தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

புதுக்கோட்டை, புகழ் புகழேந்தி


அடோல்ஃப் ஹிட்லரின் கருத்தில் எமக்கு மிகவும் பிடித்தவை தாங்கள் மேலே காண்பது நான் புகழ் பெற்றதாக நினைவு தெரிந்த நாள்முதல் அப்படியொரு சம்பவம் இல்லை இதில் அவமானம் பலமுறை நிகழ்ந்திருக்கின்றது ஆகவே நான் எப்பொழுதுமே இதை மறப்பதில்லை வேதனைகள் வரும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நொடியும் என் முகத்தை கண்ணாடியில் பார்த்து நினைவு கூர்வேன் மறந்திடாதே என்று எனக்குள் நான் சொல்லிக் கொள்வேன் என்னை அவமானப்படுத்தியவர்கள், வேதனைப்படுத்தியவர்கள் எல்லாம் இப்பொழுது எனது பொருளாதாரத்துக்காக மரியாதை கொடுப்பதை காணும் பொழுது மீண்டும் வேதனையே வருகின்றது விபரம் அறிந்த நாள்முதல் நான் நானாகவே வாழ்கின்றேன் மனதில் மாற்றமில்லை வாழ்வில் ஏற்றம் உண்டு. 

காலத்துக்கு தகுந்தாற்ப்போல் மனதை மாற்றிக்கொள்ள என்னால் இயலவில்லை இதற்காக என்னை நானே மனம் நொந்து இருக்கின்றேன் நாமும் சராசரி மனிதர்களைப்போல் வாழவில்லையே ஏன் ? எவ்வளவு சந்தோஷங்கள் இவ்வுலகில் இருக்கின்றது நேர்வழி என்ற பாதையில் சென்றதால் கிடைத்தது என்ன ? என்னை நானே பலமுறை ஆராய்ந்தேன் கிடைத்த விடை இதுவே.

மரணத்துக்குப்பின் இறைவனை காணலாம் என்று சொல்கின்றார்கள் இது உண்மையோ பொய்யோ ஒரு மனிதன்10 நபர்களை கொலை செய்கின்றான் இன்னொரு மனிதன்100 நபர்களை கூட்டுக்கொலை செய்கின்றான் ஆறறிவு மனிதன் அவர்கள் இருவருக்கும் தூக்குத்தண்டனை என்று தீர்ப்பு வழங்குகின்றான் இது நியாயமானவையா ? அதற்காக கூடுதல் கொலை செய்தவனை10 முறை தூக்கில் போடமுடியுமா ? முடியாது காரணமென்ன ? மனிதனுக்கு இதனைக் கடந்த சிந்தனை இல்லை இதுதான் உண்மை இருந்தால் மரணத்தை வென்று அதனை நிறுத்தியிருப்பான் ஒருக்கால் கடவுளைக் கண்டால் ? அவர் சொர்க்கம்-நரகம் என்று சொல்கின்றார்களே அதைக் கொடுப்பார்தானே எமக்கு எதுவோ கிடைக்கட்டும் நாம் சந்தித்தால் கடவுளிடம் வாதம் செய்யமுடியுமே என்ற விடை எனக்கு கிடைத்தது ஆம் நான் உங்களிடம் பொய் சொல்லமுடியும் கடவுள் என்பவன் இருந்து அவனை நான் சந்திக்கும் தருணமும் வந்தால் ? ? ? அவரினிடம் நான் பொய் சொல்லமுடியாது உண்மைதானே காரணம் அங்கு நிகழ்வுகள் மீண்டும் கண்முன் நிகழ்த்திக் காட்டப்படலாம் அவ்வகையில் நான் செய்த தவறுகள் என்ன ? என்று கடவுளிடம் கேள்வி கேட்க முடியுமே என்று என் மனசாட்சி எனக்கு ஆதரவு கொடுத்து இதற்கு நான் கடந்த வந்த எனக்கு பிரயோசனமற்ற, பிறருக்கு பிரயோசனமான வாழ்க்கையே ஆதாரம் என்று சொல்கின்றது.

மேலும் ஆலோசனை கொடுக்கின்றது வாழ்வில் நேர்மையில் முக்கால்சதம் அடித்த விட்ட நீ கடைசி கால்சதத்தில் குழப்பம் ஏன் ? என்றும் கேட்கின்றது மேலும் இவ்வளவு காலமும் நல்ல பெயர் எடுத்த நீ நொடியில் கெட்ட பெயரை எடுத்து விடாதே அது நீ இவ்வளவு காலம் பட்ட கஷ்டத்துக்கு அர்த்தமில்லாமல் போய் விடும் என்று எச்சரிப்பதோடு இதற்கு நீ சராசரி மனிதர்களைப்போல் ஜிங்கா மங்கா வாழ்க்கை வாழ்ந்து தொலைந்திருக்கலாமே என்றும் கிண்டலடிக்கின்றது இவ்வளவு காலமாக இல்லாத சிந்தனை இப்பொழுது வருவதற்கு காரணம் உனக்கு தெரியாதா ? என்று மனசாட்சியிடம் கோபமாக கேட்டேன் அதற்கு இரண்டு ஜீவன்களுக்காக வாழ்ந்தாய் இதில் முதலாவது உன்னை புரிந்து கொள்ளாமல் பேசிவிட்டதால்தானே இந்த குருட்டு சிந்தனை தோன்றுகின்றது ஆனால், இரண்டாவது ஜீவன் உன்னை மிக அழகாக, மிகத் தெளிவாக, மிகவும் அருமையாக புரிந்து கொண்டு அன்பைப் பொழிகின்றதே அந்த ஜீவனுக்காக மிச்ச நாட்களையும் கடத்தலாமே ? என்றதும் என் மனம் ஆறுதலடைந்து வழக்கமான பாதையிலேயே பயணிப்போம் வடக்குத்தெரு போகும்வரை என்று நினைத்து கடக்க செல்கி...........

40 கருத்துகள்:

 1. ஏதோ மன வேதனை என்று புரிகிறது. விடுங்கள். பொதுவாக அவமானங்கள் பற்றிச் சொல்லும்பது அவற்றை மன்னித்து விடலாம். மறக்கக் கூடாது என்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை நண்பரே நான் எதையுமே மறப்பதே இல்லை.

   நீக்கு
 2. தம சப்மிட் ஆகவில்லை!

  பதிலளிநீக்கு
 3. நல்லது வடக்கு தெருவுக்கு போகும்வரை..வழக்கமான பாதையிலே பயணிப்போம்...

  பதிலளிநீக்கு
 4. காலத்துக்குத் தகுந்தாற்போல் மனதை மாற்றிக் கொள்வதுதான் சராசரி மனிதனின் வாழ்க்கையா ஜீ அது தவறு என்பதுபோல் கருத்து தெரிவிக்கிறீர்களா . நாம் நம்மைப் பற்றி நினைப்பதே மாறும்போது பிறரைப் பற்றி நினைப்பதும் மாறலாமே எல்லோரிடமும் எல்லாக் காலத்திலேயும் நல்ல பெயர் எடுக்க முடியுமா ஜீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா மாற்றிக்கொள்வதை தவறு என்று யாரும் சொல்லி விடமுடியாது என்னால் இயலவில்லை.

   உண்மை காந்திஜியவே பிடிக்காதவர்கள் இருக்கும் பொழுது நான் எம்மாத்திரம் வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. நல்ல தெளிவு..

  >>> மிகவும் அருமையாகப் புரிந்து கொண்டு அன்பைப் பொழிகின்றதே!.. <<<

  எத்தனை பேருக்கு இந்த மாதிரி வாய்க்கும்..

  வாழ்ந்து பார்த்துவிட வேண்டியது தான்..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆம் பார்த்து விடலாம் கடைசிவரை வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 6. பெயரில்லா10/16/2016 1:24 PM

  என் எண்ணங்கள் தலைப்பில் எழுதியபடியால்..
  மிக அரமையாக உள்ளது சகோதரா.
  சிந்தனைக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 7. யாருக்கும் நல்லவனாக யாருமே இருக்க இயலாது. இது அவதாரங்களில் ஆரம்பித்து, புத்தர், ஏசு, காந்தி போன்ற அனைவருக்கும் பொதுவானது. இதில் நாம் எங்கே...

  நம் வாழ்க்கை முறையில், நாம் நம் மனசாட்சிக்குப் புறம்பாக நடந்துகொள்ளாமலிருந்தாலே அதிகம். இதில் மற்றவர்களைப்பற்றிக் கவலைப்பட எங்கே நேரம்?

  இந்த உலகில் நம்மோடு கடைசி வரை துணைக்கு வரப்போவது நம்முடைய மனசாட்சி ஒன்றுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மனசாட்சி உண்மை அதுவே கடைசித்தோழன், உயிர்த்தோழன், உண்மைத்தோவன் அழகாக சொன்னீர்கள் நன்றி

   நீக்கு
 8. மனம் போல் வாழ்வு..

  தொடர்கிறேன் நண்பரே!

  பதிலளிநீக்கு
 9. வழக்கமான பாதையில் மன உறுதியுடன் செல்லுங்கள். இறைவன் துணையிருப்பான்.

  பதிலளிநீக்கு
 10. மனவேதனையை எழுத்தில் வடித்து விட்டீர்கள். தற்போது மனம் இலகுவாக இருக்கும் நன்று

  பதிலளிநீக்கு
 11. வடக்குத் தெரு போகும் வரை
  இப்படி என்றால்
  வடக்குத் தெரு போனால்
  எப்படி இருக்கும்
  எதற்கும்
  பொறுத்திருந்து பார்ப்போம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே கடைசிவரை பார்ப்போம் வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. நான் கண்ட தெய்வம் ,மனசாட்சி ஒன்றுதான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நானும் மனசாட்சியை நம்புகிறவன்தான்

   நீக்கு
 13. அண்ணா....
  போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்...
  நாம் நம் பாதையில் போவோம்... அவமானங்கள் எல்லாம் நமக்கு வெகுமானமே....
  மன வேதனையில் இருந்து வெளியில் வாருங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், ஆறுதலான கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 14. ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக வாழ்வது என்பது வஞ்சகம். பொய் வாழ்க்கை. உங்களால் அது முடியவில்லை. அதற்காக வருந்த வேண்டியதில்லை. உங்கள் மனச்சாட்சி உங்களை ஏற்றுக்கொண்டால் போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஐயாவின் அருமையான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 15. தங்களை அவமானப்படுத்திவர்களை மறப்போம் மன்னிப்போம் என நினத்து வாழுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 16. காலம் ஒரு நாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்.

  பதிலளிநீக்கு
 17. மனம் அறிந்து யாருக்கும் தவறு செய்யாதவரை அடுத்தவர்கள் செய்வதற்கெல்லாம் கவலைப் பட வேண்டாம்.... சில சமயங்கள் இப்படித்தான் நடந்து விடுகிறது.... என்ன செய்ய முடியும்.

  இதுவும் கடந்து போகும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி தங்களது கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 18. உளிபட்ட கல் சிலையாகித் துதிக்கப்படும்
  சுகமாக் கிடந்த கல் படியாக மிதிக்கப்படும்.
  நெருப்பில் வெந்த தங்கமே விலையாகும்- பலர்
  வெறுப்பில் வந்ததே நம் அறிவாகும்.
  உங்கள் அறிவு வளர்கிறது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் உயிர்ப்பான கவிதை வரிகள் ஊக்கம் தருகின்றது நன்றி வருகைக்கு.

   நீக்கு
 19. தெரிந்து ஏதும் செய்யவில்லை அல்லவா? அது போதும், நம் மனசாட்சி நம்மைத் துன்புறுத்தாவிட்டால் போதும். மனிதர்கள் துன்புறுத்தத் தான் செய்வார்கள். புரியாதவர்களும் புரிந்து கொள்ளும் காலம் ஒன்று வரும். உங்கள் மன அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துரை மனதுக்கு இதமாக இருக்கின்றது

   நீக்கு
 20. என்னாச்சு ஜி!?? சரி விடுங்க் ஜி. உங்கள் மனம் உங்களிடம் என்ன சொல்லுகிறது? அதான் உங்களுக்குள் இருக்கும் கில்லர்ஜி. உங்கள் வாய்ஸ். அதுதான் உங்களின் உற்றத் தோழன். நீங்கள் அழுதால் அதுவும் அழும் ஆனால் உங்களுக்கு ஆறுதல் சொல்லும் அறிவுரை சொல்லும் ஜி. நீங்கள் தவறு செய்தாலும் அது உங்களைச் சுட்டிக் காட்டிப் பொசுக்கிவிடும். அது நல்லாத்தானே இருக்கு ஜி. அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாதீர்கள். புறம் தள்ளூங்கள். நல்லதை நினைத்து...சந்தோஷமான நிகழ்வுகளை நினைத்துக் கொள்ளுங்கள். விரைவில் தங்கள் மனம் ஆறு மனமே ஆறு என்று ஆறட்டும். எல்லாமே இதுவும் கடந்து போகும் என்பதுதான்..ஜி விரைவில் தங்கள் மனம் மகிழட்டும். பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி

   நீக்கு