தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 07, 2023

சொக்கிகுளம், சொர்க்கரதம் சொக்கன்

ன்றைய பொழுது சொக்கன் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தான் வழியில் ஒரு பதாகையை கண்டவுடன், படித்தான் எங்களிடம் ப்ரீசர் பாக்ஸ் வாடகைக்கு எடுத்தால் இறுதி ஊர்வலம் செல்வதற்கு சொர்க்கரதம் இலவசம் அப்படினு போட்டு இருந்தது. அதாவது பொணம் வைக்கிற பெட்டிக்கு பொணம் ஏத்துற வண்டி இலவசமாம். இப்படி மக்களுக்கு ஆஃபர் தர்றாஙக...
 
சரி நமக்கும் இப்பவே ஆர்டர் செய்து வைப்போமே, நாம் இறந்த பிறகு நம்மை அடக்கம் செய்வதற்கு உண்மையான உறவுகள் இல்லையே... அப்படியே செய்தாலும் கமிஷன் வைத்து அடிச்சுடுவாங்கே இப்படித்தான் எல்லாப்பயலும் இருக்கான். ஆகவே அதிலுள்ள எண்ணுக்கு அழைத்தான். அலைபேசியை எடுத்தவரிடம்....
 
உங்களோட விளம்பரம் பார்த்தேன் ப்ரீஷர் வாடகை எவ்வளவு ?
ப்ரீஷர் வாடகை ஒரு நாளைக்கு 2000 ரூபாய் ஸார் சொர்க்கரதம் இலவசம், ஆனால் டிரைவர் படியும், வண்டிக்கு டீசலும் நீங்கதான் போடணும் மற்றபடி ஒரு செலவும் இல்லை.
 
டிரைவர் படி எவ்வளவு ?
அறுநூறு ரூபாய் ஸார்
 
டீசலுக்கு எவ்வளவு ஆகும் ?
நமக்கு வீடு எங்கே இருக்கு, எந்த சுடுகாட்டுக்கு போகணும் ?
 
வீடு முனிச்சாலையிலே... சுடுகாடு கொள்ளிமலைக்கு வடக்கே...
அப்படினா டீசல் எழுநூறு ரூபாய்க்கு போடணும் வண்டியை கழுவுறதுக்கு மட்டும் டிரைவருக்கு ஏதாவது கொடுங்க ஸார்.
 
அப்படினா... மொத்தம் மூவாயிரத்து முந்நூறு வருதே
சரி எப்ப ஸார் வேணும் ப்ரீஷர் அனுப்பி விடவா ?
 
இல்லை இறந்தவுடன் போன் செய்யிறேன்.
? ? ?
 
உடன் அலைபேசியை ஸ்விட்சை ஆஃப் செய்து விட்டான். என்ன இவங்கே இலவசம்னு சொல்லிப்புட்டு இவ்வளவு அநியாயமாக பணம் கேட்குறாங்கே... யோசனையோடு வரும்போது அந்த இடத்திலேயே ப்ரீஷர் பெட்டி வெளியே இருந்தது உள்ளே போய்.... ப்ரீஷர் வாடகை எவ்வளவுங்க ? என்று கேட்டான்.
 
ஆயிரத்து ஐநூறு ஸார், வண்டி வேண்டும் என்றால் உள்ளூர் .ஆயிரத்து ஐநாறு ரூபாய் மொத்தம் மூவாயிரம் ரூபாய் டிரைவர் படி, டிப்ஸ் எதுவும் கிடையாது ஸார்.
 
சரி நான் இப்போ கேட்டுட்டு கூப்புடுறேன் விஸிட்டிங்க் கார்டை வாங்கி கொண்டு வெளியே வந்தான். அடப்பாவி இலவசம் சொன்னவன் மூவாயிரத்து முந்நூறு கேட்கிறான் சாதாரண வாடகையே மூவாயிரம்தானா ? எப்படி எல்லாம் மக்களை மடையனாக்குறாங்கே... அரசியல்வாதிகளை மிஞ்சிடுவாங்கே போலயே... சரி பின்னாலே உதவும் என்ற நினைப்பில் பேண்ட் பின்னால் பாக்கெட்டில் சொருகி விட்டு நடந்தான் முனிச்சாலை வீட்டை நோக்கி...
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
வீட்டு ஏரியாவே சரியில்லையே....?
 
சாம்பசிவம்-
இலவசம்னா கோமயத்தைக்கூட வாங்கி ப்ரிட்ஜில் ஸ்டாக் வைக்கிற பரம்பரையாச்சே நாம...

Share this post with your FRIENDS…

25 கருத்துகள்:

 1. மக்களை ஏமாற்றுவதற்கு அரசியல்வாதிகள் முன்னோடிகள்.  வியாபாரிகள் சிஷ்யர்கள்.

  பதிலளிநீக்கு
 2. பிணத்தையும் வைத்து பணம் பண்ணும் கூட்டம் ..... வேதனை தான் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 3. ஹாஹாஹாஹா.....முனிசாமி இத்தனை விவரம் கேட்டு வைச்சுக்கிறாரு....ஆனா பாருங்க கண்ணை மூடின பிறகு இந்த ஃப்ரீசர் சாதனம் எல்லாம் எப்படிங்க யாருங்க புக் செய்வாங்க!!!! பணமும் இவர் அக்கவுன்ட்லா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனிசாமி அல்ல முனிச்சாலை ரோடு சொக்கன்.

   நீக்கு
  2. ஆமாம், சொக்கன்.....முனிச்சாலை ரோடு அதுல அந்த முனி நாலே முனி சாமின்னு மனசு டக்குனு வந்திருச்சு!!! இத்தனைக்கும் பதிவை வாசித்து சிரித்துவிட்டேன்!!!

   கீதா

   நீக்கு
 4. There is no free lunch. ஒரு புடவை வாங்கினால் மூணு புடவை, ஆறு புடவை இலவசம் என்பதும் இது மாதிரித்தான்.

  அது சரி.. இவ்வளவு ஆராய்ச்சி பண்ணறாரே... இவர் போனப்பறம் யாரு இதெல்லாம் ஆர்டர் செய்வாங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   சொக்கனுக்கு இந்த யோசனை வரவில்லையே...

   நீக்கு
 5. ஒரு படம் ஒரு பதிவை எழுத வைத்து விட்டது.
  சொக்கனின் முன் ஏற்பாடு நல்ல நகைச்சுவை.

  பதிலளிநீக்கு
 6. "இல்லை, இறந்தவுடன் செய்யுறேன்” என்ற ரசனையான பதிலுடன் முடித்திருந்தாலும் பதிவு வெகு சுவாரசியம் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 7. திருத்தம்: தொடரில் ‘போன்’ சேர்த்திடுக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. எல்லாம் வியாபாரம் நோக்குடன் தான். இடையில் விளம்பரத்தின் ஆதிக்கம். சொக்கன் போன்றவர்களுக்கு மரணத்தைப் பற்றி நினைவூட்டும் அளவுக்கு இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 9. இலவச பேராசைக்கு அடிமையாகும் நிலை இப்படியே வளர்ந்து கொண்டிருந்தால் இரண்டு அறை வாங்கினால் ஒரு உதை இலவசம் என்று விள்amம்பரம் செய்தால் கூட அங்கும் க்யூ வில் ஆட்கள் நிற்கும் நிலை வரும் போல் தோன்றுகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 10. சிந்திக்கத் தெரியாத ஒரு கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கின்றது..

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு