தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 09, 2018

புர்ஜ் கலீஃபாவில்...



அபுதாபியில் இருக்கும் பொழுது ஒரு முறை இந்தியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்தினரோடு துபாய் புர்ஜ் கலீஃபா வேர்ல்ட் டவருக்கு மேலே செல்வதற்கு போயிருந்த பொழுது எத்தனை முறைதான் போய் வருவது என்ற அலுப்பால் அவர்களை மேலே அனுப்பி விட்டு நான் மாலில் சுற்றிக்கொண்டு வந்தேன்

சனி, ஆகஸ்ட் 04, 2018

எழுத்தாளன்



ஒவ்வொரு மனிதரும் தங்களது வாழ்க்கையை கடத்துவதற்கு ஏதோவொரு வேலையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் சிலருக்கு புண்ணியமாகவும், சிலர் புரியாமல் பாவமாகவும் மாற்றிக் கொள்கின்றார்கள்

ஞாயிறு, ஜூலை 29, 2018

ஆயிரம் அர்த்தங்கள்

இவர்களை பார்த்தவுடன், சட்டென சிரிப்பவரா நீங்கள் ? அப்படியென்றால் உங்களுக்கு விரிவான, உயர்வான மனதை இறைவன் கொடுக்கவில்லை என்றே பொருள், மாறாக சிந்தித்து பார்த்தீர்களானால் நல்ல எண்ணமுள்ளவர், நன்றி மறக்காதவர், ஆம் சில விசயங்களை வைத்தே சிலரை கணிக்க முடியும் என்பது உண்மைதான், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் கைபேசியின் ஒலியோசையை வைத்துக்கூட ஒருவரது குணதியசங்களை கணிக்க முடியும், என கசாநாயகி கசாநாயகனிடம், சொல்வார். ஆம் இதுவும் ஓரளவு உண்மையே உணர்வு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவன் கொடுத்துள்ளான், அப்படியிருக்க இவர்களும் மனிதர்கள்தானே இவர்களுக்கும் ஒரு வாழ்க்கை வேண்டுமே...

வியாழன், ஜூலை 26, 2018

இறைவனை பார்த்தது யார் ?


சிவனை யாராவது பார்த்து இருக்கிறார்களா ? அவர் முறுக்கிய மீசையுடன் தமிழ் சினிமா, சீரியல் நாடகங்களில் வருகிறார் சரி. அதேநேரம் வடநாட்டு சினிமா சீரியல் நாடகங்களில் ஏன் மீசையில்லாமல் வருகிறார் ? வடநாட்டு தெய்வங்கள் எல்லா வகையிலும் அப்படியே வேறு படுகிறார்கள் தற்கால சராசரி மனிதர்கள் போலவே தலைமுடியை வெட்டாமல் அப்படியே வருகிறார்கள் சரி ஆனால் முகத்தை மட்டும் மீசையை ஒதுக்கி தாடியை மழித்து விட்டு வருகிறார்களே அப்படியானால் அவர்களுக்கும் ஷேவிங் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறதா ?