தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 11, 2016

உலகம் NASAமாகட்டும்


நண்பர்களே... மேலே புகைப்படச் செய்தியை படித்தீர்களா ? இனி நாம் எதைத்தான் நம்பி உண்பது பீட்சா அது என்றுமே ஏழைகளுக்கு எட்டாக்கனிதான் ஆகவே அதைப்பற்றிய கவலை வேண்டாம் ஆனால்  புரோட்டா ஏழை உழைப்பாளிகளின் முக்கிய உணவாக பல காலங்களாக இருந்து வருகின்றது இனி எப்படி அதை நம்பி உண்பது ? நான் எப்பொழுதுமே சொல்வதுதான் விஞ்ஞான வளர்ச்சி மனிதவாழ்வுக்கு வீழ்ச்சியே.

தொலைபேசி இருந்த காலங்களில் இவ்வளவு வியாதிகள் வருவதாக சொல்லிக் கேட்டதில்லை ஆனால், கைப்பேசி கண்டுபிடித்த பிறகு தினமொரு தகவலாக நோய் கண்டுபிடிப்பு செய்தி வந்து கொண்டே இருக்கின்றது தொடுதிரை செல்பேசிகளால் புற்றுநோய் பரவுகின்றதாம் இதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்துதானே கண்டு பிடிக்கின்றார்கள் அப்படியானால் இவ்வகையான சாதனங்களை தடுத்து நிறுத்தி விடக்கூடாதா ? 

இன்றைய இளைய சமூகத்தினர் சொல்கின்றார்கள் செல்பேசி இல்லாமல் மக்கள் வாழ முடியாது என்று. உணவில்லாமல் வாழவே முடியாது என்பதை பலரும் மறந்து விட்டார்களே... விஞ்ஞானிகள் நினைத்தால் இன்றே செல்பேசிகள் அனைத்தையும் செயல் இழக்கச்செய்து விடமுடியாதா ? அப்படிச்செய்தால் கோடிகள் வீணாகிவிடுமோ ? மனிதன் உருவாக்கிய பேப்பர்தானே... விரைவான வேலைகள் தடைபடுமோ ? விரைவாக முடித்து மனிதன் எங்கு போகப்போகின்றான் ? உடனடி மரணம்தானே... மனித உயிர்களைவிட பேப்பரிலான பணமே இன்று முக்கியமாகி விட்டது இதை செய்ய முடியும்தானே அப்படி நடந்து விட்டால் இந்த மக்கள் அனைவரும் இனி வாழவேண்டாம் என்று முடிவெடுத்து விடுவார்களா ? அதேநேரம் விஞ்ஞானிகள் செய்ய மாட்டார்கள் காரணம் எல்லா மனிதர்களுமே பணம் ஒன்றே குறிக்கோள் என்றுதான் ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள்.உதாரணம் கணினியை உருவாக்கியது விஞ்ஞானிகள்தான் பிறகு அதற்குள் வைரஸ் என்ற நச்சுக்கிருமி நுழைந்து விட்டதாகவும் அதை தடுப்பதற்கு ஆன்ட்டி வைரஸ் இடுவதாகவும் சொல்லி அதற்கும் பணம் செலவு செய்ய வைக்கின்றார்கள் கணினியை கண்டு பிடித்தவர்களுக்கு அதில் வைரஸ் நுழையாமல் செய்யமுடியாதா ? பிறகு ஆன்ட்டி வைரஸால் தடுத்து விடமுடிகின்றது இதிலிருந்து தெரிவது என்ன ? எல்லாமே வியாபாரம் பண்டைகால விஞ்ஞானிகள் தங்களால் மக்களுக்கு உபயோகமாக செய்யவேண்டும் என்பதற்காக தன்னையே தியாகம் செய்தார்கள் இன்றைய விஞ்ஞானிகள் அப்படியில்லை இன்று கர்ப்பிணிகள் மூன்று மாதத்தில் தொடங்கி குழந்தை நலமாக வளர கட்டாயம் இந்த ஊசி போடவேண்டும் என்று சொல்லி பெண்களுக்கு ஊசி போட ஆரம்பிக்கின்றார்கள் இதற்கு நான் மருத்துவர்களை குற்றம் சொல்ல வரவில்லை அவர்கள் படித்த பாடத்தை நம்மிடம் புகுத்தி விட்டு அவர்களது கடமையை செய்து விட்டு பணம் பெற்றுக்கொள்கின்றார்கள் அவர்களது குழந்தைகளுக்கும் இதே நிலைதான் இந்த வட்டத்தை விட்டு அவர்களும் வெறியேறி விடமுடியாது குழந்தை பிறந்த பிறகு பால்டின்களை வரிசை எண்கள் வாரியாக ஊட்டச் சொல்கின்றார்கள் கட்டாயம் அந்த பால் பவுடர்களை குழந்தைகளுக்கு ஊட்டியாக வேண்டும் இல்லையெனில் கர்ப்பிணியாக இருந்தபோது போட்ட ஊசி தனது வேலையை காண்பித்து விடும் இதெல்லாம் வியாபாரத்தந்திரம் எல்லாம் பணம் படுத்தும்பாடு மேலும் விஞ்ஞான வளர்ச்சி மனிதனுக்கு மலட்டுத் தன்மையை வளர்த்துக் கொண்டே வருகின்றது இது நாளை இதற்கும் வழி வகுக்கும் ஆம் ஆண் அடங்கி ஒடுங்கி விடுவான் பெண்கள் இப்படி கேலி செய்யும் நிலை அதிகரித்து விடும் இதை நான் நகைச்சுவைக்காக சொல்லவில்லை ஆழ்ந்து சிந்திப்பீர் உண்மை புலப்படும்.


இதை கொண்டு வந்தது கடவுளின் குழந்தைகள் (God Son’s) என்று அமெரிக்கர்களால் வர்ணிக்கப்படும் யூதர்கள் என்று சொல்லப்படும் இஸ்ரேலியர்களின் மூளையில் உதித்தவை

(யகுதிகள் என்றும் சொல்வார்கள்

எவ்வளவு முன்னோட்டமான சிந்தனை பாருங்கள் ஒரு யகுதியின் மூளை 100 அமெரிக்கர்களின் மூளைகளுக்கு சமம் ஹிட்லர் யூதர்களை கூட்டம், கூட்டமாக விஷவாயுவை கொடுத்து கொன்று அழித்தான் ஒருக்கால் அவன் அப்படிச் செய்யவில்லை எனில் உலகம் இன்று அழிந்திருக்குமோ... என்றே என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு எண்ணத் தோன்றுகின்றது அத்தனை அறிவை இறைவன் அவர்களுக்கு மட்டும் கொடுத்திருக்கின்றான் என்றால் ? இந்த ஓரவஞ்சனையின் காரணம் என்ன ? உலகம் நிச்சயமாக அழியும் என்கின்றார்களே அதற்காகத்தானா ? இன்றைக்கும் நாசாவில் இருக்கும் பெரும்பான்மையினர் யூதர்களே... உலகை நாசமாக்கத்தான் இவர்கள் ‘’நாசா’’ என்று பெயர் வைத்தார்களோ ? மனிதனின் மூளை இதுவரை 10 % மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்றும், மீதமுள்ள 90 % இன்னும் மிச்சமிருக்கின்றது என்பதையும் விஞ்ஞானிகளே கண்டுபிடித்து சொல்கின்றார்கள் இப்பவே தாங்க முடியலையடா சாமி இவர்களுக்கே 10 % தான் வேலை செய்திருக்கின்றது என்றால் ? எனக்கெல்லாம் 0 % தானோ ?

பண்டைகால பெண்கள் கர்ப்பம் தரித்த பிறகு என்ன செய்தார்கள் ? குழந்தைகளுக்கு ஐந்து வயதுவரை தாய்ப்பால் கொடுத்தவர்களும் உண்டு என்று நமது அப்பத்தாமார்கள் வேடிக்கையாக சொல்லிக் கேட்டதுண்டே மரணம் என்ற ஒன்று இருக்கும்போதே மனிதன் பணத்தின் பின்னே ஓடி சேர்த்துக் குவிக்கின்றான் மரணம் இல்லை எனில்  சம்போ மஹாதேவா !
 காணொளி

Chivas Regal சிவசம்போ-
மூளை வளரணும்னா... கறிக்கடை கரீம்பாயிடம் தீர்வு கிடைக்கும்.


குறிப்பு (National Aeronautics and Space Administration) NASA 1958 July 29-ல் பெயர் மாற்றப்பட்டது நாசாவில் தற்போது 18,800 பணியாளர்கள் வேலை செய்கின்றார்கள் இதன் முந்தைய பெயர் நாகா (National Advisory Committee Aeronautics) NACA 1915-ல் உருவாக்கப்பட்டது இதுவும் கிட்டத்தட்ட அந்த மாதிரி நாசமாக்குற பெயர்தான்.

42 கருத்துகள்:

 1. நல்ல கருத்து.ஆனால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் வரும் பக்க விளைவுகளை யாரே, என்னே செய்திட முடியும்? கட்டுப்பாடு மனிதனுக்குத்தான் வரவேண்டும். அதற்கு மனிதன் தயாராயில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தயார் இல்லை என்பதில்தான் இன்று அதிக சதவீதத்தினர் இருக்கின்றோம் உண்மையே...

   நீக்கு
 2. NASA மயமாக்கல்
  நல்லதொரு பதிவு தோழர்!

  பதிலளிநீக்கு
 3. அறிவியல் வளர வளர அதன் ஆதாயங்கள் எந்த அளவு பயன்படுத்தப்படுகின்றதோ அந்த அளவு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்யும். வேறு வழியில்லை. அதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களது கருத்தும் உண்மைதான் என்ன செய்வது அனுபவித்தே தீருவோம்.

   நீக்கு
  2. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விவரம் நன்றி

   நீக்கு
  3. நண்பர் திரு. அசோகன் குப்புச்சாமி அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 4. இந்த புரோட்டா (மைதா மாவு) சமாச்சாரம் சென்ற வருடமே வெளியாகி விட்டது..

  சில பத்திரிக்கைகள் பகீர் தகவல் என்றும் குபீர் தகவல் என்றும் தலைப்புகளைச் சூட்டி பிலாக்கணம் பாடி ஓய்ந்து விட்டன..

  இப்போது மீண்டும் விழித்தெழுந்து திடுக்கிடும் செய்தி என்று கலக்கி அடித்துக் கொண்டிருக்கின்றார்கள்...

  அதேசமயம் - அவர்களுடைய அடுப்பங்கரை பகுதியில் மைதா மாவு மகாத்மியம் சிற்றுண்டி வகைகளை அச்சேற்றி - மக்களிடம் விற்பனை செய்து கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்...

  விழிப்புணர்வு வர வேண்டும் தான்!..
  ஆனால் நம் மக்களிடம் விழிப்பாவது... உணர்வாவது!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நமது மக்களுக்கு விழிப்புணர்வு என்பது என்றால் வேப்பங்காய் சாப்பிடுவது போல்தான் உணர்கின்றார்கள்.

   கிணறு என்று தெரிந்தும் உள்ளே விழுவது தற்கொலைதானே... மக்கள் மனதில் மாற்றம் வருமா ?
   வந்தால் நலம் இல்லையெனில் அழிவது மனிதகுலம்

   நீக்கு
 5. எதற்காக சாப்பிடுகிறோம்
  ஏன் சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்தால்
  இந்த அவலம் இருக்காது தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே உண்மைதான் உணவுக்காக வாழக்கூடாது என்று பலரும் சொல்வார்கள் ஆனால் உணவு என்றும், பசி என்றும் ஒரு சுழற்சிமுறை இல்லையெனில் மனித வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை உழைக்க வேண்டிய அவசியமில்லை ஆசையே இருக்காதுதான்.

   நீக்கு
 6. nanbara, thalaiba asathala, unmaiyai soluthu vaalthukal. http://anatomictherapy.org/ intha video pdf mudicha paruga. jtug

  பதிலளிநீக்கு
 7. அறியாமை என்பதே ஒரு வரம் ஜி. இது பற்றி எல்லாம் அறியாமல் இருப்பதே நன்று பொதுவாக மைதா உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று கேள்விஆட்டாவும் மைதாவும் கோதுமையிலிருந்துதான் வருகிறது ஒன்று கேடு இன்னொன்று நல்லது இது எப்படி இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா எல்லாமே நன்மைக்காகவே இறைவன் படைத்தான் ஆனால் இடைப்பட்ட மனிதன் வியாபாரத்துக்காக அதனுள் சேர்க்கும் பொருட்களால்தான் பிரச்சினையே வருகின்றது
   காணொளியை கேட்டுப்பாருங்கள் நிறைய தகவல் உண்டு ஐயா.

   நீக்கு
 8. பொதுவாக உடல் உழைப்பாளிகள் நிறைந்த பகுதிகளில் இது போல் பசி தாங்கும் மாவுப்பொருள் கொண்ட (பரோட்டா)உணவுப்பொருள் நிறைய விற்றது,அதில் பூரி மொச்சை,சுண்டல்,வடை தட்டாம்பயிறு என எல்லாம் வைக்கப்பட்டது,மூடை தூக்குபவர்கள் க்கைவண்டி இழுப்பவர்கள் தினசரி மட்டனுக்கும் சிக்கனுக்கும் எங்கு போவார்கள்,தவிர அவர்கள் நான் ஸ்டாப்பாக வேலை செய்து கொண்டிருக்கிற நேரங்களில் அவர்களுக்கு பசி தாங்க வேண்டுமே,சாய்ங்கால வேளைகளில் ஒரு செட் பூரி மொச்சை மற்றும் இரண்டு வடைகளை பிய்த்துப்போட்டு சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டுப்போனால் அது அவர்களுக்கு இரவுவரை பசிதாங்கும்,இதி பூரி மாவுப்பொருள் வயிறை அடைக்கும்,மொச்சை புரதம் வடை பருப்பு கொண்டது சாம்பார் துவரம் பருப்பை உள்ளடக்கியது,அன்றாட உழைப்பாளிகளுக்கு எளிய உணவாயும் பசிதாங்கும் அவசர ஏற்பாடாயும் இது போலான உணவுகளே இன்று வரை இருக்கின்றன.இதில் கலப்படம் எனும் போது எங்குதான் போவது,அது சரி அன்றாடம் நாம் உண்ணுகிற உணவே பக்க விளைவை ஏற்படுத்துகீறது என்றுதானே சொல்கிறார்கள்.தவிர கணிணி செல் இதன் உபயோகத்தை தவிர்க்க முடியாதுதான்,விஞ்ஞானம் எப்பொழுதுமே
  இரு முனை உள்ள கத்திபோலதானே,,,?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பிரமாண்டமான தகவல் தந்தீர்கள் உண்மையே உழைப்பாளிகளின் அவசர உணவே சாலையோரக்கடையின் புரோட்டாதான் அதையும் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை என்ன செய்வது....

   நீக்கு
 9. நா விண்வெளி பற்றிய பதிவுன்னு நினச்சுட்டேன்... உங்க மூலைல பிரச்சனைனு சொல்லி புது ஆண்டிரைட் மூளை வைக்கிறோம் சொல்ல போறானுக பாருங்க !!! http://ethilumpudhumai.blogspot.in/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ‘’நமக்கு’’ அவர்கள் கொடுக்கும் மூளையை வாங்கி வீட்டின் மூலையில் வைத்து விடுவோம்.

   நீக்கு
 10. இனி நாசமாவதற்கு என்னாஇருக்கிறது...???????

  பதிலளிநீக்கு
 11. அருமையான பகிர்வு. அனைத்திலும் கலப்படம்... எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.....:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான் எல்லாமே கலப்படம்.

   நீக்கு
 12. பொதுவாகவே மைதா மாவையும், வெள்ளை ரவையையும் கொஞ்சமாகப் பயன்படுத்துவதே நல்லது. தேவை எனில் வேறு வழியில்லாமல் பயன்படுத்திக்கலாம். பராத்தா நாங்க எல்லாம் கோதுமை மாவில் தான் செய்வோம். வித விதமான பராத்தாக்கள் உண்டு. பிட்சா பக்கமெல்லாம் போறதே இல்லை. வெளிநாடு போனால் குழந்தைகள் வாங்கும்போது ஒரு சின்னத் துண்டு சாப்பிட்டது உண்டு. நல்ல விழிப்புணர்வுப் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துப்பகிர்வுக்கு நன்றி தாங்கள் சொன்ன குழந்தைகள் வாங்குவதை தடுக்கலாமே....

   நீக்கு
  2. ஹூம், வளர்ந்த குழந்தைகள்!:) அவங்களுக்குப் பழகி விட்டது! :(

   நீக்கு
  3. தெரியும் இருப்பினும் இனி அவர்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியமே.... மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. நல்ல பதிவு. தேவையான பதிவு.
  விளம்பரங்களால் மக்களை ஏமாற்றி பணம் சேர்க்கும் கும்பல், நோய் அதிகரிக்க வைத்து மருந்தை நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யும் கும்பல் இவர்களிடமிருந்து தப்பிக்க மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
  டாக்டர் சிவராமன் அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார். கேட்பவர்கள் கேட்டு பலன் அடைகிறார்கள்.
  விமலன் சொல்வது போல் ஏழை மக்களின் உணவாகி விட்டது பராத்தா பாவம் அவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துப்பகிர்வுக்கு நன்றி

   நீக்கு
 14. இதெல்லாம் சொன்னா பைத்தியக்காரன் என்பார்கள்.

  தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. மேலும் இங்கு வாழ்வது மக்களல்ல கூட்டம், இவர்களுக்கு கூப்பாடு போடத்தெரியும் மனதைரியத்தோடு போராட தெரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இன்றைய நிலையை, சரியாக சொன்னீர்கள்.

   நீக்கு
 15. சிந்திக்க வேண்டிய பதிவு....
  சிந்தித்தால் என் மூளை
  வேலை செய்யாது....
  ம்ம்ம் அது என்னைக்குதான்
  வேலை செஞ்சிருக்கு....!!

  பதிலளிநீக்கு
 16. சிந்திப்பதே மூளை வேலை செய்யத்தானே... நண்பரே

  பதிலளிநீக்கு

 17. அறிவியலை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதா அழிவிற்கு பயன்படுத்துவதா என்பது நம் கையில் தான் இருக்கிறது. எனவே அறிவியல் கண்டுபிடிப்புகளில் குறைகள் கண்டுபிடிக்காமல் ஆக்கத்திற்கே பயன் படுத்துவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆனால் மனிதன் அழிவுக்கே அதிகம் உபயோகப்படுத்துகின்றான்.

   நீக்கு
 18. "பரோட்டா, பீட்சா சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய்" என்ற செய்தியை வாசகர் படிக்க வேண்டுமெனத் தங்கள் பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்தேன்.

  நஞ்சுக் கலப்படம் அற்ற உணவுகளைத் தேடி உண்ணாவிட்டால் நம்மாளுங்க எப்படி நெடுநாள் வாழமுடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துரைகளுக்கு நன்றி

   நீக்கு
 19. உங்கள் கருத்துகள் சரி என்று ஏற்கிறேன் அதே சமயம் சில கருத்துகளில் என் கருத்துகள் வேறுபடுகின்றன. அதை அடித்த போது பெரிதாகியதால் பதிவாக இடுகின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது பதிவுக்காக காத்திருக்கின்றேன்...

   நீக்கு