வணக்கம்
நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த பத்தாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது
பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ
(Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம்
நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். - கில்லர்ஜி
நட்பூக்களே...
ரசித்தீர்களா ? முந்தைய
பதிவுகள் இதோ - ஒன்று இரண்டு மூன்று நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு ஒன்பது
வாருங்கள்
ரசிப்போம்...
அம்மாவுக்கு திதி கொடுக்க கடற்கரையில்...
(இடம்: இராமேஸ்வரம்)
வள்ளல் சீதக்காதி சாலையில்...
(இடம்: கீழக்கரை)
ஊருக்குள் நுழைந்தபோது எடுத்தது
(இடம்: வேளாங்கண்ணி)
ஈக்காட்டுதாங்கல் அருகில்...
(இடம்: சென்னை)
பாலத்தை கடந்தபோது எடுத்தது...
(இடம்: தாராபுரம்)
நிழலில் ஓய்வெடுத்தபோது...
(இடம்: கோயமுத்தூர்)
பழமுதிர்ச்சோலை கோயிலில் எடுத்தது
(இடம்: அழகர்கோயில்)
இரயில் நிலையம் போனபோது..
(இடம்: திருச்சி)
பத்திரிக்கை அலுவலகம் போனபோது...
(இடம்: அபுதாபி)
இரயில் நிலையம் போனபோது..
(இடம்: செங்கற்பட்டு)
காதை துளையிட போனபோது...
(இடம்: ஆலங்குளம்)
இரயிலுக்கு போனபோது...
(இடம்: தனுஷ்கோடி)
ஊருக்குள் நுழைந்தபோது...
(இடம்: அதிராம்பட்டிணம்)
கோயிலுக்கு போனபோது...
(இடம்: திருநள்ளாறு)
பேருந்து பாலத்திலிருந்து...
(இடம்: பாம்பன்)
உணவருந்த போனபோது...
(இடம்: திருப்புவனம்)
ஊரை விட்டு வெளியேறியபோது...
(இடம்: காரைக்கால்)
மனதை கவர்ந்த கட்டிடம்
(இடம்:
திண்டிவனம் சாலையில்)
பெயர்த்திகளோடு உலாவியபோது...
(இடம்: மதுரை)
கட்டடியான் கோயிலின் வாசலிலே...
(இடம்: இதம்பாடல்)
அனைத்து படங்களும் அருமை. ரசித்துப் பார்த்தேன்.பேத்திகளை ரசித்தேன்.
பதிலளிநீக்குஇரு பேத்திகளும் "இந்த மாடல் வண்டி நல்லா இருக்கு தாத்தா வாங்கி தாங்க" என்று கேட்டார்களா?
இதம் பாடல் ஊர் பேர் எனக்கு மிகவும் பிடிக்கும், உங்கள் பதிவின் மூலம் தான் இந்த ஊர் பேரை தெரிந்து கொண்டேன்.
வருக சகோ பெயர்த்த இவள் உண்மையிலேயே அப்படித்தான் கேட்டார்கள்.
நீக்குபிறகு கடைக்கு அழைத்துப்போய் இருவரும் அமரக்கூடிய சைக்கிள் வாங்கி கொடுத்தேன்.
படங்கள் யாவும் மிக அழகு. ஈக்காட்டுத்தாங்கல் அடையாளம் தெரிந்தது! இதம்பாடல் கோமதி அக்கா சொல்வதுபோல அழகான பெயர். படங்களில் வெவ்வேறு மொழிகளில் உங்கள் பெயரைப் பொறித்திருக்கும் உங்கள் திறமையை வியக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க ஜி மகள் இருப்பது ஈக்காட்டுதாங்கல்தான் அசோக் பில்லர் அருகில்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
படங்கள் அனைத்தும் அழகு. பல்வேறு மொழிகளில் உங்கள் பெயர் பொறித்திருப்பது சிறப்பு. அனைத்து படங்களையும் ரசித்தேன் - குறிப்பாக நீர் நிலை!
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களைவிடவா சிறப்பாக படம் எடுத்து விடப் போகிறேன் ?
நீக்குவரலாறு (பெயர்) முக்கியம் ஜி
படங்கள் எல்லாமே சூப்பர் கில்லர்ஜி. ராமேஸ்வரம் கடற்கரை, அந்த தாராபுரம் ஆறு அழகு. வேளாங்கண்ணி படம் ரொம்ப ரசித்துப் பார்த்தேன் அழகா எடுத்திருக்கீங்க கில்லர்ஜி. வழக்கம் போல ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மொழியில் உங்கள் பெயர்!!
பதிலளிநீக்குகீதா
வருக பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குபெயர்த்திகளோடு உலாவிய அந்தப் படம் தான் என்னைப் பொருத்தவரை ஹைலைட்!!! ரொம்ப அழகு. இரண்டு பேரும் உங்ககிட்ட அந்தக் காரை வாங்கித் தரக் கேட்டாங்களோ!!!
பதிலளிநீக்குபாம்பன், தனுஷ்கோடி படங்கள் செம எனக்குப் பழைய நினைவுகளை மீட்டன. அபுதாபி அந்த ஏணி அழகா இருக்கு!
எல்லாமே ரசித்தேன் கில்லர்ஜி
கீதா
ஆம் கார் வாங்கி கேட்டனர் நான் காரில்தானே வந்தோம் என்று சொல்லி காரில் அழைத்துச் சென்று சைக்கிள் வாங்கி கொடுத்தேன்.
நீக்குசித்திரங்கள் பேசிய கதை அருமை. அது கதை அல்ல நிகழ்வு என்பது படங்களில் தெரிகிறது. பல பாஷைகளில் கில்லர்ஜியைக் கண்டதும் முன்பும் இது போல கண்டதுண்டு. உங்கள் திறமை அபாரம். தொடரட்டும் உங்கள் பல புது முயற்சிகளும் திறமைகளும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆம் முன்பும் இப்படித்தான் பெயர்களை இதயம் நல்லெண்ணெயில் பொறித்து இருந்தேன்.
நீக்குஅந்த கடைசி படம் யாருங்க எடுத்தது. செல்ஃபீ இல்லை., ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்ல்லக்கூடியன, படம் பார்த்து கதை சொல் என்று ஒரு போட்டி வைக்கலாம்.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா அந்த படமும் நான்தான் எடுத்தேன் (செல்ஃபி) தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபடங்கள் எல்லாமே ஓரோர் வித்த்தில் நினைவுகளை எழுப்புகின்றன.
பதிலளிநீக்குதிருநள்ளாறு
வருக தமிழரே தங்களது நினைவுகளை மீட்டி மதில் மகிழ்ச்சி.
நீக்குதிருநல்லாறு
திருநள்ளாறு
இரண்டு வார்த்தைகளையுமே அந்த ஊரில் பெயர்ப் பலகைகளில் கண்டு குழம்பி இருக்கிறேன்.
இருப்பினும் தங்களது விருப்பப்படி மாற்றி விடுகிறேன்.
படங்கள் அழகு. பெயர்த்திகளுக்கு வெறும் மிதிவண்டி மட்டும்தானா, விரைவில் இரண்டு கார்...
பதிலளிநீக்குவருக நண்பரே வாங்கி விடலாம் எனக்கு இவ்வுலகில் இந்த இரண்டு செல்வங்களை தவிர வேறு யார் இருக்கிறார்கள் ???
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தேன். ஒற்றை மரத்தின் கீழ் காருடன் ஓய்வெடுக்கும் படமும், தங்கள் பேத்திகள் இருக்கும் படமும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்கு