தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 13, 2016

தலையில பூ

தலைப்பு தலையில பூ

எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது ஆம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது இந்த திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு திரைப்படங்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தெரியவில்லை இவர்கள் வைக்கும் தலைப்பு காதில் பூ சுற்றுவது போல் இருந்தால்கூட பரவாயில்லை தலையிலேயே பூ சுற்றுகிறார்கள் இந்த தலைப்பு வைப்பது அத்தனையொரு கஷ்டமா ?  
இதற்கு காரணமென்ன நான் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு எனது மொட்டைத் தலையை தடவிக் கொண்டே, வானத்தை பார்த்து யோசனை செய்தேன் காரணம் ?  
//வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கொரு சேதி தரும்//
(நன்றி கவிஞர். திரு. வைரமுத்து அவர்கள்)
முதலில் கதை இல்லை கசாநாயகிகளின் சதையையும் கசாநாயகர்கள் அந்தரத்தில் பறந்து அடியாட்களை உதைத்து வதைப்பதையும் மட்டுமே நம்பி படம் எடுக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது என்மனம் வதைக்கிறது படத்தில் கசாநாயகன் பெயர் சுப்பையா என்றால் படத்தின் பெயரும் சுப்பையா படத்தில் கசாநாயகி பெயர் முனியம்மா என்றால் படத்தின் பெயரும் முனியம்மா இந்நிலை மாறவேண்டும்.
இவர்களுக்கு ஏன் ? கதை கிடைப்பதில்லை
என்னால் ஒரு பக்ககதையும் எழுத முடியும்
பத்து பக்க சிறுகதையும் எழுத முடியும்
நூறு பக்க நாவலும் எழுத முடியும்
ஆயிரம் பக்க தொடர் கதையும் எழுத முடியும்
இவைகளுக்கு தலைப்புகளும் கொடுக்க முடியும்.
அ-னு-ப-வ-த்தில் வை தடவிப் பார்க்க தொடங்கி இருக்கும் கத்துக்குட்டியான எனக்கே ? இந்தனை நம்பிக்கை வரும்போது எத்தனையோ திரைப்படங்களை வெளியிட்டும் இவர்களுக்கு ஏன் ? கதை சொல்லத் தெரியவில்லை கதை வேண்டுமா ? நண்பர்களே நண்பிகளே வாருங்கள் எம்மிடம்.

சாம்பசிவம்-
அது சரி எப்படியோ நொட்டம் சொல்லி பொழப்புக்கு வழி தேடுறீரோ... ஆதாயம் இல்லாமலா ஆத்தைக் கட்டி அழுவீரு. 

38 கருத்துகள்:

 1. நகைச்சுவைப் பதிவு என்றாலும் சீரியஸாகவே பதில் சொல்கிறேன். சமீபத்தில்தான் வெற்றிமாறன் கட்டுரை விகடனில் படித்தேன். பொல்லாதவன் படத்துக்கு வெவ்வேறு தலைப்புகள் யோசித்து வைத்திருந்தாராம். ஆனால், catchy யாக இருக்கவேண்டும், மக்களிடம் எளிதில் reach ஆகி அவர்கள் மனங்களில் உட்கார்ந்து ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆனால் கதையின் போக்கிற்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இருப்பதில்லையே...
   உதாரணம் ஒரு படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று மீட்டிங் படத்தின் கசா’’நாயகன் உள்பட அனைவரும் அமர்ந்திருந்தார்களாம் பேசாமலிருந்த கசா’’நாயகன் சட்டென எழுந்து ‘’படையப்பா’’ என்று சொல்லி விட்டு போய் விட்டாராம் மீட்டிங் முடிந்து விட்டதாம் உடனே ஒரு குழு அமைக்கப்பட்டு கதை (?) எழுதினார்களாம் இது எப்படி இருக்கு ? மக்களை இவர்கள் எவ்வளவு எள்ளுக்கீரையாக கணித்து வைத்திருக்கின்றார்கள் என்பதைத்தானே... காட்டுகிறது

   நீக்கு
 2. திரை உலகிற்கே அழைப்பா
  சபாஷ் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே முயன்று பார்ப்போமே.... வந்தால் ? நான் தயார்.

   நீக்கு
 3. தலைப்புப் பஞ்சம் - கதைப் பஞ்சம் என்று சொல்லாமல் உங்களிடம் வந்தால் நிறைய கதையும் தலைப்பும் கிடைக்கும் என அவர்களுக்குப் புரியவில்லையே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உங்களுக்கு தெரிகின்றது அவர்களுக்கு தெரியவில்லைதான்.

   நீக்கு
 4. அவிங்களுக்கு தலைப்புக்கும் பஞ்கமில்லை.. கதைக்கும் பஞ்சமில்லை நண்பரே.... அங்கு தைரியத்துக்கு பஞ்சம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தன்னை நம்பி தைரியமாக இறங்காமல் கசா’’நாயகனை நம்புவதுதானே... ?

   நீக்கு
 5. சீக்கிரமாக இந்தப்பக்கம் வருவாங்க சகோ......தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா கேட்கவே சந்தோஷமாக இருக்கின்றதே... ஏற்கனவே நண்பர் மூலம் எனது ப்ளாக் முகவரி கமல்ஹாசனிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

   நீக்கு
 6. சினிமாவிற்கு கதை எழுத போகிறீர்கள் போலும்!
  வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 7. நண்பரே சினிமாக்காரர்கள் அவர்களுக்கு என்று இருக்கும் சென்டிமெண்ட் போன்ற வட்டத்தையெல்லாம் விட்டு விட்டு வர மாட்டார்கள். ‘மூன்று எம்ஜிஆர் வீரர்கள்’ என்று ஒரு ஆங்கில படத்திற்கு போஸ்டர் அடித்து ஓட்டியவர்கள் ஆயிற்றே, இவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. வாழ்க்கை ஒரு வட்டம் என்கிற மாதிரி, ”ஒரு படத்தின் துவக்கத்தில் பிள்ளையார் கோவிலில் சிதறுதேங்காய் உடைக்கிற மாதிரி சீன் எடுத்து வெற்றி பெற்றால்...அடுத்துவரும் ஐம்பது படங்களும் ஆதேமாதிரிதான் எடுப்பார்கள். இதுதான் திரையுலகம். அது ஒரு மாயஉலகம் சிக்கினவர்கள் சொகுசாகவும் சிலர் இருப்பார்கள். சின்னாபின்னமாகவும் ஆகிவிடுவார்கள். எல்லாம் காலத்தின் கோலம். அவர்களுக்கே சவாலா? வெற்றிதான் கொண்டாடுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சவால் இல்லை கோரிக்கை முயற்சிதானே... வந்தால் பழம் வராவிட்டால் கல்.

   நீக்கு
 9. ஒரு இட்லியும் நாலு சட்னியும்!.. இது தாங்க அடுத்த படத்துக்கு தலைப்பு!..

  தலைப்பு இருக்கட்டும்.. முதல்ல கதையச் சொல்லும்!..

  ஆயா... மாவு அரைச்சு இட்லி சுட்டாங்க.. அம்மா - மாவு வாங்கி இட்லி சுட்டாங்க!...

  அப்போ - மக!?...

  அங்க தான சஸ்பென்ஸ்!?..

  >>>>>>>>> <<<<<<<<<

  என்ன?.. சூப்பர்வைசர்.. பட்டப்பகல்லயே கனவா?...

  விழித்துக் கொண்டேன்... சே.. எல்லாமே கனவுதானா?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தலைப்பு ஸூப்பராகத்தான் இருக்கு கதையில் மூன்றாவது வரியில் சஸ்பென்சா ?

   நீக்கு
 10. தலைப்பு "நச்"னு மனதைக் கவர்கிறாப்போல் இருக்கணும்னு சொல்வாங்க. ஆனால் "நடுவிலே ஒரு பக்கத்தைக் காணோம்."னு கூடப் படம் வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
 11. இன்றைய சினிமாவினை சரியாக விமர்சித்துள்ளீர்கள்! சினிமா காரர்கள் செண்டிமெண்ட் பார்ப்பார்கள் அதனால் ஒரே குட்டையில் ஊறி திளைக்கின்றார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 12. வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களின் தலைப்பு பல சமயங்களில் கை கொடுத்திருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் பல தலைப்புகள் கவிதை போலவே இருக்கும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. பதில்கள்
  1. வாங்க ஜி டேப்பில் இதற்குமேல் எழுத முடியவில்லை என்று நினைக்கிறேன்

   நீக்கு
 14. ஹா ஹா .. அருமை http://ethilumpudhumai.blogspot.in

  பதிலளிநீக்கு
 15. பதிவுக்கு 100 மார்க். புகைப்படத்திற்கு 100க்கு 200 மார்க்.

  பதிலளிநீக்கு
 16. சிறந்த கதைகளுக்கு அணுகுவீர்
  கில்லர்ஜி தேவக்கோட்டை....
  வந்து கதைகளை அள்ளிக்கொள்வீர்...
  நிபந்தனைகளுக்குட்பட்டது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலவச விளம்பரம் செய்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 17. திரை உலகம் தனி உலகம். வெளியில் இருந்து பார்ப்பதற்கும் உள்ளே சென்று பார்ப்பதற்கும் அதிக வேறுபாடு இருக்கும். இப்போது வரும் பல படங்களில் கதையே இல்லாதபோது தலைப்பைப்பற்றி கவலைப்படுவானேன்?

  கூடியவிரைவில் தங்களின் கதை திரைக்கதை உரையாடலுடன் கூடிய திரைப்படத்தை எதிர்பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா கதையே இல்லை உண்மை நண்பரே....
   என்னையும் நம்பிக்கை வைத்து இறங்கும் தயாரிப்பாளர்கள் உண்டெனில் திரைப்படம் வருவது நிச்சயம்.

   நீக்கு
 18. தொடர்பில்லா தலைப்புகள் !நாளுக்கொரு படம்!வெளிவருதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. தலைப்பு கவர்ச்சியாக ஈர்க்கும் விதத்தில் இருந்தால்தான் படம் வெற்றி பெரும் என்பதுதான் காரணம். சில சமயங்களில் அது கதைக்குப் பொருந்திப் போகிறது. சில சமயங்களில் வேறு மாதிரி...அப்புறம் இந்தப் பாழாப்போன சென்டிமென்ட்...

  எழுதுபவர்கள் கூட தலைப்பு ஈர்க்கும் படி வைத்தால்தான் வாசிக்க மக்கள் வருகிறார்கள். இதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். செய்தித் தாள்கள் கூட பரபரப்பிற்கு வேண்டி தலைப்பு. ஆனால் உள்ளே மேட்டர் சப்பையாக இருக்கும். ஒன்றுமே உப்புச் சப்பில்லாமல் அரைத்த மாவையே அரைத்ததாக இருக்கும்...

  எல்லாம் சென்சேஷனல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக விரிவான விளக்கவுரைகளுக்கு நன்றி

   நீக்கு