கண்டிப்பாக அனுப்பி விடுகிறேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. உங்கள் வேலைத்திறன் அசர வைக்கிறது.

    முதல் கதையின் தலைப்பு இந்த கொடுமையான காலகட்டத்தில் மாட்டியவர்கள் விடும் கண்ணீரை சொல்வது போல் உள்ளது.அடுத்து சரித்திரக் கதை படம் எந்த கதையின் அட்டை ?(வெகு அழகாய் செய்து இருக்கிறீர்கள்)
    அடுத்து வரும் கதையின் தலைப்புகள் எல்லாம் மிரள வைக்கிறது.

    நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இன்று உலகமே மரணபயம் கொண்டு கண்ணீர் விடுவது உண்மைதான்.

      தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. அமேசானில் இல்லைன்னா ஃபிளிப்கார்ட்ல் வாங்குவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே அப்படி போடுங்க!

      நன்றி சகோ வருகைக்கு...

      நீக்கு
  15. அன்பு தேவகோட்டைஜி.
    இதை ஏப்ரில் 1 பதிவாக நான் பார்க்கவில்லை. உண்மையில் உங்கள் மனஓட்டங்கள் புத்தகங்களாக வருவதையே எண்ணுகிறேன். அருமையான தலைப்புகள்.
    திறமையான வடிவமைப்பு.
    மனம் நிறை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  16. கூடவே காந்தியையும் வம்புக்கு இழுத்த மாதிரி தெரியுது...

    எப்படியோ புத்தகங்கள் வெளியானால் சரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஹா.. ஹா.. வம்பை நீங்களே இழுத்து விடுருவீங்க போலயே...

      நீக்கு
  17. அதெல்லாம் இருக்கட்டும் ... நீங்கள் குறிப்பிடும் அந்த எழுத்தாளர் "எமகண்டன்" யாரு? ... உங்கள் பெயர் கூட "கில்லர்" ஜி என்று இருப்பதால் எனக்கு உங்கள் மேலதான் லைட்டா ஒரு டவுட்டு இருக்கு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா இதை இப்பத்தான் கண்டு புடிச்சீங்களா ?

      நீக்கு
  18. ஆகா மீசைக்காச நண்பரின் புத்தகம் அமேசானில் வெளிவந்துவிட்டது, வாங்கிப் படிப்போம் என்ற எண்ணத்தில் பதிவிற்குள் நுழைந்தால்,,,,,,
    விரைவில் வெளியிடுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரைவில் வர முயற்சிப்போம்.

      நீக்கு
  19. முதல் புத்தக ஓவியம் அழகு. ஏப்ரல் 1 இப்படியா. நல்லகாலம் நான் லேட்.

    பதிலளிநீக்கு
  20. விரைவில் புதிய நூலொன்று எழுதி, அதை அமேசானில் இணைக்கப்போகிறீர்கள். இதை இந்தப் பதிவின் தலைப்பு சொல்லுகிறது. சரியா நண்பரே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது எண்ணம் விரைவில் நிறைவேறட்டும்.

      நீக்கு
  21. நண்பர் எமகண்டனை இந்த தலைப்புகளில் இப்போது எழுதச்சொல்லலாமே! அதற்குள் திரு 'பசி'பரமசிவம் அவர்கள் சொன்னதை நிறைவேற்றுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எமனேஸ்வரத்தாரிடம் சொல்லிப் பார்க்கிறேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. தேடுங்கள், கிடைக்காது. மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  23. தலைப்புகள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே. அது எல்லாம் சரி - கொலைமகள் என்ற புத்தகத்திற்கு கீழே தங்கள் பெயரையும் போட்டதால் ஒரு வேலை மொழி பெயர்ப்போ என்று நினைத்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஆசிரியரின் பெயரை தீட்ட வேண்டாமா ?

      நீக்கு
  24. தேடினால் கிடைக்காதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கு நல்வரவு.

      தேடிப்பாருங்களேன்..

      நீக்கு
  25. மே மாதம் இங்கு வந்தும் ஏப்ரல் முட்டாள் ஆனேனா! :-)

    பதிலளிநீக்கு