தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, அக்டோபர் 21, 2016

நீதான்டா டமிலன்வீடில்லா எனக்கு
நிழல் கொடுத்த
பதாகையின் கீழே
பசியின் தாக்கத்தால்
மறைவில் உறங்கி
கிடந்தேன் திடீரென
வந்த கூட்டம்
எழுந்து போ என
விரட்ட மிரண்டு போய்
பசியுடன் பார்த்தேன்
மேலே ஏறிய வீரர்கள்
இருவர் கொட்டினர்
தலைவனின் தலையில்
பாலை சாலையில்
ஓடிய பாலாற்றை கைகளில்
ஏந்தி பருக ஓடினேன் அருகே
காணொளி எடுக்கும்
அழகியல் கெடுமென
ஓங்கி மிதித்து
விரட்டினர் என்னை
பாவியர்கள் கூட்டம்
கண்ணெதிரே
பாலை பாழாக்கி  
வார்த்தார்கள் பூமியிலே
அதில் எனக்கும் கூட
வாயில் வார்க்கலாமே பாலை.
எல்லாம் முடிந்து
களைந்து போனது கூட்டம்
ஓடிய பாலாறு கூடியதோ
நான் கிடக்கும் மறைவினிலே
கண்ணில் கண்ட
பாலும் மண்ணில்
நுழைந்து செல்ல
பசியின் கடுமை
என்னைக் கொல்ல
இந்த கொடுமையை
நான் எங்கு சொல்ல
இறைவா ! நீயும் உண்டோ ?
இல்லை வெண்பொங்கல்
உண்டு களித்த
நீ இப்பொழுதும் 
உறங்கி கொண்டோ ?
நான் உறங்குமிடத்தை
ஈரமாக்கினர் நெஞ்சில்
ஈரமில்லா ஈனப்பிறவிகள்
வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் என்றாரே...
இந்தப் பதாகை
இருப்பதும் தமிழகம்தானே
ஒரு வேளை நான் தமிழன்
என்பதால்தான் என்னை
வாழ விடவில்லையோ
நான் வேற்று மொழி
பயின்று மீண்டும் தமிழகம்
வருவேன் உன்னுடன்
டமில் பேசி வாழ்வேன்
அப்பொழுது நீ
எனக்கும் வைப்பாயடா
பதாகைகள் என் வாயில்
ஊற்ற மறுத்த பாலை
எனது பதாகைகளுக்கு
ஊற்றுவாய்
நீதான்டா டமிலன்.

32 கருத்துகள்:

 1. இப்படி பால் ஊற்றுவதை நேரில் செய்தாலும் பரவாயில்லை :)

  பதிலளிநீக்கு
 2. கஷ்டம்தான்! பதாகையிலிருக்கும் நபரின் பெயர் சொல்லி ரெண்டு வாழ்க கோஷம் போட்டு விட்டு, "தலைவர் ரசிக்கத்தான் நான் பசியோடிருக்கிறேன்" என்று சொன்னால் அதில் ஒரு இரக்க ரசிகர் ஒரு பாலை இவரிடம் கொடுத்திருக்கக் கூடும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவன் நம்மைப்போல ஒரிஜினல் தமிழனாக இருப்பான் நண்பரே

   நீக்கு
 3. ஊற்றுபவர்கள் சிந்தித்தால் நல்லது. அது எங்கே நடக்கிறது. கோயில்களிலும் இப்படித்தான். சிலைக்கு பாலையும் தேனையும் ஊற்றுவார்கள். அதை ஏழைக்கு கொடுத்தால் எத்தனை வயிற்றின் பசி தீரும்.
  த ம 5

  பதிலளிநீக்கு
 4. this kind of worshipping HEROES prevail in andhra karnastaka also.....
  struggling for food prevails throughoutin india and in cettain other countries also....ji

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா10/21/2016 1:36 PM

  தொலைக்காடசி நாடகத்தில் கூட பால் வார்த்தனர். பார்த்து
  மனம் வெதும்பினேன்.
  படு அநியாயம் தான் (tamil manam vote also)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ வேதனைதான் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

   நீக்கு
 6. கஷ்டம் வரும்போதுதான் இல்லாத கடவுள் நினைப்பு வருகிறதோஅவருக்கென்ன அவர் பெயரைச் சொல்லி வெண்பொங்கல் உண்பாரை கவனிக்கவே நேரம் சரியாய் இருக்கும் . இல்லை என்றால் அதுவும் காட்ட மாட்டார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா கஷ்டம் வரும்போதுதான் இறைவன் நினைவு பலருக்கும் வருகின்றது

   நீக்கு
 7. இப்படி பால் ஊற்றுபவனே உண்மையான டமிலன் என்பது இப்பத்தான் தெரிந்து கொண்டேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
 8. அவன் பாட்டுக்கு சும்மா போயிருந்தால் இந்தப் பாட்டு கிடைத்திருக்குமா!?.

  உறங்குமிடத்தை ஈரமாக்கியதால் -
  உள்ளத்தை உலுக்குகின்றது பாட்டு..

  ஈரமில்லா ஈனப்பிறவிகள் - சவுக்கடி!..

  பதிலளிநீக்கு
 9. உறைப்பான பதிவு - தம்பி
  யாழ்ப்பாணத்திலயும்
  விஜெக்கும் அஜித்துக்கும்
  ரஜனிக்கும் கமலுக்கும்
  பாலபிசேகம் செய்வாங்க
  என்னை மாதிரிப் பிச்சைக்காரங்களுக்கு
  அரைச் சதமும் (அணாவும்) போடாங்க
  தமிழன் வாழுமிடமெங்கும்
  இது தான் செய்தியோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை நணஅபரே தமிழன்தான் இதில் முன்னணி என்பது வேதனைக்குறியதே...

   நீக்கு
 10. தமிழகத்தின் சாபம்.

  அவலம்.

  தொடர்கிறேன் நண்பரே!

  பதிலளிநீக்கு
 11. இதுதான் தமிழ்நாடு! பார் போற்றும் தமிழ்நாடாக இருக்க வேண்டியவள் "பார்" போற்றும் தமிழ்நாடாகவும் ஆகி....திரையிலும் மூழ்கி..அது அமெரிக்காவாக இருந்தாலும் திரையரங்கில் தீபாராதனை செய்து பூ போட்டு முதல்நாள் முதல் ஷோ என்று நம் தமிழர்கள்தான் அங்கும் இப்படிச் செய்வது. ஸோ தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழர் வாழும் இடம் எனலாமோ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை அபுதாபியிலும் இப்படிப்பட்டவர்கள் உண்டு வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. கடவுள் வேற மனிதன் வேற அரசியல் வேற என்று பிரித்துக் பார்க்கத் தோன்றாதவனே உண்மையான டமிலன்.
  எவ்வளவு சொன்னாலும் திருத்த மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே சரியாக சொன்னீர்கள் இனியெனும் வரும் என்று நமபுவோம்.

   நீக்கு