தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 14, 2016

அது இது எது ?



என்ன டாக்டர் சொல்றீங்க ? இந்த வார்டுல இருக்கின்றவங்க எல்லோரும் சினிமாவால் மனநலம் பாதிக்கப்பட்டவங்களா ?
ஆமாங்க இதுல என்ன ஒற்றுமைன்னா.... இவங்க எல்லோருமே தயாரிப்பாளராக இருந்தவங்கதான்.
எப்படி ?
அதோ ஒரு மாதிரி இருக்காரே... அவருதான் சேது படம் எடுத்தவரு..
யாரையோ கட்டிப்பிடிப்பது போல பாவ்லா பண்ணுறாரே இவரு ?
இவரு மாது அப்படினு ஒரு படம் எடுத்து போண்டியானவரு.
இவரு காதை பொத்திக்கிட்டு இருக்காரே ஏன் ?
அவரு காது அப்படினு படம் எடுத்தாரு அது கையைக் கடிச்சுருச்சு அதோட மனவியாதி புடிச்சு காதைப் பொத்திக்கிட்டே இருக்காரு...
இவரு எதுக்கு ? பலூன் ஊதுறது மாதிரி இருக்காரு ?
இவரு ஊது அப்படினு படம் எடுத்தாரு படம் ஊத்திக்கிடுச்சு அதோட இவரே சங்கு ஊதுறது போலவே ஆயிட்டாரு..
இவருக்கு என்ன பிரச்சினை ?
இவரு மக்கள் பிரச்சினைகளை வைத்து பொது அப்படின்னு படம் எடுத்தாரு ஆளுங்கட்சிக்காரங்க பொது இடத்துல வச்சு நச்சதுல இப்படி ஆகிட்டாரு...
இவரு ஏன் பைப்புக்கு பக்கதுலயே நிற்கிறாரு ? 
குடியின் கொடுமையை விளக்கி மது அப்படினு படம் எடுத்தவரு படம் ஓடாமல் போனாதால் குடிகாரராகி இப்படி ஆகிட்டாரு...
இவரு அமைதியாக இருக்காரே...
இவருதான் சாது அப்படினு ஒரு படம் எடுத்தவரு...
அவரு மந்திரம் சொல்லுறது மாதிரி இருக்காரே.... ?
அவருதான் ஓது அப்படினு படமெடுத்தவரு.... இன்னும் அப்படி. இருக்காரு...
இவரு சதுரம் கட்டி நடக்கிறாரே... ?
இவருதான் கேது அப்படினு படமெடுத்தவரு...
இவரென்ன, அங்கேயும் இங்கேயும் கையைக் காட்டுறாரு ?
இவருதான் அது இது எது ? படம் எடுத்தவரு..
சரி டாக்டர் இவங்களை நல்லபடியாக சீக்கிரமே குணமாக்கி திரையுலகத்துக்கு நீங்கதான் மீண்டும் தாரை வார்க்கணும்.
முடியாதே...
ஏன் டாக்டர்.... ?
பொது மக்களின் நலம் காக்க நீங்க இவங்களை இப்படியே வச்சு பாதுகாக்கா விட்டால் உங்களை சுடுகாட்டுக்கு தாரை வார்த்துருவோம்னு தினம் மூணு மொட்டைக்கடிதம் வருதே... நான் என்ன செய்வது ? எனக்கும் ரெண்டு பொண்டாட்டிகளோட.... குடும்பம் இருக்குதுல.....
அப்படினா... இவங்க கதி ?
எல்லாம் பகவான்(ஜி) செயல்.

புதன், அக்டோபர் 12, 2016

நாலு வேலி நிலம்


கணவனுக்கும் மனைவிக்கும் ஊடலில் தொடங்கி கூடலில் முடிவது போல் கவிஞர் அழகாக வர்ணித்திருப்பார் இன்று கூடலே ஊடலில் வந்து நீதி மன்றத்தில் முடிகிறது என்ன செய்வது ? காலக்கிரகமடி கருமாரி.

இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் தமிழர்களாகிய நாம் உறங்கிய தருணத்தை பயன் படுத்தி இந்தப்பாடலை ரோமானியர்கள் அவர்களின் ரோமானிய மொழியில் மொழி பெயர்த்து எழுதி இந்த கொடுபாதக செயலை செய்து இருக்கின்றார்கள் நாம் விழிந்திருந்தால்தான் தமிழகத்தில் நல்ல ஆட்சி கொண்டு வந்திருப்போமே என்பது வேறு விடயம் என்று சினிமாக்காரனிடம் மயங்கினோமோ இன்றுவரை பரம்பரை பரம்பரையாக தொடர்கிறது சரி கிடக்கட்டும் அது அரசியல் அதை சட்டப்படி பெட்டி பெரியசாமி அவர்களை வைத்து பார்ப்போம்.

