தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 15, 2022

கொடைக்கானல் கோரமண்டல்

டம் கொடைக்கானல் கோரமண்டல் ஹோட்டல் அறை எண் 1012 உள்ளே இயக்குனர் சாம்பசிவம், இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி, பாடலாசிரியர் Chivas Regal சிவசம்போ, டைனிங் டேபிளில் பரிவாரங்களோடு... தி கிரேட் வொண்டர்ஃபுல் ப்ரொட்யூஷரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
 
கவிஞரே சுச்சுவேஷன் இதுதான் மச்சுவாடி மச்சான் மச்சக்காளை கொட்டாம்பட்டி கொழுந்தியாள் கொடிமலரைக் பார்க்க போடி நாயக்கனூர் வருகிறான். வந்த இடத்தில் கிராமிய மணம் மாதிரி ஒரு பாட்டு வேணும்.
ம்... இன்னொரு Chivas Regal ஆர்டர் பண்ணுங்க... ?
தயாரிப்பாளர் தண்ணிக்கு தண்ணி மாதிரி செலவு செய்வார். கீழே பாருக்கு போயிருக்காரு இப்ப வந்துருவார்..
மாஸ்டரே சரி... இதுக்கு என்ன ட்யூன் போடப் போறீங்க ?
 
இதை தேவாங்கு ராகத்துக்கு பொருத்தமான வரிகளை எழுதுங்க கவிஞரே... இதோ ரிரிரி... ரீரி... ரிரிரி... ரீரி... ரீரீரி... ரீரீரி... ரீரீரீ..
ம் ட்யூன் நல்லா இருக்கு.. கொஞ்சம் தொகையறாவை இழுக்கலாமா ?
சரி அந்த வகையறாவையும் சேருங்க... ஆனால் சரணம், மட்டும் மரணம்வரை போகணும்., பல்லவி அவளை அப்புறமா கூப்புட்டுக்கிறலாம்.
 
மச்சான்
கண்மணியே வாடி
கன்னத்திலே தாடி
பொன்மயிலைத் தேடி
வந்தேன் நான் போடி
 
கொழுந்தியாள்
கருத்த மச்சான் வாயா
கருவாயா நீ போயா
வந்துருவார் ஐயா
அதோ பாரு ஆயா
 
மச்
பொங்குதடி மனசு
காரணம் உன் வயசு
உன்னோட இளசு
மாறுதடி தினுசு
 
கொழு
உன் மனசு பெருசு
என் மனசும் தரிசு
எங்கே உன் பரிசு
கேட்டேனே கொலுசு
 
மச்
உன்னோட கன்னம்
மின்னுதடி இன்னும்
உனக்கு பன்னும்
தருவேன் தின்னும்
 
கொழு
மச்சானோட எண்ணம்
மகிழம்பூ வண்ணம்
தடுக்குதே நாணம்
போறேனே நானும்
 
மச்
கண்மணியே வாடி
கன்னத்திலே தாடி
பொன்மயிலைத் தேடி
வந்தேன் நான் போடி
 
கொழு
கருத்த மச்சான் வாயா
கருவாயா நீ போயா
வந்துருவார் ஐயா
அதோ பாரு ஆயா
 
இருவரும்
ரார... ரார... ரார..
ரீரி... ரீரி... ரீரி...
 
எப்படி ஓகேயா ?
சூப்பர் கவிஞரே... பாட்டு பிச்சுக்கிட்டு ஓடும்.
 
அதேநேரம் தயாரிப்பாளர் கில்லர்ஜி உள்ளே நுழைகிறார், பேரர் கையில் பெரிய அட்டைப் பெட்டி உள்ளே என்ன இருக்கோ யாரு கண்டா... ?
 

நெல்லைத்தமிழன்-
இது தேவாங்கு ராகமா ? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே...
 
மதுரைத்தமிழன்-
இனிமேல் கேட்கலாமே... நம்ம தலையெழுத்துனு... ஹோட்டல் பேரே மெண்டலாத்தான் இருக்கு. 

49 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி

    நாவாரப் பாடும்
    நறுந்தமிழில் இந்தத்
    தேவாங்கு ராகம் தெரியாத போதும்
    தூவானம் போலே
    தொடுத்தகவி நெஞ்சில்
    பூவாக இனிக்கப்
    புல்லரித்துப் போகின்றேன் !

    கற்பனையானாலும் கலகலப்பா இருக்கிறது வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே நலமா ?

      நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகைக்கும், கவிதை வழியாக வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
    2. வணக்கம் ஜி
      ம்ம்ம் நலமாக இருக்கிறேன் நீண்ட நாளின் பின்னர் சற்று ஓய்வு கிடைத்தது அதுதான் வலைத்தளம் வந்தேன் கவிதை பதிவிட்டேன்

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி பாவலரே...

      நீக்கு
  2. 'அதோ பாரு ஆயா' என்கிற வரியில் மயங்கி விட்டேன்.  கிராமி அவார்ட் வாங்கட்டும் இந்த கிராமிய மணம் கமழும் பாடல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. கில்லர்ஜி,

    உண்மையிலேயே பொருள் பொதிந்த சுவையான சந்தக் கவிதான். திரைக் கவிஞர்கள் திருடிவிடக்கூடும். எச்சரிகையாக இருங்கள்.

    தெரிந்த படத் தயாரிப்பாளர் இருந்தால் அனுப்பி வையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும், ஆலோசனைகள் தந்தமைக்கும் நன்றி.

      தொடர்ந்து வந்தால் மேலும் மகிழ்ச்சி.

      நீக்கு
  4. நல்லாத் தான் இருக்கு உங்க கவிதை. யாரானும் சினிமாக்காரங்க பார்த்தால் அவங்க படத்துக்கு எடுத்துக்கப் போறாங்க. கவனம்! பணம் வாங்காமல் கொடுத்துடாதீங்க! :))))) உங்களுக்கு சினிமாக்காரங்க மேல் ஏன் இத்தனை கோபம்னு புரியலை. தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டிருப்பீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாடலை ரசித்த மைக்கு நன்றி.

      எனக்கு திரைத்துறையினர் மீது தனிப்பட்ட பகை எதுவுமே இல்லை. இவர்களால் இந்த சமூகம் சீரழியும் வழியில் செல்கிறதே... என்ற ஆதங்கம் மட்டுமே.

      மற்றபடி AVM பழைய பாக்கி 15 C தரணும் வேறு ஒன்றும் இல்லை.

      நீக்கு
  5. தேவாங்கு ராகம்.......:) அட......டா. என்னவோ வரிகள் இனிமை.

    பதிலளிநீக்கு
  6. // கண்மணியே வாடி..
    கன்னத்திலே தாடி.. //

    யார் கன்னத்திலே?..

    மச்சான் கன்னத்திலா!.. கொழுந்தியா கன்னத்திலா!..

    ஏன்னா ... ஆம்பளைக்கு சரிசமம்.. ன்னு எல்லாரும் கெளம்பிட்டாளுங்க!....

    பசங்க மூஞ்சியில எல்லாம் தாடி தான்..

    அதுக்காகக் கேட்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்தக் காலத்துப்
      பசங்க மூஞ்சியில எல்லாம் தாடி தான்..//

      நீக்கு
    2. வாங்க ஜி நான் கன்னத்தில் தாடி வளர்ந்து இருப்பதைத்தான் குறிப்பிட்டேன்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இந்த சினிமா பாடல் சுருக்கமாக மிகவும் நன்றாக வந்துள்ளது. இப்போது வரும் புதுப்பாடல்கள் கூட இந்த அளவுக்கு வரிகள் பொருளுடன் சம்பந்தம் அடைந்தாற்போன்று அமைவதில்லை. அந்த அளவுக்கு வரிகள் கச்சிதமாக பொருந்தி வந்திருக்கின்றன. கண்டிப்பாக இது கிராமிய அளவில் புகழ் பெறும் ரசித்தேன். .பாராட்டுக்கள்.

    ஆமாம்.. திரைப்படத்திற்காக வழக்கமாக பாடல்கள். இயற்றி, இல்லை மெட்டிற்கேற்ற வகையில் வார்த்தைகளை புது மாதிரி மாற்றியமைத்துத் தருபவரான நம் பாடலாசிரியர், சிறந்த கவிஞர் எப்போதிலிருந்து படத்தயாரிப்பாளர் ஆனார்.? ஒருவேளை இவர் வேறோ? :)))) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை மிகவும் ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      பாடலாசிரியர் ஆனதில் வருமானம் கூடிவிட்டது ஆகவே தயாரிப்பாளர் ஆனோம்.

      ஹா.. ஹா.. தங்களது கூர்மையான பார்வைக்கு மீண்டும் நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஹா.ஹா.ஹா.
      பணி சார்ந்த எல்லாவிடங்களிலும் பதிவி உயர்வு, மேலும் முன்னேற்றம் என்பது சிறப்புத்தானே.... தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். தங்களுக்கு தவறாகபட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வருக சகோ இதில் மன்னிப்பு எதற்கு ? மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. அருமை ஜி... கோடம்பாக்கம் தங்களை அழைக்கிறது...

    பதிலளிநீக்கு
  9. கிராமிய பாடல் பாடுபவர்கள் உங்கள் பாடலை பாடி புகழ்பெறலாம்.
    நன்றாக எழுதுகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.! வாழ்க வளமுடன்.
    பாட்டும் எழுதி படம் தயாரிக்கவும் ஆர்ம்பித்து விட்டீர்களா?
    தயாரிப்பாளர் வந்த அறை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. பாட்டு எழுதியது Chivas Regal என்று இருக்கே!

