நான் U.A.E க்கு 1996 ஜனவரியில் வந்து ஆறு மாதத்திலேயே மலையாளம் எழுத
பழகிக்கொண்டு டிசம்பர் மாதம் முதலே டைரியிலும் எழுதத் தொடங்கி விட்டேன் பிறகு 2000 த்திற்கு பிறகு அரபு
மொழியிலும் எழுதத் தொடங்கினேன் ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு இந்தியா வரும்
பொழுது முடிந்த டைரியை வீட்டில் வைத்து விட்டு வந்து விடுவேன் வேற்று மொழி
என்பதால் பெட்டியை பூட்டாமல் விட்டு விட்டேன் நமது வீட்டில் உள்ளவர்கள்
சாதாரணமானவர்களா ?
டைரியில் என்னதான் எழுதியிருக்கும் ஒருவேளை அபுதாபியில் மளிகைக்கடை வைத்திருப்பானோ... அல்லது மாளிகைகள் கட்டி இருப்பானோ ? இல்லையே அங்கு வெளிநாட்டினர் இடமோ, வீடுகளோ
வாங்க முடியாதே... வேறேதும் அந்த மாதிரி, இந்த மாதிரி இருக்குமோ... என்ற சந்தேகத்தில் இங்கு இருக்கும் ‘’மனசு’’ சே.குமார் போன்ற
தேவகோட்டையர்களிடம் நமது ‘’தூ’’ புகழ் வி........தை வைத்து
புலன் விசாரணை நடத்தி இருக்கின்றார்கள் நாம் யாருக்கும் துரோகம் செய்திடாத
காரணத்தால் உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண்ணாடி போல் சொல்லி இருக்கின்றார்கள்
நமது தி கிரேட் தேவகோட்டையர்கள்.
ஒருவேளை கதைகள் எழுதி
இருக்குமோ ? அப்படியானாலும்
வழக்கம்போல் சாதாரண நோட்டில் எழுதி சாக்கு மூடையில்தானே கட்டி வைப்பான் டைரியில்
தேதி வாரியாக எதற்கு ? ஒரு
வழியாக கோவையில் மலையாளி ஒருவரை பிடித்து கேட்க, அவரும் அனைத்தையும் படித்து
இருக்கிறார் சரி இதற்கெல்லாம் அர்த்தம் என்ன ?
(அங்குதானே நிற்கிறாரு...
சிவலிங்கம்)
தென்னந்தோப்புக்காரனுக்கு
ஒன்றும் புரியவில்லை மண்டை காய்ந்து விட்டது போல எனக்கு பைத்தியம் பிடித்து
விடும்போல இருக்கு என்னை விடுங்க என்று ஓடியிருக்கின்றான், சரி அரபு மொழியைப்பற்றி
கேட்போமென்று ஆலீம் மூஸாவிடம் போக அவரும் பார்த்து விட்டு வேண்டாம் இதற்குமேல்
இதைப்படித்தால் நான் ஏர்வாடி போகவேண்டியது வரும் ஆகவே எடுத்துக்கிட்டு போயிடுங்க
இல்லை நான் ஒருதடவை முடிவு பண்ணினால் மறுதடவை என்ன செய்வேன்னு... எனக்கே தெரியாது
அவ்வளவுதான் மிரண்டு விட்டார்கள் இதற்குமேல் இதை எடுத்துக்கொண்டு போனால் ? நம்மைக் கல்லால் எரிந்து விடுவார்கள் என்று
டைரியை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டார்கள் இதெல்லாம் பின்நாளில் எனக்கு
வேண்டப்பட்டவர்கள் மூலம் தெரிந்தது.
சரி அப்படி என்னதான் எழுதி
இருந்தது ? என்பதுதானே உங்களது கேள்வி மலையாளி, மலையாள
வார்த்தையையும், வேண்டுமானால் ஆங்கில வார்த்தைகளையும், ஏன் ? ஹிந்தி வார்த்தைகளையும்கூட படித்து இருக்கலாம்,
ஆலீம்மூஸா தமிழ் வார்த்தைகளையும், ஆங்கில வார்த்தைகளையும், ஏன் ? அரபு வார்த்தைகளையும்கூட படித்து புரிந்து
இருக்கலாம் பாக்கி ? ஆம் பாக்கியை யார் படிப்பது ? பாக்கியராஜ்’’ஆ ?
ஆம் நண்பர்களே... நான்கு வரிகளில் எழுதிய வாக்கியத்தை ஒன்பது மொழிகளில் கலந்து எழுதி
இருப்பேன் அதாவது எனக்கு மட்டுமே புரியும் இதில் சரியான இலக்கணம் உள்ளதா ? என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை ஆம் எனக்கு
மட்டும் சொந்தம் அந்த டைரி தரும் இன்பம் எனது டைரிதானே நான் எப்படி வேண்டுமானாலும்
எழுதுவேன் எனது இஷ்டம் அதை மற்றவர்கள் படிப்பது எதற்கு ? நான் டைரியை எப்படி எழுதினேன் என்பதை கீழே சிறிய
உதாரணம் மட்டுமே தந்து இருக்கிறேன் மலையாளத்திலும், அரபியிலும் பிறகு அதையே நம்
தமிழிலும் இதோ...
എണ്ണവളേ... അത നേനു മേരാ ബൂക്കായ് ആത്യമായിട്ടു ഇന്തേ
ശൂഷാനു പീ ഹേപ്പി.
என்னவளே... அத நேனு மேரா
பூக்காய், ஆத்யமாயிட்டு இந்தே சூஷானு பீ ஹேப்பி.
إنتي منكارتي مرننال
فيكاش أج لكات ممى اوبواسم موجود
என்டே மனக்கார்த்தி
மரணநாள், பிஃகாஸ் ஆஜ் லகாத் மம உபவாசம் மவ்ஜூத்.
சாம்பசிவம்-
இப்படி
எழுதுனா... படிக்கிற ஆளுக்கு நட்டு
கழண்டு போகத்தான் செய்யும்.
Chivas Regal சிவசம்போ-
ச்சே’’ ஏத்துன, குவாட்டரு
இறங்கிடு’’ச்சே’’
எனக்கும் நட்டு கழண்டு போன மாதிரி இருந்திச்சு..ஆனா..பாருங்க சுதாருச்சிட்டேன் எப்படின்னு கேட்க்கிறீங்களா...? படிப்பதை விட்டுட்டேன் நண்பரே..
பதிலளிநீக்குபடிச்சுட்டுதானே படிப்பதை விட்டு விட்டேன் என்கின்றீர்கள் நண்பரே
நீக்குஆ.. நட்டு கழண்டு போனதால் .யோசிப்பதை விட்டுவி்டேன் என்பதற்கு பதிலாக.... படிப்பதைவிட்டுவிட்டேன் என்று சொல்லி விட்டேன்.. இதிலிருந்து தெரிவது என்ன..? எனக்கும் நட்டு கழண்டுவிட்டதென்று....
நீக்குஹாஹாஹா சாம்பசிவம் சரியாகத்தான் சொல்லி இருக்காரு...
நீக்குஹா.... ஹா...ஹா.... டைரி எழுதுவது வீண் வேலை என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். இப்படி அடுத்தவர்களை மண்டை காய விடலாமென்றால் ஜாலிதான்!!!!
பதிலளிநீக்குவருக நண்பரே இதுவும் வலைப்பூ எழுத ஆரம்பித்த பிறகு நிறுத்தி விட்டேன்
நீக்குநேற்றிரவு 2.30க்கு வேலைக்கு சென்ற நான் இப்போது தான் (12.30)திரும்பி வந்தேன்..
பதிலளிநீக்குவெளியில் வெயில் அதிகம்..
இந்தப் பதிவைப் படித்ததும் - அறைக்குள்ளிருந்த சிலு சிலுப்பும் கொதிப்பாகி விட்டது!...
யாரைக் கேட்பேன்!.. எங்கே போவேன்!.. சொக்கா!....
(ஆமாம்... பரிசுத் தொகை ஏதும் இல்லையா?...
அரே.. சதாசிவம்!.. அடுத்தவங்க டைரியைப் படிக்கிறதுக்கு பரிசுத் தொகை வேற வேணுமா?... ஓடிப் போய்டு!.. கில்லர்ஜிக்குத் தெரிஞ்சா கொன்டே போட்றுவாரு!..)
வாங்க ஜி அந்த மலையாளியும், ஆலீம்மூஸாவும் சிக்கவில்லை ஜி
நீக்குhaahaa டைரியைப் படிச்சவங்க நொந்து நூடுல்ஸாகி இருப்பாங்க! :) சின்ன வயசில் ஒரு வீம்பில் டைரி எழுதப் போறேன்னு ஆரம்பிச்சுட்டு இன்னிக்கு ரசம் சாதம், நேத்திக்கு மாவடுவுடன் மோர் சாதம்னு எழுதினதிலே வெறுத்துப் போய் டைரியை எல்லாம் கோல நோட்டு, சமையல் குறிப்புக்குனு மாத்திட்டேன். இப்போல்லாம் நோ டைரி! நோ டைரி எழுதுதல்! :)
பதிலளிநீக்குவருக சகோ இப்பொழுது பொதுவாகவே நிறைய நபர்கள் டைரி எழுதுவதை நிறுத்தி விட்டார்கள் உண்மையே...
நீக்குஉங்களைப் பற்றிய செய்திகள் தாங்கி வருவது தானே டைரி உங்கள் வித்தியாசப் பக்கத்தையும் தாங்கிய டைரி யாருக்குத் தேவை தேவனே தெரியாமல் செய்து விட்டார்கள் அவர்களை மன்னியும்
பதிலளிநீக்குஹாஹாஹா வாங்க ஐயா வருகைக்கு நன்றி
நீக்குதிருட்டுத்தனமாக டைரியைப் படிப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டிவிட்டீர்கள். அதோடு உங்கள் இரகசியத்தையும் காப்பாற்றிக்கொண்டுவிட்டீர்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே அதிலொன்றும் இராணுவ ரகசியம் இல்லை இருப்பினும் அடுத்தவரின் டைரியைப் படிப்பது தவறுதானே...
நீக்குஐயய்யோ நான் என்ன பண்ணுவேன்
பதிலளிநீக்குஇந்த அநியாயத்த எங்க போய் சொல்லுவேன்...!!
எனக்குத் தெரிந்த கொஞ்ச நெஞ்ச
இந்தியும் மறந்து போச்சே....!
ஆந்திராவுக்கு போயி 6 மாசம் தங்கிட்டு வாங்க பழகிடலாம்.
நீக்குநண்பரே தமிழே எனக்கு போதும்....
நீக்குதலைப்பு இப்படி வைத்திருக்கலாம்...
டைரியை படிப்பவரின் கதி...???
என்று வைத்திருக்கலாம்...
அப்படி வைத்தால் படிக்க வருபவர்கள் ஒருக்கால் திரும்பி விடக்கூடும் நண்பரே
நீக்குஹா ஹா ஹா ... மிடில... http://ethilumpudhumai.blogspot.in/
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குநல்வழியில் நடப்பவரின் நாட்கு றிப்பில்
....நான்மொழியில் நடனமிடும் வார்த்தைக் கோர்வை
இல்லிடத்தில் இருப்பவர்கள் சந்தே கத்தால்
....இடர்பட்டுப் போய்விடுமோ கலைஞன் எண்ணம்
செல்லரித்துப் போகின்ற சித்தாந் தத்தைச்
....சிதையாமல் காக்கின்ற அறிஞர் போலப்
பல்மொழியில் படைத்திட்டீர் பலதும் பத்தும்
....படிப்பவர்க்கோ புரிதலின்றித் தலையும் சுத்தும் !
வான்முட்ட அலைந்துமுகில் மகிழ்ச்சி கொண்டும்
....மலைமுட்டி மழையாகிச் சொரிதல் போல
தான்பட்ட வலியெல்லாம் தன்னுள் நாளும்
....தகித்தாலும் பிறரறிய வேண்டாம் என்னும்
பொன்னரிய எண்ணத்தில் பூத்த தெல்லாம்
....போனவிடம் தந்தறிவுள் புதைத்தாய் நீயும்
என்சொல்லி வாழ்த்துரைப்பேன் என்றன் நண்பா
....இனியுன்போல் மாமனிதன் பிறப்ப துண்டோ !
வாசித்தவுடன் சிரிப்பு வரவில்லை ஜி வார்த்தைகள்தான் வந்தன அதுதான் எழுதிவிட்டேன் ......
புயலுக்கும் புன்னகைக்கும் பூவி தழ்நீ
புரியாத மொழிகொண்டு வடித்த தெல்லாம்
அயல்நாட்டில் பட்டவலி அறிவேன் உன்றன்
அகமென்றும் மகிழ்வாக வேண்டு கின்றேன் !
வாழ்த்துகள் ஜி வாழ்க நலம்
தம +1
அழகிய கவிதையும், அதன் அர்த்தங்களும் புரிந்து மகிழ்ந்தேன் பாவலரே நன்றியுடன் நண்பன்.
நீக்குமுன்னர் எனக்கும் இந்த பழக்கம் இருந்தது வலை /முகநூல் வருகை அதை மூட்டை கட்டி வைத்துவிட்டாச்சு))) ஆனாலும் உங்க மொழி ஆர்வம் வியக்க வைக்கின்றது ஜீ!
பதிலளிநீக்குவருக நண்பரே நானும் இணைய வரவால் குறைந்து விட்டேன்
நீக்குபன்மொழி வித்தகர் நண்பரே தாங்கள்
பதிலளிநீக்குதம +1
நண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஅய்யகோ.... இப்படியெல்லாம் எப்படி! :) படிச்சவங்க எப்படி ஓடியிருப்பாங்கன்னு கற்பனை செய்யும்போதே சிரிப்பா வருது!
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குஒரு டைரியின் கதி......படித்து....அதோ கதியாகிப்போனோம் சகோ:)
பதிலளிநீக்குயாரு படித்தாலும் கவலையில்லை....
தம 6
யாரு படித்தாலும் பரவாயில்லை என்பதற்காக அப்படியே போட்டு விடமுடியுமா ? அதான் பூட்டு போட்டோம்ல...
நீக்குஅதான்...யாரு படித்தாலும் கவலையில்லைன்னு சொன்னேன்....புரிந்தால் தானே...:)))))
நீக்குபுரிந்தது சகோ மீள் வருகைக்கு நன்றி
நீக்குஆவலுடன் படிக்க வந்தவர்கள் எடுத்த ஓட்டம் நல்ல நகைச்சுவை.
பதிலளிநீக்குஅடுத்தவர்கள் டைரியை படிக்கமுடியாமல் உங்களுக்கு மட்டுமே புரிவது நல்ல தந்திரம்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஉங்கள் மூலமாக கூடுதலாக இரு மொழிகளைத் தெரிந்துகொள்ளலாம் என நினைக்கிறோம். டைரி முதல் பல நிலைகளில் (?) பயன்படும் அல்லவா.
பதிலளிநீக்குவருக முனைவரே இனி மொழிகளை புகுத்தலாம் என்று முடிவு செய்து விட்டேன்
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குபுரியாததையே கத்துக்கிட்டீங்க... அதனால சீக்கிரம் பெரிய மனிதரா ஆயிட்டீங்க...! வாழ்க வளமுடன்...!
த.ம. 8 (எட்டு எட்டா வாழ்க்கையப் பிரிச்சாச்சா...)
வருக மணவையாரே ஏதோ புரிஞ்சதை தெளி''ஞ்சுக்கிட்டேன்
நீக்குபிறரின் டைரியை படிப்பதே தவறு! இதில் புலன் விசாரணையெல்லாம் நடக்கிறதா? உங்கள் யோசனை ரொம்பவே சூப்பர்!
பதிலளிநீக்குவருக நண்பரே என்ன செய்வது ஏமாளியாக இருந்தால் இப்படித்தான்.
நீக்குஉங்க டைரிய பத்திரமா வெச்சுக்கங்க, இப்படி வெளிய விட்டா எல்லாரும் கீழ்ப்பாக்கம்தாங்க!
பதிலளிநீக்குஆமாம் நண்பரே அதற்காகத்தான் டைரிக்கே பூட்டு போட்டு விட்டேன் பார்த்தீர்களா...
நீக்குஹாஹாஹா! உங்கள் அந்தரங்கத்துக்குள் அத்து மீறி நுழைந்தவர்களுக்கு இதை விட வேறு தண்டனை கொடுக்க முடியாது. இதற்குப் பிறகு யாராவது டைரி கொடுத்தால் வாங்கியிருக்க மாட்டார்களே..? போகட்டும் நீங்கள் எழுதியிருப்பதற்கு என்ன பொருள் என்று கூறி விடுங்களேன், மண்டை காய்கிறது.
பதிலளிநீக்குவருக தாங்கள் கேட்டதற்காக....
நீக்குமலையாளத்தில் உள்ளது
என்னவளே இன்று நான் எனது வாழ்க்கையில் முதன்முறையாக உன்னை பார்த்தேன் சந்தோஷம்.
அரபியில் உள்ளது
எனது மனைவி இறந்தநாள் ஆகவே இன்று முழுவதும் நான் விரதம் இருந்தேன்.
நல்ல டெக்னிக் ஜி! டைரிக்கு ஒரு பாஸ்வேர்ட்!!! ஆனா இந்த பாஸ்வேர்டை உடைக்கறவன் ஒருத்தன் கிடைச்சுட்டான்னா ...
பதிலளிநீக்குஇருப்பான் இல்லாமலா இருப்பான்...
நீக்கு