தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, டிசம்பர் 16, 2023

நான் ரசித்தவை (2)

    ணக்கம் நண்பர்களே... முன்பு நான் ரசித்த திரைப்பட வசனங்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன், இப்பொழுது பாடல் வரிகளில் சில பகிர்ந்து கொள்கிறேன். தாங்களும் இரசிக்கலாம். பாடிய பாடகர்-பாடகிகளையும் குறிப்பிட்டுள்ளேன் கில்லர்ஜி
 
வருடம் - 1975
திரைப்படம் அவன்தான் மனிதன்
பாடலாசிரியர் கண்ணதாசன்
இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் – டி.எம்.சௌந்திரராஜன்
 
பாடல்-
மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதன் என்று
-----------01-----------
 
வருடம் - 1961
திரைப்படம் திருடாதே
பாடலாசிரியர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு
பாடியவர் – டி.எம்.சௌந்திரராஜன்
 
பாடல்-
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரலாது
-----------02-----------
 
வருடம் - 1961
திரைப்படம் பணம் பந்தியிலே
பாடலாசிரியர் கா.மு.ஷெரீப்
இசை கே.வி.மகாதேவன்
பாடியவர் – சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
 
பாடல்-
ஆளை ஆளு புகழ்வதெல்லாம்
பணத்துக்காகத்தான் பணம் அகன்று விட்டால்
புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்
-----------03-----------
 
வருடம் - 1976
திரைப்படம் வரப்பிரசாதம்
பாடலாசிரியர் புலமைப்பித்தன்
இசை ஆர்.கோவர்த்தனம்
பாடியவர் – வாணி ஜெயராம்
 
பாடல்-
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல
விதி என்னும் ஆற்றில் பறி போவதல்ல
-----------04-----------
 
வருடம் - 1956
திரைப்படம் ரம்பையின் காதல்
பாடலாசிரியர் அ.மருதகாசி
இசை டி.ஆர்.பாப்பா
பாடியவர் – சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
 
பாடல்-
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான் நம் வாழ்வில்
காணா சமரசம் உலாவும் இடமே
-----------05-----------
 
வருடம் - 1959
திரைப்படம் நாலு வேலி நிலம்
பாடலாசிரியர் இராமலிங்க சுவாமிகள்
இசை எம்.கே.ஆத்மநாதன்-கே.வி.மகாதேவன்
பாடியவர் – சூலமங்கலம் ராஜலட்சுமி
 
பாடல்-
எனது உடலும் உயிரும் பொருளும்
நின்னதல்லவோ என் தாய் இதனை
பெறுக என நான் என்று சொல்லவோ
-----------06-----------
 
வருடம் - 1966
திரைப்படம் மறக்க முடியுமா
பாடலாசிரியர் மு.கருணாநிதி
இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர் – பி.சுசீலா
 
பாடல்-
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமேயில்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
-----------07-----------
 
வருடம் - 1978
திரைப்படம் அவள் அப்படித்தான்
பாடலாசிரியர் கங்கை அமரன்
இசை இளையராஜா
பாடியவர் – கே.ஜே.யேசுதாஸ்
 
பாடல்-
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை
தீரலாம் வெறும் பனி விலகலாம்
-----------08-----------
 
வருடம் - 1980
திரைப்படம் நிழல்கள்
பாடலாசிரியர் வைரமுத்து
இசை இளையராஜா
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
 
பாடல்-
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
-----------09-----------
 
வருடம் - 1980
திரைப்படம் ஒரு தலை ராகம்
பாடலாசிரியர் டி.ராஜேந்தர்
இசை டி.ராஜேந்தர்
பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
 
பாடல்-
இயன்றவரை வாழ்ந்து விட்டேன்
மனதினிலே சாந்தி இல்லை
தோல்விதனை எழுதட்டும் வரலாறு
துணைக்கென்று இனிமேல் யார் கூறு
-----------10-----------
 
கில்லர்ஜி அபுதாபி
 
இது தொடர்பான முந்தைய பதிவின் சுட்டி கீழே...
ரசித்தவை ஒன்று
 
சிவாதாமஸ்அலி -
இவருக்கு திரைப்படத்தைப்பற்றி எதுவும் தெரியாதுனு ஸ்ரீராம்ஜி நாளைக்கு மண்டபத்துல சொல்லி விடக்கூடாதுல... ?

Share this post with your FRIENDS…

12 கருத்துகள்:

  1. நல்லதொரு தொகுப்பு. சில பாடல்கள் கேட்ட நினைவு இல்லை.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் ரசித்த பாடல்களும், பாடல் வரிகளின் தொகுப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துக்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. தாங்கள் ரசித்த பாடல்களும், பாடல் பற்றிய விவரங்களும் அருமை...

    இவை கூடுமானவரை எல்லாருக்கும் பொருந்தும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. கில்லர்ஜி, நீங்கள் ரசித்த பாடல்களின் வரிகள் நீங்க தேர்ந்தெடுத்துப் போட்டிருப்பவவை அனைத்தும் அருமை. ஆனா பாருங்க எனக்கு எந்தப் பாடல்ன்றது தெரிவதில்லை. நான் குறிச்சு வைத்துவிட்டேண். கேட்கிறேன். ஒருதலைராகம் பாடல்கள் கேட்டதுண்டு ஆனால் இது எந்தப் பாடல்னு நினைவுவரவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கு நன்றி.

      "நான் ஒரு ராசியில்லாத ராஜா " என்று தொடங்கும் பாடல் டி.எம்.எஸ். அவர்கள் பாடியது.

      நீக்கு
  5. மனிதன் நினைப்பதுண்டு பாடல் மிகுந்த அர்த்தம் பொதிந்த பாடல். அதுபோலவே சமரசம் உலாவும் இடமே பாடலும்.

    வெட்டி பந்தாவுக்கு சக மனிதர்களோடு, ஜாதி, மதம் என்று பேசி வெறுப்பை வளர்ப்பவங்க செத்த பிறகு காலணாவுக்குப் பிரயோசனம் இல்லாமல் எங்கு புதைக்கறாங்க/எரிக்கறாங்க என்பதே தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

      நீக்கு
  6. ஒரு தலை ராகம் படப் பாடல் எனக்குப் பிடிக்கும். ஆனால் அறச் சொற்கள் உள்ள பாடல்களை நாம் பாடவோ கேட்கவோ கூடாது, நம்மையும் அந்தக் கெடுதி தொத்திக்கொள்ளும் என்பது என் நம்பிக்கை.

    நாம எப்படி ராசியில்லாதவராக இருக்கமுடியும்? நம் கையில் நம் செயல்கள் இருக்கின்றனவே. எத்தனைபேருக்கு நாம் உதவ முடியும்? அந்த ஆத்ம திருப்தி போதாதா? மாத்தி மாத்தி சொந்த பந்தங்களுக்கே உதவிக்கொண்டு இருப்பதா வாழ்க்கை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு