தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 20, 2023

இலவச இணையம்

 

ட்பூக்களே... குறுகிய காலத்தில் அரசியல்வாதிகள் பெரும் செல்வந்தர் ஆகின்றார்கள், திரைப்படக் கூத்தாடன்கள் செல்வந்தர் ஆகின்றார்கள், மட்டைப்பந்து அடிப்பவர்கள் செல்வந்தர் ஆகின்றார்கள். இதனுள் ஏதும் தவறான சூட்சுமம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் நரம்பில்லாத நாக்கு சட்டென இவர்கள் மீது குற்றம் சுமத்தி விடுகின்றனர்.
 
ஆனால் பெருங்கொண்ட தொழில் அதிபர்கள் செல்வந்தர் ஆனால் அதில் உழைப்பு இருக்கிறது ஆகவே இது நேர்மையின் வழி என்று சொல்கின்றனர். பெரும்பாலானவர்கள் தொழிலாளர்களின் குருதியை உறிஞ்சுகிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மையே... நாம் அறிந்த வரையில் தொழில் அதிபர் திரு.ரத்தன் டாடா அவர்கள் தொழிலாளர்களின் பிள்ளைகளை படிக்க வைப்பது, மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்வது என்று எல்லாமே நிறுவனத்தில் உள்ள சட்டப்படி பார்த்துக் கொள்வதாக அறிகிறோம்.
 
அதேபோல திரு.பிர்லா அவர்களையும் அறிகிறோம். அதேநேரம் அதானி போன்ற தொழில் அதிபர்கள் வங்கிகளில் கடன் வாங்கி கொண்டு சாதாரணமாக நாடு விட்டு நாடு போய் வாழ்வதையும் அறிகிறோம். பிறகு இந்த செலவுகளின் நஷ்டம் பாமர மக்களின் தலையில் வரிகளாகவும், ஜி.எஸ்.டி. என்ற பெயரிலும் விழுகிறது.
 
திரு.அம்பானி அவர்களைப்பற்றி சற்றே அலசுவோம். மிகப்பெரும் செல்வந்தர் மாற்றுக்கருத்து இல்லை. மும்பையிலுள்ள இவரது அண்டிலியா வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டும் சுமார் எழுநூறு நபர்களாம். இருக்கட்டும் வாழ்க வளமுடன். இவர் ஜியோ ஸிம் கார்டு இறக்கினார். தொடக்கத்தில் இலவசமாக இணையம் வழங்கினார். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக வேண்டாம் என்று சொல்லாதோர் யாருமில்லை என்று நினைக்க வேண்டாம் நான் வேண்டாம் என்று கடைசி வரையில் இருந்தேன்.
 
திடீரென்று இலவசத்தை நிறுத்தினார் மாதம் நூறு ரூபாய் என்று அறிவித்தார், சிரங்கு சொறிந்த கையும், மீசை முறுக்கிய விரலும் சும்மா இருக்குமா ? வேறு வழியின்றி வாங்கத் தொடங்கினோம், பிறகு இருநூறு, முன்நூறு, இன்று எண்ணூறு ரூபாயில் வந்து நிற்கிறது. ஆனால் நமது கை நிற்பதில்லை இனி தொடர்ந்து நாளை இரண்டாயிரம் ரூபாயாகும் அன்றும் உணவருந்துவதை குறைத்துக் கொண்டு இணையம் வாங்கி மகிழ்வோம்.
 
தொலைக்காட்சிப்பெட்டி வந்தது உறவுகளிடம் பேசுவது குறைந்தது, இன்று அலைபேசியில் நள்ளிரவில் இணையத்தோடு இணைந்து கவிழ்ந்து கிடக்கின்றோம். வந்து நிற்கும் உறவினரை வாங்க என்று சொல்லக்கூட மறந்து விடுகிறோம். இன்று இளைய சமூகத்தினர் இரவு முழுவதும் இணையத்தில்தான் வாழ்கிறோம், உறக்கம் குறைந்து விட்டது. விழிகளில் பல குறைபாடுகள் எங்கெங்கும் கண் மருத்துவமனைகள் பெருகி விட்டது. அறுவை சிகிச்சைகள், சிறுவர்கள் முதலே கண்ணாடி அணிதல், குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கே அலைபேசியின் யூட்டியூபின் உதவி தேவை என்ற நிலையில் வாழ்கிறோம்.
 
