தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 17, 2023

ஆறுகுட்டியும், ஆறுமுகமும்

கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன் அபுதாபியில் என்னோடு அறையில் தங்கி இருந்த நண்பன் ஆறுகுட்டி விடுமுறையில் ஏற்கனவே வந்து இருந்தான் அலைபேசியில் அழைத்தேன்.
 
ஹலோ ஆறுகுட்டி ஞான் கில்லர்ஜியானு இவிடே எத்தி.
ഹലോ ആരുകുട്ടി ഞാൻ കില്ലർജിയാണ് ഇവിടേ എത്തി.
இதா இப்போல் ஆள் வருன்நு ஒரு நிமிஷம் காத்திருக்கு.
ഇതാ ഇപ്പോൾ ആൾ വരുന്നു ഒരു നിമിഷം കാത്തിരിക്കു
 
வரு, ஞான் கருத்த பேண்ட்டும், நீல சர்ட்டும் தரிச்சு இவிடே ஹிருதயா சாயக்கடயில் நில்க்குகயான்நு அவனே அறியிக்குக.
വരു, ഞാൻ കരുത്ത പാന്റും നീല ഷർട്ടും ധരിച്ച് ഇവിടേ ഹൃദയ ചായക്കടയിൽ നിൽക്കുകയാണ് അവനേ അറിയിക്കുക...
ஓகே
ഓകേ
 
சரியென்று பக்கத்திலிருந்த கடையில்...
ஒரு சாய
ഒരു ചായ
என்றேன், சூடாக கிடைத்தது குடித்து விட்டு நிற்கும் பொழுது சரட்டென்று ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது கேரளத்து அழகி ஸ்டாண்ட் இடாமலேயே...
 
கில்லர்ஜி அல்லே... ?
കില്ലർജി അല്ലേ... ?
நான் வாய் பிபொளந்தபடி.....
அதெ...
അതെ...
 
ஞான் ரஸித, ஆறுகுட்டி ஆய்ச்சு ஞான் ஆயாளுடே ஃபாரியாநு புறகில் இருக்குக ஆ பேக் இவிடே வெக்குக.
ഞാൻ രസിത ആറുകുട്ടി ആയച്ചു, ഞാൻ അയാളുടേ ഭാര്യയാണ്. പുറകിൽ ഇരുക്കുക ആ... ബാഗ് ഇവിടേ വെക്കുക.
 
சொல்லி விட்டு கையிலிருந்த அலைபேசியை பறித்து அவளே பேக்கின் உள்ளே போட்டு காலடியில் வைத்துக் கொண்டாள்.
இவிடே பிட்பாக்கெட் கூடுதல் குறச்சுக்கூடி ஸ்ருதிக்கணும்.
വിടേ പിറ്റ്പാക്കറ്റ കൂടുതൽ, കുറച്ചുകൂടി, ശ്രദ്ധിക്കണം.
 
நானும் ஒன்றும் சொல்லாமல் கொடுத்து விட்டேன், நம்ம ஆறு மனைவிதானே... சற்று தயங்கி கொண்டே ஒருபுறமாய் ஏறி அமர்ந்தேன்.
ரண்டு காலுகளும் இடுக,  அப்போல் எனிக்கு பாலன்ஸ் கிட்டும்...
രണ്ട് കാലുകളും ഇടുക അപ്പോൾ എനിക്ക് ബാലൻസ് കിട്ടും
நானும் தலையாட்டிக் கொண்டே இருபுறமும் காலை போட்டு அமர்ந்தேன். வண்டி பறந்தது என் மனமும் எங்கோ பறந்தது. மிர்ரரில் அவளது முகத்தை பார்த்தேன் ச்சே ஆறுகுட்டிக்கு இவ்வளவு அழகான மனைவியா... ?
 
ஆறுகுட்டி எவிடே ?
ആരുകുട്ടി എവിടേ ?
அவரு ஒரு ஜோலிக்கு போயி, ராவிலே பறஞ்நு, அரைமணிக்குள்ளில் திருச்செத்தும்.
അവരു ഒരു ജോലിക്ക് പോയി, രാവിലേ പറഞ്ഞു, അരമണിക്കൂറിനുള്ളിൽ തിരിച്ചെത്തും.
 
அப்பொழுது எனது அலைபேசி அழைத்தது நான்..
போன் எடுக்கூ...
ഫോൺ എടുക്കൂ
 
அல்ல, ஆறுகுட்டிதன்னே விளிக்குணு, இப்போல் வீட்டிலேக்கு வருன்நு...
അല്ല ആരുകുട്ടിതന്നേ വിളിക്കുന്നു,  ഇപ്പോൾ വീട്ടിലേക്ക് വരുന്നു.
அலைபேசி அடித்துக் கொண்டே இருக்க... ஸ்கூட்டி பிரதான சாலையிலிருந்து சிறிய கப்பி ரோட்டில் ஓடியது... வெகுதூரம் போய்க் கொண்டே இருந்தது ஆள் அரவமே இல்லை.
 
எந்தானு வீட்டில் வன்னத் ?
എന്താണ് വീട്ടിൽ വന്നത് ?
இதா வன்னு...
ഇതാ വന്നു.
 
அதேநேரம் அலைபேசி மீண்டும் அழைக்கவும்.
நிர்த்துக போனை எடுக்கூ.
നിർത്തുക, ഫോൺ എടുക്കൂ.
 
சத்தமாக கத்தினேன் சற்று வேகம் குறைத்து நிறுத்தியதும் நான் சட்டென கீழே இறங்கியதுதான் தாமதம் அவள் ஸ்கூட்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக் கொண்டு பறந்து விட்டாள் நானும் விரட்டிக் கொண்டு ஓடினேன் கீழே தேடிப்பார்த்தால் ஒரு கல்லைக்கூட காணோம்.
அடியே... அடியே... கொங்காச்சிறுக்கி மவளே... நில்லுடி...
 

விரட்டி ஓடி தளர்ந்து விட்டேன் நான் பின் தொடர்ந்து ஓட, அவள் முன் தொடர்ந்து பறந்து விட்டாள். ச்சே கேரள பெண்ணிடம் ஏமாந்து விட்டோமே அபுதாபியில் வாங்கிய சாம்ஸாங் போன் போச்சே... இனி ஆறுகுட்டியை எப்படி தொடர்பு கொள்வது ? அவளாகத்தானே வந்து ஆறுகுட்டி அனுப்பியதாக சொன்னாள், கில்லர்ஜினு நம்ம பெயரையும் சொன்னாளே எப்படி ? நாம்தான் கருப்பு பேண்ட், ஊதா சர்ட்டுனு எல்லா விசயத்தையும் உளறிக் கொண்டு இருந்தோமே ஒருவேளை பக்கத்திலேயே நின்று கேட்டு இருப்பாளோ... போச்சே ஆறுகுட்டி அவனோட தங்கைக்கு அவசரமாக சிறிய லேப்டாப் வாங்கி வரச்சொல்லி இருந்தானே...
 
அங்கு வந்த பிறகு பணம் தருவதாக இப்பொழுது அதுவும் போச்சே.. ட்ரெஸ் போனாலும் பரவாயில்லையே... அவளாகவே போனை பறித்து பேக் உள்ளே வைக்கும் பொழுது நாம சுதாரிக்கவில்லையே... அவதான் ஆறுகுட்டி மனைவினு சொல்லிட்டாளே... அதோட நாம வாயைப் பொளந்துட்டோமே... அபுதாபி மலையாளிகளிடம்கூட ஏமாந்தது இல்லையே இங்கு வந்தா ஏமாறணும் ? ச்சே வெளியில் தெரிஞ்சா அசிங்கம் குறிப்பாக அதிரடி, அதிராவுக்கு தெரியக்கூடாது. திடீரென்று அலைபேசியின் அழைப்புச் சப்தம்
 
இது எங்கிருந்து வருது ? நம்ம தலைமாட்டிலிருந்து ச்சே இதுவரை கண்டது கனவா ? அதானே பார்த்தேன் கில்லர்ஜியா ? கொக்கா ? நாமலாவது ஏமாறுவதாவது நல்லவேளை இனி அதிராம்பட்டிணத்துக்கே தெரிஞ்சாலும் கவலை இல்லை. அலைபேசியை எடுத்து... கிரஹாம் பெல்லின் சகோதரியின் பெயரைச் சொல்லி...
 
காலை வணக்கம்
காலை வணக்கம் என்ன உறக்கமா ?
இல்லை எழுந்துட்டேன்.
சரி நான் தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் நிற்கிறேன் ஸ்கூட்டியை எடுத்துட்டு வா... இங்கே இதயானு ஒரு டீக்கடையில் நிற்கிறேன்.
 
என்றான் என்னோடு அபுதாபியில் வேலை செய்த மற்றொரு நண்பன் ஆவுடையார்கோயில் ஆறுமுகம்
மறுபடியும் பஸ் ஸ்டாண்டும், ஸ்கூட்டியும். டீக்கடையுமா.... ஆ... ?
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
சீக்கிரம் எழுந்து போயா... எவளாவது கில்லர்ஜி ஆளுனு சொல்லிக்கிட்டு ஆறுமுகத்தை ஆட்டையை போட்டுறப் போறா...

Share this post with your FRIENDS…

24 கருத்துகள்:

  1. நம்ம கில்லர்ஜிக்கு கனவுலகூட கலர் கலரா கேரளத்து பெண் குட்டிக வருதுக....
    ஆனா... நாம கண்ண மூடுனா கருவாட்டு கூடைதான் தெரியுது...
    ம்... ம்ம்... அதுஅதுக்கு ஒரு கொடுப்பினை வேணும் போலுக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அதனால் என்ன...
      //கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு//
      அப்படியே பாடி மடக்கலாமே...

      நீக்கு
  2. //காலை வணக்கம்//... விடியற்காலைக் கனவு பலிக்கும்னு சொல்வாங்க. கில்லர்ஜி எச்சரிக்கையாக இருப்பது நல்லது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      இது உண்மையானால் அதிகாலையில் முயற்சி செய்து அம்பானியாவது போல கனவு காணலாம்

      நீக்கு
  3. ஆறுகுட்டி பேர் விசித்திரம். முஹம்மது குட்டி (மம்மூட்டி) ஜார்ஜ் குட்டி (மோகன் லால்) தெரியும்.
    காலம் கடந்தாலும் சேர நன்னாட்டு பெண்களுடன் சுந்தர ஸ்கூட்டியில் உலா வரும் கனவைக் காண்கிறீர்களா?
    அது சரி என்னைத் தவிர வேறு யார் மலையாளம் வாசிப்பவர்கள் உண்டு எ பி யில்? (ஒரு சில எழுத்து பிழைகள் உண்டு)
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      கோவையில் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (மலையாளி) இருக்கிறார்.

      பிழைகள் இருப்பின் சொல்லலாம் பிறகு மாற்றி விடுவேன்.

      தகவலுக்கு நன்றி ஐயா

      நீக்கு
  4. சாயா படம் போட்ட கில்லர்ஜிக்கு ரஸித ஆறுக்குட்டி படம் போடணும்னு தெரியலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      அடுத்த முறை கனவில் வந்தால் படம் போடுகிறேன்.

      நீக்கு
  5. கடைசில ரஸித, கனவு ரஸித ஆகிவிட்டாளே!! ஹையோ கில்லர்ஜி இங்க்ன அடிச்சு மாத்துன்ன கேஸாகிப் போயல்லோ இ ரஸித!!!! கனவுல கூட!!!

    நம்ம ஆறு மனைவிதானே// ஹாஹாஹாஹாஹா ....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அந்த ஆறுகுட்டி மனைவி எனப்படுபவள் உங்களிடமிருந்து கைப்பேசியை பிடுங்கிய உடனேயே நான் யூகித்து விட்டேன். ஆனால், நீங்கள் கொஞ்சமேனும் சுதாகரிக்கவில்லையே..! நல்லவேளை..அத்தனையும் கனவாக போய் விட்டது இல்லையென்றால், என்ன ஆவது?

    ஒரு கனவு காலையில் மறுபடி அதே போல நிஜமாவது வேடிக்கையென்றாலும், இது மாதிரி சில சமயம் அந்த கனவு சம்பவத்தை ஒட்டியது போல் நனவிலும் நடந்து விடுவதும் உண்டு. நகைச்சுவையான பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. /// எவளாவது கில்லர்ஜி ஆளுனு சொல்லிக்கிட்டு ஆறுமுகத்தை ஆட்டையை போட்டுறப் போறா...///

    இதுதான் அருமை..

    பதிலளிநீக்கு
  8. கில்லெர்ஜீ எச்சரிக்கையாக இருப்பது நல்லது

    பதிலளிநீக்கு
  9. ஏமாந்தது வெளியே தெரியகூடாது குறிப்பாக அதிரடி அதிராவுக்கு தெரியகூடாது.

    நல்லவேளை இது கனவு ! இனி பயமில்லை அதிராவிடம்.
    நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  10. இது வெளியான அன்றே நான் வாசித்து ரசித்தேன், சிரித்தேன். கமெண்ட் இட மறந்து விட்டேன் போலும். சுவையான ஒரு சிறுகதை போல அமைந்திருக்கிறது. சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  11. களர் களரான கனவுகள்.
    நானும் நேற்று பண்ணிரெண்டாம் வகுப்பு ஃபெயிலாகிவிட்டதாக கனவு கண்டு மிகவும் பயந்துபோனேன்.
    அதிலும் கொடுமை, நான் அலுவலகத்தில் வேலை செய்வதும் அக்கனவிலேயே நினைவும் வந்து எப்படி நாளை அலுவலகத்தில் முகத்தைக் காட்டுவேன் என்னும் என்னம் வந்ததுதான்.
    விழித்ததும் எங்கனம் இப்படிப்பட்ட என்னங்கள் கலந்து வருகின்றன என ஆச்சரியம் கொண்டேன்.
    மொபைல் திருட்டு பல நூதனமுறைகளில் அரங்கேறுகின்றன.
    அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கனும் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

      நீக்கு