தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 21, 2016

நீதான்டா டமிலன்



வீடில்லா எனக்கு
நிழல் கொடுத்த
பதாகையின் கீழே
பசியின் தாக்கத்தால்
மறைவில் உறங்கி
கிடந்தேன் திடீரென
வந்த கூட்டம்
எழுந்து போ என
விரட்ட மிரண்டு போய்
பசியுடன் பார்த்தேன்
மேலே ஏறிய வீரர்கள்
இருவர் கொட்டினர்
தலைவனின் தலையில்
பாலை சாலையில்
ஓடிய பாலாற்றை கைகளில்
ஏந்தி பருக ஓடினேன் அருகே
காணொளி எடுக்கும்
அழகியல் கெடுமென
ஓங்கி மிதித்து
விரட்டினர் என்னை
பாவியர்கள் கூட்டம்
கண்ணெதிரே
பாலை பாழாக்கி  
வார்த்தார்கள் பூமியிலே
அதில் எனக்கும் கூட
வாயில் வார்க்கலாமே பாலை.
எல்லாம் முடிந்து
களைந்து போனது கூட்டம்
ஓடிய பாலாறு கூடியதோ
நான் கிடக்கும் மறைவினிலே
கண்ணில் கண்ட
பாலும் மண்ணில்
நுழைந்து செல்ல
பசியின் கடுமை
என்னைக் கொல்ல
இந்த கொடுமையை
நான் எங்கு சொல்ல
இறைவா ! நீயும் உண்டோ ?
இல்லை வெண்பொங்கல்
உண்டு களித்த
நீ இப்பொழுதும் 
உறங்கி கொண்டோ ?
நான் உறங்குமிடத்தை
ஈரமாக்கினர் நெஞ்சில்
ஈரமில்லா ஈனப்பிறவிகள்
வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் என்றாரே...
இந்தப் பதாகை
இருப்பதும் தமிழகம்தானே
ஒரு வேளை நான் தமிழன்
என்பதால்தான் என்னை
வாழ விடவில்லையோ
நான் வேற்று மொழி
பயின்று மீண்டும் தமிழகம்
வருவேன் உன்னுடன்
டமில் பேசி வாழ்வேன்
அப்பொழுது நீ
எனக்கும் வைப்பாயடா
பதாகைகள் என் வாயில்
ஊற்ற மறுத்த பாலை
எனது பதாகைகளுக்கு
ஊற்றுவாய்
நீதான்டா டமிலன்.

புதன், அக்டோபர் 19, 2016

இதுக்குப்பேரு, நீங்கதான் சொல்லணும்


ன்று ஏனோ மனசு சரியில்லை அபுதாபி குப்பான் சட்டிசாமி தெருவில் அப்படியே நடந்து போனேன் தலையை லேசாக வலித்தது டீக்கடையை கண்டதும் டீ சாப்பிடுவோம் என்று டீ சொல்லி விட்டு உட்கார்ந்தேன், அருகில் இரண்டு அரேபியர்கள் உட்கார்ந்து BASICகே இல்லாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள் பொதுவாக எனக்கு ஆறறிவுள்ள மானி(ட்)டர்களின் பேச்சுகளை ஒட்டுக் கேட்கும் பழக்கம் கிடையாது இருப்பினும் அவர்களின் சம்பாஷனைகள் எனது செவிகளுக்குள் வழுக்கட்டாயமாக நுழைந்து சேதாரமாக்கினாலும், என்னை அந்த இடத்தை விட்டு போகவிடாமல் கட்டிப் போட்டது என்பதுதான் உண்மை அவர்கள் பேசியதை தமிழில் மொழி பெயர்த்து தங்களுக்காக எழுதியுள்ளேன்.

செவ்வாய், அக்டோபர் 18, 2016

கண(ம்)பதி


உன் மனம் என்னும் பூங்கொத்தை
தினம் தினம் உலுக்கி பார்,
அதன் கனம் ஏன் குறையவில்லை ?
காரணம் பணம் என்னும் வனம் தேடி
 உன் மனம் போனதால்,
மானம் போயி நாணம் கெட்டும்,
இந்த தனம் விட்டு விலகும்
குணம் ஏன் வரவில்லை ? 
தானம் செய்யும் மனம் மறந்து
தன் இனம் துறந்து,
ஜாதி சனம் ஒதுக்கி
நாளை பிணம் ஆகும் போது
இந்த பணம் எங்கு போகும் ?
 All Ready கனம்பாதியாய் கணபதி (Please I want to delete)
இது அரசியல் பதிவு அல்ல ! எமக்கானது.

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

புதுக்கோட்டை, புகழ் புகழேந்தி


அடோல்ஃப் ஹிட்லரின் கருத்தில் எமக்கு மிகவும் பிடித்தவை தாங்கள் மேலே காண்பது நான் புகழ் பெற்றதாக நினைவு தெரிந்த நாள்முதல் அப்படியொரு சம்பவம் இல்லை இதில் அவமானம் பலமுறை நிகழ்ந்திருக்கின்றது ஆகவே நான் எப்பொழுதுமே இதை மறப்பதில்லை வேதனைகள் வரும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நொடியும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்து நினைவு கூர்வேன் மறந்திடாதே என்று எனக்குள் நான் சொல்லிக் கொள்வேன் என்னை அவமானப்படுத்தியவர்கள், வேதனைப்படுத்தியவர்கள் எல்லாம் இப்பொழுது எனது பொருளாதாரத்துக்காக மரியாதை கொடுப்பதை காணும் பொழுது மீண்டும் வேதனையே வருகின்றது விபரம் அறிந்த நாள்முதல் நான் நானாகவே வாழ்கின்றேன் மனதில் மாற்றமில்லை வாழ்வில் ஏற்றம் உண்டு. 