 மேலும் இந்தப்பாடல் காட்சியை மிகவும் ஆபாசமாகவும் சித்தரித்து எடுத்து இருக்கின்றார்கள் பொருளின் அர்த்தத்தை மாற்றவில்லை ஆனால் புதிய மெட்டில் மாற்றி பாடியிருக்கின்றார்கள் தங்களின் பார்வைக்காக பாடல் வரிகளை குறைக்காமல் காட்சிகளை மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு Edit செய்து தந்து இருக்கின்றேன் காரணம் கில்லர்ஜி in தளத்தில் ஆசாபாசங்கள் உண்டு ஆபாசங்களுக்கு இடமில்லை என்பது தாங்கள் அறிந்ததே இதோ...

முதலில் நமது மருதகாசியாரின் //ஊரார் உறங்கையிலே// கேட்டுப்பாருங்கள்.
காண்ஒலி கேட்பீர்.

பிறகு //ஷிஸ்சா மங்குப் ப்ரேங் ஹெல்தோ மெஹப் பேய்// கேட்டுப்பாருங்கள்.
காண்ஒலி கேட்பீர்.

Chiwas Regal சிவசம்போ-
இருந்தாலும் பொண்டாட்டியும், புருஷனும் இப்படியா மேடையிலே பாட்டுப்பாடியே.. சண்டை போடுவாங்க ?

செவ்வாய், அக்டோபர் 11, 2016

தலைவர் வாழ்க !



சாலையில், சிலைகளாய்  மாலையுடன் தலைவர்கள்.

சாம்பசிவம்-
நாட்டில் சிலைகள் பெருகி வருவதும் அதற்கு மாலைகள் இடுவதும் வழக்கமாகி விட்டதே இதற்கு காரணம் என்ன ?
Killergee-
விஞ்ஞான வளர்ச்சிதான்.
சாம்பசிவம்-
என்னய்யா நீரு மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுறீரு கல்லுல வடிச்ச சிலைக்கு, செடியில வளர்ந்த பூவை மனுஷன் மாலையா போடுறான் இதுக்குள்ளே என்னய்யா விஞ்ஞானம் இருக்கு ?
Killergee-
விஞ்ஞானம் வளரத் தொடங்கி என்று மனிதன் புகைப்படக் கருவியை கண்டு பிடித்தானோ அன்றிலிருந்தே மனிதன் தன்னை அழகு படுத்திக் கொண்டும், புகைப்படம் எடுத்தும், அதை பிறரிடம் வெளிப்படுத்திக் கொண்டும், தற்பெருமையடித்துக் கொள்ளத் தொடங்கினான். போதாக்குறைக்கு வீடியோ என்ற பெயரில் நிழல் செயல்தடம் வேறு, பத்திரிக்கைக்காரர்கள் இவர்களை போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் விளம்பரப்படுத்தி அவர்கள் அதை வியாபாரமாக்கி பணம் உண்டாக்குகிறார்கள். தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவதை போட்டோ எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது, அதனால் தெய்வகுற்றம் ஏற்பட்டு விட்டது. என்று அரசாங்கம் இதற்கு தடைச்சட்டம் கொண்டு வந்தால் ? எந்தவொரு அரசியல்வாதியும் இதைச் செய்ய மாட்டார்கள். இதனால் ஜாதிப் பிரச்சினைகள், சண்டைகள் ஒழிவதோடு, ஜாதிச் சங்கங்கள் தானாகவே கலைந்து விடும், நாளடைவில் சிலைகள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும். சிலைக்கு மாலை அணிவதுதான் தலைவருக்கு செலுத்தும் மரியாதை, என்று கருதுவதை விட்டு, விட்டு அந்த தலைவர்களின் வாரிசுகளுக்கு பொருளாதார உதவி செய்தால் அந்த தலைவர்களின் குடும்பங்களுக்கு ஆத்மதிருப்தி கிடைக்கும் தலைவருடைய ஆத்மாவுக்கும் திருப்தி கிடைக்கும். இவை நடைமுறைக்கு எப்போது வரும் ? அரசியல்வாதிகள் வரும்போது, அவர்களுக்கு பின்னால் ஒரு கூட்டம் இறந்துபோன தலைவர்கள் சிலைக்கு பக்கத்தில் நின்று கொண்டு இறந்தவருக்கு மௌனஅஞ்சலி செய்யாமல், இங்கிதம் தெரியாமல் அரசியல்வாதிகள் தரும் பணத்திற்காக 'தலைவர் வாழ்க' என்று சொல்லும் அறியாமைவாதிகள் இருக்கும்வரை இது தொடரும். மேலும் இனி வரும் காலங்களில், தலைவருடைய வாரிசுகளுக்கு உதவ வேண்டிய அவசியம் ஏற்படாது என்றே கருதுகின்றேன். காரணம் இப்பொழுது இந்தியா முழுவதும் வாரிசு அரசியல்தான் நடந்து கொண்டு இருக்கிறது. அரசியல்வாதி மகன் அரசியல்வாதி, நடிகர் மகன் நடிகர், நடிகை மகள் நடிகை, கிரிக்கெட்காரர் மகன் கிரிக்கெட்காரர், கூலிக்காரன் மகன் கூலிக்காரன், தொழிலாளி மகன் தொழிலாளி, இதனால் முதலாளி மகன் முதலாளியே இந்நிலை, தொடர்வதற்கு யார் காரணம் ? கூலிக்காரனும், தொழிலாளியும் சிந்தனை உணர்வு இன்றி மதுவுக்கு அடிமையாகி வெளியுலகை காணாது வீழ்ந்து கிடப்பதுதான், இதனால் அவன் சந்ததியும் இதே வழியில் சென்று கொண்டே இருக்கிறது. இந்த மானி(ட்)டர்களுக்கு, வீழ்வது தவறல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு என்று யார் செவிட்டில் அறைந்து செவியுரைப்பது  ? 
சாம்பசிவம்-
என்னய்யா இது எங்கேயோ கொண்டு போயிட்டீரு நீரு
எப்பவுமே இப்படித்தானா.. இல்லே இப்படித்தான் எப்பவுமா ? 

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

ஜாதி வெறியும், அகலக் குழியும்


வராண்டாவின் சோபாவில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் இளவயது தொழில் அதிபர் அமர்நாத் அருகில் வந்த மனைவி வர்த்தனா தன்னை கணவன் கண்டு கொள்ளாமல் ஏதோ சிந்தனையில் இருக்கவும் தோளில் கை வைத்து...

என்னங்க ?
ஆங்.. என்ன சொல்லு வர்த்தனா ?

ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?
இல்லை... ஒண்ணுமில்லையே...

எனக்குத் தெரியாதா... சொல்லுங்க.... கம்பெனியில் எதும் பிரச்சனையா ?
இல்லை, அது வந்து.... வந்து..

இப்ப சொல்றீங்களா.... இல்லையா ?
ம்.............. வர்த்தனா நான் ஒண்ணு கேட்டால் கோவிக்க மாட்டியே ?

சொல்லுங்க ?
உனக்கு வாழ்வாதாரத்துக்கு வேண்டிய வசதிகளை நமக்கு கல்யாணமாகி இந்த 15 வருஷத்துலே சேர்த்து வச்சுட்டேன், பாதுகாப்புக்கு இரண்டு மகன்கள்...

இப்ப எதுக்கு பீடிகை போடுறீங்க ?
அது... வந்து எனக்கு ஏதாவது ஆ....யிட்டா....

ஏதாவதுனா... புரியலையே....
அது.. வந்து நா.. ன் செத்துப் போயிட்டா ?

செத்துப் போயிட்டா ?
நீ என்ன, செய்வே ?

இப்போ, பிரச்சனையை சொல்லுங்க எதுக்காக இப்படி சமாளிக்கிறீங்க.. அசடு வழியுது துடைச்சிட்டு சொல்லுங்க ? உங்களுக்கு பொய் சொல்லத் தெரியாது.
இல்லை வர்த்தனா சத்தியமா இதத்தான் கேட்கணும்னு நினைச்சேன்.

இப்போ இது அப்படியென்ன, முக்கியமாபோச்சு சோலந்தூர்காரரிடம் சோசியம் பார்த்தீங்களா... நீங்க நம்ம மாட்டீங்களே...
இல்லை தொழில் எதிரிங்க நிறைய வளர்ந்துட்டாங்க... எனக்கு ஏதாவது ஆகிடுமோனு...

உங்களுக்கு பயமா ?
உயிர்ப்பயம் இல்லை, உன்னை நினைச்சுத்தான்...

நீங்க நியாயமாத்தானே உழைக்கிறீங்க அப்புறம் எதிரிங்க எப்படி ?
அதான் எனக்கும் புரியலை வர்த்தனா.

கம்பெனி வளர்றதுக்கும், நொடிச்சுப் போறதுக்கும், அடிப்படை காரணவாதிகள் தொழிலாளர்கள்தான் இப்போ நமக்கு வேண்டிய அளவு வசதி வாய்ப்புகள் சொத்து இருக்கு இனிமேல் வர்ற லாபத்தை குறைச்சு எடுக்கலாம் மிகுதியை தொழிலாளர்களுக்கே கொடுக்கலாம் அது நம்மை என்றைக்கும் காக்கும்.
அப்ப தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கூடுதலாக கொடுக்கச் சொல்றியா அதனால் அசோஷியேசன் மூலமாக கம்பெனி முதலாளிகளை பகைக்க வேண்டியது வரும்.

இது எனக்கு தெரியாதா  நாம் சம்பளத்தை நேரடியாக கூட்டினால்தானே பிரச்சனை தீபாவளி போனஸை தாராளமாக கொடுக்கலாம் வருடத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட பணத்தை ஒதுக்கி நம்ம குழந்தைகள் பிறந்த நாட்களுக்கு குழந்தைகளை வைத்தே தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடப்புத்தம், சைக்கிள், கம்ப்யூட்டர் இப்படிப் பரிசுப்பொருள் கொடுக்கலாம் கம்பெனி ஆண்டு விழாவுக்கு பரிசு என்று சொல்லி பணமுடிப்பு அல்லது தங்க காசு இப்படி கொடுத்தால் நமக்கு வரும் எதிரிகளை தொழிலாளர்களே அடையாளம் கண்டு அழிச்சிட வாய்ப்பு இருக்கு, எந்த தொழிலாளரும் கம்பெனிக்கு துரோகம் செய்ய நினைக்க மாட்டாங்க மனசாட்சி சுடும்.
நல்லது வர்த்தனா இனிமேல் இப்படியே செய்வோம்.

நம்ம பசங்களும் மூத்தவன் அடிக்கடி விஞ்ஞானியாவேன்னு சொல்றான், இளையவன் பைலட்டாகணும்னு சொல்றான் அவங்களோட இஷ்டத்துக்கு படிப்பை விட்டால்தான் முழுமூச்சாக படிப்பாங்கே, நம்ம இஷ்டத்துக்கு டாக்டராகணும், இஞ்சினியராகணும்னு நாம் ஆசையை வளர்க்க கூடாது அது ரொம்ப முக்கியம் நாளைக்கு கம்பெனியை நிர்வகிப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை நமக்குப்பிறகு கம்பெனி தொழிலாளர்களுக்கே போகணும் எனக்கும் இதுதான் ஆசை நாம இவ்வளவு வசதியாக வாழ்வதற்கு அவர்கள்தான் காரணம் அதை நாம கடைசிவரை மறக்க கூடாது இதுக்கு மேல் நமக்கு பணம் வேண்டாங்க அது நமது உயிர்களுக்குத்தான் ஆபத்து அம்பானி குடும்பத்தைப் பார்த்தீங்களா... கோயிலுக்கு சாமி கும்பிடப் போனால்கூட அவங்களைச்சுற்றி 25 செக்யூரிட்டி மிஷின் கன்னோடு போறாங்க.. பிறகு நிம்மதியாக சாமி கும்பிட முடியுமா ? அவுங்களிடம் இல்லாத பணமா... அவங்க குடும்பத்துக்குள்ளே சொத்து பிரிக்க வேண்டிய அவசியமென்ன கூட்டுக் குடும்பம் எவ்வளவு பாதுகாப்பான விசயம் என்பதை தெரிய விடாமல் கண்ணை மறைச்சது இந்த பணம்தானே உயிருக்கு வினையான இந்தப்பணம் நமக்கு வேண்டாங்க, வாழுறதுக்கு தேவையான பணம் மட்டும் போதும் அதுவும் இப்பவே தாராளமாக இருக்கு.
நல்லது வர்த்தனா நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும் வெளி உலகத்துக்குத்தான் நான் முதலாளி மற்றபடி உன்னோட ஆலோசனையின் படிதான் கம்பெனி இவ்வளவு வளர்ச்சி அடைஞ்சிருக்குனு எனக்கு மட்டும்தானே தெரியும் நமக்கு கல்யாணம் ஆன புதுசுல கோயிலுக்குப் போயி நமது கஷ்டங்களை சொல்லி அர்ச்சனை பண்ணிட்டு அந்த தேங்காய்களை படிக்கட்டுகள்ல உட்கார்ந்து உடைச்சுத் தின்போமே அந்த சுகம் மறுபடியும் கிடைக்குமா ? சமூகத்துக்கு பயந்து அந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியலையே உண்மைதான் இப்பவே தூக்கம் குறைஞ்சு போச்சு இதுக்கு மேலேயும் பணம் சேர்த்தால் உயிருக்குத்தான் பிரச்சனை என்னமோ தெரியலை வர்த்தனா உன்னிடம் ஆலோசனை கேட்டால்தான் மனம் ரிலீஃபாகுது இந்த வருடம் முதல் இதை அமுழுக்கு கொண்டு வருவோம்.

நமக்கு இந்த தமிழ் நாட்டுல யாரு இருக்கா... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தாலி கட்டிக்கொண்டு ஓடி வந்த நம்மையும் வாழ வைக்குது உங்களோட கடுமையான உழைப்பால இந்த நிலைக்கு வந்துருக்கோம் இனிமேல் திரும்பி நாம பீகாருக்கு போக முடியுமா ஜாதி வெறி பிடிச்ச நம்ம அப்பாமாரு, சொந்த பந்தங்கள் கண்டால் நம்ம குழந்தைகளைக்கூட உயிரோட விடமாட்டாங்க நாம கடைசிவரை இந்த தமிழ் நாட்டுலயே வாழ்ந்துருவோம் இனிவரும் காலங்கள் எல்லோருமே காதல் செய்துதான் கல்யாணம் செய்வாங்க போல நாளைக்கு நம்ம குழந்தைங்க காதலித்தாலும் நியாயமான நல்லவங்களை காதலிச்சா ஜாதி மதம் பார்க்காமல் சந்தோஷமாக கல்யாணம் செய்து வைப்போம் பின்னாடி இவங்க குழந்தைகள் அடுத்தடுத்த தலைமுறைகள்ல தானாகவே தமிழன் தமிழச்சியாக மாறிடும் அவங்க தேர்தலில் நின்று முதல்வராக கூட வரலாம் யாருக்கு தெரியும்... நம்மளோட கடமையும் நல்ல விதமா முடிஞ்சிரும்.
ஆமா வர்த்தனா உண்மைதான் சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே...

எதுக்கு ?
எனக்கு... ஏதா...வது ?

அதைப் பின்னாலே பார்ப்போம்.
என்னடீ... சாதாரணமா சொல்லிட்டே... ?

இப்பச் சொல்லித்தான் ஆகணுமா ?
சொன்னால் தெரிஞ்சுக்கிருவேன்.

ம்.... அதாவது என்னவொண்ணு குழி கொஞ்சம் அகலமாக வெட்ட வேண்டியது வரும்.
அகலமா புரியலையே...

பேக்கு... புரியலை நீங்க இல்லைனா நான் உயிரோட இருப்பேன்னு நினைக்கிறீங்களா ?

அவளின் விழிகளில் நீர் துளிர்ப்பது போல் இருந்தது அமர்நாத் அவளை சட்டென இறுக அணைத்துக் கொண்டான் அந்த அணைப்பில் ஒரு அசாத்தியமான அழுத்தம் இருந்தது.

குறிப்பு - மேலே இருவரும் பீகாரி மொழியில் பேசியதை ஒட்டுக் கேட்ட நான் அதை தமிழாக்கம் செய்து எழுதி இருக்கிறேன் ஹி ஹி ஹி – கில்லர்ஜி

சிவாதாமஸ்அலி-
தமிழ் நாட்டுக்கு பொழைக்க வந்தவனெல்லாம் முதலாளிதான், உழைக்கிற தொழிலாளி எல்லாம் தமிழன்தான்.

சாம்பசிவம்-
இன்னொண்ணு சொல்லலாமே தமிழ் நாட்டுல பிறந்தவனெல்லாம் ஓட்டுப் போடுறவன், பொழைக்க வந்தவனெல்லாம் ஓட்டு வாங்குறவன்.

Chivas Regal சிவசம்போ-
இன்னொண்ணும் சொல்லலாம் சொன்னால் என்னை குடிகாரப்பய உழருறானு சொல்லுவாங்கே இலவசம்னு பேரு வச்சு லஞ்சம் கொடுக்கிறவன் பொழைக்க வந்தவன், அதை கடமைனு வாங்கி கிட்டு ஓட்டுப் போடுறவன் தமிழன்.

காணொளி