சிவன் ராத்திரி என்றால் என்ன ? அன்று தமிழர்கள்
அவரவர் குலதெய்வக் கோயில்களுக்கு சென்று இரவு முழுவதும் விழித்திருந்து பூஜை
செய்து வழிபடுதல் என்பதுதான் தொன்று தொட்டு வழக்கம். உறங்காமல் உட்கார்ந்து
இருப்பார்கள். காரணம் அன்றுதான் சந்திர, சூரிய கிரகணங்கள் ஒரே நேர்கோட்டில்
சந்திப்பதாகவும், அதன் மூலம் நமது முதுகுத்தண்டில் அதன் சக்தி பாய்ந்து நமக்கு
சக்தி பெருகுவதாகவும் சொல்லப்பட்டது.
இதை இன்றைய விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டது. ஆனால்
கோயமுத்தூர் ஈஷா மையம் என்ற கோயில் என்று சொல்லப்படும் வியாபாரத் தலத்தில் ஜக்கி
வாசுதேவ் என்ற ஆசாமி (?) அரசின் பலநூற்றுக் கணக்கான
ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி சர்வ நிச்சயமாக இவர் உழைத்த பணத்தில் வாங்கி
இருக்கவே முடியாது. ஆனாலும் இன்றைய நிலையில் இதை வாங்கும் அளவு பணம் இருக்கிறது
என்பதும் மறுக்க இயலாத உண்மை.
இங்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல அரசியல்வாதிகள், திரைப்படக் கூத்தாடன்கள், கூத்தாடிகள் வருகை தந்து பாமர மக்களின் நம்பிக்கையை வளர்த்து விடுகிறார்கள். தமிழன் அறிவுக் கூர்மையானவன் என்பது பண்டைய காலத்தில் இருந்தே நிரூபணமான உண்மை. அந்த பாரம்பரியத்தில் வந்த நாம் இன்று இந்த மூடத்தனமான சடங்குகளை நம்பி ஏமாறுவது காலத்தின் கோலம். நமது சுயசிந்தனையை எங்கு தொலைத்தோம் ?
இங்கு போய் சிவனை வணங்குவதற்கு லட்சக்கணக்கில் பணத்தை
கொட்டுகின்றனர். ஒவ்வொரு நிலைப்பாட்டுக்கும் ஒவ்வொரு கட்டணம். அதாவது ஜக்கியை
அருகில் நெருங்குவதற்கு... பணம் கொடுத்துதான் நாம் இறைவனை தொழுதல் வேண்டுமா ? இது எனக்கு
உடன்பாடு இல்லாத விடயமே. இந்த ஜக்கி வாசுதேவ் இளம் பெண்களை தலையை மழித்து
அலங்கோலப்படுத்தி பக்தைகளாக மாற்றி இருக்கிறார். ஆனால் அவர் முழுஜடாமுடியுடன்
காட்சி தருகிறார் பேண்ட் சர்ட் அணிகிறார்.
விலை உயர்ந்த மூன்று சக்கர பைக் வாகனத்தில் வலம் வருகிறார். இங்கு நடனம் ஆடுவதும், அதற்கு காதைக் கிழிக்கும் திரைப்படப் பாடல்களை ஒலிக்க வைப்பதும் எவ்வகையில் தர்மமாகும் ? அதைவிட நடிகைகளுக்கு இங்கு வேலை என்ன ? தமிழன் ஏன் சிந்திக்க மறுக்கிறான் ? இந்திய கலாச்சாரத்தை சீரழிப்பதற்கான கைக்கூலிகளே இவர்கள் என்பது தமிழனின் சிந்தைக்கு தெரியவில்லையா ?
அதே நேரத்தில் இவரது வளர்ப்பு மகள் என்று
சொல்லப்படுபவர் அயல் தேசத்தில் படித்து ஆங்கிலோ இண்டியன் பெண்ணாகவே வாழ்கிறார்,
வலம் வருகிறார். இதுதான் உண்மையான பக்தி வழிபாடு என்றால் அவரது மகளைத்தானே இங்கு
முதன்மை படுத்தி இருத்தல் வேண்டும். இது ஏன் தமிழர்களுக்கு தெரியவில்லை ? ஒருவேளை
தெளியவில்லையா ?
இன்றைய கோயில் தலங்களில் பணம் கட்டினால்தான் தெய்வத்தை வணங்கு முடியும் என்ற நிலை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நாம் மனதில் உண்மையாகத்தானே இறைவனை தொழுகிறோம். கண்மூடி பிரார்த்தனை செய்தால் இறைவன் நமக்கு அருள் புரியமாட்டாரா ? தொடக்க காலத்தில் கோயில்களின் பராமரிப்பு பணிக்கு பொருளுதவி தேவைப்பட்டது மக்கள் தங்களது காணிக்கையாக நேர்ச்சை வைத்து யார் எவ்வளவு போடுகிறார்கள் என்பதை பிறர் அறியாவண்ணம் இருப்பதற்காக உண்டியலை வைத்து பணம் போட வைத்தார்கள்.
இன்றைய மனிதன் அதையே வியாபாரமாக்கி மக்களிடம் பணத்தை கட்டாயமாக வசூல் செய்கின்றான். அரச்சகர்களுக்கு இன்றைய நிலையில் ஊதியம் இல்லை என்ற பேச்சு வழக்கும் இருக்கிறது. ஆகவே இறைவனை தொழும் நாம் அர்ச்சகர்களுக்கு தட்டில் விரும்பியதை போட்டு விட்டு உண்டியலில் போடும் பணத்தை வெளியில் தர்மம் கேட்பவர்களுக்கு பிரித்து போட்டு வரலாமே... ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று நீ படித்ததை நம்பவில்லையா ?
உண்டியல் பணம் அறநிலையத்துறை என்ற பெயரில் பல அரசியல்வாதிகளின் கைகளுக்குத்தான் போகிறது. எத்தனையோ கோயில்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாயில் சொத்துகள் இருக்கிறது. அவைகள் வெறுதே இருந்து பயன் என்ன ? வீடட்றவர்களுக்கு அதில் கோயில் நிர்வாகமே வீடு கட்டி கொடுக்கலாமே... ஸ்விட்சர்லாண்ட் வங்கிகளில் வெட்டியாக கிடக்கும் இந்தியர்களின் பணம் எப்படி அந்த நாட்டார்களுக்கு பயனாக இருக்கிறதோ... அதைப் போலவேதான் இவையும். கோயில் நிலங்களாவது இந்தியாவில் இருக்கிறது ஆனால் ஸ்விஸ் பணம் ?
கில்லர்ஜி
தேவகோட்டை
காசை முன்னுக்கு
வச்சான்
கடவுளை பின்னுக்கு வச்சான்
ஆசையை கண்ணுக்கு வச்சான்
அத்தனையும் மண்ணுக்கு வச்சான்
(பழைய நாடகப்பாடலொன்று என் நினைவில்
ஆடுகிறது பபூன் பொன்னமராவதி திரு.ஆறுமுகம் அவர்கள் பாடுவது)
சிவாதாமஸ்அலி-
பலம் படைத்த மனிதரால் மதத்தின் கோட்பாடுகளையே மாற்ற முடிகிறது. கேள்வி கேட்க வக்கு இல்லாத ஜடங்களாக இருப்பதுகூட தவறில்லை. பணம் கட்டி ஆதரிக்கும் பணக்கார பிண்டங்களை என்ன சொல்வது ?
இங்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல அரசியல்வாதிகள், திரைப்படக் கூத்தாடன்கள், கூத்தாடிகள் வருகை தந்து பாமர மக்களின் நம்பிக்கையை வளர்த்து விடுகிறார்கள். தமிழன் அறிவுக் கூர்மையானவன் என்பது பண்டைய காலத்தில் இருந்தே நிரூபணமான உண்மை. அந்த பாரம்பரியத்தில் வந்த நாம் இன்று இந்த மூடத்தனமான சடங்குகளை நம்பி ஏமாறுவது காலத்தின் கோலம். நமது சுயசிந்தனையை எங்கு தொலைத்தோம் ?
