தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2023

ரேணிகுண்டா, ரேஷன்கடை ரேணுகா

ந்திர மாநிலம் ரேணிகுண்டா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கு ரேஷன்கடையில் பணியாற்றும் ரேணுகா நல்ல மனதுக்காரர். பொது மக்களிடம் அதிகம் கெடுபிடி செய்ய மாட்டார். இல்லாதவர்கள் யார் வந்து கேட்டாலும் அரிசி கொடுத்து அனுப்புவார்.
 
பிறகு பற்றாக்குறை பொருட்களை ஏதாவது கோல்மால் செய்து சரி செய்து விடுவார். யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்ல மனசு வராது, வீட்டிலிருக்கும் பொழுது யாராவது தர்மம் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வீட்டிலிருப்பதை கொடுத்து அனுப்புவார். ஒருமுறை பணம் இல்லாததால் கையிலிருந்த ஏடிஎம் கார்டை கொடுக்க, வாங்கியவர் பின் நம்பரையும் கேட்டு எழுதிப் போனார். அந்த வங்கியில் ஆறு வருடத்துக்கு முன்பே கணக்கு ரத்தாகி விட்டது என்பது வேறு விசயம்.
 
இப்படித்தான் ஒருநாள் ஒரு வயதான அம்மாள் எங்க வீட்டில் டி.வி. இல்லை நாடகங்கள் பார்க்க முடியாமல் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லவும். வீட்டிலிருந்த டி.வி.யை எடுத்துட்டு போங்கள் என்று சொல்லி விட்டார். மற்றொரு நாள் ஒரு பெண்மணி எனக்கு உறவுக்காரர்கள் திருமணத்துக்கு போட்டு போக நெக்லஸ் இல்லை என்று சொல்லவும். தனது நெக்லஸை கழட்டி கொடுத்து விட்டார்.
 
இப்படியே போவதால் அவருக்கும், கணவருக்கும் சண்டைகள் வந்தது. நீ எதற்கு எல்லோருக்கும் தர்மம் செய்துக்கிட்டே இருக்கே ? என்று கேட்கும் பொழுது டி.வி.யை வாங்கிட்டு போன அம்மாள் வந்து நீ கொடுத்த டி.வி. ஓடவே மாட்டுதே... என்று கேட்கவும். அதுதான் ரிப்பேராகி மூன்று மாதமாக சும்மா கிடக்குதே... என்று சொல்ல அந்த அம்மாள் திட்டிக் கொண்டே போனாள்.
 
பேத்திக்கு வாங்கிய, நெக்லஸை எதற்கு கொடுத்தே ? என்று கேட்டதுக்கு அது கவரிங்தானே கழுத்துல அரித்துக் கொண்டே இருந்துச்சு அதான் கொடுத்துட்டேன் என்ற ரேணுகாதேவி அம்மாளை வியப்பாக பார்த்த, வீட்டுக்காரர் கேட்டார், உனக்கு எதற்கு இந்த மொட்டப்பகுசி ?
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
கொடுமை, கொடுமைனு கொடுங்கலூர் போனா, அங்கே ரெண்டு கொடுமை கொழுக்கட்டையோட ஆடுச்சாம்.

Share this post with your FRIENDS…

24 கருத்துகள்:

  1. மொட்டப்பகுசி என்றால் என்ன ஜி?  வீண் ஜம்பம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அதுவேதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. நல்ல பெண்ணாக இருக்கிறார் ரேணுகா என்று படித்து கொண்டு வந்தேன், நிறைவில் இப்படி சொல்லி விட்டீர்களே!
    மொட்டப்பகுசி அர்த்தம் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையை சொன்னேன், தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. அடுத்த வாரம் ரேணிகுண்டா போறேன். உங்க இந்தப் பதிவை கொடையாளினி ரேணுகாவிடம் காட்டலாமா கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சென்று வாருங்கள், தங்களது விருப்பம் போலவே செய்யலாம்.

      நீக்கு
  4. வெகு நாட்களுக்குப் பிறகு மனம் மகிழ்ந்து சிரித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சிரித்து மகிழ்ந்ததில் மகிழ்ச்சி

      நீக்கு
  5. /// கொடுமை, கொடுமைனு கொடுங்கலூர் போனா, அங்கே ரெண்டு கொடுமை கொழுக்கட்டையோட ஆடுச்சாம்... ///

    அதானே..

    கொழுக்கட்டைய தின்னுபுட்டு ஆடாம கொழுக்கட்டையோட ஆடுச்சாம்..

    எவ்ளோ பெரிய கொடுமை..

    பதிலளிநீக்கு
  6. வீண் ஜம்பம் பலவிதம். அப்படிப்பட்டவங்க ரேணிகுண்டால மட்டும்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      திருநெல்வேலி
      சடகோபன்நகர்,
      இலக்கம் 37/5 கருங்காலி
      வீதியிலும் இருக்கலாம்.

      நீக்கு
  7. மொட்டப்பகுசி என்றால் என்ன அர்த்தம் கில்லர்ஜி?

    தனக்கு உதவாததைக் கொடுக்கிறார் என்ற அர்த்தமோ? ரேஷன் கடைல கூட இல்லைன்னு சொல்லாம கொடுத்துடுவார் கோல்மால் இதெல்லாம் வாசித்ததுமே....ஆஹா ரேணுகா பத்தி தெரிஞ்சுருச்சு.

    இதுல ஒரு கூட்டமே உண்டு. தனக்கு வேண்டாம் என்று போனவற்றை அல்லது கொஞ்சம் ரிப்பேரானவற்றைக் கொடுத்து ஏதோ நல்ல மனசோடு கொடுப்பது போல நாலு வார்த்தை பேசிக் கொடுப்பாங்க பாருங்க...."உனக்கு இது ரொம்பப் பிடிக்குமே அதான்.." "உனக்கு இதுல ஆர்வம் ரொம்ப உண்டே உனக்கு யூஸ் ஆகுமேன்னு, பயன்படுத்திய பொருட்களை விற்கறதுல போடாம தூரப் போடாம உனக்கு எடுத்து வைச்சேன்..." "இதக் கொஞ்சம் ரிப்பேர் பண்ணிட்டா போதும்....சின்ன பிரச்சனைதான்....நீ யூஸ் பண்ணிக்க" என்று கொடுக்கும் கூட்டம் ஒன்று உண்டு! எனக்கு அப்படித் தோன்றியது. இப்படிக் கொடுக்கறத கூட தான தர்மம், நல்ல மனசுன்னு வேற சொல்லிக்குவாங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மொட்டப்பகுசி என்றால் வீண்ஜம்பம்.

      ஆம் இப்படி நபர்களும் நமது அன்றாட வாழ்வில் பலரும் பார்த்து இருப்போம்.

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பதிவை படித்து முடிக்கையில் சிரிப்பு வந்தது. தன்னையறியாமல் சிரித்து விட்டேன். இப்படியும் சிலர்... ஆனால், எதற்கும் உதவாததை தர்மமாக கொடுப்பதும் ஒரு தர்மந்தான். அதை விற்று கொஞ்சமேனும் காசு பார்த்து அதையும் தானே உபயோகபடுத்திக் கொள்ளலாம் என நினைக்காது அப்படியே தூக்கித் தருவதும் ஒரு வகை தர்மந்தானே..!! அதன் மூலம்தான் வீட்டில் அடிக்கடி கணவன், மனைவிக்குள் சண்டை வருகிறதோ?

    பதிவுக்கு படம் பொருத்தமாக எப்படித்தான் தங்களுக்கு கிடைக்கிறதோ? ரேணுகாவை முதலில் தலைசிறந்த கொடைவள்ளலாக அறிமுகப்படுத்தி, மிகுதியை நகைச்சுவை உணர்வுடன் எழுதியுள்ளீர்கள். நல்லதொரு எழுத்தாற்றலுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      ஆமாம் இந்த படம் எடுக்க ரேணிகுண்டாவில் ரேஷன்கடைக்கு போய் வந்தேன்.

      நீக்கு
    2. அப்படியா? உண்மை யிலேயே வியப்புத்தான்...! பிரபல எழுத்தாளர்கள் அந்தந்த ஊர்களில் பேசும் மரபு மொழிக்காக அங்கேயே சிறிது காலம் தங்கி அந்த ஊரின் பேச்சுக் கலைகளைப் பயின்று தங்கள் கதைகளை எழுதுவது போல், நீங்களும் பதிவுக்காக அதன், உண்மையான புகைப்படத்திற்காக, ரேணிகுண்டா வரை சென்று அங்கிருக்கும் ரேஷன் கடையை புகைப்படமெடுத்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. உங்கள் எழுத்து ஆர்வத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள் மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கு மீண்டும் நன்றி சகோ

      நீக்கு
  9. ரேஷன் கடை ரேணுகா மளிகைக்கடை மாடசாமியின் மனைவி தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இவங்களை உங்களுக்கு தெரியுமா ?

      நீக்கு