வறுமை வந்தால் வாடாதே
வசதி வந்தால் ஆடாதே
நான்
வசதியில் ஒருக்காலமும் ஆடியதில்லை ஆனால் வறுமையில் வாடி இருக்கிறேன் காரணம் நான்
வசதியிலும் வாடிக் கொண்டுதான் வாழ்கிறேன் இது எனது சாபக்கேடு போலும்.
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
கடலளவு
கிடைத்தாலும் மயங்க மாட்டேன் – அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்.
நான்
ஒருக்காலமும் பணத்தை கண்டு மயங்கியதில்லை, ஆனால் கடலளவை கையளவு ஆக்கி விட்டார்களே
எனது அறியாமையால் என்று கலங்கி இருக்கிறேன்.
.* * * * * * * * * * 02 * * * * * * * * * *
வாழுகின்ற
மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளை சேருமடி
வாழ்ந்தவர்களை
பாடமாக்கி கொள்வதில் தவறில்லை, ஆனால் அவர்கள் பெற்ற கடனை பிள்ளைகள் தலையில் சுமற்றுவதில்
உடன்பாடு இல்லாதவன் நாம். யாருடைய பெருமைக்காக பெற்றோம் ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
ஊருப்பய
காசெடுத்து உம்மாவுக்கு பாத்தியா ஓதுனானாம்
(கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானம்)
நான்
ஒருக்காலமும் இப்படி செய்ததில்லை எனது உழைப்பில் எனது தகுதிக்குக்குள்
கட்டுப்பட்டதை தர்மம் செய்து இருக்கிறேன். இதை இறுதி வரையில் தொடர்வேன் இறை
செயலால்.
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
நமக்கு
தவறிழைத்தவர்களை
மறப்போம் மன்னிப்போம்.
தவறுகளை
மறப்போம் என்ற கொள்கையாளன் நான், ஆம் எனது வாழ்வில் இவர்கள் என்றுமே இல்லை. ஆனால்
மன்னிப்பு என்பது வருந்தியவர்களுக்கு கொடுக்கலாம், திருந்தியவன் வருந்தி
இருக்கவேண்டும்.
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
வாழ்க்கை
என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இது
எனக்கு பொருத்தமில்லாத தத்துவம் காரணம் நான் யாருடைய மனதிலும் இருப்பதாக
தெரியவில்லை. காரணம் என்னால் பலன் அடைந்தவர்கள் நன்றி கெட்டவர்கள் மட்டுமே...
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
கெட்டவன்
சாகும் போதுதான் கஷ்டப்படுவான்
நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்.
இது
பலர் மனதையும் மாற்றி விடும். ஆனால் எனக்கு பொருந்தியதாக இருக்கிறது காரணம்
இவ்வளவு காலமும் எனது மனம் அமைதி பெறவில்லையே... இனிமேல் வந்துதான் என்ன... ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
நல்ல
நண்பர்கள் உள்ள எவனும்
வாழ்க்கையில் தோற்றுப் போகமாட்டான்
ஆம்
உறவுகள் அனைத்தும் துரோகித்து இருந்தும், நான் வாழ்க்கையில் இன்னும் முழுமையாக
தோற்றுப் போகாததற்கு காரணம் எனது உண்மையான நண்பர்கள் மட்டுமே...
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
பெயரை
கேட்டால்கூட ஞாபகம் வராமல் மறக்க வேண்டும்
பாசம் என்று வேஷம் போட்ட துரோகிகளை.
ஆம்
நான் இறைவனிடம் வேண்டுவது இதுவும்தான் எனக்கு மறக்கும் ஆற்றலைக்கொடு மிச்சமுள்ள
காலமாவது நான் ரத்த உறவுகளை மறந்து மகிழ்ச்சியாக வாழவேண்டும்.
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
ஒவ்வொரு
மனிதனும் மாறித்தான் போகின்றனர்
பழகும் போதும்...பழகிய பின்பும்...
ஆனால்
என்னால் இப்படி மாற முடிவதில்லையே... இறைவா துரோகம் மட்டுமே செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் இன்னும் எவ்வளவு
காலம்... ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
இவர்கள்தான்
நல்ல உறவு என்று நம்பும் நேரத்தில் நாங்கள்தான்
நல்ல நடிகர்கள் என்று நிரூபித்து விடுகின்றனர் பலர்.
ஆம்
நானும் இப்படித்தான் நடிகர்கள் என்பது அறியாமல் அவர்களோடு ஒன்றி விடுகிறேன்.
அவர்களின் உண்மை முகம் தெரியும் போதுதான் அந்த ஏமாற்றத்தின் வலி புரிகிறது.
* * * * * * * * * * 11 * * * * * * * * * *
நடிக்கத்
தெரிந்தவன் நல்லவன் ஆகிறான்
உள்ளத்தை உரைப்பவன் கெட்டவன் ஆகிறான்
நான்
இப்படித்தான் உறவுகளிடம் பெயர் பெற்று இருக்கிறேன். இதை என்னால் மாற்றிக் கொள்ள
இயலாது. காரணம் நடிப்பு எனக்கு என்றுமே உடன் படுவதில்லை.
* * * * * * * * * * 12 * * * * * * * * * *
Chivas Regal சிவசம்போ-
பொழைக்கத் தெரியாத பொன்னம்பலம்
கில்லர்ஜி
அபுதாபி
வசதி வந்தால் ஆடாதே
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்.
.* * * * * * * * * * 02 * * * * * * * * * *
பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளை சேருமடி
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
(கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானம்)
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
மறப்போம் மன்னிப்போம்.
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்.
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
வாழ்க்கையில் தோற்றுப் போகமாட்டான்
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
பாசம் என்று வேஷம் போட்ட துரோகிகளை.
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
பழகும் போதும்...பழகிய பின்பும்...
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
நல்ல நடிகர்கள் என்று நிரூபித்து விடுகின்றனர் பலர்.
* * * * * * * * * * 11 * * * * * * * * * *
உள்ளத்தை உரைப்பவன் கெட்டவன் ஆகிறான்
* * * * * * * * * * 12 * * * * * * * * * *
பொழைக்கத் தெரியாத பொன்னம்பலம்
எண்ணங்களா? விரக்தியில் ஏற்பட்ட புலம்பல்களா? ஜி.. நாங்களும் உங்கள் எழுத்துகளை படித்து மகிழ்ந்து பயன்பெறும் நணபர்கள்தான். நாங்கள் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பில்லை. உள்ளதை நினைத்து மகிழ்வோம். இல்லாததைப் பற்றி நினைப்பதையே விட்டொழிப்போம். ஆனாலும் பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் போட்டுள்ள பட வாசகம் இந்தப் பின்னூட்டத்தைக் கொடுக்க என்னைக் கொஞ்சம் நிறுத்துகிறது!
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குஇதுவும் கடந்து போகும் என்று சொல்வது எளிது, ஆனால் கடப்பது கஷ்டம் தான்.
பதிலளிநீக்குஆனால் மன உறுதியாய் கடக்க தான் வேண்டும். கெட்டதை மறக்க கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை தினம் நினைத்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று உறுதியாக நம்புங்கள்.
உங்கள் நல்ல குணங்களை புரிந்து கொண்டவர்கள் இருப்பார்கள் என்றும் நட்பாய்.
நம்மை மதிக்காதவர்களை பற்றி நினைத்து வருந்துவதை விட நம்முடன் அன்பாய் இருப்பவர்களை என்று மகிழ்வாய் வைத்து கொள்ளுங்கள், அவர்களுடன் மகிழ்வாய் இருங்கள். நடிக்க வேண்டாம், நீங்கள் நீங்களாகவே இருங்கள் அது போதும். ரத்த உறவுகள் உங்களை புரிந்து கொண்டு வெகு விரைவில் வருவார்கள் உங்களிடம்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஎன்னைப் பொருத்தவரை இனி உறவுகள் வேண்டாம் என்பதே எனது எண்ணம்.
கில்லர்ஜி உங்களின் அந்த பெட்டி வாசகத்தை அப்படியே ஏற்கிறேன். அதெல்லாம் சும்மா எல்லாரும் நமக்கு ஆறுதல் சொல்ல. மனம் என்பது வேறு. அது நம் மனம் நமக்குத்தானே தெரியும்!
பதிலளிநீக்குகீதா
ஆம் உண்மைதான்
நீக்குஆனாலும் அந்த மனதைக் கொஞ்சம் நம் கையில் எடுத்துக் கொண்டு நமக்கமே தட்டிக் கொடுத்துக் கொண்டு தேற்றிக் கொள்ள வேண்டும் கில்லர்ஜி.
பதிலளிநீக்குஇந்த வரியும் முந்தைய கருத்தோடு அடிக்கத் தொடங்கினேஎன் பப்ளிஷ் ஆகிடுச்சு முந்தைய கருத்து
கீதா
நல்லதொரு கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குகில்லர்ஜி, நம்மைச் சுற்றி இருக்கும் நல்லவர்களை நினைப்போமே. நல்லவர்கள் 4 பேர் இல்லை ஒருவர் இருந்தால் கூட போதும்.
பதிலளிநீக்குமற்றொன்று, நாம் பொதுவாக யார் காரணமாகவும் நாம் மனம் வருந்தியிருக்கலாம். ஆனால் இங்கு உளவியல் ரீதியாகச் சொல்ல இருக்கு ஆனால் அதை ஓரங்கட்டிவிட்டு....அப்படி ஒருசிலரிடம் நாம் பேசாமல் அமைதியில் இருக்கலாம் தான் ஆனால் மீண்டும் அந்த உறவை நாம் பழையபடி பேண நினைத்தால் அதில் மன்னிப்பு போன்ற கண்டிஷன் கள் இருந்தால் கண்டிப்பாக அந்த உறவு தாக்குப் பிடிக்காது. உறவுக்குள் கண்டிஷன் இருந்தால் உறவுகள் நிலைக்காது.
உங்கள் மனதை அறிந்து உங்களுடன் பழகுபவர்களை நினைத்து சந்தோஷப்படுங்கள் கில்லர்ஜி. உலகில் ரசிக்க அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றன. நாம் நாமாக இருக்க வேண்டும் என்பதுதான் உளவியலிலும் நம் தத்துவங்களிலும் சொல்லப்படுவது அதுதான். நடித்தால் அந்த உறவு நீடிக்காது.
கீதா
தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குகில்லர்ஜி உங்கள் எழுத்தும் உங்களின் உண்மையான நண்பர்களும் உள்ளவரை நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. என்றாலும் இப்படி மனதில் உள்ளதை குமுறல்களைச் சொல்லும் போது நமக்கு ஒரு ரிலீஃப் கிடைக்குமே அதுவே நல்லதுதான். உங்கள் குமுறல்கள் உண்மைதான் இருந்தாலும் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் முன்னேறிக் கொண்டிருப்பது உங்கள் தன்னம்பிக்கையைத்தான் காண்பிக்கிறது. ஆல் த வெரி பெஸ்ட் கில்லர்ஜி. உங்கள் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தொடருங்கள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குநல்லதே நடக்கட்டும். எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம் கில்லர்ஜி. தன்னம்பிக்கை இருக்கும் வரை நமக்கு தோல்வி இல்லை.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபலன் அடைந்தவர்கள் நன்றி கெட்டவர்கள் என்று ஏன் நினைக்கணும் கில்லர்ஜி? எதிர்பார்த்தே ஏதேனும் செய்கிறோம்? அவரவர் பலன் அவரவர்களுக்கு. கோவிலில் உண்டியலில் பணம் போடும்போது கோவிலுக்கு உதவட்டும் என்று நினைக்கிறோம். ஆனால் யாரேனும் அதனை ஆட்டையைப் போட்டால், அதன் பலன் அவர்களுக்குத்தானே தவிர நமக்கல்லவே
பதிலளிநீக்குவருக தமிழரே நான் எதிர் பார்த்து உதவி செய்ததில்லை.
நீக்குஆனால் துரோகத்தைதான் மறக்க இயலவில்லை.
உள்ளத்தை உரைக்கக்கூடாது கில்லர்ஜி... நானும் அப்படி வெளிப்படையாகப் பேசுபவந்தான். ஆனால் அதற்கு மதிப்பில்லை. எல்லோரும் தவறாகவே எண்ணுவார்கள்.
பதிலளிநீக்குஆம் தமிழரே
நீக்குதிரு.சிவாஜி கணேசன் மட்டும் நடிகர் திலகம் இல்லை.
இங்கு ஒவ்வொரு குடும்பத்திலும் சிவாஜி கணேசன் வாழ்கிறார்கள்.
சிறப்பான பதிவு...
பதிலளிநீக்குஉள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருக்காமல் வெளிப்படையான கருத்துகள்..
வாழ்க கில்லர்ஜி..
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குகஷ்டத்தின் போது எனக்கு உதவியவர்கள் இப்போது எப்படி இருக்கின்றனர்.. என்பதைக் கூட என்னால் தெரிந்து கொள்ள இயல வில்லை.. பதினைந்து வருடங்களில் நண்பர்கள் ஆளுக்கொரு மூலையில்..
பதிலளிநீக்குஇந்தக் குற்றம் என்னை மிகவும் குடைகின்றது..
உட்ள் நலக் குறைவால் நடைப் புழக்கம் அதிகம் இல்லை.. வெளியில் எளிதாகச் செல்வதற்கு முடியவில்லை..
பொருளாதாரம் சரிந்து விட்ட நிலையில் மனம் வருந்துகின்றேன்...
நண்பர்களுக்கு செய்வதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் இறைவா..
வாங்க ஜி
நீக்குதங்களது எண்ணம் போல் நிச்சயமாக உண்மையான நண்பர்களை சந்திப்பீர்கள்.
தங்களின் உள்ளக் குமுறல் புரிகிறது.
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்கு