இன்று இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைத்தவர் திரு.அம்பானி அவர்கள்தான். எல்லாம் பணம் சம்பாதிக்கத்தானே... ஒரு சில குடும்பங்களின் ராஜபோக வாழ்க்கைக்கு நாட்டு மக்களின் வாழ்வே மாறிவிட்டது. இதை தொடக்கத்திலேயே இலவச இணையம் கொடுக்கும்போது அரசாள்பவர்கள் தடுத்து இருந்தால் ? இந்த இழிநிலை வந்து இருக்குமா ?
 
அரசு எப்படி செய்யும் ? அவர்களே தொலைக்காட்சி பெட்டி இலவசமாக கொடுத்து அதனுள்ளும் கமிஷன் அடித்து நம்மை அடிமைக் குழிகளில் தள்ளி விட்டார்கள். சிந்திக்காத மக்கள் வாழும் வரையில் இந்த பாழும் கிணற்றில்தான் கிடக்க வேண்டும்.
 
கில்லர்ஜி அபுதாபி
 

சிவாதாமஸ்அலி-
ப்ரீயாக கிடைத்தால் நாம் பினாயிலைக்கூட குடிப்போமே...
 
Chivas Regal சிவசம்போ-
ப்ரீயா குவாட்டர் கிடைக்குமா ?
 
காணொளி

Share this post with your FRIENDS…

28 கருத்துகள்:

  1. அய்யா பார்த்து அரசியல் களத்தில் இறங்குங்கள். அதானி, அம்பானி இருவரையும் விட்டு விலகியே நில்லுங்கள். danger. தொட்டால் ஷாக் அடிக்கும்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது முன்யோசனைக்கு நன்றி.

      நீக்கு
  2. என்னிடம் ஜியோ சிம், தொலைகாட்சி இணைப்புகள் எதுவும் இல்லை!  அந்தப் பக்கமே போனதில்லை.  இலவச தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்து விட்டு சுமங்கலி கேபிள் விஷன் இணைப்பு கொடுத்தார்கள்.  அப்புறம் அவர்கள் தொல்லை தாங்க முடியாமல் டைரக்ட்  டு ஹோம் க்கு மாறியவர்களில் நானும் ஒருவன்.  பல்லிக்கு பயந்து முதலை வாயில் விழுந்த கதைதான்!

    சற்றே தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இன்றைய அப்பாதுரை பக்கம் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தேன் ஐயா இரண்டும் ஒரே கணக்கில் இருக்கிறது.

      நீக்கு
  4. காணொளி ரசித்தேன். இணையம், தொலைக்காட்சிபெட்டி, மற்றும் செல்போன்
    களை அளவோடு பயன் படுத்தினால் நல்லது. இப்போதைய கால கட்டத்தில் இவை மிகவும் அவசியம் ஆகி விட்டது. நன்மையும், தீமையும் இருக்கிறது.

    உறவுகளை குழுவாக இணைத்து கொண்டு உறவுகளுடம் பேசுகிறார்கள். கூட்டு வழிபாடு நடக்கிறது. இப்போது தேவைபடும் இடங்களுக்கு உதவி செய்ய செல்போன் மூலம் முடிந்து இருக்கிறது. மீட்பு பணியில் விரைந்து செயல்பட முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. விஞ்ஞான வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எதைப் பெற்றாலும் இன்னொன்றை இழந்துதான் ஆகணும். சொந்த சந்தோஷம், (அலைபேசி தொலைக்காட்சி), சக மனிதர்களோடு நகமும் சதையிமாக இருப்பதைக் கெடுத்துவிடும்.

    ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமை இருந்திருந்தால், கில்லர்ஜி, ஶ்ரீராம், துரை செல்வராஜு போன்ற வெவ்வேறு நிலங்களில் இருப்பவர்களின் நட்பு கிடைத்திருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நன்மை இருக்கிறது அதேநேரம் பலரும் தவறுதான் செய்கிறார்கள்.

      தங்களது விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. நடப்புச் செய்திகள் (ரொம்ப அவசியமான நம்மைப் பாதிக்கும் மழை புயல் வெள்ளம் தவிர) வேறு செய்திகளே தெரியாமல், இருந்ததில் என்ன குறை நமக்கு வந்துவிட்டது? இப்போ, பிரேக்கிங் நியூஸ்.. கஜகஸ்தானில் நில நடுக்கத்தில் ஐம்பது பேர் இடிபாடுகளில் சிக்கி மரணம் கோன்ற செய்திகளை உடனே தெரிந்து என்ன செய்யப்போகிறோம்? பிரச்சனைகள் அதிகமாவதுதான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  7. டீயும் நமக்கு 1940களில் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டது தான். அது போலவே கோதுமை, ரவை, மைதா,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நாம் முதலில் நீராகாரம்தான் குடித்து வந்தோம்.

      நீக்கு
  8. கில்லர்ஜி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் எல்லாம் சரிதான். ஆனால் என் தனிப்பட்டக் கருத்து நாம் விழிப்புணர்வுடனும் சுய சிந்தனையுடனும் இருந்தால் எதிலும் சிக்காமல் தப்பிக்கலாம். நாம் ஏமாளிகளாக இருந்துவிட்டு மற்றவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறோம். நாம் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால் யார் நம்மை ஏய்க்க முடியும்? ஆட்சியாளர்கள் உட்பட. அவங்க பயப்படுவாங்கல்ல? மக்கள் முட்டாள்கள் சிக்குகிறார்கள்.

    நான் எப்போதும் சொல்வதுதான் கத்திக்கு இரு ப்யன்பாடுகள் இருப்பது போல இணையம் மொபைல் எல்லாத்துக்கும். அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான். அடிமையாகாமல் இருக்க விழிப்புணர்வு தேவை.

    என்னைப் பொருத்தவரை இணையம் மொபைலினால் நிறைய பயன்பாடுகள் இருக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள் குழுவாக உரையாட முடிகிறது. குறிப்பாக வயதானவர்களோடு. வீடியோவில் பார்த்து ஒரு சந்தோஷம். இதோ இப்போது சமீபத்திய தெற்குப் பக்கம் புயல் மழையின் தாக்கத்தில் குழு குழுவாகச் செயல்பட்டு மீட்பதற்கும் உணவு கொடுக்கவும், சில அபாயங்களைத் தடுக்கவும் இவற்றின் பயன்பாடுகள்தான் உதவின.

    மக்கள் அதில் மூழ்கி நேரத்தை விரயமாக்கினால் அது அவர்களின் முட்டாள்தனம் அறிவின்மை அதற்கு வேறு யாரும் பொறுப்பாக முடியாது என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    உளவியலிலும், personality development மற்றும் சமய தத்துவங்களிலும் ஒன்று சொல்லப்படுவதுண்டு. நாம் Authentic ஆக இருந்துவிட்டால் ஒரு எல்லை வகுத்துக் கொண்டு இருந்தால் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம் நம் தவறுக்கு அடுத்தவரைச் சொல்லக் கூடாது என்று.

    மக்கள் முட்டாள்களாக இருந்தால், நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அவர்களை மாற்ற முடியாது. அதை முறியடிக்க வேண்டும் என்றால் நாம் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  9. நம்ம் வீட்டுல டிவி கிடையாது. முக்கியமான விஷயம்னா வேணும்னா நெட்ல பார்த்துக்கலாம்னு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இப்பொழுது பழையவர்கள்தான் தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.

      நீக்கு
  10. இணையம் இல்லைனா இங்கு நாம் சந்திக்கும் நட்புகள் கிடைத்திருப்பாங்களா? உங்களால் இப்படி பதிவுகள் எழுதி எங்களோடு உரையாட முடியுமா? சொல்லுங்க கில்லர்ஜி....உங்களுக்கு எங்களோடும் பதிவுகளாலும் மன ஆறுதல் கிடைக்கிறது இல்லையா? அதை நினைத்து சந்தோஷப்படுங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இணையத்தால் பலரும் இணைந்து இருப்பது உண்மையே..‌.

      நீக்கு
  11. காணொளி சூப்பர்!!!!! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. தொடர்ந்து செல்போன் பார்த்தால் கண்ணில் உலர் தன்மை வருகிறது, பார்வை குறைபாடு வருகிறது என்று தான் சொல்கிறார்கள். நீங்கள் சொல்வது போல குழந்தைகளுக்கு , சாப்பிட , தூங்க ஏதாவது பாட்டு , விளையாட்டு போட்டு விடுகிறார்கள்தான்.

    பதிலளிநீக்கு
  13. உலகம்
    நமக்குன்னு தனியாவா சுத்துது?..

    என்னமோ போற போக்கு தான்!..

    பதிலளிநீக்கு
  14. சிந்திக்காதவர்கள் பாடு அப்படி என்றால்.. சிந்திக்கிறவர்களின் பாடு தொலைய மாட்டுதே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு