தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 30, 2023

அரசியல் உத்தமர்கள்

கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து உடைத்த தேங்காயை கொண்டு சட்னி வைக்கும் மக்கள், அதே தேங்காயை சிதறுகாய் உடைத்தால் எடுத்து வருவது தவறு என்ற கட்டமைப்பை அமைத்தது சுகாதார நலன் கருதியா ?
அப்படியானால், தரையில் போட்டு சாப்பிடும் மண்சோற்றில் சுகாதாரத்தை மறந்தது ஏன் ?
* * * * * * * 01 * * * *
 
இறைவன் நமக்கு நல்லதையே செய்வார் என்ற நம்பிக்கையில் இறைவனிடம் கையேந்தி வணங்குவது சரிதானே ?
அப்படியானால், இறைவனிடமே போய் அவர்களது குடும்பத்தை நாசமாக்கி விடு என்று கோரிக்கை வைப்பது எந்த வகையில் நியாயம் ?
* * * * * * * 02 * * * *
 
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்தது நியாயம்தானா ?
அப்படியானால், கோயிலுக்கு செல்லும் மனிதர்கள் அனைவரும் வாசலில் தர்மம் கேட்பவருக்கு உதவாமல் பணம் அவசியமற்ற தெய்வத்துக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவது சரியா ?
* * * * * * * 03 * * * *
 
கடவுள்களில் பணக்கார தெய்வம், ஏழை தெய்வம் என்ற நிலைப்பாடு உள்ளது என்று முன்னோர்கள் நமக்கு சொன்னார்களா ?
அப்படியானால், திருப்பதி உண்டியலில் கட்டுக்கட்டாக பணம் போடுவதும், அரசமரத்தடி தெய்வத்துக்கு ஐம்பது பைசா போடுவதும் ஏன் ?
* * * * * * * 04 * * * *
 
கல்லிலான கடவுளுக்கு பாலாபிஷேகம் எதற்கு என்று கேட்ட நாத்திகர்கள் கடவுள் நம்மை தண்டிக்க மாட்டார் என்ற நம்பிக்கையா ?
அப்படியானால், திரைப்படக் கூத்தாடன்களின் பதாகைகளுக்கு பாலாபிஷேகம் எதற்கு என்று கேட்காதது ரசிகர்கள் அடிப்பார்கள் என்ற பயத்திலா ?
* * * * * * * 05 * * * *
 
கண்ணகி உண்மையான கற்புக்கரசி என்று நமக்கு போதித்ததை நாம் ஏற்று நடந்தது நமது முன்னோர்களுக்காகத்தானே ?
அப்படியானால், கூத்தாடி குஷ்பு திருமணத்துக்கு முன்பு எப்படியும் வாழலாம் என்று சொன்னதை கண்டிக்காமல் விட்டு வைத்திருப்பது ஏன் ?
* * * * * * * 06 * * * *
 
பண்டைய காலத்து பெண்கள் முதியோர்களை மதித்து நடந்து, கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்தது உண்மைதானா ?
அப்படியானால், இன்றைய நவீனகால பெண்கள் தவறு செய்யும் கணவனை கண்டந்துண்டமாக வெட்டுவது ஏன் ?
* * * * * * * 07 * * * *
 
தமிழர்கள் நன்றியுள்ளவர்கள் என்று நம்மைநாமே பறைசாற்றிக் கொள்வது முறையானதுதானா ?
அப்படியானால், தனது செல்வங்களை எல்லாம் நாட்டு மக்களுக்காக இறைத்து சுதந்திரத்துக்காக தன்னை சிறையில் கிடத்தி வாழ்ந்து இறந்து போன வ.உ.சிதம்பரனாரின் பெயரன் இறந்தபோது ஊர் மக்கள் பத்து நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதுதான் நன்றியுணர்வா ?
* * * * * * * 08 * * * *
 
காமராஜர் நல்லவர், உண்மையானவர், நேர்மையானவர் என்றும், இன்றைய கட்சிகள் அனைத்தும் காமராஜர் ஆட்சி தருவேன் என்று சொல்வதை கண்டிக்காதது முறையா ?
அப்படியானால், காமராஜரை தேர்தலில் தோற்கடித்த மக்கள் நன்றி கெட்டவர்களா ?
* * * * * * * 09 * * * *
 
காவல்துறை மந்திரியாக இருந்தும் தனது இறுதிக்காலத்தில் அரசு மருத்துவமனையில் தரையில் கிடந்த அமைச்சர் திரு.கக்கன் நல்லவரா ?
அப்படியானால், அவரது வாரிசுகளை கண்டு கொள்ளாமல் இந்த அரசு மறந்து போனதை கண்டிக்காத மக்கள் நன்றி கெட்டவர்களா ?
* * * * * * * 10 * * * *
 
மகாத்மா என்று போற்றப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்த நாட்டுக்காக உயிர் நீத்தது உண்மையா ?
அப்படியானால், அவரது பெயரனை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்த மக்கள் நன்றியுள்ளவர்கள் இல்லையா ?
* * * * * * * 11 * * * *
 
அரசியல்வாதிகள் எவருமே உத்தமர்கள் இல்லை, கொள்ளைக்காரர்கள் என்று சொல்வது உண்மையா ?
அப்படியானால், அவர்களிடம் பணம் வாங்கி கொண்டு வாக்களிக்கும் மக்கள் அனைவரும் உத்தமபுத்திரர்களா ?
* * * * * * * 12 * * * *
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி

Share this post with your FRIENDS…

48 கருத்துகள்:

  1. உங்க கேள்விகளெல்லாம் ஏடாகூடமாகவும் சிந்திக்கவேண்டியதாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. சரி...உங்கள்ட ஒரு கேள்வி. பொதுவா நம்ம மேனேஜரைப் பார்த்து குட் மார்னிங் சொல்வதும், அவர் ஏதேனும் கேட்டால் உடனே நிறைவேற்றுவதும், நாம கோவிலுக்குப் போய் வந்தால் (திருப்பதி போன்று) பிரசாதத்தை அவருக்கு நினைவாகக் கொடுப்பதும் உண்டு. அந்த மேனேஜர் வேற கம்பெனிக்குப் போன பிறகு, நாம் பிரசாதத்தை அவரைத் தேடிப்போய் கொடுப்போமா இல்லை இப்போ இருக்கும் மேனேஜருக்குக் கொடுப்போமா? அரசியலில் இருப்பவர்கள் எல்லாருமே (பொதுவா) சுயநலத்துக்காகத்தான் இருக்கிறார்கள். அப்போ காமராஜர் கால்ல விழுந்த, இப்போ இவர் கால்ல விழற என்றெல்லாம் கேட்க முடியாது. என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      நீங்களே சொல்லி விட்டீர்கள். "பாம்பு திங்கிற ஊருக்கு போனால் நடுத்துண்டு எனக்கு வேணும்" என்று சொல்லணும்னு...

      எல்லோரும் பொதுநலவாதிகளே...

      ஆமா... சமீபத்தில் திருப்பதி போய் வந்தீர்களே லட்டு தேவகோட்டை வரவேயில்லை ?

      நீக்கு
    2. பாருங்க... நான் நிறைய லட்டு வாங்கி வச்சுக்கிட்டு, என்ன பண்ணறது, அதிகமா இனிப்பு சாப்பிடக்கூடாதே, பரவாயில்லை, கில்லர்ஜி இங்க வராமலா போயிடுவாரு, அவருக்குக் கொடுத்திடவேண்டியதுதான்னு நினைச்சு வச்சிக்கிட்டிருக்கேன். கில்லர்ஜி கார் தேவகோட்டையிலேயே சுத்திக்கிட்டிருந்தால் எப்படி? குளுகுளு பெங்களூர் பக்கமும் வரலாமே

      நீக்கு
    3. இதுதான் திருநெல்வேலிக்காரவுங்களுக்காகவே... தமிழர்கள் உருவாக்கி வச்ச தமிழ் வார்த்தைகள் .

      இதை நான் எதிர் பார்த்தேன்.

      நீக்கு
  3. சிந்திக்க வேண்டிய கேள்விகள்... அருமை...

    பதிலளிநீக்கு
  4. கண்டுக்காம உட்டுருந்தா காணாம போயிருப்பானுங்க..

    கண்டுக்கிட்டு வர்றதுனால தான் காது இல்லா ஊசியும் கடப்பாரை ஆகிடுது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதுதான் உண்மை
      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  5. கோவில் சிதறு காய் உடைத்தவர்களே எடுத்து கொள்ள கூடாது என்று நினைப்பார்கள் என்று நினைக்கிறேன். சிதறுகாயை முன்பு எடுத்து சாப்பிட போட்டி போடும் கூட்டம் இருந்தது. இப்போது சிதறுகாய் உடைக்க ஒரு தொட்டி கட்டி விட்டார்கள். அதில் உடைப்பதை அந்த கோவில் பூசாரிகள் தான் எடுத்து காய வைத்து எண்ணெய் ஆட்டி கொள்கிறார்கள். வேறு யாரும் எடுத்து சாப்பிட முடியாது. வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவிலில் அப்படித்தான் நடக்கிறது.
    மண் சோறு தரையை கழுவி விட்டு அதில் உணவை போட்டு சாப்பிடுவதை சினிமாக்களில் பார்த்து இருக்கிறேன். கோவில்களில் பார்த்தது இல்லை.

    இறைவனிடம் நல்ல பிரார்த்தனைகளை தான் செய்யவேண்டும். நமக்கு அவர்கள் துன்பம் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுவதுதான் பண்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      சிதறுகாய் எடுப்பதில் இப்பொழுது கௌரவப்பிரச்சனை முதன்மையாகி விட்டது.

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. சிதறுகாய் உடைத்த வேகத்தில் எடுத்துக் கொண்டு பறக்கிறார்கள்.  நீங்கள் என்னவோ எடுப்பதில்லை என்பது போல சொல்கிறீர்கள்!

    இறைவனிடம் இன்னொருவர் நாசமாகவேண்டும் என்று வேண்டுபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம்.  நான் அவனைவிட நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுமானால் வேண்டுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கிறார்கள் ஜி கடந்த காலம் முழுவதும் என்னைச்சுற்றி நம்பிக்கை துரோகிகள் நிறைந்து விட்டதால் எனக்கும் அந்த எண்ணங்கள் "துளிர்" விடுகிறது.

      காரணம் என்னை அயோக்கியன் என்பதால் அப்படியே ஆகிவிட்டால் என்ன ?

      என்ற சிந்தையே காரணம்.

      நீக்கு
  7. கோவில் வாசலில் யாசகம் வேண்டுவோர் இலலாதவர் என்று நினைக்கிறீர்களா ஜி?  ஒவ்வொருவர் வாங்கிக்கணக்கிலும் எவ்வளவு இருக்கும் தெரியுமா?

    திருப்பபதி உண்டியலில் பணம் போட்டால் கோவில்காரர்கள் மட்டும்தான் அடிப்பார்கள்.  அரசமரத்தடியில் போட்டால் போவோர் வருவோரெல்லாம் அடிப்பார்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தற்போது இறைவனிடம் வேண்டுவது அழகிய மரணம் மட்டுமே...

      நீக்கு
  8. குஷ்பு-கண்ணகியை -  சொல்பவர்களுக்கு சொல்ல உரிமை இருக்கிறது.  கேட்பவர்களுக்கு ஏற்றுக்கொளளவும் ஏற்றுக்கில்லாமல் இருக்கவும் உரிமை இருக்கிறது.

    தவறு செய்யும் கணவனை வெட்டினால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.  கள்ளக்காதலுக்காக வெட்டுகிறார்களே, அது தவறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று கள்ளக்காதல் நிறைந்து விட்டது.

      இந்த இழிவான நிலைக்கு டாஸ்மாக் ஒரு முக்கிய காரணம் ஜி

      நீக்கு
  9. காமராஜரை தோற்கடித்தவர்கள் நன்றி கெட்டவர்கள் இல்லாமல் பின்னே என்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அதன் பலனை சந்ததிகள் அனுபவிக்கின்றோம் .

      நீக்கு
  10. நல்ல நல்ல கேள்விகள். சிந்தித்துப் பதில் எழுதினால் அது பல பக்கங்களுக்கு நீளும். இதெல்லாம் இருக்கட்டும். நடுத்தர வயதுக்காரர் நீங்கள். வாழ்ந்து சாதிக்க நிறைய இருக்கிறது. இறைவனிடம் அழகிய மரணம் கோருகிறீர்களே, அது ஏன்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நான் குடும்பத்தில் அனைவரிடமும் ஏமாந்து இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது வெட்கமும், குற்ற உணர்வும் சுடுகிறது.

      மனவெறுப்பு ஆகவே வாழ்வுதான் கிடைக்கவில்லை அழகிய மரணமாவது கிடைக்கட்டும் என்று ....

      நீக்கு
  11. கில்லர்ஜி பதிவு வந்ததுமே வாசித்துவிட்டேன். இன்று பல பணிகள். ...நாளை வந்து கருத்து இடுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

  12. அரசியல்வாதிகள் அனைவரும் உத்தமர் இல்லை என்று சொல்லவில்லை சிலர்தான் உத்தமர் இல்லை மீதி உள்ளவர்கள் எல்லாம் உத்தமர்கள் அவர்கள் பாஜக கட்சியினர் என்பது உங்களுக்கு தெரியுமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      உண்மைதான்
      //மீதி உள்ளவர்கள் எல்லாம் உத்தமர்கள் அவர்கள் பாஜக கட்சியினர் என்பது உங்களுக்கு தெரியுமா ?//
      அப்படியா ? மகிழ்ச்சி.

      நீக்கு
  13. கக்கனின் பேரனோ மகாத்மாவின் பேரனோ நல்லவர்களாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் ஏற்கிறேன்...
      அதேநேரம் கலைஞரின் பெயரின் என்பதற்காக உதயநிதியை ஆதரிக்கலாமா ?

      நீக்கு
    2. நான் எங்காவது ஆதரியுங்கள் என்று சொல்லி இருக்கின்றேனா அல்லது எனக்கு வாக்குரிமை இருந்து வோட்டுகள் போட்டுத்தான் இருக்கின்றேனா? காமராஜை தோற்கடித்ததும் தமிழர்கள்தான் ஸ்டாலினை முதலமைச்சர்கள் ஆக்கியதும் தமிழர்கள்தான் உதய நீதிக்கு வோட்டு போட்டு ஜெயிக்க வைத்ததும் தமிழகத்தில் வோட்டு உரிமை உள்ள தமிழர்கள்தானே

      நீக்கு
    3. தமிழரே அரசியலில் தாங்கள் யார் பக்கம், நான் யார் பக்கம் என்பது நம் இருவருக்கும் தெரியும்.

      இங்கு தெளியாத மக்கள்தான் அதிகம் வாழ்கின்றனர்.

      இனி அரசு இவர்களை இப்படித்தான் கொண்டு போகும்....

      நீக்கு
  14. நல்லவரான காமராஜரை தோற்கடித்தது சரியா என்று கேட்கும் நீங்கள் மோசமான மோடிஜியை தோற்கடிக்காமல் ஜெயிக்க வைத்தது சரியா என்று கேட்கவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி கேட்பேன் நான் மோடிஜியின் ரசிகன் என்பதை மறந்து விட்டீர்களா ?

      நீக்கு

  15. வ உ சிதமபரனார் நாட்டுக்காக பாடுபட்டார் ஆனால் அவர் பேரன் என்ன செய்தார்? என்று சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வ.உ.சி.யின் பெயரின் நாட்டுக்காக எதையும் சாதிக்கவில்லை.
      திரு.கக்கனின் மகன் 34 வருடங்களாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நலம் பெற்றும் அழைத்துப் போவதற்கு ஆளில்லாமல் வாழ்கிறார்.
      இந்த அரசு கவனிக்கலாமே...

      நீக்கு
  16. கற்பு என்பது கண்ணகியோட ஒழிந்து போனது உங்களுக்கு தெரியாதா? காலம் மாறி போச்சு கில்லர்ஜி நீங்க பொலிமர் நீயூஸ் பார்ப்பதில்லை போல இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுது கற்பே இல்லை தமிழரே திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் விடுதியில் தங்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு.

      நீக்கு
  17. ஒருவர் கேட்டு அதன் பின் கொடுப்பது தர்மம் அல்ல கேட்காமல் உதவி செய்வதற்கு பேர்தான் தர்மம் என்பதை உணர்ந்ததால்தால்தான் கடவுளுக்கு காணிக்கி செலுத்துகிறார்கள் பிச்சைகாரர்கலுக்கு செலுத்துவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் கேட்காமல் அவருக்கு செய்வது தர்மமா ? இப்படியும் நினைக்கலாமோ....

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி தமிழரே...

      நீக்கு
  18. கில்லர்ஜி சிதறு தேங்காயைப் பொறுக்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். பொறுக்காதே என்று யாரும் சொல்வதில்லை. உடைப்பவர்கள் பொறுக்க மாட்டாங்க. அது வேண்டுதலில் உடைப்பதால் என்று நினைக்கிறேன்.

    கோயில் விஷயங்களைப் பற்றிய கேள்விகளில்....முன்பு அது கோயிலை மேம்படுத்து பராமரிக்க ஊர் மக்கள் பணம் திரட்டிச் செய்திருப்பதாக இருக்கும். ஆனால் இப்போது அது வியாபாரமாகிவிட்டது அதற்குக் காரணம் மக்களே அல்லாமல் இறைவன் அல்ல. இறைவன் யாரிடமும் காசுகொடுத்தால்தான் நீ என்னை அடைவாய் இங்கு உனக்கு இடம் என்று சொல்வதில்லை. அப்படி எந்த மத நூல்களிலும் நான் அறிந்ததில்லை. இறை நம்பிக்கை வழிபாடுகள் எல்லாம் அவரவர் தனிப்பட்டவை. தனிப்பட்ட நம்பிக்கைகள்.

    கில்லர்ஜி இப்ப எல்லாம் யார் ஏழை நிஜமாகவே யாசிக்கிறாங்க என்பது தெரிவதில்லை. நிச்சயமாகவே கஷ்டப்படுபவர்களுக்குக் கண்டிப்பாக உதவலாம். ஆனால் காசாகக் கொடுக்கப் பயமா இருக்கு டாஸ்மாக் போய்டுவாங்களே ஆண் என்றால்.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இந்த நிலைக்கு காரணம் மக்கள்தான் இறைவனை காட்சிப்பொருளாக்கி காங்கிரஸ் கொண்டு இருக்கிறார்கள் இது மக்களுக்கு புரிவதில்லை.

      ஏழைக்கு உதவுவதை நாமென்ன இறைத்தொண்டாக நினைக்கக்கூடாது ?

      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  19. காமராஜரை மக்கள் தோற்கடித்தது....அது ரொம்ப வருத்தமான விஷயம். இன்று வரை நல்ல ஆட்சி அமையவில்லை பாருங்க. மக்கள் முட்டாள்கள். கக்கனை எல்லாம் நினைவு வைச்சிருக்காங்களா? 'வாதிகள்?!!

    காணொளி பார்த்தேன்...கண்றாவி!! என்னத்த சொல்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
  20. நமக்கு யார் துன்பம் கொடுத்தாலும் அவர்களிடமும் நல்ல மனதுடன், அவர்களுக்காக நல்லது வேண்டுவதே சிறப்பு. அல்லது கெட்டதும் வேண்டாம் நல்லதும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பதும் நலம்.

    அப்படி யாரேனும் வேண்டுபவர்கள் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு நல்லது நடக்காது. எனக்குப் புரிகிறது நீங்கள் எதை வைத்து இதைக்கேட்டிருக்கீங்க என்று.

    தன் வினை தன்னைச் சுடும்! கண்டிப்பாக.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் துரோகிகளிடம் ஒதுங்கியே செல்கிறேன்.

      இறுதியில் எங்கும் துரோகிகள்தான் நீக்கமற நிறைந்து வாழ்கின்றனர்.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சிந்தனைகளை தூண்டுவிக்கும் விதமாக அமைந்த கேள்விகள். அதற்கு பதிலாகவும் அமைந்த கேள்விகள் என பதிவை காரசாரமாக தொகுத்து தந்துள்ளீர்கள். ஒவ்வொன்றும் நல்ல கேள்விகள். மக்கள் இனியேனும் யோசித்து செயல்படுவார்களா? ஆனால், மக்கள் திருந்தாத வரை அரசிலும் குழப்பங்கள்தாம் மேற்படும்.

    தம் சுயநலத்திற்காக தேங்காய்களை சிதறு காய்களாக தருகிறேன் என இறைவனிடம் வேண்டிக் கொண்டபடி, அளித்து விட்டு, பின் இறைவனிடமிருந்தே அவனுக்கென அளிக்கப்படும் சிதறு தேங்காய்களை தாமே முதலில் பொறுக்குவபர்கள எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

    காணொளி கண்டேன். பதவியின் மோகம் மிகக் க(கொ)டுமையானது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  22. சிந்திக்கத் தூண்டும் கேள்விகள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு