தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 09, 2016

ஜாதி வெறியும், அகலக் குழியும்


வராண்டாவின் சோபாவில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் இளவயது தொழில் அதிபர் அமர்நாத் அருகில் வந்த மனைவி வர்த்தனா தன்னை கணவன் கண்டு கொள்ளாமல் ஏதோ சிந்தனையில் இருக்கவும் தோளில் கை வைத்து...

என்னங்க ?
ஆங்.. என்ன சொல்லு வர்த்தனா ?

ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?
இல்லை... ஒண்ணுமில்லையே...

எனக்குத் தெரியாதா... சொல்லுங்க.... கம்பெனியில் எதும் பிரச்சனையா ?
இல்லை, அது வந்து.... வந்து..

இப்ப சொல்றீங்களா.... இல்லையா ?
ம்.............. வர்த்தனா நான் ஒண்ணு கேட்டால் கோவிக்க மாட்டியே ?

சொல்லுங்க ?
உனக்கு வாழ்வாதாரத்துக்கு வேண்டிய வசதிகளை நமக்கு கல்யாணமாகி இந்த 15 வருஷத்துலே சேர்த்து வச்சுட்டேன், பாதுகாப்புக்கு இரண்டு மகன்கள்...

இப்ப எதுக்கு பீடிகை போடுறீங்க ?
அது... வந்து எனக்கு ஏதாவது ஆ....யிட்டா....

ஏதாவதுனா... புரியலையே....
அது.. வந்து நா.. ன் செத்துப் போயிட்டா ?

செத்துப் போயிட்டா ?
நீ என்ன, செய்வே ?

இப்போ, பிரச்சனையை சொல்லுங்க எதுக்காக இப்படி சமாளிக்கிறீங்க.. அசடு வழியுது துடைச்சிட்டு சொல்லுங்க ? உங்களுக்கு பொய் சொல்லத் தெரியாது.
இல்லை வர்த்தனா சத்தியமா இதத்தான் கேட்கணும்னு நினைச்சேன்.

இப்போ இது அப்படியென்ன, முக்கியமாபோச்சு சோலந்தூர்காரரிடம் சோசியம் பார்த்தீங்களா... நீங்க நம்ம மாட்டீங்களே...
இல்லை தொழில் எதிரிங்க நிறைய வளர்ந்துட்டாங்க... எனக்கு ஏதாவது ஆகிடுமோனு...

உங்களுக்கு பயமா ?
உயிர்ப்பயம் இல்லை, உன்னை நினைச்சுத்தான்...

நீங்க நியாயமாத்தானே உழைக்கிறீங்க அப்புறம் எதிரிங்க எப்படி ?
அதான் எனக்கும் புரியலை வர்த்தனா.

கம்பெனி வளர்றதுக்கும், நொடிச்சுப் போறதுக்கும், அடிப்படை காரணவாதிகள் தொழிலாளர்கள்தான் இப்போ நமக்கு வேண்டிய அளவு வசதி வாய்ப்புகள் சொத்து இருக்கு இனிமேல் வர்ற லாபத்தை குறைச்சு எடுக்கலாம் மிகுதியை தொழிலாளர்களுக்கே கொடுக்கலாம் அது நம்மை என்றைக்கும் காக்கும்.
அப்ப தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கூடுதலாக கொடுக்கச் சொல்றியா அதனால் அசோஷியேசன் மூலமாக கம்பெனி முதலாளிகளை பகைக்க வேண்டியது வரும்.

இது எனக்கு தெரியாதா  நாம் சம்பளத்தை நேரடியாக கூட்டினால்தானே பிரச்சனை தீபாவளி போனஸை தாராளமாக கொடுக்கலாம் வருடத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட பணத்தை ஒதுக்கி நம்ம குழந்தைகள் பிறந்த நாட்களுக்கு குழந்தைகளை வைத்தே தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடப்புத்தம், சைக்கிள், கம்ப்யூட்டர் இப்படிப் பரிசுப்பொருள் கொடுக்கலாம் கம்பெனி ஆண்டு விழாவுக்கு பரிசு என்று சொல்லி பணமுடிப்பு அல்லது தங்க காசு இப்படி கொடுத்தால் நமக்கு வரும் எதிரிகளை தொழிலாளர்களே அடையாளம் கண்டு அழிச்சிட வாய்ப்பு இருக்கு, எந்த தொழிலாளரும் கம்பெனிக்கு துரோகம் செய்ய நினைக்க மாட்டாங்க மனசாட்சி சுடும்.
நல்லது வர்த்தனா இனிமேல் இப்படியே செய்வோம்.

நம்ம பசங்களும் மூத்தவன் அடிக்கடி விஞ்ஞானியாவேன்னு சொல்றான், இளையவன் பைலட்டாகணும்னு சொல்றான் அவங்களோட இஷ்டத்துக்கு படிப்பை விட்டால்தான் முழுமூச்சாக படிப்பாங்கே, நம்ம இஷ்டத்துக்கு டாக்டராகணும், இஞ்சினியராகணும்னு நாம் ஆசையை வளர்க்க கூடாது அது ரொம்ப முக்கியம் நாளைக்கு கம்பெனியை நிர்வகிப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை நமக்குப்பிறகு கம்பெனி தொழிலாளர்களுக்கே போகணும் எனக்கும் இதுதான் ஆசை நாம இவ்வளவு வசதியாக வாழ்வதற்கு அவர்கள்தான் காரணம் அதை நாம கடைசிவரை மறக்க கூடாது இதுக்கு மேல் நமக்கு பணம் வேண்டாங்க அது நமது உயிர்களுக்குத்தான் ஆபத்து அம்பானி குடும்பத்தைப் பார்த்தீங்களா... கோயிலுக்கு சாமி கும்பிடப் போனால்கூட அவங்களைச்சுற்றி 25 செக்யூரிட்டி மிஷின் கன்னோடு போறாங்க.. பிறகு நிம்மதியாக சாமி கும்பிட முடியுமா ? அவுங்களிடம் இல்லாத பணமா... அவங்க குடும்பத்துக்குள்ளே சொத்து பிரிக்க வேண்டிய அவசியமென்ன கூட்டுக் குடும்பம் எவ்வளவு பாதுகாப்பான விசயம் என்பதை தெரிய விடாமல் கண்ணை மறைச்சது இந்த பணம்தானே உயிருக்கு வினையான இந்தப்பணம் நமக்கு வேண்டாங்க, வாழுறதுக்கு தேவையான பணம் மட்டும் போதும் அதுவும் இப்பவே தாராளமாக இருக்கு.
நல்லது வர்த்தனா நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும் வெளி உலகத்துக்குத்தான் நான் முதலாளி மற்றபடி உன்னோட ஆலோசனையின் படிதான் கம்பெனி இவ்வளவு வளர்ச்சி அடைஞ்சிருக்குனு எனக்கு மட்டும்தானே தெரியும் நமக்கு கல்யாணம் ஆன புதுசுல கோயிலுக்குப் போயி நமது கஷ்டங்களை சொல்லி அர்ச்சனை பண்ணிட்டு அந்த தேங்காய்களை படிக்கட்டுகள்ல உட்கார்ந்து உடைச்சுத் தின்போமே அந்த சுகம் மறுபடியும் கிடைக்குமா ? சமூகத்துக்கு பயந்து அந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியலையே உண்மைதான் இப்பவே தூக்கம் குறைஞ்சு போச்சு இதுக்கு மேலேயும் பணம் சேர்த்தால் உயிருக்குத்தான் பிரச்சனை என்னமோ தெரியலை வர்த்தனா உன்னிடம் ஆலோசனை கேட்டால்தான் மனம் ரிலீஃபாகுது இந்த வருடம் முதல் இதை அமுழுக்கு கொண்டு வருவோம்.

நமக்கு இந்த தமிழ் நாட்டுல யாரு இருக்கா... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தாலி கட்டிக்கொண்டு ஓடி வந்த நம்மையும் வாழ வைக்குது உங்களோட கடுமையான உழைப்பால இந்த நிலைக்கு வந்துருக்கோம் இனிமேல் திரும்பி நாம பீகாருக்கு போக முடியுமா ஜாதி வெறி பிடிச்ச நம்ம அப்பாமாரு, சொந்த பந்தங்கள் கண்டால் நம்ம குழந்தைகளைக்கூட உயிரோட விடமாட்டாங்க நாம கடைசிவரை இந்த தமிழ் நாட்டுலயே வாழ்ந்துருவோம் இனிவரும் காலங்கள் எல்லோருமே காதல் செய்துதான் கல்யாணம் செய்வாங்க போல நாளைக்கு நம்ம குழந்தைங்க காதலித்தாலும் நியாயமான நல்லவங்களை காதலிச்சா ஜாதி மதம் பார்க்காமல் சந்தோஷமாக கல்யாணம் செய்து வைப்போம் பின்னாடி இவங்க குழந்தைகள் அடுத்தடுத்த தலைமுறைகள்ல தானாகவே தமிழன் தமிழச்சியாக மாறிடும் அவங்க தேர்தலில் நின்று முதல்வராக கூட வரலாம் யாருக்கு தெரியும்... நம்மளோட கடமையும் நல்ல விதமா முடிஞ்சிரும்.
ஆமா வர்த்தனா உண்மைதான் சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே...

எதுக்கு ?
எனக்கு... ஏதா...வது ?

அதைப் பின்னாலே பார்ப்போம்.
என்னடீ... சாதாரணமா சொல்லிட்டே... ?

இப்பச் சொல்லித்தான் ஆகணுமா ?
சொன்னால் தெரிஞ்சுக்கிருவேன்.

ம்.... அதாவது என்னவொண்ணு குழி கொஞ்சம் அகலமாக வெட்ட வேண்டியது வரும்.
அகலமா புரியலையே...

பேக்கு... புரியலை நீங்க இல்லைனா நான் உயிரோட இருப்பேன்னு நினைக்கிறீங்களா ?

அவளின் விழிகளில் நீர் துளிர்ப்பது போல் இருந்தது அமர்நாத் அவளை சட்டென இறுக அணைத்துக் கொண்டான் அந்த அணைப்பில் ஒரு அசாத்தியமான அழுத்தம் இருந்தது.

குறிப்பு - மேலே இருவரும் பீகாரி மொழியில் பேசியதை ஒட்டுக் கேட்ட நான் அதை தமிழாக்கம் செய்து எழுதி இருக்கிறேன் ஹி ஹி ஹி – கில்லர்ஜி

சிவாதாமஸ்அலி-
தமிழ் நாட்டுக்கு பொழைக்க வந்தவனெல்லாம் முதலாளிதான், உழைக்கிற தொழிலாளி எல்லாம் தமிழன்தான்.

சாம்பசிவம்-
இன்னொண்ணு சொல்லலாமே தமிழ் நாட்டுல பிறந்தவனெல்லாம் ஓட்டுப் போடுறவன், பொழைக்க வந்தவனெல்லாம் ஓட்டு வாங்குறவன்.

Chivas Regal சிவசம்போ-
இன்னொண்ணும் சொல்லலாம் சொன்னால் என்னை குடிகாரப்பய உழருறானு சொல்லுவாங்கே இலவசம்னு பேரு வச்சு லஞ்சம் கொடுக்கிறவன் பொழைக்க வந்தவன், அதை கடமைனு வாங்கி கிட்டு ஓட்டுப் போடுறவன் தமிழன்.

காணொளி

38 கருத்துகள்:

 1. இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து? உழைத்தால் முன்னேறலாம் என்றா? தமிழனுக்கு இடமில்லை என்றா?

  தம இன்னும் சப்மிட் ஆகவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாங்கள் சொன்ன இரண்டுமே பொருந்தும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் முன்னேறுவது தமிழர்கள் அல்லர் இதுவே எமது கருத்து.

   நீக்கு
 2. கதை நல்லா இருக்கு. கருத்தும் நல்லா இருக்கு. காதல் கல்யாணம் (ஜாதி விட்டோ அல்லது மதம் விட்டோ) பண்ணிக்கிட்டீங்கன்னா, வேற பத்திரமான (கர்'நாடகா போன்ற இடங்களுக்குப்போய் வேற பிரச்சனைல சிக்காம) ஸ்டேட்டுக்குப் போய், உழைச்சுப் பிழைச்சுக்கோங்கன்னு சொல்லவர்றீங்க. உண்மைதான். இங்கனக்குள்ளயே இருந்தால், கடுமையாக உழைக்கும் மனமோ வாய்ப்போ கம்மியாத்தான் கிடைக்கும்.

  போற போக்கைப் பார்த்தால், கில்லர்ஜி from பீகார்னு தொடர்ந்துடுவீங்க போலிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மை தமிழர்கள் அயல் மாநிலத்திலோ, அல்லது அயல் நாட்டிலோ உழைக்க தயங்குவதில்லை.

   ஐயய்யோ.. என்னை ஏன் பீகாருக்கு அனுப்ப பார்க்கிறீங்க ?

   நீக்கு
 3. கதை நல்லாருக்கு...
  சொன்ன விதமும் நல்லாயிருக்கு...

  பதிலளிநீக்கு
 4. வாழ்க்கையில் ifs and buts எல்லாம் யோசித்தால் ஒண்ணுமே பண்ண முடியாது . We should go ahead

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 5. நீங்கள் நினைப்பதுபோல் முதலாளிகள் இருப்பது அரிது. நல்ல எண்ணம் .வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மைதான் அரிதானவர்களே இருக்க முடியும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 6. தமிழ்நாட்டுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டனவா?
  அவர்கள் தமி ழிலேயே
  பேசியிருக்க லாமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தமிழகத்தில் வாழும் பிற மாநிலத்தவர் தனது வீட்டுக்குள் பேசுவது கண்டிப்பாக தாய்மொழிதான்,
   விஜயகாந்த் - பிரேமலதா தம்பதியினர் வீட்டுக்குள் பேசுவது தெலு(ங்)கு மொழியே...

   வெளியே வந்தால் தமிழ் வாழ்க !

   நீக்கு
 7. நிணைப்பதெல்லாம் எங்கே நடக்கிறது நண்பரே......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே அப்பல்லோ வாசலில் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் காத்து கிடக்கின்றார்கள்.

   நீக்கு
 8. கதைத்தொகுப்பு விரைவில் வெளிவரட்டும் .

  வாழ்த்துக்கள் நண்பரே!

  த ம


  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே அப்படித்தான் பல விடயங்களை இன்னும் வெளியிடாமல் ஒதுக்கி வைத்துள்ளேன்.

   நீக்கு
 9. கதை நன்றாக இருக்கிறது.
  த ம 4

  பதிலளிநீக்கு
 10. எனக்கென்னமோ சந்தேகமாயிருக்கு!..

  இருக்கட்டும்.. பரவாயில்லை..

  தமிழனை அடித்து துவைத்து அலசி காயப் போட்டு இருக்கின்றீர்கள்..

  ஆனாலும், அழுக்கு போகணுமே?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தண்ணீரில் கலப்படம் ஆகவே அழுக்கு போகவில்லையோ....

   நீக்கு
 11. விலையில்லா பொருட்களை அரசு கொடுத்து தமிழர்களை சோம்பேறிகளாக ஆக்கிவிட்டது. அதனால் தான் வேறு மாநிலத்தினர் வந்து இங்கு உழைத்து முன்னேறுகின்றனர். இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு இந்தியனும், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் குடியேறி தொழில் செய்யும் உரிமையைத் தந்திருக்கும்போது அதை நாம் குறை சொல்ல இயலாது. இன்றைக்கும் நம் தமிழர்களில் பலர் மற்ற மாநிலங்களுக்கு சென்று தொழில் தொடங்கி முன்னேறவில்லையா?

  உழைப்பவருக்கு எல்லா இடமும் சொந்தம் தான். சோம்பேறிகளுக்கு எந்த இடமும் சொந்தமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே முடிவில் சொன்ன அற்புதமான விடயத்துக்கு நன்றி

   நீக்கு
 12. நல்ல கற்பனை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சேட்ஜிகளும், படேல்களும் இவற்றிற்கெல்லாம் இடம் கொடுப்பதில்லை. ஒரு இடம் வாங்குவதாக இருந்தாலும், விற்பதாக இருந்தாலும், பத்திரத்தில் ஒருவரி சேர்ப்பதாக அல்லது நீக்குவதாக இருந்தாலும் கூட தங்கள் சமூகத் தலைவரிடம் ஒரு வார்த்தை கேட்டுதான் செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், கருத்துரையை பகிர்ந்தமைக்கும் நன்றி

   நீக்கு
 13. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பெருமைப் பட்டுக்குவோமே :)

  பதிலளிநீக்கு
 14. சொன்ன விதம் அருமை! என் தளம் பற்றி வேறு யாரும் சொல்ல வில்லையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா வருகைக்கு நன்றி
   ஐயா தங்களது தளம் சில நேரங்களில் விளம்பரங்கள் வந்து மறைத்து விடுகின்றது.

   நீக்கு
 15. கதையும்,கடைசியில் எட்டிப் பார்த்த உங்கள் குறும்பும் ரசிக்க வைத்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நான் எட்டிப் பார்க்கவில்லை காதுல விழுந்துச்சு.

   நீக்கு
 16. கதை சொல்லும் மையக்கருத்து தமிழ்நாட்டில் தமிழரை விட வேற்று மாநிலத்தவர்தான் அதிகமாகப் புழங்குகிறார்கள். இல்லையா....கில்லர்ஜி!!

  பதிலளிநீக்கு
 17. அது சரி இப்படிப்பட்ட முதலாளி இருக்காங்களா ஜி??!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் நீங்கள் இல்லையா...? நான் இல்லையா ? ஹி ஹி ஹி

   நீக்கு
 18. மற்ற மாநிலத்தவர் குறிப்பாய் பிஹாரிகள், வங்காளிகள் இப்போது எல்லா வேலைகளிலும் தமிழருக்குப் போட்டி தான்! ஆனால் தமிழர் புரிந்து கொள்வார்களா என்றால் இல்லை! இன்னும் எங்கே இலவசம் கிடைக்கும்னு பார்ப்பாங்க! :( உழைத்து வாழ்வதில் உள்ள சுகம் இப்போதெல்லாம் புரியறதே இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ உழைப்பே உயர்வு தரும் நிலைத்து நிற்கும் வருகைக்கு நன்றி

   நீக்கு