தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 26, 2024

இறுதி வரையில் உறுதி

01.  கருப்பு பணமாய் வந்தாலும்
இருப்பு கொள்ளாததேனோ
 
02.  கனவில் வந்து ஆடுபவளே
நனவில் நீ வராததேனோ
 
03.  கடிந்து கொண்ட மாமியாரே
மடிந்து போக மாட்டாயா நீ
 
04.  கையில் வரும் பணமே நீ
பையில் இருக்காததேனோ
 
05.  படித்த பிள்ளை என்னிடம்
தடித்த வார்த்தை பேசாதே
 
06.  பாசம் வைத்த உறவுகளே
வேசம் மிட்டா இருந்தீர்கள்
 
07.  இணையாய் வந்தவள் நீ
துணையாக இனி யாரோ
 
08.  மறந்து போனால் என்னை
இறந்து போவேன் நான்
 
09.  நடந்து வந்த பாதையை
கடந்து போய் பார்த்தாயா
 
10.  பழி வாங்க நினைத்து
பலி ஆகிப் போகாதே
 
11.  மறுமணம் செய்தாலும்
ஒரு மனம் ஆக்குங்கள்
 
12.  இறுதிவரை உன் மனதை
உறுதியாக வைத்துக்கொள்
 
கில்லர்ஜி புதாபி

26 கருத்துகள்:

  1. 1), 2)முதல் இரண்டுக்கும் பதில் "பயம்தேன்..."

    மூன்றாவது கொடுமை, கொடூர மனம். 

    நான்காவது மனம் போல் பணமும் ஒரு குரங்கு.  கிளைக்கு கிளை போல கைக்கு கை மாறிக்கொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மூன்றாவது ரைமிங்காக எழுதியது என்றாலும் உண்மை நிகழ்வு.

      கீழே சகோ கோமதி அரசு அவர்களுக்கான மறுமொழியை காண்க!

      நீக்கு
  2. 5. படிக்காதவன் தடித்த வார்த்தை பேசினால் ஓகேயா?

    6. பாசம் வேஷம் பார்க்காது.  எதிர்பார்ப்பில்லாததே பாசம்.

    7. மனதில் அவள்.

    பதிலளிநீக்கு
  3. 8. மனதளவில்தானே?

    9. கடந்துதானே வந்திருக்கிறோம்?

    10. உண்மை.  தன்வினை தன்னைச்சுடும்.

    பதிலளிநீக்கு
  4. 11. வருபவளைப் பொறுத்தது!

    12. அதுதானே விதி...   எதிர்பார்ப்பு!

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே அருமை.

    கடந்து வந்த பாதையை நினைத்தால் பொருளல்லாத என்னைப் பொருளாக்கிய இறைவனின் கருணையை அறிய முடியும்.

    பழி வாங்க நினைப்பது, இறைவனின் வேலையை நம் கையில் எடுத்துக்கொள்வது போன்றது. அதனால் நமக்குத்தான் தீமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  6. கையிலே வாங்கினேன், பையிலே போடலே
    காசு போன இடம் தெரியலே என்ற பாடல் நினைவுக்கு வருகிறது

    கடிந்து கொண்ட மாமியார் மடித்த போக வேண்டுமா?
    படித்த பிள்ளைக்கு அழகு பண்புடன் பேசுவது இல்லையா?
    பழி வாங்க வேண்டாம் யாரையும். மறப்போம், மன்னிப்போம்.

    மனம் இறுதி வரைக்கும் உறுதியாக நல்லபண்புடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      //மடிந்து போக வேண்டுமா ?//

      இந்த வரிகளை நான் எழுதியதற்கு காரணம் எனது வாழ்வில் நான் கண்ட நிகழ்வு.

      உறவினர் வீட்டில் நான் அமர்ந்து இருக்கும்போது ஒரு பெண்ணிடம், வயதான பெண்மணி நல்லா இருக்கியா ? என்று கேட்டதற்கு என் மாமியார் எப்போ சாகுதோ அப்பத்தான் நான் நல்லா இருக்க முடியும். என்று சொன்னது.

      எனக்கு பகீர் என்றது அந்த மாமியார் எனது கணிப்பில் 60% சரிதான்.

      சரியாக ஆறுமாதம் கடந்து அப்படி சொன்ன பெண்ணின் அம்மா இறந்து விட்டார்.

      கெடுவான் கேடு நினைப்பான் என்பது உண்மையே...

      நீக்கு
    2. ஏன் தான் இப்படி சொன்னார்களோ! அவர்கள் தப்பு செய்து இருந்தால் அவர்கள் மனம் மாற இறைவனை வேண்டி இருக்கலாம். இவர் இப்படி சொன்னதற்கு வயாதான பெண்மணி ஒன்றும் சொல்லவில்லையா? இப்படி பேசக் கூடாது என்று சொல்லி இருக்கலாம்.

      நீக்கு
    3. வருக சகோ
      நீங்கள் சொல்வது போல் அந்தப் பெண்மணி சொல்ல வேண்டும்.

      ஆனால் அப்படி சொல்லவில்லை இப்படித்தான் சில பெண்கள் இருக்கிறார்கள்.

      அந்த மாமியார் இன்று வரையில் நல்ல பெண்மணி தான் சற்றே அதிகாரமாக பேசுவார்.

      மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. மடிந்து போக வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் நன்று. ரசித்தேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. கருப்பு பணம், - பயம் இருக்கலாம் அதாவது இருப்பு என்பதை மனம் தவித்தலாக எடுத்துக் கொண்டால். மற்றொன்று இருப்பு கொள்ளாதது தங்கலை என்ற விதத்தில் எடுத்துக் கொண்டால், யோசிக்க வைக்குது!

    இரண்டாவது - அப்படி எல்லாருக்கும் அமைஞ்சுருமா என்ன!

    3 - நல்ல மனம் இல்லையே அது
    4- வர பணத்தை நாம எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்துதானே பையில் இருப்பது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. 5 - வளர்ப்பு முறை பொருத்து

    6 - இதிலும் சொல்ல நிறைய இருக்கு ஜி

    8 - ரொம்ப உணர்ச்சி பூர்வம்...சில சினிமாக்கள் நினைவுக்கு வருது! தாடி வைச்சு குடிச்சுன்னு!!

    9 - எப்பவுமே பழசுல பாடம் கற்றுக் கொண்டுவிட்டு அதைத் திரும்பிப் பார்க்காம இருக்கறது நலல்து. திரும்பிப் பார்க்கறப்ப நல்லதோடு வேண்டாததும் நினைவுக்கு வந்து படுத்தித் தொலைக்கும் எனவே இந்த நிமிடத்தில் வாழ்வது நலம்னு தோணும்

    10 - கரெக்ட்!
    12 - எதில்?!!!

    ஆனா கில்லர்ஜி நல்லா ரைமிங்கா எழுதியிருக்கீங்க. உங்க கற்பனைக்கு சபாஷ்! ஷொட்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. உங்கள் அனுபவத்தில் விளைந்தவை இல்லையா சில கண்ணிகள்! அருமையாகத் தொடுத்திருக்கிறீர்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. 10 - உள்ளங்கை நெல்லிக்கனி. அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே

      நீக்கு