செவ்வாய், அக்டோபர் 18, 2016

கண(ம்)பதி


உன் மனம் என்னும் பூங்கொத்தை
தினம் தினம் உலுக்கி பார்,
அதன் கனம் ஏன் குறையவில்லை ?
காரணம் பணம் என்னும் வனம் தேடி
 உன் மனம் போனதால்,
மானம் போயி நாணம் கெட்டும்,
இந்த தனம் விட்டு விலகும்
குணம் ஏன் வரவில்லை ? 
தானம் செய்யும் மனம் மறந்து
தன் இனம் துறந்து,
ஜாதி சனம் ஒதுக்கி
நாளை பிணம் ஆகும் போது
இந்த பணம் எங்கு போகும் ?
 All Ready கனம்பாதியாய் கணபதி (Please I want to delete)
இது அரசியல் பதிவு அல்ல ! எமக்கானது.

30 கருத்துகள்:

 1. அருமை. எதில் உண்மையான சந்தோஷம் என்பது பாதி நேரம் புரிவதில்லை!

  பதிலளிநீக்கு
 2. கடைசி வரி யோசிக்க வைக்கிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி யோசிக்காதீர்கள் நான் சொன்னதை நம்புங்கள்.

   நீக்கு
 3. தனம் விட்டு எப்படி விலகுவது? வெள்ள பாதிப்பு ஏற்படாமல் மேட்டில் வீடு கட்டிக்கொள்வதுபோலல்லவா? அப்போதும் விதி, புழலேரியைத் திறந்துவிட்டதுபோல் பெருக்கெடுத்துவந்தால் நம் முன்னெச்சரிக்கைதான் என் செய்யும்? 2000 ஆண்டுகட்கு முன்பே, தமிழ்ப்புலவன் சொன்னதல்லவா? "அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான வார்த்தை சொன்னீர்கள்

   நீக்கு
 4. சிறிய பதிவு, பெரிய பதிவு எதுவானாலும் தங்களது பதிவு ஒரு பாடமே.

  பதிலளிநீக்கு
 5. ‘பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
  கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
  ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
  பாவிகாள் அந்தப் பணம்’

  என்ற ஔவைப் பாட்டியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஔவைப்பாட்டியின் பாடலை நினைவு கூர்ந்தது நன்று

   நீக்கு
  2. ஐயா banker அவர்களே நீங்களே இப்படிச் சொன்னனால் எப்படி??. unclaimed deposits எல்லாம் யார் அனுபவிக்கிறார்கள் என்று தெரியாதா?
   --
   Jayakumar​​

   நீக்கு
 6. குணம் முக்கியம் எனப்படுகிறது,,/

  பதிலளிநீக்கு
 7. இறந்தவரின் உடலை எரிக்கவும். டெத் சர்பிகேட் வாங்கவும், மயானத்திற்கு கொண்டு செல்ல தேரோ..அல்லது அம்பலன்சுக்கோ கொடுக்க... மூன்றாம்..பதினாராம்நாள் இப்படி பல செலவுகளுக்கு அந்தப் பணம் போகும் தலைவரே......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருந்தாலும் இம்பூட்டு பணம் எதற்கு ?

   நீக்கு
  2. பின்னாடி வாங்க முடியாதுன்னும் கொடுக்காமா இருக்க மாட்டாங்கன்னு பந்தல் அமைப்பாளர் தொடங்கி மாயன ஊழியர்வரை பில்ல தீட்டிவிடுகிறாங்களே ... என் தாயார் என்னைப் பிரிந்து விட்ட போது ஏற்ப்பட்ட அனுபவம் நண்பரே...

   நீக்கு
  3. அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 8. பணம் என்னடா ? பணம் பணம் ?
  குணம் தானடா நிரந்தரம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
  பணம் மட்டும் வாழ்க்கை அல்ல என்று சொல்லும் பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருத சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி
   தங்களது தளத்தை எனது கணினியில் திறக்க முடியவில்லை செல்லில்தான் படிக்கிறேன்.

   நீக்கு
  2. ஏன் என்று தெரியவில்லையே?

   நீக்கு
 9. பணம் தேவை தான். என்றாலும் வெறியாகக் கூடாது!

  பதிலளிநீக்கு
 10. பணம் என்றால் பிணமும் வாய்ப்பிளக்கும்! பணம் தேவைதான் ஆனால் அதுவே வாழ்க்கையாகிவிடாது! பணம் இருந்தும் குணம் இல்லை என்றால் மதிப்பே இருக்காது.

  அருமை ஜி!!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...