சமூகத்தில் ஒரு நல்ல
சிந்தனையுள்ள மனிதன், ஒரு நல்ல குணமுள்ள பெண்ணை மணக்க நினைக்கிறான், அவளிள் தாயார்
ஒரு காலத்தில் இந்த சமூகத்தின் பார்வையில், தவறானவள் அவளின் சூழ்நிலை கணவனால் மூன்று
பெண் குழந்தைகளோடு, கை விடப்பட்டவள், மரணிக்கவும் முடியாமல் தன் குழந்தைகளுக்காக
வாழ நினைத்தவள் எத்தனை போராடியும் இந்த சமூகம் அவளை விடவில்லை வேறு வழியின்றி
குழந்தைகளின் உணவுக்காக தன்னையே உணவாக்கினாள் சில விபச்சாரன்களுக்கு
இன்று, அதே விபச்சாரன்கள்கூட
அவளின் மகளை மணக்க நினைக்கும், ஆடவனை முட்டாள் என சொல்வது ஏன் ? மகள் நல்லவள்தானே ! உன்னுடைய
கருத்து அவள் வீட்டில் பெண் எடுப்பது தவறாக இருக்கலாம், இருக்கட்டும் அதற்காக, மற்றவன்
மனதை காயப்படுத்துவது ஏன் ? அப்படியானால் அவளைப் போலவே அவள் மக்களும் உன்னிடம்
தன்னை இழக்க வேண்டும் அப்படித்தானே !
சரி,
இவர்களெல்லாம் சிறிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள், வெளியுலகம் அறியப்படாதவர்கள்,
அதேநேரம் உலகமே அறியப்படும் நடிகைகளை மணக்கிறார்களே ! அவர்களை நீ ஒன்றுமே
சொல்வதில்லையே ஏன் மானிடா ? அவர்களின் பணபலம் உன்னை
பாடாய்படுத்தி விடும் என்ற பயமா ?
அறிவற்ற மனிதா,
இங்காவது தாய்தான் கடந்த காலத்தில் வறுமைக்காக
விபச்சாரி, அங்கு மகளே நிகழ்காலத்தில் வளமைக்காக விபச்சாரி,
விபச்சாரியை மணப்பவனை விட, விபச்சாரி மகளை மணப்பவன் உயந்தவன்
இல்லையா ?
மனிதன் கஷ்டமான வாழ்வில், தவிர்க்க வேண்டியது
வளமையா ? வறுமையா ?
போதாக்குறைக்கு வளமைக்கு
விபச்சாரம் செய்தவளை, செய்பவளை வாழ்க ! வாழ்க ! வெனகோஷம்வேறு போடுகிறாய் வருங்கால முதல்வரே ! எனவும் கோஷம் போடுகிறாய், இதெல்லாம்
போக கோயில்கூட கட்டுகிறாய் உன்னைப் படைத்தவன் இதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வான் ? அதற்கு, தன்னை
படைத்தவனைப் பார்த்து ''கடவுளே இல்லை'' என சொல்லுபவன் உன்னைவிட
மேலானவன் மட்டுமல்ல, மரணபயமில்லா தைரியசாலியும்கூட...
பின்குறிப்பு - நான் தி.க.காரன்,
அல்ல !
