தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 14, 2016

அது இது எது ?என்ன டாக்டர் சொல்றீங்க ? இந்த வார்டுல இருக்கின்றவங்க எல்லோரும் சினிமாவால் மனநலம் பாதிக்கப்பட்டவங்களா ?
ஆமாங்க இதுல என்ன ஒற்றுமைன்னா.... இவங்க எல்லோருமே தயாரிப்பாளராக இருந்தவங்கதான்.
எப்படி ?
அதோ ஒரு மாதிரி இருக்காரே... அவருதான் சேது படம் எடுத்தவரு..
யாரையோ கட்டிப்பிடிப்பது போல பாவ்லா பண்ணுறாரே இவரு ?
இவரு மாது அப்படினு ஒரு படம் எடுத்து போண்டியானவரு.
இவரு காதை பொத்திக்கிட்டு இருக்காரே ஏன் ?
அவரு காது அப்படினு படம் எடுத்தாரு அது கையைக் கடிச்சுருச்சு அதோட மனவியாதி புடிச்சு காதைப் பொத்திக்கிட்டே இருக்காரு...
இவரு எதுக்கு ? பலூன் ஊதுறது மாதிரி இருக்காரு ?
இவரு ஊது அப்படினு படம் எடுத்தாரு படம் ஊத்திக்கிடுச்சு அதோட இவரே சங்கு ஊதுறது போலவே ஆயிட்டாரு..
இவருக்கு என்ன பிரச்சினை ?
இவரு மக்கள் பிரச்சினைகளை வைத்து பொது அப்படின்னு படம் எடுத்தாரு ஆளுங்கட்சிக்காரங்க பொது இடத்துல வச்சு நச்சதுல இப்படி ஆகிட்டாரு...
இவரு ஏன் பைப்புக்கு பக்கதுலயே நிற்கிறாரு ? 
குடியின் கொடுமையை விளக்கி மது அப்படினு படம் எடுத்தவரு படம் ஓடாமல் போனாதால் குடிகாரராகி இப்படி ஆகிட்டாரு...
இவரு அமைதியாக இருக்காரே...
இவருதான் சாது அப்படினு ஒரு படம் எடுத்தவரு...
அவரு மந்திரம் சொல்லுறது மாதிரி இருக்காரே.... ?
அவருதான் ஓது அப்படினு படமெடுத்தவரு.... இன்னும் அப்படி. இருக்காரு...
இவரு சதுரம் கட்டி நடக்கிறாரே... ?
இவருதான் கேது அப்படினு படமெடுத்தவரு...
இவரென்ன, அங்கேயும் இங்கேயும் கையைக் காட்டுறாரு ?
இவருதான் அது இது எது ? படம் எடுத்தவரு..
சரி டாக்டர் இவங்களை நல்லபடியாக சீக்கிரமே குணமாக்கி திரையுலகத்துக்கு நீங்கதான் மீண்டும் தாரை வார்க்கணும்.
முடியாதே...
ஏன் டாக்டர்.... ?
பொது மக்களின் நலம் காக்க நீங்க இவங்களை இப்படியே வச்சு பாதுகாக்கா விட்டால் உங்களை சுடுகாட்டுக்கு தாரை வார்த்துருவோம்னு தினம் மூணு மொட்டைக்கடிதம் வருதே... நான் என்ன செய்வது ? எனக்கும் ரெண்டு பொண்டாட்டிகளோட.... குடும்பம் இருக்குதுல.....
அப்படினா... இவங்க கதி ?
எல்லாம் பகவான்(ஜி) செயல்.

38 கருத்துகள்:

 1. ஹா... ஹா..... ஹா.....
  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான் நண்பரே
  பொதுமக்களின் நலம்காக்க அவர்களை அங்கேயே வைத்துக் கொள்வதுதான் நல்லது
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை ஆதரித்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 3. எல்லாம் பகவான் செயல்... :)

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. அனைத்து 'து'வையும் ரசித்தேன் ஜி!
  த ம 5

  பதிலளிநீக்கு
 5. ஆமா....எனக்கும் அவர் செயல்தான் என்று தோன்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும், தோன்றினால் உண்மைதான் நண்பரே.

   நீக்கு
 6. படித்தேன்! சிரித்தேன்!! இரசித்தேன்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்து, சிரித்து, இரசித்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 7. நகைச்சுவை அனைத்தும் ரசித்தேன் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் இரசிப்புக்கு நன்றி

   நீக்கு
 8. நம்மள மாதிரி எழுத்தாளர்களை நம்பி ,பணம் போட்டு படம் எடுத்த அவர்களை கைவிடுவது நல்லதல்ல என்பதால் ,அவர்களின் மறுவாழ்வுக்கு ஆவனச் செய்வதே ,இந்த பகவான்ஜீயின் செயல் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது எண்ணங்கள் நன்று ஜி பகவான்(ஜி)யாச்சே...

   நீக்கு
 9. போது(ம்) போது(ம்) தலையைப் பிச்சுக்க வச்சுட்டீங்களே... இருக்கற கஷ்டத்தையெல்லாம் மறக்கணும்னா நகைச்சுவைலதான் மூழ்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா வாங்க நண்பரே இதை இன்னும் நீட்டியிருக்கலாமே.... என்று இப்பொழுது தோன்றுகின்றது வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. அனைத்தும் ரசிக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 11. தம்பி சினிமாவை வைச்சு
  நகைச்சுவையில இறங்கிட்டாரு...
  நம்பர் ஒன் ஜோக்காளி தளத்தை
  பின்னுக்குத் தள்ளிப்போடுவார் போல...
  பதிவர்களே! உசார்... உசார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அப்படி எல்லாம் நிச்சயம் வராது...

   நீக்கு
 12. "து" என்பது இங்கு நகைச்சுவையாகி நல்ல காலம் அந்த எழுத்திற்கு மேன்மை வந்துவிட்டது ஜி! எல்லாம் ஜி க்களின் செயல்!!!!!

  பதிலளிநீக்கு
 13. இப்படியானும் மனதை ஆறுதல் பண்ணிக்க வேண்டியது தான்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ இப்ப சினிமா எடுக்கிறவங்கெ... ரொம்ப அக்கப்போர் பண்ணுறாங்கே...

   நீக்கு
 14. புதுசு புதுசா பட title...தாயாரிப்பாளர்கள் note பண்ணுங்கப்பா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே ஏதோ மறைமுகமாக கோர்த்து விடுவது போல் இருக்கின்றதே....

   நீக்கு
 15. அப்பாடா.. இப்பொழுதாவது மாட்டுனானுங்களே!.. கல்யாணம் நிச்சயம் ஆன புள்ளையைக் கூட விடாம தொரத்திக் கிட்டுத் திரியறானுங்க!..

  விட்டுறாதீங்க!.. வெளியே விட்டுறாதீங்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சரியாக சொன்னீங்க... உண்மைதான் நல்ல குடும்பத்து பெண்கள் மனசுலயும் நஞ்சை விதைக்கிறாங்கே...

   நீக்கு