தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 08, 2016

தேளெறும்பு


சிலர் தேள் கொட்டினாலும் எறும்பு கடித்தது போல் இருந்து விடுவார்கள் சிலர் எறும்பு கடித்தால்கூட தேள் கொட்டியது போல் துடித்து விடுவார்கள் இதற்க்கு காரணம் உடல் பலத்தைவிட மனதைரியமே இந்த மனப்பக்குவம் எங்கிருந்து வருகிறது ? புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? என்கிறார்களே ! அப்படியானால் இது பரம்பரை குணமா ? அல்லது வாழ்க்கையில் அவன் படாதபாடா ? என்கிறார்களே ! அதனால் வாழும் சூழ்நிலையிலிருந்து படித்துக் கொண்டதா ? சிலர் வீட்டில் மரணமே நிகழ்தாலும் கல்லாய் இருந்து விடுவார்கள் சிலர் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கல்லாய் நின்று விடுவார்கள் இதில் தேளை எறும்பாய் நினைப்பது சரியா ? இல்லை எறும்பை தேளாய் நினைப்பது முறையா ? 
எனது நண்பர் சாம்பசிவம் அவர் பழங்கஞ்சி குடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் இன்று வரை எறும்பை தேளாகவே பாவிக்கிறார் அவரது மகனோ பிட்சா போன்ற சாண்ட்விச்களை உண்பவன் அவன் தேளை எறும்பாகவே நினைத்து நசுக்குகிறான் இந்த இடத்தில் உடல் பலம் தோற்று மனபலம் வெற்றி அடைகிறது
 மனம் கவலைபட்டு என்ன ஆகப்போகிறது ? உடல் தளர்ந்து நோயாளியாகிறான் இதுவே மேலும் கவலையை கொடுக்கிறது ஆக மனதுக்கு கவலை என்ற விதையை விதைப்பது உடல் வழியாக மனதுக்கு மேலும் கவலையென்ற கிளையை தொடுக்கிறது கடைசியில் விடையென்ன ? தூர் (மனம்) சீக்கிரமே பழுதடைந்து மரமே (மனிதன்) சாய்கிற(ன்)து மனிதன் கவலை கொள்வதால் நோயாளியாகி ஏழையாகிறான் அதன்மூலம் மருத்துவன் செல்வந்தனாகிறான்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதைப்போல.... (1962)  
 ''நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை''
என்பது எத்தனை சத்தியமான வார்த்தை ஆகவே கவிஞர் சவீதா அவர்கள் சொன்னதைப்போல.... (1989)  
’’ நேற்று என்பது நம்ம நினைவில் உள்ளது
நாளை என்பது காணும் கனவில் உள்ளது
இன்று நம்ம கையில் உண்டு
இப்ப வந்து கட்டிக்கொள்ளம்மா’’
ஆகவே இன்று வாழ்வதே பாக்கியம் எனநினைத்து கவலைகளை களைந்து  சந்தோஷமாக வாழ முயற்சிப்போம் கஞ்சி குடித்தாலும் சரி பிட்சா சாப்பிட்டாலும் சரி.  

சாம்பசிவம்-
அப்பத்தா செத்தா கல்லுப்போல இருக்கலாம் பேரன் செத்துட்டா கல்லுப்போல நிற்கிறாப்பலதான் வரும். 

52 கருத்துகள்:

 1. சிற்றெரும்பு என்னைக் கடித்தால் ரொம்பப் பிடிக்கும்,ஏன்னா நான் சின்ன ராஜா :)

  பதிலளிநீக்கு
 2. நினைவில் வருவது நேற்று
  கனவில் வருவது நாளை
  அப்ப
  கையில் இருப்பது இன்று
  இப்ப - உன்
  எண்ணத்தில் வரவேண்டியது
  வாழ்ந்து காட்டு!

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள ஜி,

  மனம் ஒரு குரங்கு... என்றாலும் விஷம் கொடியதுதானே...! மனத்தைரியம் மனிதனுக்கு மனிதன் மாறுபாடுகிறது...!
  நேற்று... இன்று...நாளை...! இன்று இருப்பது நிச்சயம் என்பதால் வாழ்ந்துவிடு...! மறுஜென்மம் என்பதை மறந்துவிடு...! நேற்று இருந்தோம் என்பதால் களித்திடு...!

  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே மன தைரியம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது உண்மைதான்.

   நீக்கு
 4. சந்தோஷ தருணங்களில் கூட மனம் ஒரு சிறு எச்சரிக்கை கொடுக்கும், அடுத்து ஏதாவது கவலை அளிக்க கூடிய நிகழ்வு வருமோ என்று.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  ஜி
  உண்மைதான் எந்த காரியம் செய்தாலும் மனதில் உறுதி வேண்டும்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. அழகர் மீசை ராசாவே உம்மை சிற்றெறும்பு கடிச்சுதா?
  "மனம் பழுதடைந்து மனிதன் மரமாக சாய்கிறான்".
  இன்னொரு வலைச் சித்தர் கருவாகி விட்டார்.
  சிந்தனை செய் மனமே!
  செய்தால் தீவினை அகன்றிடுமே......................
  .......................................................................

  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உயரமான இடத்திலிருந்து வரும் நண்பரின் கருத்து உயர்வாகவே இருக்கும் நன்றி நண்பா

   நீக்கு
 7. நல்லா சொன்னீங்க சகோஜி...
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ? தொடர்ந்து பதிவுகளை எழுதுங்கள்.

   நீக்கு
 8. அருமையாச் சொல்லியிருக்கீங்க...

  பதிலளிநீக்கு
 9. பிள்ளைப் பிராயத்தில் இருந்தே மன தைரியத்துடன் வளர்க்க அன்னையின் பங்கு அதிகம். வளர்ப்பு முறையின் படியே குழந்தை மனோதைரியமும்/ கோழையாகவும் மாறுகிறது.

  பழகப் பழக வந்துவிடும்...அடிபட அடிபட கவலையும் மறத்துப்போகும்.

  யதார்த்தம் உணரச்செய்து விடும்.

  பகிர்விற்கு நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அருமையான கருத்தை பதிய வைத்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. மனோதிடம் பற்றி நீங்கள் சொல்வது ஏற்புடையது, ஏனென்றால் ஏற்கனவே நீங்கள் வெளிநாடு செல்லும் போது நிகழ்ந்த விபத்துக்குப் பிறகும் அதை எதிர்கொண்டு சென்று வந்தவர் அல்லவா?

  கஷ்டம் வரும்போது அதை நீக்கிவிட்டு தொடர என்ன செய்யவேண்டுமோ அதை செய்தால் போதும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள் தாங்கள் எல்லா பதிவுகளையுமே படிக்கின்றீக்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி

   நீக்கு
 11. ‘நேற்று என்பது இறந்தகாலம் ...
  இன்று என்பது நிஜம்.
  நிஜத்தில் வாழ கற்றுக்கொள் .
  எதிர் காலம் உனதாகும்.’ என்பதை அறியாதவரல்லர்கள் நாம். எனவே இன்றைக்கு வாழ்வோம் நாளை நல்லது நடக்குமென்று எண்ணி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் அருமையான கருத்துக்கு நன்றி

   நீக்கு
 12. நேற்று என்பது திரிந்த பால் நாளை என்பது மதில்மேல் பூனை இன்றெனப்படுவது கையில் வீணை மீட்டி மகிழ்வோம் வேண்டாத சிந்தனைகளைத் தூக்கிக் கடாசுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அருமையான சிந்தனைக்குறிய கருத்து தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 13. உளி தாங்கும் கற்கள் தானே
  மண் மீது சிலையாகும்,
  வலி தாங்கும் உள்ளம் தானே
  நிலையான சுகம் காணும்!
  யாருக்கில்லைப் போராட்டம்!
  கண்ணில் என்ன நீரோட்டம்!
  ஒரு கனவு கண்டால்
  அதை தினம் முயன்றால்
  ஒரு நாளில் நிஜமாகும்!

  எறும்பும் தேளாவது, தேள் எறும்பாவதும் நம் மேல் படும் உளிகளின் வலிகளை பொறுத்தது தானே? நமக்கு ஒன்றென்றால் தாங்கிக்கொள்ளும் நாம் நம் பிள்ளைகளுக்கும் ஏதுமென்றால் பதறித்துடிப்பதேன்? யோசித்தால் மரணம் கூட பல நேரம் தேளாக என்ன எறும்பாக கூட வலிதருவதில்லை. மரணச்செய்தி கேட்கும் போது சீக்கிரமாய் விடுதலை பெற்று சென்றவரை நினைத்து நிம்மதி உணர்வு தான் இப்போதெல்லாம் தோன்றுகின்றது!

  கடைசியில் சொன்னீர்களே! இன்றைய நாளில் இன்றைக்கென வாழ்வோம் என.. அது தான் என் பாலிசி. நாளைக்கு நடக்க போவதை நினைத்து வாழ்ந்தால் தேளை விட வாழ்க்கை வலிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அழகான நம்பிக்கை தரும் பாடல் வரிகளுடன் விரிவான விளக்கம் நன்று

   நீக்கு
 14. நம்ம குமாரின் வழி காட்டலில் தமிழ் மணத்தில் ஒட்டு போட ஆரம்பித்து விட்டேன். அவர் தளத்தில் முதல் ஸ்டெப் .. இரண்டாவது ஒட்டு உங்களுக்கு போட்டாச்சு. எனக்கு அனுப்ப வேண்டிய கமிஷனை குமாரிடம் கொடுத்து விடுங்கோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ஓட்டளிப்புக்கு நன்றி தாங்களும் ஓட்டுப்பட்டையை இணையுங்கள் நான் தொடரும் பதிவர்கள் அனைவருக்குமே ஓட்டுப் போடுவேன் அவர்கள் ஓட்டுப்போடா விட்டாலும்.. எனக்கு தாங்கள் போட்டது இரண்டாவது அல்ல மூன்றாவது... நன்றி

   நீக்கு
  2. அப்படியா?அதை எப்படி கண்டு கொண்டீர்கள்?

   எனக்கு தமிழ் மணம் இணைப்பு பத்தி எல்லாம் தெரியாது. குமாரிடம் தான் சொல்லணும்.என் வலைப்பூ ஆசான் குமார் தான். அவர் வழி காட்டலில் தான் இந்த ஒட்டும் போட்டேன்.

   நீக்கு
  3. வாங்க வாங்க சில பதிவர்கள் எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு நினைக்கிறாங்க.... ஐயோ.... ஐயய்யோ.. நீங்களும் அப்படி நினைச்சுட்டீங்க போல.... ஐயோ....

   நீக்கு
  4. இந்த குசும்பு தானே வேண்டாங்கறது! உங்களுக்கு தெரியாது என எனக்கு தெரிந்தால் நான் ஏன் எனக்கு தெரியாததை உங்ககிட்ட கேட்டு தெரிந்துக்கணுமாம்? உங்களுக்கு தெரியும் என எனக்கு தெரிந்ததால் தானே எனக்கு தெரியாதை தெரிந்துக்க தெரிந்தவராய் உங்களை தெரிந்தெடுத்தேன்.
   இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தேன்.. தலையை பிச்சிக்குவேன். அதனால் விடு ஜூட்!

   நீக்கு
  5. ஆஹா... இடம் தெரியாமல் வாயக்கொடுத்துட்டேனே.... அவ்வ்வ்வ்வ்வ்

   நீக்கு
 15. தேள் எறும்பு என்று ஜி இப்பொது ரொமப்வே தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டீர்கள்! ஹஹஹ்..எறும்பு கடிக்கும் தேள் கொட்டும். தேளைத் தோளில் சுமந்தால் மன உறுதி!!! ஸ்பா முடிலப்பா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்.. கொஞ்சம் பேசவிட மாட்டீங்களே... இதுக்குத்தான் நான் ஊமை மா3 இருக்குறது.

   நீக்கு
 16. தேள் மாத்ரி கொட்டாம எறும்பு மாதிர் சுருக்குன்னு சொல்லி இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 17. என்னிடம் நான் நேசிக்கும் குணமே அதுதான் .. பிரளயத்திற்காக அச்சப்படுவேன்... ஆதங்கப்படுவேன்.. ஆனால் அடுத்த நொடியே எதுவுமே நிகழாதது போல் வாழ்க்கையைக் கட்டுக்குள் கொண்டு வர முடிகிறது.... நல்ல பதிவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் இதுதான் வேண்டும் எல்லோர் மனதிலும்....

   நீக்கு
 18. நல்லதோர் பகிர்வு. எந்த இன்னல் கண்டும் துவளாதிருக்க வேண்டும் என்று தான் நானும் விரும்புவது.....

  பதிலளிநீக்கு
 19. உண்மையான கருத்துக் கூறினீர்கள்.
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
 20. என்னை கஞ்சியும் குடிக்கக்கூடாது...பீட்சாவும் சாப்பிடக்கூடாது... ஆவியாக்கின இட்லிதான் சாப்பிடனும் னு செல்வந்தரான மருத்துவர் கூறிவிட்டார். தங்கள் வாக்குப்படி எது சாப்பிட்டாலும் பரவாயில்லை கவலைப்பட்டால் துபாய்தான் என்பது உண்மைதான் நண்பரே.............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா கவலைப்படுவோர்கள் எல்லோரும் துபாய் 80, 100 சதவீதம் உண்மை நண்பரே

   நீக்கு
 21. சிந்தனைக்குரிய பதிவு.கடைசிபந்தியில் கூறியிருப்பதுபோல யதார்த்தம். காலையில் எழுந்தால்தான் தெரியும் நம்வாழ்வு.
  கல்லாய் இருந்துவிடுவார்கள்
  கல்லாய் நின்றுவிடுவார்கள்_ அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு