சிலர் தேள் கொட்டினாலும் எறும்பு கடித்தது போல்
இருந்து விடுவார்கள் சிலர் எறும்பு கடித்தால்கூட தேள் கொட்டியது போல் துடித்து
விடுவார்கள் இதற்க்கு காரணம் உடல் பலத்தைவிட மனதைரியமே இந்த மனப்பக்குவம் எங்கிருந்து
வருகிறது ? புலிக்கு
பிறந்தது பூனையாகுமா ? என்கிறார்களே ! அப்படியானால் இது பரம்பரை
குணமா ? அல்லது
வாழ்க்கையில் அவன் படாதபாடா ? என்கிறார்களே ! அதனால்
வாழும் சூழ்நிலையிலிருந்து படித்துக் கொண்டதா ? சிலர் வீட்டில் மரணமே
நிகழ்தாலும் கல்லாய் இருந்து விடுவார்கள் சிலர்
அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கல்லாய் நின்று விடுவார்கள் இதில் தேளை எறும்பாய் நினைப்பது சரியா ? இல்லை
எறும்பை தேளாய் நினைப்பது முறையா ?
எனது நண்பர் சாம்பசிவம் அவர் பழங்கஞ்சி குடித்து
வாழ்ந்து கொண்டிருப்பவர் இன்று வரை எறும்பை தேளாகவே பாவிக்கிறார் அவரது மகனோ பிட்சா
போன்ற சாண்ட்விச்களை உண்பவன் அவன் தேளை எறும்பாகவே நினைத்து நசுக்குகிறான் இந்த இடத்தில்
உடல் பலம் தோற்று மனபலம் வெற்றி அடைகிறது
மனம்
கவலைபட்டு என்ன ஆகப்போகிறது ? உடல் தளர்ந்து
நோயாளியாகிறான் இதுவே மேலும் கவலையை கொடுக்கிறது ஆக மனதுக்கு கவலை என்ற விதையை
விதைப்பது உடல் வழியாக மனதுக்கு மேலும் கவலையென்ற கிளையை தொடுக்கிறது கடைசியில்
விடையென்ன ? தூர் (மனம்) சீக்கிரமே பழுதடைந்து மரமே (மனிதன்) சாய்கிற(ன்)து மனிதன் கவலை கொள்வதால் நோயாளியாகி
ஏழையாகிறான் அதன்மூலம் மருத்துவன் செல்வந்தனாகிறான்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதைப்போல....
(1962)
''நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை''
என்பது எத்தனை சத்தியமான வார்த்தை ஆகவே
கவிஞர் சவீதா அவர்கள் சொன்னதைப்போல....
(1989)
’’ நேற்று என்பது நம்ம நினைவில் உள்ளது
நாளை என்பது காணும் கனவில் உள்ளது
இன்று நம்ம கையில் உண்டு
இப்ப வந்து கட்டிக்கொள்ளம்மா’’
ஆகவே இன்று வாழ்வதே பாக்கியம் எனநினைத்து
கவலைகளை களைந்து சந்தோஷமாக வாழ முயற்சிப்போம் கஞ்சி குடித்தாலும் சரி பிட்சா சாப்பிட்டாலும் சரி.
சாம்பசிவம்-
அப்பத்தா
செத்தா கல்லுப்போல இருக்கலாம் பேரன் செத்துட்டா கல்லுப்போல நிற்கிறாப்பலதான் வரும்.




