தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 09, 2020

கண்டிக்காத குழந்தை தண்டிக்கப்படும்


    மீபத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். கணவன்-மனைவி-ஆண்மகவு இப்படி தனிப்பட்ட சந்தோஷமான வாழ்க்கைதான். சில குழந்தைகள் எந்நேரமும் எதற்கெடுத்தாலும் அழுது அடம் பிடித்துக் கொண்டே இருக்கும் இது பரம்பரை குணம் மட்டுமல்ல தற்கால மக்களின் மாற்றத்தால் தொற்றிக் கொண்ட வியாதி என்றே சொல்லலாம்.

இதில் சில தாய்மார்கள்தான் பொறுமையாக குழந்தையை ஆற்றுப் படுத்துவார்கள் அதில் இக்கால பெண்மணிகளின் பொறுமைபற்றி நான் சொல்லி அறிய வேண்டியதில்லை. அந்தக் குழந்தை ஏதோவொரு விளையாட்டுப் பொருளைக் கேட்பதுபோல் கத்தியை கேட்டு அழுகிறது. ஒன்றரை வயது இருக்கும் அந்தப் பெண்ணும் எவ்வளவோ சொல்லியும் குழந்தை கேட்கவில்லை பண்டைய காலத்தில் உடனே தாலாட்டுப் பாடலை பாடி துயில வைப்பார்கள். இன்றைய பெண்மணிக்கு தாலாட்டுப் பாடல் தெரியாதே... உடனே அலைபேசியில் திரைப்படப்பாடலை போடலாமே என்று நினைக்கின்றீர்களா ? இல்லை எல்லா வீட்டிலும் அதுதானே என்கிறீர்களா ?

சரி நாமாவது தூக்குவோம் என்றால் புதிய முகத்தை அதுவும் நமது முகத்தை(?) ஏற்குமா ? ஒரு குழந்தை பிறரிடம் போவதில்லை காரணம் என்ன ? பண்டைய கூட்டுக் குடும்பத்தில் குழந்தையை ஒருவர் மாற்றி மற்றவர் தூக்கி வைத்திருந்து பலரிடமும் செல்லும் பழக்கத்தை கற்றுக் கொடுத்து இருந்தனர். மேலும் குழந்தையும் வெகுநேரம் அழுதாலும் எந்த தாய்க்கும் வெறுப்பு வரத்தான் செய்யும் பாவம் அவளும் என்னதான் செய்வாள் ? தனது அலைபேசியில் தொடர்பில் இருப்பவருக்கு வாட்ஸ்-ஆப்பில் எப்பொழுது குட்மார்னிங் சொல்வது ?

இப்பொழுது அடம் பிடித்து அழும் குழந்தையை சாந்தியும், சமாதானமும் செய்ய வீட்டில் பெரியவர்கள் இல்லை. அவர்கள் இருந்தால் பராக் காண்பித்து குழந்தையின் மனப்போக்கை மாற்றி விட்டு குழந்தையை மீண்டும் தாயிடம் சிரித்துக் கொண்டு வருவது போல் செய்து விடுவார்கள். அவர்கள் எங்கே ? என்று கேட்டால் அவர்கள் இங்கு இருக்க மாட்டேன் முதியோர் இல்லத்தில்தான் இருப்பேன் என்று குழந்தையைப் போல் அடம் பிடிக்கிறார்கள் என்று மருமகள் ஆணித்தரமான உண்மையை சொல்கிறாள்.

இதனால் குழந்தையை சாந்தப்படுத்த பெற்றோரே இறங்கி வரவேண்டியது இருக்கிறது வேறுவழி குழந்தை கேட்ட கத்தியை எடுத்து வினையாட கொடுக்கிறார்கள். இவர்களும் குத்திக் கொள்ளுமே என்று பயந்து கத்தியைப் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

இதிலொரு வேடிக்கையும் உண்டு. குழந்தையிடம் தாத்தா-அம்மாயி பெயரைக் கேட்டால் உடனே சொல்லி விடும் அதே குழந்தையிடம் ஐயா-அப்பத்தா பெயரைக் கேளுங்கள் திருத் திருத் வென்று முழிக்கும் பாவம் குழந்தை என்ன செய்யும் ? அதற்கு சொல்லிக் கொடுத்தால்தானே தெரியும். மீசை வைத்த ஆண் மகனும் தனது குழந்தையிடம் சொல்லிக் கொடுத்து இருக்க மாட்டான். அவனும் ஒரு புள்ளப்பூச்சி பாவம்
ஓர்முறை நானும், திருமதி. பானுமதி வெங்கடேஷ்வரன் மேடமும் இதனைக் குறித்து அலைபேசியில் பேசியிருந்தோம். அவர்கள் சொன்ன விசயமும் எனக்கு ஞாபகம் வந்தது. இப்படி அடம் பிடிக்கும் போக்கு எதுவரை செல்கிறது ? அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர, வளர இதுவும் கூடவே வருகிறது. பெற்றோர்களும் நமது குழந்தை அடம் பிடித்தவள் என்று பணிந்தே வளர்க்கிறார்கள். குழந்தையும் பெற்றோரை இப்படியே அடிபணிந்தே அழைத்துச் செல்கிறது எதுவரை ?

தனது காதலனை தேர்வு செய்து பெற்றோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று நிறுத்தும் வரையில்...

கூட்டுக் குடும்பம் என்ற தமிழர்களின் கலாச்சார அழிவு வாழ்வில் நிறைய மாற்றங்களை அழிவுப்பாதையை நோக்கியே இழுத்துச் செல்கிறது அவைகளில் இதுவும் ஒன்றே இன்னுமுண்டு ஆயிரமாயிரம் இழப்புகள். இப்பொழுது குழந்தைகளை ஆசிரியர் முதற்கொண்டு யாருமே அடிப்பதில்லை உண்மைதானே... முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.ஏ.கலியமூர்த்தி அவர்கள் சொன்னது போல, ஆசிரியர்களால், பெற்றோர்களால் கண்டிக்கப்படாத குழந்தை பின்னாளில் காவல்துறையினரால் தண்டிக்கப்படுகிறார்கள். இதுவே நிதர்சனமான உண்மை.

நாமேன் குழந்தைகளை கண்டிப்பதில்லை ? நமக்கு இருப்பதே ஒரே குழந்தை அது வேற ஏதாவது செய்து விட்டால் ? என்ற பயம் காரணம் இன்றைய சமூகத்தில் தற்கொலைகள் பெறுகிக் கொண்டே செல்கிறது காரணம் தோல்வியை தாங்காத மனம். ஒன்றரை வயதில் அடம் பிடித்து கத்தியே கத்தியை வாங்கிப் பழக்கப்பட்ட குழந்தை இறுதிநாள்வரை அடம் பிடித்தே வாழ்கிறது அதே குழந்தை தனது குழந்தைக்கும், அதே நிலைப்பாடு வருவதை கண்டு கலங்கி நிற்கிறது. விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தை அந்த மனதை கற்றுத்தராத பெற்றோர் அதற்காக தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் வேறு வழி ?

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே – பின்
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே...

திரைப்படம் (1976) - நீதிக்குத் தலைவணங்கு
பாடலாசிரியர் – புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் – எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் – கே.ஜே.யேசுதாஸ்

ChavasRegal சிவசம்போ-
என்னய்யா இது மொட்டைத்தலையில் ஆரம்பித்து முழங்காலில் வந்து முடிச்சு போடுறாரு. ?

நேரமிருப்பின் காணொளியில் அறிவுரை கேட்பீர்.

56 கருத்துகள்:

  1. பணம் எனும் மாயை அனைத்தையும் மாற்றி விடுகிறது ஜி...

    பல வீடுகளில் ஆயா வளர்ப்பதில் தான் பிரச்சனையே...!

    காணொளி கண்டு கேட்டுள்ளேன் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் பணம் உலகையே மாற்றி விட்டது இனி அதன் வழியில்தான் மனிதன் பயணிக்க வேண்டும்.

      நீக்கு
  2. அன்னை வளர்ப்பதினால் மட்டும் ஒரு பிள்ளை நல்ல பிள்ளையாகி விடுமா?..

    இந்தச் சமுதாயத்திற்கு அதில் பங்கில்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி பண்டைய காலத்தில் வேண்டுமானால் இல்லை என்று சற்று தைரியமாகவே சொல்லி விடலாம்.

      இன்று அப்படி சொல்ல முடியாது இன்றைய சீரழிவுக்கு சமுதாயமே முக்கிய காரணம் திரைப்படங்களால் புதிய கருத்து என்று தாலி கட்டிக்கொண்டு வீட்டுக்கு தெரியாமலேயே வாழ்வது போல் காட்டி இன்று இளைய சமுகத்தினர் அதை முன்னோடியாக ஏற்று நடக்கின்றனர்.

      சர்வ சாதாரணமாக தாலியை கழட்டி வீசுகிறார்கள் இன்று...

      நீக்கு
    2. முன்னால சொல்லுவாங்க..மதுரைல எந்தப் பெண்ணையும் சைட் அடிக்கறேன்னு பின்னால போகாத..எவன் எந்தச் சந்துல இருந்தாவது வந்து அடி பின்னிப்புடுவான் என்பார்கள். எங்க கிராமத்துல ஒருத்தன் தப்பு செஞ்சா அவனை யார் வேணும்னாலும் தட்டிக் கேட்பாங்க. (படிக்கட்டு மேலே ஏறி குதிக்கப் பாத்தான், ஆபத்து தெரியாம. நாலு அறை கொடுத்து இழுத்துவந்தேன் என்று யார்னாலும் பெற்றோர்ட்ட சொல்லலாம். இப்போ டீச்சர் திட்டினேன் என்று சொன்னாலே, உனக்கென்ன என் பையனைக் கண்டிக்கிற தைரியம்னு சண்டைக்கு வர்றாங்க).

      தனி பெற்றோர் சரியில்லாமல் இருக்கும்போது, பல பெற்றோர்கள் சேர்ந்த சமூகமும் சரியா இருக்காது இல்லையா?

      நீக்கு
    3. வருக நண்பரே என்று ஆசிரியரிடம் எனது மகனை ஏன் அடித்தாய் ? என்று கேட்கத் தொடங்கினோமே... அன்று தொடங்கியது பிள்ளைகளுக்கு கேடுகாலம்.

      நீக்கு
  3. இன்றைய குழந்தைகள்அடம்பிடித்தால் கையில் கொடுப்பது கைபேசிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா அதனால்தான் இன்றைய குழந்தைகள் பத்து வயதிலேயே கண்ணாடி போடுகிறார்கள்.

      நீக்கு
  4. ஆஆஆ மீ லேட்டாஆஆஅ கர்ர்ர்ர்ர்ர்:)... சரி சரி அது போகட்டும்..

    உண்மைதான் நானும் சொல்வேன் குழந்தையின் பழக்கவழக்கம் குணநலன்களில் அம்மாவுக்கு முக்கிய பங்குண்டு... அப்பாமார்களால் அதிக நேரம் செலவிட முடிவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா நலமா ? நல்லவேளை வந்துட்டீங்க... நான் போலீஸில் ''காணவில்லை'' என்று புகார் கொடுக்கலாம் இருந்தேன். ஆம் அம்மாவும், அப்பாவும்தான் காரணவாதிகள்.

      நீக்கு
    2. என்னைக் காணாட்டில் பொலீஸ்ல தேடாதீங்கோ:)), யூ ரியூப்ல தேடுங்கோ ஹா ஹா ஹா.. யூ ரியூப் போராட்டங்களில் கரைஞ்சு போயிருக்கிறேன்:)... போராடி அல்ல பார்த்து:))

      நீக்கு
    3. கேட்க நினைச்சு மறந்திட்டேன்ன்.. முதல் படம் உங்கள் பேத்திதானே?

      நீக்கு
    4. யூடியூப் போராளியா ? வாழ்த்துகள்.

      எனது பெயர்த்தி அல்ல!
      ஆனாலும் பெயர்த்திதான் மீள் வருகைக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  5. இவருடைய ஸ்பீச் நானும் நிறையக் கேட்பதுண்டு... நன்றாகப் பேசுவார், ஆனால் அவர் தேவகோட்டை இல்லை என நினைக்கிறேன் ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் தேவகோட்டை இ்ல்லை என நினைக்கிறேன்//
      என்ன இன்று நெல்லைக்காரரும், அதிராவும் நம்மிடம் ஒரண்டை இழுக்கிறீங்க...?

      நீக்கு
  6. கருத்துள்ள பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுப்பது போல தோல்வியையும் கற்றுக்கொடுத்து சமணபப்டுத்த வேண்டும்.  அது இப்போதெல்லாம் நடைபெறுவதே இல்லை.  குழந்தை தடுக்கிக் கீழே விழுந்தால் கூட தாய்,   "அடி...   அடி...   குழந்தைக்கு வலிக்கிறது இல்லே?" என்று தரையைக் கைகளால் அடித்துப் பழக்கப்படுத்தும் காலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. *குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுப்பது போல தோல்வியையும் கற்றுக்கொடுத்து சமனப்படுத்த வேண்டும்.

      நீக்கு
    2. ஆமாம் ஜி இப்படி குழந்தைகளை ஏமாற்றுவதும் உண்டு.

      கீழே விழுந்த குழந்தையை கவனிக்காததுபோல் இருங்கள் பேசாமல் இருக்கும்.

      நாம் உடனே ஐயய்யோ என்று பதறினால் குழந்தை பலமான
      அடிபட்டது போலவே அலறும்.

      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    3. //தோலிவியையும் கற்றுக்கொடுத்து// - எங்க அப்பா, நான் எக்ஸாம் எழுதற வரைல, ஒழுங்க படிக்கிறேனா, சரியா படிக்கலைனா ஸ்கேலால அடி என்று கொஞ்சம் அதீத கண்டிப்புடன் இருப்பார். ஆனா எக்ஸாம் எழுதியாச்சுன்னா, அதற்கப்புறம் அந்த சப்ஜெக்டைப் பற்றிப் பேசமாட்டார். 8ம் வகுப்பு காம்படிடிவ் எக்ஸாம் ஃபைனலில், ஒரு மேத்ஸ் கொஸ்டினுக்கு இந்த மாதிரி பதில் எழுதினேன் என்று சொன்னேன் (கிணற்றுக்கு வெள்ளையடிக்க ஆகும் செலவு பற்றியது. நான், கிணற்று உட்பக்கத்தின் பரப்பையும் சேர்த்திருந்தேன். வெளிப்பக்கம் மட்டும்தான் பரப்பளவு கண்டுபிடித்து விடை எழுதணும்னு எனக்குத் தோணலை). அப்பா வெறும்ன சிரித்துக்கொண்டு விளக்கினார். (அப்போ எனக்கு..அப்பாடி நம்மளைத் திட்டலைனு நினைத்துக்கொண்டேன்..ஆனால் பிற்காலத்தில் அவர் செய்தது எனக்கு ஒரு பாடம்னு புரிந்தது. இதுமாதிரி நிறைய சம்பவங்கள். ஒருவேளை அவர் ஆசிரியராக பலகாலம் இருந்ததால் பசங்களை ஜாக்கிரதையாக வளர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ரிசல்ட் வந்த எதைப்பற்றியும் அவர் என்னிடம் பேசியதில்லை. முடிஞ்ச விஷயத்தில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றே சொல்லுவார். (ஆனால் நான் அதை சரியா என் பசங்க விஷயத்தில் ஃபாலோ பண்ணவில்லை. எல்லாம் குணக்குறைதான்)

      நீக்கு
    4. அப்பாவின் கண்டிப்பின் அர்த்தம் அவனுக்கு பல ஆண்டுகள் கடந்த பிறகு புரிகிறது.
      இந்த தாமத புரிதலுக்கு காரணகர்த்தா அம்மாதான்.

      எனது அப்பா அண்ணன்கள் தவறு செய்தவுடன் அம்மாவிடம் சொல்வார் //சோற்றை நிறுத்து// என்று இதன் அர்த்தம் எனக்கு பலகாலம் விளங்கவில்லை சோறுதான் மனிதனை சிந்திக்க வைக்கிறது.

      எங்கள் வீட்டில் சோற்றுக்கு பஞ்சமே கிடையாது அப்படிப்பட்ட பொன்னான காலம் அது இந்த வீட்டுக்கு போனால் கோழி அடிப்பார்கள் என்று விருந்தினர் படையெடுப்பு காலம் முழுவதும் உண்டு. கோழிப்பண்ணை போல வீட்டில் கோழிகள்.

      அப்படிப்பட்ட வீட்டில் சொந்த பிள்ளைக்கு சோற்றை நிறுத்தச் சொல்வதின் காரணம் எனக்கு பின்நாளில் புரிந்தது. அம்மா கடைசிவரை கேட்கவில்லை இன்று அண்ணன் இன்றுவரை திருந்தவில்லை பூமிக்கு பாரமான மனிதன் அவ்வளவே...

      நீக்கு
  8. பதிவு நன்றாக இருக்கிறது.
    குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

    முன்பு அக்கம் பக்கத்தினர் குழந்தை அழுதால் ஏன் அழுகிறது என்று ஓடி வந்து கேட்பார்கள் , இப்போது அப்படி யாரும் யார் வீட்டுக்கும் போவது இல்லையே!

    என் வீட்டில் அக்கம் பக்கம் குழந்தைகளை எல்லாம் விளையாடும் , சிறு குழந்தைகளை என்னைப் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு செல்வார்கள்.தாய்மார்கள் வேலையை முடித்து தூக்கி செல்வார்கள்.


    காணொளி கேட்டேன். ஜெயா டி.வியில் சிந்தனை செய் என்ற நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
    யூ டியூப்பில் நிறைய இவர் பேச்சை கேட்டு இருக்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இன்று ஒருவருக்கொருவர் பற்றுதல் கிடையாது விலகியே செல்கிறோம் இது மறுக்க இயலாத உண்மை.

      முன்பு இருவரது குடும்பங்களுக்கு சண்டை என்றால் ஊரே சேர்ந்து தடுப்பார்கள். இன்று சண்டை போடுபவர்கள் தானே ஓய்ந்து போகவேண்டி இருக்கிறது.

      அந்த அளவுக்கு நாம் மனிதநேயம் மறந்து வாழ்கிறோம்.

      காணொளி கேட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  9. இப்போது பெற்றோராக இருப்பவர்கள் பெரும்பாலும் ஒற்றைக் குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் ஆகவே வளருவதால் விட்டுக்
    கொடுக்கும் மனோநிலையில் வளர்க்கப் படுவதில்லை. இதுவும் ஒரு காரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முன்பு வீடு முழுவதும் குழந்தைகள், தவறு செய்தால் தூக்கிப் போட்டு மிதிப்பார்கள் இதைக்கண்டு மற்ற குழந்தைகளும் அச்சப்படும்.

      இன்று இருப்போ ஒரே குழந்தை எல்லாவற்றுக்கும் செல்லம் தந்தை கண்டித்தால், தாய் விட்டுக் கொடுப்பதில்லை இப்படியே குழந்தை வீணாய்ப் போய் விடுகிறது. வருகைக்கு நன்றி மேடம்.

      நீக்கு
  10. நான் வியந்தேன். கில்லெர்ஜீயா இதை எழுதியது என்று. எதுகை மோனை எதுவும் காணோம். சரி கவிதையாவது? நோ? பின் என்ன? பார்த்த ஒரு சம்பவம். எப்படி? மொக்கை! ஒரு சுவாரசியம் இல்லாமல். ஆமாம் திருஷ்டி பரிகாரமும் வேண்டியதே.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மொக்கை பதிவுக்கு மட்டும் சரியாக வந்து விடுகிறீர்களே... நன்றி.

      கடந்த சில பதிவுகள் மொக்கை இல்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டுமென அழகாக சொல்லியுள்ளீர்கள். அந்தக்கால குழந்தைகளை விட இந்தக்கால குழந்தைகள் கால மாறுதல்களினால், நிறைய புத்திசாலிதனமாகதான் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் கூறும் அடம் பிடிக்கும் விஷயங்களும், அதற்கு அன்னையர்கள் கொஞ்சம் தளர்ந்து போகும் நிகழ்வுகளும் இருக்கின்றன. அப்போது கண்டிப்புடன் பாசத்தையும் காட்டி குழந்தைகளுக்கு அவர்கள் செய்வது தவறென உணர்த்துவது உண்டு. இப்போது சில இடங்களில் அவர்களின் அடத்திற்கு தகுந்த வைத்தியம் செய்வது இல்லையோ எனத் தோன்றுகிறது.

    நீங்களும் அழகாக கூறியுள்ளீர்கள். அந்த பாட்டும் அருமை. காணொளி பிறகு காண்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை முழுமையாக உணர்ந்து படித்து தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      காணொளி பிறகு காணுங்கள் அவசியம் தெரிய வேண்டிய விடயங்கள் உண்டு.

      நீக்கு
  12. குழந்தை வளர்ப்பில் காட்டும் அலட்சியம் அடுத்த தலைமுறையைச் சீரழிக்கும்.

    பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் மிகச் சிறந்த கருத்துப்பதிவு.

    பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  13. பசித்த நேரத்துக்கு உணவிடும் தாய், படிக்கும் நேரத்தில் உதவிடும் தந்தை
    சிறிது நேரம் விளையாட நல்ல தோழர்கள்
    எல்லாம் இருக்கும் போது வாழ்க்கை இனிமையாகத் தான் நகர்ந்தது.
    ஐரோப்பியக் குழந்தைகள்
    நிறையப் பார்த்திருக்கிறேன்.
    வீதியில் சத்தம் போடக்கூடாது என்பதற்காக ஒரு ஒன்பது மாதக் குழந்தையில் கையில்
    அலைபேசி கொடுத்தாள் அன்னை.
    எனக்கு இன்னும் அலைபேசியில் எழுதமட்டுமே தெரியும்.

    இது போல வளரும் குழந்தைகள் கண்ட கண்ட கணினி விளையாட்டில் மாட்டி
    அவதிப்படுவதும் உண்டு.
    இந்த நோய்த்தொற்று காலத்தில் நிலைமை
    கொஞ்சம் மாறி இருக்கிறது.
    நல்லதொரு பதிவு அன்பு தேவ கோட்டைஜி.
    கண்டிப்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
    அன்பும் செலுத்தி,கண்டிக்கவும் வேண்டும்.
    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      காணொளி கண்டமைக்கும் நன்றி.

      நீக்கு
  14. பசங்க அடம் பிடிப்பதனால் மட்டும் பெற்றோர் எதையும் கொடுப்பதில்லை, நம்மைத் தொல்லை பண்ணாம என்னவோ பண்ணினாச் சரிதான் என்ற தப்பிக்கும் எண்ணம் காரணமாகவும் என்ன எதிர்பார்க்கிறதோ அதைக் கொடுத்திடறாங்க. ஆனா எது முக்கியமோ அதைக் கொடுப்பதில்லை, அதாவது தங்கள் நேரத்தை.

    என் சின்ன வயதில் எங்களை எப்படி வளர்த்தாங்க என்பதை நான் நினைத்துப்பார்க்கிறேன். எதைக் கேட்டாலும், எவ்வளவு சிறிய பொருளாக இருந்தாலும் உடனே கொடுக்காதே என்பதுதான் நான் கற்ற பாடம். அதைத்தான் நான் செயல்படுத்தியிருக்கேன், இப்பவும் செயல்படுத்தறேன்.

    நான் ரொம்ப அடம் பிடிப்பவன். சின்ன வயசுல அடம் பிடிச்சா, எனக்குக் கிடைப்பது பெரிய ஸீரோதான். 'நான் சாப்பிட மாட்டேன் போ' என்றால், சரி சாப்பிடாதே (ஏய்..இதை உள்ள கொண்டுபோய் வைத்துவிடு. பசிச்சா தன்னால வருவான். ஆனா அடுத்த வேளை நாம சாப்பிட உட்காருவதற்கு முன்பு கொடுக்காதே.. இப்படித்தான் அப்பா ஹேண்டில் பண்ணுவார்).

    இதுல ஒரு அபாயமும் இருக்கு கில்லர்ஜி... அப்பா மேல பசங்களுக்கு வெறுப்பு வரலாம். அப்போ, அம்மாதான் தனியா, எல்லாம் உன் நல்லதுக்குத்தான் என்று ஒரு நல்லெண்ணம் உருவாக்கணும். இல்லை பசங்க பெரியவங்களாகும்போது அவங்களாகவே புரிஞ்சுக்குவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நமக்குத் தொல்லை தராமல் இருந்தால் சரிதான் என்பதற்காக வாங்கி கொடுக்கிறார்கள் //

      இந்த கண்டிப்புகள் குறைந்து போனதற்கு முக்கிய காரணம் குழந்தைகளை ஒன்றோடு நிறுத்திக் கொண்டதுதான் நண்பரே...

      அப்பாவை சரியாக புரிந்து கொள்ளும் மகன் உண்டு என்றால் அது அம்மா என்ற உயர்ந்த உள்ளம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

      என்னை எனது மகன் தவறாக புரிந்து கொண்டதற்கு காரணம் என்னவள் இல்லாமல் போனதும், சுயநலமாக, தற்கால நலனுக்காக பிஞ்சு உள்ளங்களிடம் எனது உறவுகள் சொல்லி விட்ட பொய்யான தகவல்களுமே காரணம்.

      நீக்கு
  15. பிள்ளைகளை பெற்றோர்கள் நல்லபடியாக வளர்த்தாலும் அந்த குழந்தையை சுற்றியுள்ள நட்ப்புக்கள் மற்றும் சமுக சூழ்நிலை போன்றவைகளும் குழந்தைகளின் வளர்ச்சியை கெடுக்கின்றன.. இன்றைய காலத்தில் குழந்தைகளை விட பெற்றோர்கள் டீவி சீரிய்லகள் பார்க்து கெட்டு போவதுதான் அதிகமாக இருக்கிறது அதை பார்த்து குழந்தைகலும் கெட்டுப் போகிறார்கள் என சொல்லாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே வீடான வீட்டில் பெற்றோர் சீரியல் பார்த்து தினமும் அழுகையும் கண்ணீருமாக காலத்தை அவசியமின்றி கடத்துகின்றார்கள்.

      முதலில் பெற்றோருக்கு பாடம் எடுக்க வேண்டும்.

      நீக்கு
  16. படத்தில் இருக்கும் குழந்தை உங்க பேத்தியோனு நினைச்சேன். அழகோ அழகு! கள்ளம், கபடம் இல்லா இந்தச் சிரிப்பு ஒண்ணே போதுமே!

    இந்தக் காலக் குழந்தைகளைச் சொந்தப் பெற்றோரே எதுவும் சொல்லாமல் செல்லமாக வளர்க்கிறார்கள். கேட்டதை வாங்கிக் கொடுக்கிறார்கள். அப்போக் "கத்தி"யும் ஓர் விளையாட்டுப் பொருளாகவே குழந்தை நினைக்கத் தானே செய்யும். கூட்டுக்குடும்பம் என்பதெல்லாம் இனிமேல் எதிர்பார்க்க முடியாது. தனியாக வசிக்கும் மாமியார், மாமனாரே ஏதேனும் விசேஷங்களுக்குப் பிள்ளை வீட்டுக்கோ, பெண் வீட்டுக்கோ வந்தாலே அதைச் சுமையாக நினைக்கும் காலம் இது. இந்தக் காலத்துக்கு ஏற்ற அவசியமான பதிவு. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படத்தில் இருக்கும் குழந்தை உங்கல் பேத்தியோனு நினைச்சேன்//

      வருக சகோ மேலே பதிவில் எழுதியிருக்கும் ஓர் வரியை நினைவு கூறுங்கள். அதே குழந்தையிடம் ஐயா - அப்பத்தா பெயர் என்னவென்று கேளுங்கள் குழந்தை திருத் திருவென்று முழிக்கும்.

      இந்த வார்த்தைகள் உண்மையானவை... சமீபத்தில் எங்கோ நான் வாசித்த வரிகள் என் மனதை கனக்க வைத்தது. இதோ...

      மகன் இல்லாத வீட்டுக்கு செல்லும்
      மருமகன் மகனாகிறான். ஆனால்
      மகள் இல்லாத வீட்டுக்கு வரும்
      மருமகள் மகளாவதில்லை.

      ஆம் இன்று பெற்றோரே விருந்தாளி ஆக்கப்பட்டனர். மன்னிப்பு எதற்கு கேட்கின்றீர்கள் ? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. இன்றைய நிலையை அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்..தெரிந்துதான் னை போட்டிருக்கிறேன் என்பதை உணர்த்த வண்ணம் மாற்றி இருப்பதை மிகவும் இரசித்தேன்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும், வினை'யாட்டை ரசித்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  18. கூட்டுக்குடும்ப சிதைவு, பணம் ஒன்றே வாழ்க்கை உள்ளிட்ட பல மாயைகள் நம்மவர்களை அலைக்கழிக்கின்றன. குழந்தைகளை இப்போதெல்லாம், முன்புபோல, பெற்றோர்கள் கண்டிப்பதில்லை. அதிக செல்லம் தருகிறார்கள். பிறரிடம் பழகவிட மறுக்கிறார்கள். அம்மா, அப்பா மட்டுமே உலகம் என்றாகிவிடுகிறது. மரியாதையைச் சொல்லித்தருவதில்லை. நல்ல குணங்களைக் கூறி பழக்கப்படுவதில்லை. இதெல்லாம் ஏன் தாத்தா, ஆத்தாவிடம்கூட ஒட்ட விடுவதில்லை. தன்னிச்சையாக வளரும் குழந்தை அடாவடியாக வளர ஆரம்பிக்கிறது. பின்னாளில் பெற்றோராலேயே கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. தம் செயலுக்குப் பெற்றோர் வருந்துவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. இதில் விதிவிலக்கில் உள்ள பெற்றோரும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே...
      கூட்டுக் குடும்பசிதைவு ஆம் மிக முக்கியமான காரணம். இன்றைய இளம் தம்பதியினர் நாளை நாமும் முதுமை அடைவோம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

      ஐந்து வயதில் கண்டிக்காத குழந்தையை இருபத்து ஐந்து வயதில் கண்டிக்க நினைப்பது நடக்காத காரியமே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. இன்றைய இளம் தாய்மார்களின் நிலைமையை கண் முன் கொண்டு வந்தீர்கள் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ?
      தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  20. இன்றைய அவசர வாழ்வில் பெற்றோர்களுக்குக் குழந்தைகளுடன் செலவிட நேரம் இல்லாமல் போய்விடுகிறது.
    ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று பல வீடுகளிலும் குழந்தை இருப்பதால், செல்லமே பிரதானமாகிவிடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஆம் குழந்தைகள் அதிகம் பிறப்பதை தவறாக மக்களை உணர வைத்த அரசும் இந்நிலைக்கு ஓர் முக்கிய காரணம்.

      நீக்கு
  21. அருமையான பதிவு!
    எங்கேயோ படித்தேன், ' ஒரு குழந்தை ஒரு பரிசுத்தமான மழைத்துளி போல, வானிலிருந்து தேவதை இறங்கி வருவதைப்போல பிறக்கிறது. எப்போது அந்த மழைத்துளி மண்ணில் விழுகிறதோ அப்போது அந்த பரிசுத்தம் காணாமல் போய் விடுகிறது. அந்த பரிசுத்தத்தை அப்படியே பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியவர்கள் அதன் பெற்றோர் மட்டுமே' என்று! அதைத்தான் நீங்கள் கீழே எழுதியுள்ள [ எனக்கு மிகவும் பிடித்த ] பாடல் உணர்த்துகிறது. எப்போதுமே பொருள் தேடி உழைக்கும் தந்தையை விடவும் ஒரு குழந்தையை நல்ல குழந்தையாக வளர்ப்பது தாயின் பொறுப்பாகி விடுகிறது. இன்றைக்கோ, எல்லாமே சரிசமம் என்று வந்துவிட்ட பிறகு, வீட்டை நிர்வகிப்பதும் சமைப்பதும் ஆணும் பொருள் தேடுவதில் பெண்ணும் என்று ஆன பிறகு குழந்தையின் வளர்ப்பு கேள்விக்குறியாகி விட்டது! இப்போதெல்லாம் கைபேசி, தொலைக்காட்சி இவற்றிற்கு நடுவில் தான் குழந்தை வளர்கிறது. அப்புறம் ஒரு குழந்தை எப்படி ஆரோக்கியமாக வளர முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ.
      ஓர் குழந்தையின் பிறப்பை அழகாக உவமானம் சொன்னீர்கள்.

      இன்று எல்லோரும் இயந்திரத்தனமாக ஓடுகிறோம் எதை நோக்கி என்பதுதான் புரியவில்லை.

      அடுத்தடுத்த சந்ததிகளை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது.

      இறையே துணை வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. உங்கள் பதிவை நேற்றே படித்து விட்டேன். சரியாகத்தான் சொல்லியிருகிறீர்கள்,ஆனால் நம்மை போக்கத்தவர்கள் என்று கூறி விடுவார்கள். பதிவில் என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மேடம் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
    2. என்றைக்கு கூட்டுக்குடும்ப முறை மறைந்ததோ அப்போதே பிள்ளைகள் வளர்ப்பில் குறைபாடுகள் தோன்றிவிட்டன. இப்போது தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாததால் பிள்ளைகளை குழந்தைகள் காப்பக்கத்திலோ அல்லது வேலையாட்களின் பராமரிப்பிலோ விட்டுவிட்டு செல்வதால் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்க வாழியில்லை. இதற்கு ஒரே வழி பெற்றோர்கள் தங்கள் நேரத்தை குழந்தைகளுக்காக செலவிட்டு அவர்களைக் கவனித்துக்கொள்வதே. ஆனால் இன்றைய நிலையில் இது நடக்குமா என்பது சந்தேகமே.
      காவல்துறையின் முன்னாள் கண்காணிப்பாளர் திரு கலியமூர்த்தி அவர்களின் காணொளியை கண்டேன். சரியாக சொல்லியிருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி!

      நீக்கு
  23. வருக நண்பரை தங்களது விரிவான, அழகான கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. என் சிறு வயதில் என்னை யாரும் தண்டிக்கவில்லை...தண்டிக்கவும் யாருமில்லை அம்மாவைத்தவிர..நானும் நல்ல பிள்ளையாக வளர்ந்துவிட்டேன் நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்கள் அனுபவதிலேயே வாழ்க்கையை படித்தவர்.

      நீக்கு