இடம் ஊட்டி ஊத்துவா
ஹோட்டல் அறை எண்
1032 உள்ளே
இயக்குனர் சாம்பசிவம், இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி, பாடலாசிரியர் Chivas Regal சிவசம்போ, பாடல்
எழுதுவதற்காக காத்திருக்கின்றனர்.
கவிஞரே
சுச்சுவேஷன் இதுதான் நாயகன் கள்ள உறவு காதலியால நாயகியை அதாவது மனைவியை விவாகரத்து
செய்துடுறான், இதை விரும்பாத நாயகி வயிற்றில் குழந்தையோடு தனது சோகத்தை
பாடுகிறாள். பாடல்ல சோகத்தை பிழிஞ்சு எடுத்துருங்க...
ம்... சரி Chivas Regal ஆர்டர் பண்ணுங்க...
இதோ
வந்துக்கிட்டே இருக்கு...
மாஸ்டரே சரி... இதுக்கு என்ன ட்யூன் போடப் போறீங்க ?
ஸ்ரீராம்ஜியிடம்
கேட்டு இருக்கிறேன் இப்ப கருத்துரையில் வந்து சொல்லுவாரு... நீங்க ஆரம்பிங்க...
ரைட்டு எழுதிடுவோம்...
என் சோகம் என்னைத் தாக்கும்
மண் பாகம் தன்னைப் போக்கும்
நான் சொல்லும் சேதி கொல்லும்
வான் தந்த மழையும் வெல்லும்
நீ போட்ட முடிச்சு இரவோடுதான்
நான் கேட்ட பிடிப்பு உறவோடுதான்
உறவு தந்த முடிவு தெருவோடுதான்
நீர் தந்த உறவு கருவோடுதான்
நீ தந்த மகனை வளர்ப்பேன்
உனை நான் தினமே நினைப்பேன்
ஓர் நாளில் நீயும் வருவாய்
எனக்காக உனையே தருவாய்
என் கண்ணீரில் உப்பும் உண்டு
உன் செந்நீரில் தப்பும் கண்டு
போய் வா நீயும் என்னவனே
தாயாக சேர்வேன் கண்ணாலனே
மறுபடியும் சேர்வோம் என்றே
மறுவாழ்வு வாழ்வோம் நன்றே
மனம் போல் நிகழும் அன்றே
மனதினில் நினைப்பாய் இன்றே
என் சோகம் என்னைத் தாக்கும்
மண் பாகம் தன்னைப் போக்கும்
நான் சொல்லும் சேதி கொல்லும்
வான் தந்த மழையும் வெல்லும்
கில்லர்ஜி தேவகோட்டை
ஸ்ரீராம்ஜி-
ஏன் ஊரு மதுர பக்கம் யேன் பாட்டு மனசில் நிற்கும் பாட்டு போல இருக்கு
ம்... சரி Chivas Regal ஆர்டர் பண்ணுங்க...
மாஸ்டரே சரி... இதுக்கு என்ன ட்யூன் போடப் போறீங்க ?
ரைட்டு எழுதிடுவோம்...
மண் பாகம் தன்னைப் போக்கும்
நான் சொல்லும் சேதி கொல்லும்
வான் தந்த மழையும் வெல்லும்
நான் கேட்ட பிடிப்பு உறவோடுதான்
உறவு தந்த முடிவு தெருவோடுதான்
நீர் தந்த உறவு கருவோடுதான்
உனை நான் தினமே நினைப்பேன்
ஓர் நாளில் நீயும் வருவாய்
எனக்காக உனையே தருவாய்
உன் செந்நீரில் தப்பும் கண்டு
போய் வா நீயும் என்னவனே
தாயாக சேர்வேன் கண்ணாலனே
மறுவாழ்வு வாழ்வோம் நன்றே
மனம் போல் நிகழும் அன்றே
மனதினில் நினைப்பாய் இன்றே
மண் பாகம் தன்னைப் போக்கும்
நான் சொல்லும் சேதி கொல்லும்
வான் தந்த மழையும் வெல்லும்
ஏன் ஊரு மதுர பக்கம் யேன் பாட்டு மனசில் நிற்கும் பாட்டு போல இருக்கு
என் ஊரு மதுர பக்கம் - பாட்டு கேட்டதே இல்லை கில்லர்ஜி இப்பதான் கேட்கிறேன். அந்த மெட்டுல உல்டா பண்ணியிருக்கீங்க.
பதிலளிநீக்குஎன்னாது மனைவிய விட்டுப் போறவன், மறுபடியும் சேர்வோம் , ஒரு நாள் நீயும் வருவாய்....மறுபடியும் சேர்வோம் நன்றே.....ஹூம் நம்ம பொண்ணுங்க திருந்தவே மாட்டாங்க. கல்லானாலும் கணவன்!!! ஹாஹாஹாஹாஹா...கில்லர்ஜி உல்டா பண்ணுறப்பவாவது மாத்தக் கூடாதா....அவ யாரையும் எதிர்பார்க்காம தன் வாழ்க்கைய தன் கால்ல நின்னு ஜெயிச்சுக் காட்டறான்னு!!
gகீதா
வருக பாடலை கேட்டு ரசித்தமைக்கு நன்றி
நீக்குஇப்பத்தான் தவறு செய்யும் கணவனை கண்டாலே கண்டந்துண்டமாக வெட்டுற புதுமைப்பெண்கள் பெருகி விட்டனரே....
வரிகள் நன்றாகவே பொருந்துகிறது ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குநல்லாவே உல்டா பண்ணியிருக்கீங்க... இன்னும் கொஞ்சநாளில் 'கவிப்பேரரசர்' கில்லர்ஜி என்று டைட்டில் போட ஆரம்பிச்சுடுவீங்களோ?
பதிலளிநீக்குவருக தமிழரே அம்பூட்டு பாக்கிய எல்லாம் வராது பயப்படதீர்கள்.
நீக்குஆமாம் ஜி அந்தப் பாட்டு டியூன் கேட்டிருக்கேன். யேசுதாஸ் பாட்டு என்று நினைவு.
பதிலளிநீக்குஆமாம் ஜி கே.ஜே.யேசுதாஸ் சேட்டன்தான்.
நீக்குபாட்டு அந்தக் காலத்துப் பெண்மணியின் மனோபாவத்தில் இருக்கிறது. இந்தக் காலத்து வீரப்பெண்களின் பாவம் தெரியவில்லையே..
பதிலளிநீக்குபாரதிராஜாவின் புதுமைப்பெண் படத்து பெண்மணியோ...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தாங்கள் இட்டு கட்டிய பாடல் நன்றாக உள்ளது. மூல பாடல் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன். இரண்டுக்கும் வரிகளோடு சேர்ந்த ராகப்பொருத்தம் நன்றாகவே அமைகிறது. சகோதரர் நெல்லைத் தமிழர் சொல்வது போல், விரைவில் கவிப்பேரரசர் ஆகி விட வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்தை பதிவு செய்து வாழ்த்தியமைக்கும் நன்றி.
நீக்குபாடல் அ௫மையாக உள்ளது. நீங்கள் உண்மையில் கவிஞரா? அல்லது கட்டுரையாளரா? கதாசிரியரா? அல்லது எழுத்தாளரா? சமூக செயற்பாட்டாளரா? அல்லது அரசியல் விமர்ச௧ரா?....
பதிலளிநீக்குஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கின்றீர்களே... யார் நீங்கள்?
எனக்கு ஒரு எளவும் புரியமாட்டேங்குது... அப்படி யே கொஞ்சம் புரிய வச்சுண்டு போங்கோண்ணா !!!
வருக சகோ
நீக்குதாங்கள் ஒரு சில பதிவுகளில் வந்து கருத்தை பதிவு செய்தமையை அறிந்தவன்.
நான் ஒரு பதிவுக்கு பிறகு வேறு விடயத்தை சொல்ல நினைப்பவன்.
மற்றபடி நான் பிறந்த பாவத்தின் காரணத்தை தேடி போகின்றவன்.
தாங்கள் தொடர்ந்து வந்தால் மகிழ்ச்சி.
நட்புடன்
கில்லர்ஜி
அவளின் ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் வேதனையைச் சிறப்பாகக் கவிதை ஆக்கியிருக்கிறீர்கள் கில்லர்ஜி.
பதிலளிநீக்குவருக நண்பரே கவிதையை உள்வாங்கி படித்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஅந்தப் பெண்ணின் உணர்வுகள் வரிகளில் வந்து விழுந்திருக்கின்றன. அருமை
பதிலளிநீக்குவருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குநீங்கள் பகிர்ந்து இருக்கும் பாட்டு நான் கேட்டதே இல்லை.
பதிலளிநீக்குஅந்த பாடலுக்கு வந்த முதல் பின்னூட்டம்
மனக்கவலை உள்ள மனிதருக்கு இந்த பாடல் ஒரு மருந்தாகும்
என்று சொல்கிறார்.
உங்கள் வரிகளும் நன்றாக பொருத்தமாக இருக்கிறது.
பெண்ணின் சோகம் மழை நீரில் கரைந்து போய் விடும்.
கேட்பார் இல்லாமல்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்கு/// இப்பத்தான் தவறு செய்யும் கணவனை கண்டாலே கண்டந்துண்டமா வெட்டுற புதுமைப் பெண்கள் பெருகி விட்டனரே.. ///
பதிலளிநீக்குஅந்தக் கருத்து எல்லாத்தையும் சொதப்புற மாதிரி இருக்கு..
இப்படி இருக்கணும்..
இப்பத் தான் தவறு செய்யும் கணவனை கள்ளக் காதலனோட சேர்ந்து கொண்டு கண்டந் துண்டமாக வெட்டுற புதுமைப் பெண்கள் பெருகி விட்டனரே..
இப்படித்தான் இருக்கணும்!..
வாங்க ஜி ஆம் இதுதான் சரியான வார்த்தை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
வழக்கம்போல அருமையான ரசனையைக் கண்டேன்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி
நீக்குஇதெல்லாம் கேட்டதே இல்லை. ரொம்பப் புதுசா இருக்கே!
பதிலளிநீக்குவாங்க சகோ நலமா ?
நீக்குபுதுசா இருக்குதா...
ஹா.. ஹா.. பழைய பாடல்தான்
"என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிற்கும்" என்னுடைய சிறுவயதில் நான் மிகவும் ரசித்த பாடல்....
பதிலளிநீக்கு// உறவு தந்த முடிவு "தெருவோடு"தான்//
நல்ல வேளை "திருவோடு"தான் என்று சொல்லாமல் விட்டீர்கள்...
வருக நண்பரே உண்மையிலேயே "திருவோடுதான்" ஏன்பதே சரி. காரணம் உறவுகள் இப்படித்தான் இருக்கிறது.
நீக்குஉங்கள் பாடல் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி சகோ
நீக்கு