    தி கிரேட் வொண்டர்ஃபுல் ப்ரொட்யூசர் நீங்கள் தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இப்படி ஆட்கள்தான் பாடல் சரளமாக எழுதுவார்கள்.

      தயாரிப்பாளர் ஆக முயற்சிப்போம்.

      நீக்கு
  11. தி கிரேட் ப்ரொட்யூசர் வரதுக்காக ன்னு சொன்னதுமே அது கில்லர்ஜிதான்னு தெரிஞ்சு போச்சு!!! கில்லர்ஜி ஆஹா இது என்ன தயாரிப்பாளர் புது அவதாரம் பாடலாச்சிரியர் லருந்து!!! அது சரி எல்லாம் உங்க கூட்டணிதானே சிவாஸு, தாமஸு, சாம்பசிவம் எல்லாரும்...

    தயாரிப்பாளர் ஆனதுக்கூ வாழ்த்துகள்! இருந்தாலும்...கூடவே ஒண்ணு வருது வேண்டாம்..! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான் தயாரிப்பாளர் ஆக கூடாதா ?

      ஆம் எல்லோரும் நமது பங்காளிகள்தான்...

      நீக்கு
  12. பாடல் நன்றாக இருக்கிறது. நீங்கள் சினிமாவில் பாடல் எழுதியிருக்கலாம். ஆனால் உங்களுக்குச் சினிமா வட்டாரம் பிடிக்காது இல்லையா.?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பிடிக்காதுனு எப்ப சொன்னேன் ? பிடிச்சா நல்லதுதான்.

      நீக்கு
  13. கில்லர்ஜி என் கருத்து எங்கே போச்சு அங்கு ஸ்பாமில் இருக்கா ந்னு பாருங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ஃபாமில் இருந்தது கருத்து போடுவது இப்போது கஷ்டமாக இருக்கிறது.

      நீக்கு
  14. ஐயோ இப்ப துளசி கருத்து காணாமல் போய்டிச்சே....

    கில்லர்ஜி இதை விட அழகான கிராமியப் பாடல்கள் எழுதுவார் என்று சிவாஸ் ரீகலுக்குச் சொல்லி விடுங்கள். முன்பு எழுதியிருக்கிறீர்களே ஹாஹாஹா சிவாஸுக்கு சம்பளம் கொடுக்காதீங்க. இன்னும் நல்லா எழுதச் சொல்லுங்க...அது சரி ப்ரொட்யூஸர் பாருக்குப் போக மாட்டாரே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயாரிப்பாளர் பாருக்கு சிவசம்போவுக்காக போகவேண்டி இருக்கிறதே...

      அப்பொழுதுதானே கவிஞர் பாடல் எழுதுவார்.

      நீக்கு
  15. கிராமீய மணம் கமழ்கிறது பாடலில் .

    பதிலளிநீக்கு
  16. கில்லர்ஜி... உங்ககிட்ட தனித்திறமை இருக்கிறது. எந்த ஃபீல்டில் உங்களுக்கு வாழ்க்கை அமைந்திருந்தாலும் அதிலும் உங்கள் உழைப்பால் மேல வந்திருப்பீங்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே என்மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.

      நீக்கு
  17. நீங்க சாதாரண கிளார்க்கா, பொருட்கள் எடுத்துவைக்கும் பையனா வேர்ஹவுஸல் சேர்ந்திருந்தாலும், நிச்சயம் வேர்ஹவுஸ் மேனேஜராயிருப்பீங்க. என் அனுபவத்தில் மனதில் தோன்றுவதைச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்றுமே பத்தோடு ஒன்றாக இருக்க நினைத்ததில்லை.

      அதில் தனி ஒருவனாக தெரியப்படுத்துவதற்கு முயன்று கொண்டே இருப்பேன்.

      நீக்கு
  18. இந்த சோபா செட் என்ன விலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நாங்கள் மூன்று தினங்கள் ஹோட்டலில் தங்கினோம்.

      வாடகை கொடுத்தோம் அவ்வளவுதான்.

      நீக்கு
  19. தேவாங்கு ராகத்தை மாற்றி தேரை ராகத்தில் போடுங்கள் நண்பரே.

    ஹாஹா அப்புறம் கில்லர்ஜி அவர்களின் திறமைக்கு தயாரிப்பாளரா ....
    அவர் இயக்குநருங்கோ...................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதை இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி அவர்களிடம் சொல்கிறேன்.

      பணம் நிறைய இருக்கும்போதுதானே தயாரிப்பாளர் ஆகமுடியும்.

      நீக்கு
  20. ஓ.. கவிஞர் கில்லர்ஜி தயாரிப்பாளர் ஆகி விட்டாரா வாழ்த்துகள்!! அப்படியே என்னையும் ஏதாவது ஒரு சின்ன சீன்ல கோர்த்துவிடுங்கோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      அடுத்த படத்தில் கண்டிப்பாக கொடுத்து விடலாம்.

      நீக்கு