தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 13, 2022

பிரச்சனையும், அர்ச்சனையும்

 

டவுளைக் காண ஆலயம் சென்றேன்
வரிசை என்றனர் வாசலில் நின்றேன்
இடையிலொரு ஓட்டையை கண்டேன்
பணம் கட்டி ரசீது வாங்கி கொண்டேன்
 
மனம் ஏனோ அலைக்கழித்து சென்றது
முடிவில் ஐயர்களிடம் போய் நின்றது
நொடி கடக்கவில்லை நான் கண்டது
இங்கே ஐயர்கள் ஆட்சியை கொண்டது
 
எனக்குள் குழப்பம் தீரவே இல்லை
இங்கு ஐயர்கள் தருவது தொல்லை
கடவுள் இதனை எப்போது பார்ப்பது
இதில் நமக்கெப்படி பிரச்சனை தீர்ப்பது
 
ஐயம் கொண்டழுந்தது எனது உள்ளம்
வேண்டாம் இது இறைவனின் இல்லம்
மனிதர்களில் ஏன் இத்தனை வகைகள்
இறைவனிடம் வந்தும் எதற்கு பகைகள்
 
வெளியேறி கடந்தேன் வாசலில் மக்கள்
இவர்களின் வாழ்விலும் ஏதோ சிக்கல்
இதோ இன்றைய பொழுதும் போனது
இதுவும் நமக்கு இறைவனால் ஆனது
 
இப்படி பலருடைய வாழ்வில் இருள்
இருப்பினும் நமக்கு கிடைக்கும் அருள்
இறைவனிடம் வேண்டும் இந்த பந்தம்
அதனால்தான் மனங்களுக்கு சாந்தம்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
மனிதர்களின் பிரச்சனை இறைவனின் அர்ச்சனையில் முடியட்டும்.
 
ChavasRegal சிவசம்போ-
கடவுளை நம்பினால் கடந்து போ... கட-உள் இல்லையேல் வாசலில் நில்.

Share this post with your FRIENDS…

33 கருத்துகள்:

  1. சமீபகாலச் சிற்பம் உங்களை கன்ஃப்யூஸ் பண்ணிடுச்சே

    பதிலளிநீக்கு
  2. இந்துக் கோவில்கள் வியாபார ஸ்தலமாகி வருகின்றன.  என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா மத தலங்களும் இன்று வியாபார ஸ்தலமாகவோ அல்லது அரசியல் விதைகள் விதைக்கும் நிலமாகவோ துவேஷத்திற்கான இடமாகவோ அல்லது தங்களது ஆடம்பரங்களை பறை சாற்றிக் கொள்ளும் இடமாகவோ மாறிவிட்டன, அதுமட்டுமல்லாமல் மக்கள் தொகையும் கூடிவிட்டதால் முன்பு போல நிம்மதியாக சென்று பிரார்த்தனை செய்ய முடிவதில்லை இது இந்தியாவின் நிலை.


      ஆனால் இங்கு உள்ள வழிபாட்டுதலங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கின்றன. இங்குள்ள கோயில்களில் மற்ற வழிபாட்டு தலங்களை விட சற்று கூட்டம் அதிகமாக இருந்தாலும் அமைதியாக பிரார்த்தனை செய்ய முடிகிறது.. மசூதிகளும் குருத்துவாரக்களிலும் மக்கள் வந்து போகின்றனர் ஆனால் நாளுக்கு நாள் சர்சுகளில் கூட்டம் குறைந்து கொண்டே போகிறது பல சர்ஸ் இருந்த இடங்கள் இப்போது கோவில்களாக உருமாறி வருகின்றது இந்தைய தலைமுறைகள் மத வழிபாடுகளில் அவ்வளவு பற்று இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை

      நீக்கு
    2. வருக ஸ்ரீராம்ஜி மக்களால் எதுவும் இயலாது.

      நீக்கு
    3. வருக மதுரைத்தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. உழைக்காமல் பணம் பெறும் கயமை தொழில்களில் இதுவும் ஒன்று...

    அவர்கள் மனிதப்பிறவிகள் அல்ல... சனாதன கயமை கீழ்கள்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. மனித வாழ்வில் எது எது நடக்குமோ அது நடந்துதான் ஆகிறது. எவ்வளவு முயன்றும் தவிர்க்க இயலாது. அந்த முயற்சிக்கும் இறைவன் அருள் வேண்டும்.

    /இப்படி பலருடைய வாழ்வில் இருள்
    இருப்பினும் நமக்கு கிடைக்கும் அருள்
    இறைவனிடம் வேண்டும் இந்த பந்தம்
    அதனால்தான் மனங்களுக்கு சாந்தம்/

    உண்மை. நம்பிக்கையுடன் கூடிய இது ஒன்றுதான் உண்மை. நீங்கள் வார்த்தைகளை கோர்த்த விதத்தை ரசித்தேன். பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை இரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. மனிதர்களில் இத்தனை வகைகள், இறவனிடம் வந்தும் எதற்குப் பகைகள். பாடல் அருமை சகோ. நல்ல எதுகை மோனை சந்தத்துடன் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. ஆஹா... தங்களுடைய ஆதங்கம் நிறைந்த கவிதையில் உங்களின் முழுத்திறமையும் வெளிப்பட்டு நிற்கிறது. எதுகை மோனையில் சும்மா அசத்திட்டீங்க போங்க!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  7. வழிபாட்டினை வியாபாரமாக்கி தற்போது நடைபெறுகின்ற செயல்கள் மனதிற்கு வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. வழிபாட்டை வியாபாரம் ஆக்கி அர்ச்சகர்களைப் பிச்சை எடுக்கும் நிலைமைக்குக் கொண்டு வந்த அறமற்ற நிலையத்துறையின் போக்கை அல்லவோ கண்டித்திருக்க வேண்டும்? அர்ச்சகர்கள் எவரும் அங்கே யாருக்கும் முன்னுரிமை கொடுப்பதில்லை. இந்த அலுவலர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டி உள்ளது. உற்றுக் கவனித்துப் பார்த்தீர்களானால் அவர்களின் கையாலாகா நிலைமை புரியவரும். கோயில்களை வியாபாரக்கூடமாக்கிப் பிரசாதங்களை விற்பனை செய்யவும் ஆரம்பித்தது யார்? அர்ச்சகர்களா? எனக்குத் தெரிந்து எழுபதுகள் வரை இந்த நிலைமை எந்தக் கோயிலிலும் இல்லை. இதைப் பற்றி எழுதப் போனால் முடிவே இல்லாமல் பல பதிவுகள் எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இந்த அரசால் அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்து விட்டது உண்மையே...

      நீக்கு
  9. எந்தவிதமான சிறப்பு தரிசனக்கட்டணமோ/கோயிலில் உண்டியல் வசூலோ இல்லாமல் எல்லோரும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போய்த் தரிசிக்க முடிந்த சிதம்பரம் நடராஜர் கோயிலையும் இப்படி வியாபார ஸ்தலமாக ஆக்குவதற்குத் தான் இந்த அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு முறையாவது சிதம்பரம் கோயிலுக்குப் போய்ப் பார்த்திருந்தால் புரியும், யாருக்குமே அங்கே சிறப்பு தரிசனம் என்பதே இல்லை என்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்ற கருத்து புரியுது. நீங்க சொல்றதைப் பார்த்தால், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா, ரஜினி என்று எல்லோருமே இலவச தரிசன கியூவில் ஒரு நாள் முழுக்க நின்றுதான் தரிசனம் செய்யணும் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே.

      நீக்கு
    2. சிதம்பரத்தின் எல்லையைக் கூட மிதிச்சதில்லை போல! அங்கே எந்தவிதமான வரிசையோ, சிறப்பு தரிசனம் என்பதோ இல்லவே இல்லை, நீங்க பாட்டுக்குப் போகலாம். நடராஜர்/கோவிந்தராஜர் ஆகியோரை ஆசை தீரப் பார்க்கலாம். வரலாம். மேலே ஏறிப் பார்ப்பதற்கு மட்டும் தீக்ஷிதர்கள் அனுமதி வேண்டும். தெரிந்த கட்டளை தீக்ஷிதர் இருந்தால் அவர் பொறுப்பிலேயே மேலே கூட்டிச் சென்று தரிசனம் செய்விப்பார். கட்டணம்னு இல்லாட்டியும் அர்ச்சனை, தீபாராதனை எனக் காட்டுவதால் தேங்காய், பழம், பூவெல்லாம் அவங்களே கொண்டு வந்திருப்பாங்க. பிரசாதம் பெற்றுக்கொள்கையில் குறைந்தது 100ரூபாயாவது போட்டால் நன்றாக இருக்கும். கட்டாயம் ஏதும் இல்லை. எல்லோரும் கேட்கவும் மாட்டார்கள்.

      நீக்கு
    3. தங்களது விளக்கம் அறிந்தேன் சிதம்பரம் நான் சென்றதில்லை சமீபத்தில் திருநல்லாறு சென்று வந்தேன் சிதம்பரம் அருகில்...

      அறநிலையத்துறையால் நிறைய பணச்சுருட்டல்கள் நிகழ்வது உண்மையே...இதை உணர்ந்து மக்கள் உண்டியலில் பணம் போடுவதை நிறுத்தி விட்டு, வாயிலில் தர்மம் கேட்பவர்களுக்கு போடலாம்.

      நீக்கு
    4. நெல்லைத்தமிழரின் மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. பல கோயில்கள் வியாபாரத்தலங்களாகி வ்ருகின்றன. பெரும்பான்மையானவர்களின் மனதில் இருக்கும் ஆதங்கம் அதை நல்லா சொல்லிட்டீங்க

    கோயிலில் கூட்டம் இருந்தால் கண்டிப்பாகப் போவதைத் தவிர்ப்பதுண்டு. அது போல அர்ச்சனை செய்யும் வழக்கம் இல்லை.

    பைசா போடும் வழக்கமும் இல்லை. வேண்டுதல் வைக்கும் வழக்கமும் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  11. கவிதை அருமை.
    கோவில்களுக்கு போய் சாமி தரிசனம் செய்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது.
    குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  12. அனைத்தும் வியாபாரத் தலங்களாகிப் போவது வருத்தத்திற்கு உரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு