தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 13, 2023

கொடுத்து கெடுத்தேன்


ணக்கம் நண்பர்களே... உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
 
இதோ எனது பாடல்...
 
என்னிடத்தில் உன்னை தடுத்தேன்
உன்னை கள்ளமின்றி கிள்ளி களித்தேன்
என்னிடத்தில் உன்னை தடுத்தேன்
உன்னை கள்ளமின்றி கிள்ளி களித்தேன்
 
இரவினில் உறவாடி தரும் நினைவுகள் சில தேடி
என்னிடத்தில் உன்னை தடுத்தேன்
உன்னை கள்ளமின்றி கிள்ளி களித்தேன்
ஆற்றில் ஓடும் காலை உன்னை ஆண்மை வென்றது
சாதல் என்றுதானே பாலில் பெண்மை சென்றது
 
உடலோடு உணர்வாட நான் வளமையில் நலமோடு
அணைத்தால் போதும் தருவேன்
ஆ... ஆ... எடுத்தால் கூட வருவேன்
என்னிடத்தில் உன்னை தடுத்தேன்
 
உள்ளம் சொல்லும் தாகம்
உந்தன் உள்ளும் வென்றது
தேகம் தந்த பாரம் துன்ப பள்ளம் கொண்டது
தனியொரு உறவேது சொந்த கனவுகள் முடியாது
உறவும் நிகழும் நிலையே ஆ... ஆ...
ஒருவர் சிதையும் நிலையே
 
தேடல் கண்ட ஆண்மை இங்கே கனியே தின்றது
ஆடல் கள்ள கண்ணன் இல்லம் உருகி தந்தது
கண்ணடி வினைகேட்டு இன்று தென்னவன் விழி பட்டு
பூசையில் விழுந்தாய் இங்கே ஆ... ஆ...
என்னிடத்தில் உன்னை தடுத்தேன்
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1971
படம்: அவளுக்கென்று ஓர் மனம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி
 
இதோ கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்
 
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
 
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது
 
இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்
ஆ... ஆ... தடுத்தால் கூட தருவேன்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
 
வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனி ஒரு பிரிவேது அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே ஆ... ஆ...
இருவர் நிலையும் சிலையே
 
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே ஆ... ஆ..
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
 
இதோ யூட்டியூப் இணைப்பு
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

16 கருத்துகள்:

  1. எனக்கும் பிடித்த பாடல். ஆனால் இதைவிட இதே படத்தில் வரும் இரண்டு SPB பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உங்களுக்கு எஸ்.பி.பி. மீது தீராத காதல் இருக்கிறது.

      நீக்கு
  2. அருமையான பாடலை உங்கள் பாணியில் வித்தியாசமாகச் சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. நல்ல பாடல் பகிர்வு. உங்கள் பாணியில் மாற்றி எழுதிய கவிதை சோகமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. ஒரிஜினல் பாடல் மிக அருமையான பாடல்...வழக்கம் போல உங்களின் கற்பனையில் மாற்றிய வரிகள்..நல்லாருக்கு கில்லர்ஜி

    ஆனால் முதல் இரு வரிகள் முரணாகிறதே...அதன் பின்னும்!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் இப்பொழுதுதான் கவனிக்கிறேன்.

      தங்களது கவனத்திற்கு நன்றி

      நீக்கு
  5. வழக்கம் போல் உங்கள் திறமை வெளிப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

      நீக்கு
  6. ‘வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது’

    ‘நினைத்தால் போதும் வருவேன்
    ஆ...ஆ... தடுத்தால்கூடத் தருவேன்’

    -மீண்டும் மீண்டும் அசைபோடத் தூண்டும் வரிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கவிஞரின் சிறப்பான வரிகளை குறிப்பிட்டமைக்கு நன்றி

      நீக்கு
  7. ‘உன்னைக் கள்ளமின்றிக் கிள்ளிக் களித்தேன்’

    ‘அணைத்தால் போதும் தருவேன்
    ஆ,,, ஆ... எடுத்தால் ‘கூட’ வருவேன்’

    -இவை உங்கள் பாடலில் அசைபோடத் தூண்டும் வரிகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படியா ? மிக்க மகிழ்ச்சி நண்பரே

      நீக்கு