விலை உயர்ந்த மூன்று சக்கர பைக் வாகனத்தில் வலம் வருகிறார். இங்கு நடனம் ஆடுவதும், அதற்கு காதைக் கிழிக்கும் திரைப்படப் பாடல்களை ஒலிக்க வைப்பதும் எவ்வகையில் தர்மமாகும் ? அதைவிட நடிகைகளுக்கு இங்கு வேலை என்ன ? தமிழன் ஏன் சிந்திக்க மறுக்கிறான் ? இந்திய கலாச்சாரத்தை சீரழிப்பதற்கான கைக்கூலிகளே இவர்கள் என்பது தமிழனின் சிந்தைக்கு தெரியவில்லையா ?
இன்றைய கோயில் தலங்களில் பணம் கட்டினால்தான் தெய்வத்தை வணங்கு முடியும் என்ற நிலை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நாம் மனதில் உண்மையாகத்தானே இறைவனை தொழுகிறோம். கண்மூடி பிரார்த்தனை செய்தால் இறைவன் நமக்கு அருள் புரியமாட்டாரா ? தொடக்க காலத்தில் கோயில்களின் பராமரிப்பு பணிக்கு பொருளுதவி தேவைப்பட்டது மக்கள் தங்களது காணிக்கையாக நேர்ச்சை வைத்து யார் எவ்வளவு போடுகிறார்கள் என்பதை பிறர் அறியாவண்ணம் இருப்பதற்காக உண்டியலை வைத்து பணம் போட வைத்தார்கள்.
இன்றைய மனிதன் அதையே வியாபாரமாக்கி மக்களிடம் பணத்தை கட்டாயமாக வசூல் செய்கின்றான். அரச்சகர்களுக்கு இன்றைய நிலையில் ஊதியம் இல்லை என்ற பேச்சு வழக்கும் இருக்கிறது. ஆகவே இறைவனை தொழும் நாம் அர்ச்சகர்களுக்கு தட்டில் விரும்பியதை போட்டு விட்டு உண்டியலில் போடும் பணத்தை வெளியில் தர்மம் கேட்பவர்களுக்கு பிரித்து போட்டு வரலாமே... ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று நீ படித்ததை நம்பவில்லையா ?
உண்டியல் பணம் அறநிலையத்துறை என்ற பெயரில் பல அரசியல்வாதிகளின் கைகளுக்குத்தான் போகிறது. எத்தனையோ கோயில்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாயில் சொத்துகள் இருக்கிறது. அவைகள் வெறுதே இருந்து பயன் என்ன ? வீடட்றவர்களுக்கு அதில் கோயில் நிர்வாகமே வீடு கட்டி கொடுக்கலாமே... ஸ்விட்சர்லாண்ட் வங்கிகளில் வெட்டியாக கிடக்கும் இந்தியர்களின் பணம் எப்படி அந்த நாட்டார்களுக்கு பயனாக இருக்கிறதோ... அதைப் போலவேதான் இவையும். கோயில் நிலங்களாவது இந்தியாவில் இருக்கிறது ஆனால் ஸ்விஸ் பணம் ?
கடவுளை பின்னுக்கு வச்சான்
ஆசையை கண்ணுக்கு வச்சான்
அத்தனையும் மண்ணுக்கு வச்சான்
பலம் படைத்த மனிதரால் மதத்தின் கோட்பாடுகளையே மாற்ற முடிகிறது. கேள்வி கேட்க வக்கு இல்லாத ஜடங்களாக இருப்பதுகூட தவறில்லை. பணம் கட்டி ஆதரிக்கும் பணக்கார பிண்டங்களை என்ன சொல்வது ?
காணொளி
வழக்கம் போல பொய்ங்கிட்டீங்க!!!! கில்லர்ஜி! உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் கில்லர்ஜி. முதலில் சொன்னவை அனைத்தையும்...ஆன்மீகம் என்பது வேறு.....ஆனால் உலகம் இப்படித்தான் விரும்புகிறது இதை ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டு!
பதிலளிநீக்குகீதா
,வருக ஏமாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் வாழ்வார்கள்.
நீக்குஉண்டியலில் காசு போடும் பழக்கம் இல்லை. அது போல அர்ச்சகர் ஏழையாக இருந்தால் வருமானம் இல்லாதவராக சிறிய கோயிலில் பூசை செய்பவராக இருந்தால் கொடுப்பது உண்டு. அது போன்று வெளியில் யாசிப்பவர்களிலும் - பாத்திரம் அறிந்து பிச்சை இடு! என்பது போலத்தான். அதாவது பொதுவாகச் சொல்லப்படும் கருத்து அல்ல..எல்லாருக்கும் காசு கொடுக்கும் பழக்கம் இல்லை. டாஸ்மாக் செல்பவராகத் தெரிந்தால் நோ!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
ஆம் இப்பொழுது பிச்சை கேட்பவர்களில் பலர் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்.
நீக்குகாணொளி கண்டேன்....சொல்ல எதுவுமே இல்ல!! சமூகக் கோபம் ஓகே தான்..சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாத போது நமக்கு ஒத்துவ்ராத, விருப்பம் இல்லாதாற்றில் இருந்து ஒதுங்கி இருப்பதுதான் நல்லது. எனக்கும் வருத்தம் கோபம், கேள்விகள் எழும்தான். ஆனால் நாம நம்முடைய அமைதியான வழிபாட்டை பார்த்துக் கொண்டு போக வேண்டும். நம் மனம் இதை எல்லாம் கண்டு பொங்கினால் கோபம் எழுந்தால் நம் இறையுணர்வு பாதிக்கப்படும் என்று தோன்றும் கில்லர்ஜி. நம்மால் நம் வழிபாட்டில், நம் மன அமைதியில் மனதைச் செலுத்த முடியாது என்றும் தோன்றும்.
பதிலளிநீக்குகீதா
வருக ஆம் நம்மால் இந்த அறச்சீற்றம் செய்ய மட்டுமே முடியும்.
நீக்குகாரணம் நமக்கும் வாழ்க்கை இருக்கிறதே...
அதிகாரம் 108 கடமை
பதிலளிநீக்குஇவர்களைப் போல உள்ளவர்களையும், நம்பும் கும்பல்களையும், ஒரே சொல் :-
கீழ்கள்
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குமதத்தின் பெயரால் பிழைக்கிறார்கள். பணத்தை வைத்து கொழிக்கிறார்கள்.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்ஜி இதுதான் உண்மை
நீக்குஇப்போது ஆன்மீகம் பணம் கொழிக்கும் இடம். எளிமையான பக்தி இப்போது இல்லை.
பதிலளிநீக்குஆடம்பரம். இவர்களிடம் உண்டியல் இல்லை, ஆனால் அறக்கட்டளை என்ற பேரில் வருமான வரி விலக்கபடும் பணம் வந்து குவிகிறது இவர்களிடம்.
காணொளி பார்த்தேன். விளம்பரத்திற்கு செலவு நிறைய செய்கிறார்கள்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கிறது: சீற்றம் கொள்ளச் செய்கிறது. உங்களைப் பாராட்டுவதில் பெரிதும் பெருமைப்படுகிறேன்.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி
நீக்குவேதனைதான் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குஉங்களுடைய அறசீற்றத்தில் விளைந்த ஒவ்வொரு வரிகளும் அற்புதமானவை... ஆராதிக்கவேண்டியவை... அதில் எதை பாராட்டுவது எதை விடுவது என்ற திகைப்பே என்னிடம் மிஞ்சி நிற்பதால் அனைத்தையும் அமோதித்து அமைதியாகிறேன்....
பதிலளிநீக்குஅத்தனைக்கும் ஆசைப்படுபவன் வாழ்வு அந்தரத்தில் ஊசலாடும்.
வருக நண்பரே தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஎனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கோயிலுக்கே போனதில்லை.. நண்பரே! பக்தி பகல்வேசம் ஆகி பல நூற்றாண்டு ஆகிவிட்டது...
பதிலளிநீக்குவருக நண்பரே இதுதான் சரியான பாதை.
நீக்குநம்மை யாரும் ஏமாற்ற முடியாது.
நாம கோவிலுக்குப் போவது, அந்தக் கோவிலுக்கான வேலைகளில் பங்கெடுத்துக்கொள்வது, இறையை வழிபட்டு நம்மாலான சிறு தொகையை அர்ச,சகருக்கு, கோவில் பணி செய்பவர்களுக்கு இல்லை வெளியில் இருக்கும் ஏழைகளுக்குக் கொடுப்பது... இதையும் ஆன்மீகம் என்ற பெயரில் நடக்கும் பிசினெசையும் நீங்க குழப்பிக்கிறீங்க.
பதிலளிநீக்குஇது பிசினெஸ். அதற்கு ஏற்றபடிதான் எல்லாம் நடக்கும். அதனால் பொங்கிப் பிரயோசனமில்லை.
கையேந்தி பவன்ல தருவதும் இட்லிதான். ரத்னா கபேல தருவதும் இட்லிதான். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தருவதும் இட்லிதான். ஆடம்பரம் வேண்டுபவர்கள் அதற்கேற்றபடி பணம் செலவழிக்கறாங்க.
வருக தமிழரே
நீக்குஆம் ஆன்மீகம் வியாபாரம் ஆகிவிட்டது உண்மைதான்.
பக்தர்களும் தகுதிக்கு தகுந்தாற்போல்தான் இறையை நாடுகின்றனர்
அது சரி, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசிக்கு இரவு முழுவதும் முழித்திருக்கிறேன் என்ற பெயரில் சினிமாக் கொட்டகையில் சினிமாக்கள் பார்ப்பவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?
பதிலளிநீக்குஇதுவும், சாமி பெயரைச் சொல்லி பூசாரி உண்டு கதைதான்.
நீக்குகாணொளி கண்டேன். இந்த மாதிரி பதிவுக்குப் பதில் அவர் கிட்டவே விளம்பரம் வாங்கியிருந்தால் மதுரைல ஒரு வீடும் மானாமதுரைல இன்னொரு வீடும் கட்டியிருக்கலாம் போலிருக்கே
பதிலளிநீக்குஆம் மொத்தத்தில் பணம் விரையமாகி கொண்டு இருக்கிறது.
நீக்குமறுபுறம் ஒருவேளை சோற்றுடன் உறங்குபவர்கள் பல்லாயிரம்....
ஒரு வேளை நடிகைகளும் சிவராத்திரி கொண்டாட வந்து இருக்கலாம் அல்லவா நண்பரே.
பதிலளிநீக்குவருக நண்பரே இப்படியும் இருக்கலாமா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்கள் ஆதங்கம் புரிகிறது.பக்தியின் பெயரில் படாடோபம் என்பது காலங்கள் தோறும் நம் கண்ணெதிரே வாழ்வதுதான். "ஏழைக்கேற்ற எள்ளுருண்டை" என்ற பழமொழிபடி ஏழைகளும் இறைவனிடத்தில் பக்தி செலுத்துகிறார்கள். ஆக இறைவனின் ஆஞ்கைப்படிதான் எதுவும் நடக்கிறது. தங்கள் அலசலும் உண்மையானதுதான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நேற்று என்னால் பதிவுலகத்திற்கு வர இயலவில்லை. அதனால் தாமதம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
இந்த ஆள் பக்கம் எல்லாம் நான் திரும்புவதே இல்லை..
பதிலளிநீக்குஉங்கள் பதிவு என்பதனால் வந்து பார்த்தேன்...
இந்த ஆள் சத்குருவா?..
இதனால் தான் உள்ளூர் ஓணான்கள் எல்லாம் விஷம் கொண்டு அலைகின்றன..
ஆன்மீகம் கேலிக்குரியதாவது இவரைப் போன்ற ஆசாமிகளால்தான் ஜி
நீக்குசக்கியோ முக்கியோ
பதிலளிநீக்குஎனக்குத் தேவை இல்லாத விஷயம்!..
இப்படி எல்லோரும் இருந்திருந்தால் பலநூறு யானைகளை காவு கொடுத்திருக்க வேண்டியது இல்லை ஜி
நீக்குஇந்த ஆளைப் பற்றி எழுதப் போய் உங்கள் கைகளை அழுக்காக்கிக் கொண்டீர்களே!..
பதிலளிநீக்குதவறுகளை கண்டும் காணாமல் ஒதுங்குவதும் குற்றம்தான் ஜி
நீக்கு