காலத்துக்கு தகுந்தாற்ப்போல் மனதை மாற்றிக்கொள்ள என்னால் இயலவில்லை இதற்காக என்னை நானே மனம் நொந்து இருக்கின்றேன் நாமும் சராசரி மனிதர்களைப்போல் வாழவில்லையே ஏன் ? எவ்வளவு சந்தோஷங்கள் இவ்வுலகில் இருக்கின்றது நேர்வழி என்ற பாதையில் சென்றதால் கிடைத்தது என்ன ? என்னை நானே பலமுறை ஆராய்ந்தேன் கிடைத்த விடை இதுவே.

மரணத்துக்குப்பின் இறைவனை காணலாம் என்று சொல்கின்றார்கள் இது உண்மையோ பொய்யோ ஒரு மனிதன்10 நபர்களை கொலை செய்கின்றான் இன்னொரு மனிதன்100 நபர்களை கூட்டுக்கொலை செய்கின்றான் ஆறறிவு மனிதன் அவர்கள் இருவருக்கும் தூக்குத்தண்டனை என்று தீர்ப்பு வழங்குகின்றான் இது நியாயமானவையா ? அதற்காக கூடுதல் கொலை செய்தவனை10 முறை தூக்கில் போடமுடியுமா ? முடியாது காரணமென்ன ? மனிதனுக்கு இதனைக் கடந்த சிந்தனை இல்லை இதுதான் உண்மை இருந்தால் மரணத்தை வென்று அதனை நிறுத்தியிருப்பான் ஒருக்கால் கடவுளைக் கண்டால் ? அவர் சொர்க்கம்-நரகம் என்று சொல்கின்றார்களே அதைக் கொடுப்பார்தானே எமக்கு எதுவோ கிடைக்கட்டும் நாம் சந்தித்தால் கடவுளிடம் வாதம் செய்யமுடியுமே என்ற விடை எனக்கு கிடைத்தது ஆம் நான் உங்களிடம் பொய் சொல்லமுடியும் கடவுள் என்பவன் இருந்து அவனை நான் சந்திக்கும் தருணமும் வந்தால் ? ? ? அவரினிடம் நான் பொய் சொல்லமுடியாது உண்மைதானே காரணம் அங்கு நிகழ்வுகள் மீண்டும் கண்முன் நிகழ்த்திக் காட்டப்படலாம் அவ்வகையில் நான் செய்த தவறுகள் என்ன ? என்று கடவுளிடம் கேள்வி கேட்க முடியுமே என்று என் மனசாட்சி எனக்கு ஆதரவு கொடுத்து இதற்கு நான் கடந்த வந்த எனக்கு பிரயோசனமற்ற, பிறருக்கு பிரயோசனமான வாழ்க்கையே ஆதாரம் என்று சொல்கின்றது.

மேலும் ஆலோசனை கொடுக்கின்றது வாழ்வில் நேர்மையில் முக்கால்சதம் அடித்த விட்ட நீ கடைசி கால்சதத்தில் குழப்பம் ஏன் ? என்றும் கேட்கின்றது மேலும் இவ்வளவு காலமும் நல்ல பெயர் எடுத்த நீ நொடியில் கெட்ட பெயரை எடுத்து விடாதே அது நீ இவ்வளவு காலம் பட்ட கஷ்டத்துக்கு அர்த்தமில்லாமல் போய் விடும் என்று எச்சரிப்பதோடு இதற்கு நீ சராசரி மனிதர்களைப்போல் ஜிங்கா மங்கா வாழ்க்கை வாழ்ந்து தொலைந்திருக்கலாமே என்றும் கிண்டலடிக்கின்றது இவ்வளவு காலமாக இல்லாத சிந்தனை இப்பொழுது வருவதற்கு காரணம் உனக்கு தெரியாதா ? என்று மனசாட்சியிடம் கோபமாக கேட்டேன் அதற்கு இரண்டு ஜீவன்களுக்காக வாழ்ந்தாய் இதில் முதலாவது உன்னை புரிந்து கொள்ளாமல் பேசிவிட்டதால்தானே இந்த குருட்டு சிந்தனை தோன்றுகின்றது ஆனால், இரண்டாவது ஜீவன் உன்னை மிக அழகாக, மிகத் தெளிவாக, மிகவும் அருமையாக புரிந்து கொண்டு அன்பைப் பொழிகின்றதே அந்த ஜீவனுக்காக மிச்ச நாட்களையும் கடத்தலாமே ? என்றதும் என் மனம் ஆறுதலடைந்து வழக்கமான பாதையிலேயே பயணிப்போம் வடக்குத்தெரு போகும்வரை என்று நினைத்து கடக்க செல்கி...........