தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 04, 2016

சோலந்தூர், சோஸியர் சோனைமுத்து


உண்மைகள் சொல்பவருக்கு இனிக்கும் கேட்பவருக்கு கசக்கும்.
எனக்கு சோஸியத்தில் அதிகமான நம்பிக்கை இருந்ததில்லை இருப்பினும் ஒருநாள் எனக்கு தெரிந்த பக்கத்து வீட்டு சோஸியர் ஒருவர் எனது கையைப்பார்த்து விட்டு...

01. உனக்குப் பிடித்த பழம் ஒன்று சொல் என்றார் நானும் எனக்கு பிடித்தது பலாப்பழம் என்று சொன்னேன்.
02. பிறகு உனக்குப் பிடித்த காய் ஒன்று சொல் என்றார் நானும் எனக்கு பிடித்தது பாகற்காய் என்று சொன்னேன்.
03. பிறகு உனக்குப் பிடித்த நிறம் ஒன்று சொல் என்றார் நானும் எனக்கு பிடித்தது கருப்பு என்று சொன்னேன்.

பிறகு அவர் என்னை தீர்க்கமான பார்வை ஒன்றை பார்த்து விட்டு நாலும் மூணும் ஏழு ஏழுல ரெண்டு போனால் அஞ்சு என கணக்கு போட்டு விட்டு அமைதியாக சொன்னார் பலாப்பழம் உள்ளே சுவையாக இருக்கும் ஆனால் வெளியே கரடு முரடாக தெரியும் இதே போலத்தான் உன்னை மேலோட்டமாக பார்ப்பவர்கள் உன்னை தவறாகவே நினைப்பார்கள் உன்னை நல்லவனாக நினைப்பவர்கள் மிகமிக குறைவு என்றார் உண்மைதானே என்னை நல்லவனாக நினைப்பவர் யாருமே இல்லையே ! அடுத்து பாகற்காய் நான் சிறு வயது முதலே விரும்புவது பாகற்காயைப்போல உனது வாழ்க்கை கடைசிவரை கசப்பாகவே இருக்கும் என்றார் முதலில் ஆச்சர்யமாக கேட்ட நான் பாகற்காயைப்பற்றி சொன்னதும் மனதில் சிறிய கனம் ஒன்று தொற்றிக் கொள்வது போன்ற உணர்வு பிறகு நிறம் உனக்கு பிடித்த கருப்புபோல கடைசி வரை உன் வாழ்க்கை இருட்டாகவே இருக்கும் என்றார் என் தலையில் ஒரு மினி லாரி களி மண்ணை கொட்டியது போல இருந்தது எனக்கு கண் முழித்துப் பார்க்க முடியவில்லை அங்கும் ஒரே இருட்டாக கருப்பாக இருந்தது காரணம் களி மண்ணும் கருப்பு என்பதாலோ ? அன்று முழுவதும் இதைப்பற்றிய சிந்தனையின் பலன் ஆறு விசயங்கள் எழுத ''கரு'' உருவானது இவருக்கு என் வாழ்க்கையை பற்றி தெரிந்ததால்தான் இப்படிச் சொன்னாரா ? கேட்ட விசயங்களை நான் தானே தேர்வு செய்தேன் ஒருவேளை வேறு பழம், காய், நிறம் சொல்லி இருந்தால் ? சோஸியம் உண்மைதானோ ? இது உண்மை என்றால் ?

என் வாழ்க்கை கடைசி வரை இப்படித்தானா ?

CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
இது கடைசி காலத்துலயா தோனுச்சு ?
சாம்பசிவம்-
நண்பா கசப்பான பாகற்காயில் பலனும் உண்டு, இனிப்பான அமிர்தத்தில் கேடும் உண்டு Take it Easy.

 காணொளி

48 கருத்துகள்:

 1. டேக் இட் ஈஸிதான்!

  என்னுடைய சில நண்பர்கள் 'ஏதாவது ஒரு பூவை நினைத்துக்கொள்' என்று விட்டு, 'நீ நினைத்த பூ மல்லிகை' என்பார்கள். இது எண்பது சதவிகிதம் சரியாக இருக்கும். ஏனென்றால் நிறைய பேர்களுக்கு பூமி என்றாலே மல்லிகைதான் சட்டென நினைவுக்கு வரும்.

  :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே யதார்த்தமான உண்மை இதுதான் அழகாக சொன்னீர்கள்.

   நீக்கு
 2. மேம்போக்காக சொல்லியிருக்கிறார் ,இந்த நாளில் இது நடக்குமென்று சொல்லச் சொல்லுங்கள் ,பார்க்கலாம் !நாலு ஜோசியர்கள் ஒரே ஜாதகத்தை நாலு விதமா சொல்வார்கள் ,இதையெல்லாம் சோ சோ சோ ,இதையெல்லாம் நம்ப முடியலே :)

  பதிவை த ம வில் இணைக்க நல்ல நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி செத்துப் போனவர்களுக்கே ஜாதகம் சொல்பவர்கள் உண்டுதானே... வழக்கமாக பதிவுக்கு வரும் நண்பர்களே இணைத்து விடுவார்களே... ஏதோ குழப்பம் இருக்கின்றது.

   நீக்கு
 3. இப்படியெல்லாம் சோதிடம் இருந்தாலும்
  தங்களது மனோதிடம் தான் சிறப்பு பெறும்..

  அவரு ஏதோ கிரகம் பிடிச்சுப் போய் தங்களிடம் வந்து மாட்டிக் கொண்டார் என நினைக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான் மனோதிடம் இருந்தால்தான் எதிர் நீச்சல் போட்டு வாழ முடியும்.

   நீக்கு
 4. "கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு டிக்கித் தாளம்"
  கில்லர்ஜி பார்வையிலே வெளுத்துப் போகும் டக்கு முக்கு டிக்கித் தாளம்
  புத்தாண்டு புளுகு ஜோசியம் வேணாம் ஜி!
  இன்னும் பத்து ஆண்டு அழகு (மீசை) ராஜ்யம் உனக்குத்தான் ஜி!

  வேணும்னா உமது மீசையை பார்த்து ஜோசியம் சொல்றேன்.
  சொக்கன் அருளாலே தேவக்கோட்டையில் வலைப்பதிவர் மாநாடு நடக்கப் போவுது புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக் கோட்டை......
  இது எப்படி இருக்கு?
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பா தேவகோட்டையில் வலைப்பதிவர் மாநாடா ? கேட்பதற்க்கு நன்றாகத்தான் இருக்கின்றது.... தேவகோட்டையில் எழுத்தாற்றல் உள்ளவர்கள் நிறையப்பேர் உண்டு அவர்கள் பெருங்கொண்ட நிலைக்கு போய் விட்டார்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 5. இது மனோதத்துவம் ஆக இருக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வது ஒருவகையான உண்மையான கூற்றுதான் நண்பரே.

   நீக்கு
 6. ஏற்கனவே நான் போட்ட கருத்து என்னாச்சு ,சோ சோ சோ விடம் கேட்டுச் சொல்லுங்க ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று அன்பின் ஜி குவைத் மன்னரின் பேத்தி செல்வி. வர்ஷிதாவின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தேன் வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விட்டது ஆகவே கருத்துரைகள் திறந்து விட தாமதம்.

   நீக்கு
 7. எழுதப்பட்ட விதியை யாரறிவார். நன்கு கற்றறிந்தவரும், அனுபவத்தால் கற்றறிந்ததையே பலனாய் கூறுகின்றனர். இவை தவறாகவும் போவதற்கும் இடமுண்டு. எதனையும் ஏற்றுக் கொள்வதில் உடன்பாடுள்ளவரென்றால், ஜோசியத்தை நம்புவராய் மாறிவிடுவீர்.
  இறைவன் வகுத்தவிதி இதுதானென்றால், இதனை கடந்து போகவும் அவனே அதற்கும் வழிவகுப்பான் என்ற நம்பிக்கை இருந்தால், ஜோசியர் கூறிய எதனையும் மனதளவில் கொண்டு செல்ல வேண்டும். மாற்றம் எப்ப வேணும்னாலும் நிகழும்....

  பதிவு எளிமையாய் உள்ளத்தில் உள்ளதை பறைசாற்றும் பதிவு!
  நன்றி சகோ எதனையும் வெளிப்படையாய் பேசவும் எழுதவும் செய்வது அனைவருக்கும் சாத்தியமல்ல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகிய நடையில் அருமையான விளக்கம் நண்பரே கருத்துரைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 8. அட கில்லர்ஜி ! அட போங்கப்பா! இந்த ஜோசியம் எல்லாம் நம்பிக்கிட்டு. பலாப்பழம் எங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்! கறுப்பும் பிடித்தக் கலர். பாகற்காய் ரொம்பவே பிடிக்கும். சரி அப்போ எங்களுக்கு என்ன சோசியம்? அதெல்லாம் இருக்கட்டும்

  நம்ம தமிழ் நாட்டுக்கு அப்படியே சோசியம் பார்த்துச் சொல்லச் சொல்லுங்கப்பா....அதுவும் புது வருஷம் பொறந்துருக்கு...தேர்தல் வேற வருது. ஆளாளுக்குப் பயமுறுத்திக்கிட்டுருக்காங்க....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் நாட்டுக்கு பரிகாரத்துடன் சோஸியம் சொல்ல, சோ.சோ.சோ எதற்கு ? நான் சொல்றேன் தெளிவாக கேட்பவர்கள் உண்டா ? வருகைக்கு நன்றி

   நீக்கு
 9. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

  - சாமானியன்
  saamaaniyan.blogspot.ftr

  எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தகவலுக்கு நன்றி வந்தேன்.

   நீக்கு
 10. அன்புள்ள ஜி,

  நல்ல தேர்வு... முக்கனியில் ஒன்று பலா... பாகற்காய் அருமையான மருத்துவ குணம்... கருப்பு தமிழனின் நிறம்...!

  காணொளியில் கண்டவர் எல்லாம் ஜோஸ்யம் பார்த்து எழுதிப் பாடி ஆடினாலும் பாடையில் போய்விட்டார்களே...! இருக்கும் போது ஜோஸ்யம் பேசிக் குறிசொல்பவர்கள் இறப்பதைச் சொல்வார்களா...?

  த.ம.7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே தேர்வு என்பதைக்கூட நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் காரணம் எனக்கு எப்பொழுதும் பிடித்தவை இதுவே அதையே சாதாரணமாக சொன்னேன்.
   மரணத்தை கணித்தவன் மகான் ஆகி விடுவானே.. வருகைக்கு நன்றி.

   நீக்கு
 11. சோசியம்என்பதே ஏமாற்று வேலைதானே
  கஷ்டப் படுபவர்களுக்கு ஒரு வடிகால் அவ்வளவுதான்
  நன்றி நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான விடயம் சொன்னீர்கள் நன்றி.

   நீக்கு
 12. பலாப் பழமும் பிடிக்கும்
  பாகற்காயும் பிடிக்கும்
  எனின்
  இனிப்பும் பிடிக்கும்.
  இன்று கிடைப்பது
  கசப்பு என்றால் அதிலொரு
  ரசிப்பும் இருக்கிறது
  என்றல்லவா பொருள். !!

  கருப்பு பிடிக்கும் என்றால்,
  இருளிலும் முன் செல்லும்
  உறுதி உண்டு
  என்றல்லவா பொருள் !!

  சரியான ஜோசியம் இதுவே.
  கரியான காசை கணக்கில் கொள்ளாமல், இக்
  கிழவனுக்குத் தக்க
  தட்சிணையை
  தபால் மூலம் அனுப்புங்கள்.

  முகவரி:
  உதவும் கரங்கள், சென்னை.

  வளமான 2016
  வழியெலாம் காண்பீர்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தாத்தா
   நல்ல விளக்கம் பொருளுடன் தந்தீர்கள் நன்றி தாங்கள் சொன்னதை செய்வேன் தாத்தா.

   நீக்கு
 13. சோதிடம் பார்ப்பவர்களில் பலர் சோதிடம் என்றால் என்னவென்று அறியாமலே தங்களது வயிறுப் பிழைப்பிற்காக சோதிடம் பார்ப்பதை ஒரு தொழிலாக செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே இது போன்ற சோதிடர்கள் சொல்வதைக் கேட்டு கவலை கொள்ளவேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான கருத்து பலருக்கும் வாழ்வளிக்கும் தொழில்தான் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 14. எதிர்காலத்தை கணிக்கவல்ல ( நிர்ணயிக்க அல்ல ) கணிதம் ஒன்று இருப்பதாகவே தோன்றுகிறது... ஆனால் அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரங்களிலும் குறிப்பிடப்படும் இதை அறிந்தவர்கள் மிக மிக சொற்பம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

  மற்றப்படி ஜோசியம் பெரும்பாலும் மிக லாவகமான, அனைவருக்கும் பொருந்தும் வார்த்தைகளை சுழற்றி விளையாடும் வித்தை ! பணத்தேவை, மன சங்கடம், தனிமை உணர்வு போன்றவை சமூகத்தின் அனைவரும் உண்டு.

  ஆனா ஒண்ணுஜீ... முதல்ல உங்க மீசையை பார்த்து நானும் பயந்துதான் போனேன் ?!!!

  சோனைமுத்து சொன்னதால எங்க கில்லர்ஜீ " சொக்கத்தங்கம்கறது " மாறிடாது !

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான விளக்கம் நன்று நண்பரே.. தன்நம்பிக்கையே தனக்குதவி.

   நீக்கு
 15. சோதிடம் பார்ப்பவர்களுக்கு ஓரளவு சைகாலஜி தெரிந்திருக்க வேண்டும் உங்களை போலவே இன்னொருவர் அதேமாதிரி பிடிக்கும்களைச் சொன்னால் சோசியர் அதே பதிலைச் சொல்வாரா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா சரியான கேள்வி ஆனால் இதே பதிலையே பிறருக்கும் வேறு வகையில் சொல்வார் என்பது எனது கருத்து காரணம் வாய்ச்சொல்லில் வீரர்கள் சோஸியர்கள்.

   நீக்கு
 16. சோதிடம் ஒருநாள் உண்மையாகும் பலநாள் பொய்யாகும் நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடல் நிலை சரியாகி விட்டதா நண்பரே ? தாங்கள் சொல்வது உண்மையே...

   நீக்கு
 17. சோதிடம் ஒரு கணிதம் மற்றும் சைக்ரியாடிஸ்டிக் கலந்த ஓர் தொழில்! கிரகங்களை வைத்து அதன் பொதுப்பலன்களை வைத்து எல்லோருக்கும் இப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது. நம் வாயைக் கிளறியே நமக்கு சோதிடம் சொல்லிவிடுவார்கள் நிறைய பேர்! சிறப்பான பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான விடயத்தை சொன்னீர்கள்

   நீக்கு
 18. நான் ஜோசியம் இதுவரை பார்த்ததில்லை! இந்தப் பாடலையும் முதல் முறையாகக் கேட்கிறேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. சிந்திக்க வைப்பதாக இருந்தது.

  இதன் தொடர்பாய் நான் கேட்ட கேள்வி,
  விகடன் 'ஹாய் மதன்' பகுதியில் வெளியானது.

  அதன் இணைப்பு:
  http://nizampakkam.blogspot.com/2009/11/himathanpathil.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இதோ செல்கிறேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. நடப்பது நடக்கட்டும் என்பதே என் கருத்து!

  பதிலளிநீக்கு
 21. சோலந்தூர் சோசியர் சோலமுத்து கனநாளா காணலியே என நினைத்தேன்..
  உண்மையில் சோசியம் பார்த்தியளோ..? நடப்பதுதான் நடக்கும் அண்ணா ஜி. இனிவரும் காலம் நல்லதாக அமையட்டும் உங்களுக்கு.
  பாடல் நன்றாக இருக்கு. கேட்ட ஞாபகம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நான் காசு கொடுத்து சோஸியம் பார்த்ததாக புவியியல் sorry வரலாறு இல்லை தெரிந்த சோஸியரின் ஓசி உபகாரம் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 22. விடுங்க அண்ணா...
  எது நடக்கணுமோ அது நடக்கும்.. அதை நாம் மாற்றாவா முடியும்...

  பதிலளிநீக்கு
 23. வணக்கம்
  ஜி
  இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை.. எல்லாம் மூடநம்பிகை ஜி.... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு