தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 20, 2016

ரத்தம் சைவமா ?

பால் சைவமா ? அசைவமா ? சைவ உணவருந்தும் பலரும் சைவம் என்றே சொல்கின்றனர் சிலர் எதுவாயிருந்தால் ? எனக்கென்ன ? தெலுங்குபட டைட்டில் போல கேட்டு விட்டு போய் விடுகிறார்கள் தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் பாலில் நடக்கிறது ஆகவே அது சைவம்தான் என்கின்றனர் சிலர் இன்றைய வாழ்க்கை முறையில் பால் அருந்தாமல் வாழ்வது என்பது நடக்காத காரியமே ஏனெனில் காஃபியோ, டீயோ அருந்தாதவர்கள் 10% மே இருப்பார்கள் நாமும் நம் அன்னையிடம் தாய்ப்பால் குடித்தோம் பால் தாயின் குருதியில் இருந்துதானே உருவாகிறது அப்படியானால் ரத்தம் சைவமா ? இதே நிலைதானே மாட்டிற்கும், ஆட்டிற்கும் ஏன் ? அனைத்து ஜீவராசிகளுக்கும் தெய்வத்திற்க்கு அபிஷேகம் செய்கிறோம் என்பதால் சைவம் என்று சொல்வது ஐயத்துக்குறிய விடயமே... 

ஞாயிறு, ஜூன் 19, 2016

அப்பா என்னும் தாரகமந்திரம்


‘’அப்பா’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய் பிரிந்த பிறகே உணர்கின்றார்கள் இதில் அனுபவப்பட்டு உணர்ந்தவர்களில் நானே முதலாமாவன் என்பதை வெட்கப்பட்டு ஒத்துக்கொள்கின்றேன் இந்த வட்டத்துக்குள் பெரும்பான்மை வரக்காரணம் என்ன ? வாழும் காலத்தில் தந்தையும், மகனும் நண்பர்களைப் போல வாழ்ந்து கடக்க முடியாதா ? இளவயதில் தந்தையை இழந்தவன் தந்தையின் பாசத்துக்கு ஏங்கி வாழ்கின்றான்.

வெள்ளி, ஜூன் 17, 2016

யோகா’’சாணம்

  சாசன விளக்கங்கள் காண்க..
இது குவடு சாசனம் என்பது
இது கும்மி சாசனம் என்பது
இது குடுங்கி சாசனம் என்பது
இது கும்பலி சாசனம் என்பது
இது குந்தாநந்தா சாசனம் என்பது
இது குந்திம்பா சாசனம் என்பது
இது குடலி சாசனம் என்பது
இது குந்தி சாசனம் என்பது
இது மாட்டுச் சாணம் என்பது
18-ஆம்படி கருப்பர் துணை
யோகாசான்
பன்ருட்டி பன்னியன்

ChivasRegal சிவசம்போ-
எல்லா சாசனமும்குவிலேயே ஆரம்பிக்குதே.. ஏதும் பந்தம் உண்டோ ?
சாம்பசிவம்-
அதை பன்னியன் ஸாரிடம்தான் கேட்கணும்.
காணொளி

வியாழன், ஜூன் 16, 2016

பழநி, பழக்கடை பழனி


இடம் : பழநி பஸ் ஸ்டாண்ட் இரவு 02. 36 போலீஸ்காரர் ஒருவனை அழைக்கிறார்

டேய் இங்கே வா உன் பேரென்னடா ?
பழனிங்க..

எந்த ஊருடா ?
பழநி ஸார்.

ஆங் ?
பழநி இதே ஊருதாங்க...

ஒங்கப்பா பேரு ?
பழனியப்பன் ஸார்

….? அம்மா பேரு ?
பழனியம்மாள்.

உன் வீடு எங்கேயிருக்கு ?
பழனியாண்டி காலனியிலே ஸார்.

எங்க வேலை பார்க்கிறே ?
பழக்கடையிலே

எந்தக்கடை ?
பழமுதிர்ச்சோலை அடிவாரத்துல இருக்குதுங்க.

எங்கே போயிட்டு வர்றே இந்த நேரத்துல ?
சினிமாவுக்கு ஸார்.

என்ன சினிமா ?
பழனி ஸார்.

என்ன ?
பழனி ஸார் சிவாஜி கணேசன் நடிச்சது பழசு

எந்த தியேட்டருலே ?
பழனியாண்டவர் தியேட்டருல ஸார்

எங்கே டிக்கெட்டக் கொடு
இந்தாங்க ஸார்.

என்னடா நக்கலா சினிமா டிக்கெட்டுன்னு பழனி முருகன் டிரான்ஸ்போர்ட் பஸ் டிக்கெட்ட குடுக்குறே ?
அய்யோ மன்னிச்சுடுங்க ஸார் அது நேத்து சரக்கெடுக்க பழங்குடி போன டிக்கெட்டு இந்தாங்க சினிமா டிக்கெட்டு.

ஒன்னப்பாத்தா…. சந்தேகமா இருக்கே ?
அப்படி எல்லாம் இல்ல ஸார் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அய்யா பழனிவேல் ராஜன் கூட நமக்கு நல்ல பழக்கமுங்க…..

அடி பழய செருப்பால இதுக்குமேல ஒரு வார்த்தை பேசினே தக்காளி பழத்தை நசுக்குற மாதிரி நசுக்கிடுவேன் ஓட்ரா…. ராஸ்கல்ஸ்..

(தனக்குள்) சே... என்ன இவ்வளவு பழசா இருக்கான் நல்லவேளை அவன் பொண்டாட்டி புள்ள பேரைக்கேக்கலே...

இனிமேல் இங்கிருந்தால் சரியா வராது என ஸ்டேஷனுக்கு நடையைக் கட்டினார் சப்-இன்ஸ்பெக்டர் பழனிக்குமார்.

குறிப்பு - இந்த விசயங்கள் எல்லாம் என் மனதில் உதித்தது இன்றல்ல... நேற்றல்ல பழ Sorry பல ஆண்டுகளாக ஏன்... சில மாமாங்கம் என்றும் சொல்லலாம்.


பின்குறிப்பு - நடிகர் வடிவேலுவை வைத்து எடுக்க வேண்டிய எத்தனையோ விசயங்கள் என் மனதில் பதிந்து கிடக்கின்றது என் வாழ்க்கை சூல்நிலை மாறி விட்டதால் இந்த தாமதம் இன்னும் தொடர்கின்றது... அதற்குள் அவரது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார் இப்பொழுதுகூட இதை பதிய வைக்க காரணம் என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் போவதற்கு முன் இந்த விண்னில் விதைத்திட விரும்புகின்றேன்.

நான் கண்ட இன்பம் இந்த வலையுகமும் பெற வேண்டும் - கில்லர்ஜி

செவ்வாய், ஜூன் 14, 2016

ஒரு டைரியின் கதி


நான் U.A.E க்கு 1996 ஜனவரியில் வந்து ஆறு மாதத்திலேயே மலையாளம் எழுத பழகிக்கொண்டு டிசம்பர் மாதம் முதலே டைரியிலும் எழுதத் தொடங்கி விட்டேன் பிறகு 2000 த்திற்கு பிறகு அரபு மொழியிலும் எழுதத் தொடங்கினேன் ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு இந்தியா வரும் பொழுது முடிந்த டைரியை வீட்டில் வைத்து விட்டு வந்து விடுவேன் வேற்று மொழி என்பதால் பெட்டியை பூட்டாமல் விட்டு விட்டேன் நமது வீட்டில் உள்ளவர்கள் சாதாரணமானவர்களா ? 

டைரியில் என்னதான் எழுதியிருக்கும்  ஒருவேளை அபுதாபியில் மளிகைக்கடை வைத்திருப்பானோ...  அல்லது மாளிகைகள் கட்டி இருப்பானோ ? இல்லையே அங்கு வெளிநாட்டினர் இடமோ, வீடுகளோ வாங்க முடியாதே... வேறேதும் அந்த மாதிரி, இந்த மாதிரி இருக்குமோ...  என்ற சந்தேகத்தில் இங்கு இருக்கும் ‘’மனசு’’ சே.குமார் போன்ற தேவகோட்டையர்களிடம் நமது ‘’தூ’’ புகழ் வி........தை வைத்து புலன் விசாரணை நடத்தி இருக்கின்றார்கள் நாம் யாருக்கும் துரோகம் செய்திடாத காரணத்தால் உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண்ணாடி போல் சொல்லி இருக்கின்றார்கள் நமது தி கிரேட் தேவகோட்டையர்கள்.


ஒருவேளை கதைகள் எழுதி இருக்குமோ ? அப்படியானாலும் வழக்கம்போல் சாதாரண நோட்டில் எழுதி சாக்கு மூடையில்தானே கட்டி வைப்பான் டைரியில் தேதி வாரியாக எதற்கு ? ஒரு வழியாக கோவையில் மலையாளி ஒருவரை பிடித்து கேட்க, அவரும் அனைத்தையும் படித்து இருக்கிறார் சரி இதற்கெல்லாம் அர்த்தம் என்ன ?

(அங்குதானே நிற்கிறாரு... சிவலிங்கம்)

தென்னந்தோப்புக்காரனுக்கு
ஒன்றும் புரியவில்லை மண்டை காய்ந்து விட்டது போல எனக்கு பைத்தியம் பிடித்து விடும்போல இருக்கு என்னை விடுங்க என்று ஓடியிருக்கின்றான், சரி அரபு மொழியைப்பற்றி கேட்போமென்று ஆலீம் மூஸாவிடம் போக அவரும் பார்த்து விட்டு வேண்டாம் இதற்குமேல் இதைப்படித்தால் நான் ஏர்வாடி போகவேண்டியது வரும் ஆகவே எடுத்துக்கிட்டு போயிடுங்க இல்லை நான் ஒருதடவை முடிவு பண்ணினால் மறுதடவை என்ன செய்வேன்னு... எனக்கே தெரியாது அவ்வளவுதான் மிரண்டு விட்டார்கள் இதற்குமேல் இதை எடுத்துக்கொண்டு போனால் ? நம்மைக் கல்லால் எரிந்து விடுவார்கள் என்று டைரியை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டார்கள் இதெல்லாம் பின்நாளில் எனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் தெரிந்தது.

சரி அப்படி என்னதான் எழுதி இருந்தது ? என்பதுதானே உங்களது கேள்வி மலையாளி, மலையாள வார்த்தையையும், வேண்டுமானால் ஆங்கில வார்த்தைகளையும், ஏன் ? ஹிந்தி வார்த்தைகளையும்கூட படித்து இருக்கலாம், ஆலீம்மூஸா தமிழ் வார்த்தைகளையும், ஆங்கில வார்த்தைகளையும், ஏன் ? அரபு வார்த்தைகளையும்கூட படித்து புரிந்து இருக்கலாம் பாக்கி ? ஆம் பாக்கியை யார் படிப்பது ? பாக்கியராஜ்’’ ?

ஆம் நண்பர்களே... நான்கு வரிகளில் எழுதிய வாக்கியத்தை ஒன்பது மொழிகளில் கலந்து எழுதி இருப்பேன் அதாவது எனக்கு மட்டுமே புரியும் இதில் சரியான இலக்கணம் உள்ளதா ? என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை ஆம் எனக்கு மட்டும் சொந்தம் அந்த டைரி தரும் இன்பம் எனது டைரிதானே நான் எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன் எனது இஷ்டம் அதை மற்றவர்கள் படிப்பது எதற்கு ? நான் டைரியை எப்படி எழுதினேன் என்பதை கீழே சிறிய உதாரணம் மட்டுமே தந்து இருக்கிறேன் மலையாளத்திலும், அரபியிலும் பிறகு அதையே நம் தமிழிலும் இதோ...

 എണ്ണവളേ... അത നേനു മേരാ ബൂക്കായ് ആത്യമായിട്ടു ഇന്തേ ശൂഷാനു പീ ഹേപ്പി.
என்னவளே... அத நேனு மேரா பூக்காய், ஆத்யமாயிட்டு இந்தே சூஷானு பீ ஹேப்பி.

 إنتي منكارتي مرننال فيكاش أج لكات ممى اوبواسم موجود
என்டே மனக்கார்த்தி மரணநாள், பிஃகாஸ் ஆஜ் லகாத் மம உபவாசம் மவ்ஜூத்.

சாம்பசிவம்-
இப்படி எழுதுனா... படிக்கிற ஆளுக்கு நட்டு கழண்டு போகத்தான் செய்யும்.

Chivas Regal சிவசம்போ-
ச்சே’’ ஏத்துன, குவாட்டரு இறங்கிடு’’ச்சே’’