தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 20, 2016

ரத்தம் சைவமா ?

பால் சைவமா ? அசைவமா ? சைவ உணவருந்தும் பலரும் சைவம் என்றே சொல்கின்றனர் சிலர் எதுவாயிருந்தால் ? எனக்கென்ன ? தெலுங்குபட டைட்டில் போல கேட்டு விட்டு போய் விடுகிறார்கள் தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் பாலில் நடக்கிறது ஆகவே அது சைவம்தான் என்கின்றனர் சிலர் இன்றைய வாழ்க்கை முறையில் பால் அருந்தாமல் வாழ்வது என்பது நடக்காத காரியமே ஏனெனில் காஃபியோ, டீயோ அருந்தாதவர்கள் 10% மே இருப்பார்கள் நாமும் நம் அன்னையிடம் தாய்ப்பால் குடித்தோம் பால் தாயின் குருதியில் இருந்துதானே உருவாகிறது அப்படியானால் ரத்தம் சைவமா ? இதே நிலைதானே மாட்டிற்கும், ஆட்டிற்கும் ஏன் ? அனைத்து ஜீவராசிகளுக்கும் தெய்வத்திற்க்கு அபிஷேகம் செய்கிறோம் என்பதால் சைவம் என்று சொல்வது ஐயத்துக்குறிய விடயமே... 

தெய்வம் கேட்டது எனக்கூறி ஆடு, கோழிகளை மனிதன் பலி கொடுத்ததில்லையா ? அப்படியானால் மனிதர்களைப்போல் தெய்வத்திடமும் சைவ-அசைவ பிரிவினைகள் உண்டா ? பலி கேட்டதாய் சொல்லும் தெய்வங்கள் இதுவரை உண்டதுண்டா ? இப்படிச்சொன்ன, மனிதன்தானே உண்கின்றான் அப்படியானால் ? இதிலிருந்து தெரிவதென்ன ? நல்ல உணவு திண்ணும் சந்தப்பத்தை உருவாக்கவே தெய்வம் கேட்டது என மனிதன் பொய் சொல்லியிருக்கிறான் இதைச் சொன்னது யார் ? சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பழக்க வழக்கங்கள் இது அப்படியானால் பொய் சொல்லும் பழக்கம் தோன்றி இத்தனை ஆண்டுகள் ஆகி ட்டது .

உணவுக்காக ஒரு அற்பத்தனமான பொய்யை சொன்னதால்தான் இன்று எதற்கெடுத்தாலும் மனிதன் பொய் சொல்கின்றான். ஆம்.

(01) 1800 கோடிகள் கொள்ளையடித்த அரசியல்வாதிகூட இன்று என்னிடம் ஒன்றும் இல்லையென பொய் சொல்கின்றான்.

(02) சில்லரையை வைத்துக் கொண்டே பயணிகளை சீட்டிங் போட நினைக்கும் நடத்துனர் சில்லரை இல்லையென பொய் சொல்கின்றான்.

(03) தர்மம் செய்ய மனமில்லாத மனிதன் பிச்சை கேட்போரிடம் சில்லரை இல்லை என பொய் சொல்கின்றான்.

(04) வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை கொன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள் என பொய் சொல்கின்றான்.

(05) லஞ்சம் கிடைக்கவில்லை என்பதால் பணம் கை மாறும்வரை வேலை முடியவில்லையென அதிகாரி பொய் சொல்கின்றான்.

(06) பணம் கிடைக்கிறது என்பதால் நீதி மன்றத்தில் கொலையை பார்த்தேன் என பொய் சொல்கின்றான்.

(07) செக்ரட்டரி சர்மிளாவோடு சினிமாவுக்கு போய் விட்டு வீட்டில் மனைவியிடம் ஆபீஸில் ஓவர்டைம் என பொய் சொல்கின்றான்.

(08) முதலிரவில் காரியம் சாதிக்க நான் யாரையுமே காதலித்ததில்லை என பொய் சொல்கின்றான்.

(09) ஒரு லிட்டர் பாலில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து விட்டு ½ லிட்டர்தான் கலந்தேன் என பொய் சொல்கிறான்.

(10) கேவலம் இயற்கையின் சீற்றத்தால் சீறிப்போன பின்புறக்காற்றை புறந்தள்ளி விட்டு நான் இல்லை என்றுகூட பொய் சொல்கின்றான்.


ஆக மனிதன் பொய் சொல்ல படித்துக் கொண்டதற்க்கு யார் ? காரணம் ஆதியில் பொய் சொன்ன அந்த மனிதனே காரணம் என்பதும் இன்றைய பால் விலை ஏற்றத்திற்க்கு பாலை சைவம் என்றும், அசைவம் என்றும் குழப்பி விடுபவர்களே காரணமே ஒழிய நமது சிறந்த ஆட்சியாளர்கள் இல்லை என்பது இப்பொழுது தெளிவாகிறது.

சாம்பசிவம்-
என்னையா நீரு கருவறையில ஆரம்பிச்சு கழிவறையில கொண்டு வந்து நிறுத்திட்டீரு நீரு கல்லறை போகும்வரை இப்படித்தானா ?

நண்பா, இந்தப் பதிவுக்கு சிறு விளக்கம் தேவகோட்டையிலிருந்து காளையார் கோவில் வழியாக சீக்கிரமே பரமக்குடி போகலாம், தேவகோட்டையிலிருந்து சூராணம் வழியாக ஊரெல்லாம் சுற்றி பரமக்குடி போகலாம், நான் தங்களை சூராணம் வழியாக அழைத்துச் சென்றேன் காரணம் கூடுதல் ஊர்களை காணலாம் என்பதால் ஹி ஹி.

35 கருத்துகள்:

 1. ரத்தம் சைவமா எனத் தொடங்கி அரசியலில் முடிக்கும் உங்கள் திறன் பாராட்டுக்குரியது . இது பொய் அல்ல.

  பதிலளிநீக்கு
 2. ரசித்தேன். அந்தக்கால விழாக்கள், நல்ல நாட்களுக்கு வேறு காரணங்கள் இருந்தன. உதாரணமாக பிள்ளையார் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் செய்ய வேண்டும் என்பது போல.. ஆறு குளங்களை தூர்வாரியது போல ஆகிவிடும். ஆற்றில் குளத்தில் கரைக்கும் போதும் அப்படியே. பொங்கலை பண்டிகையாகக் கொண்டாடு என்றால்தான் ஊர்கூடி கதிரறுக்க முடியும். விளைச்சல் எவ்வளவு என்று தெரியும் நியாய விலை வைக்க முடியும். இப்படி சொல்லிக்கொண்டெ போகலாம். 1,2 என்று நீங்கள் பட்டியலிட்டிருக்கும் விஷயங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 3. ஆகா...

  பொய் என்று தாங்கள் போட்ட பட்டியல் -
  மெய் கொண்டு கோர்க்கப்பட்ட அட்டியல்!..

  அரே சதாசிவம்!.. அட்டியல்..ன்னா என்னாய்யா?..

  அட்டியல் என்பது அட்டிகை எனும் கழுத்தணி!..
  தேவகோட்டைக்குத் தெரியாததும் உண்டோ!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இதெல்லாம் பழைய பெயர்கள் என்ற நிலைக்குப் போய் விட்டது வேதனையான விடயமே

   நீக்கு
 4. ரத்தம் சைவமா என ஆரம்பித்து அரசியலில் முடித்துவிட்டீர்கள். தங்கள் தயவிவில் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது ஊர் சுற்றலுக்கு நன்றி

   நீக்கு
 5. ஆக அரசியல்வாதிகள் எப்போதும் தப்பித்து கொள்வார்கள். அதுதானே உங்களது விளக்கம். நன்று...நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மிகச்சரியான விடயத்தை சொன்னீர்கள்

   நீக்கு
 6. பொய்யை புனைந்து வாழும் மனிதர்கள் நாம்.

  பதிலளிநீக்கு
 7. பால் சைவமா என ஆரம்பித்து கலக்கல் பகிர்வு அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுமுறையை நலமாய் கழித்து வந்தமைக்கு வாழ்த்துகள் நண்பரே

   நீக்கு
 8. பேருக்கேத்த மாதிரி கொன்னுட்டீங்க...,
  ரெண்டு பேருமே இன்னைக்கு ஒரே மாதிரி பதிவு போட்டுட்டோமோ!?
  சைவத்த பத்தி இங்க கொஞ்சம் வந்து பாருங்க http://malarinninaivugal.blogspot.com/2016/06/rip.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அப்படியா ? இதோ வருகிறேன்...

   நீக்கு
 9. என்ன ரத்தம் சைவமா என்று பதறி வந்தேன் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியெல்லாம் பதறக்கூடாது இன்னும் இருக்கு...

   நீக்கு
 10. பாலுக்கே கொதித்தால் எப்படி ?இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இன்னும் அரிசிக்கு பொங்கணும், பழத்துக்கு அழணும்..

   நீக்கு
 11. நதி மூலம்...ரிஷி மூலம்...மாதிரி நீங்க பொய் மூலம்...ஆராய்ச்சிக்கு போயிருக்கீங்க...

  நல்ல அலசல்...

  தம +1

  பதிலளிநீக்கு
 12. பால் சைவமோ, அசைவமோ மற்ற உண்ணும் பொருட்கள் தாவரங்கள் கூட உயிருள்ளவை தானே! ஆகவே யாருமே சைவம் இல்லைனே நினைக்கிறேன். :) நல்லதொரு அலசல் பதிவு. உங்கள் மூளையில் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும் போல! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சரியாக சொன்னீர்கள் தாவரங்கள் மட்டுமல்ல தண்ணீரில்கூட உயிர் இருக்கின்றதாம் ஆகவே அனைவரும் அசைவமே...

   நீக்கு
 13. அருமையான ஆராய்ச்சி பதிவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆராய்ச்சியில் கலக்க வந்தமைக்கு நன்றி

   நீக்கு
 14. பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக இணைக்கலாம் (http://www.tamin.in)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவலுக்கு நன்றி இதோ இணைக்க முயல்கிறேன்.

   நீக்கு
 15. புதிய‌ தமிழன் திரட்டி (http://www.tamiln.in)

  பதிலளிநீக்கு
 16. தலைப்பைப் பார்த்தபோதே நீங்கள் எங்கு எங்களை அழைத்துச் செல்வீர்கள் என்று தெரியும். அப்படியே ஆயிற்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா முனைவரின் கணிப்புக்கு நன்றி

   நீக்கு
 17. ம்ம்ம்.... எத்தனை சிந்தனைகள் உங்களுக்குள்ளே....

  பதிலளிநீக்கு
 18. கலக்கல் ஜி!சைவம்னு ஆரம்பித்து அரசியல்!!!!

  சைவம் அசைவம் என்பது ஒரு வித்தியாசம் கற்பிக்கப்படுவதற்காகச் சொல்லப்பட்டது. யாருமே சைவம் இல்லை. இதை உணவு அடிப்படையில் சொல்லவில்லை. நாம் தினமும் யாரேனும் ஒருவரின் மனதை நோகடிக்கத்தானே செய்கிறோம்....அசைவம்தான்.

  மற்றொன்று தாவரகளை உண்டாலும், அதை மீண்டும் வளர்க்க முடியும். ஆனால் 5 அறிவு ஜீவிகள், 3 அறிவு ஜீவிகள் அப்படியில்லை என்பதால் சைவம் அசைவம். ஆனால் இவ்வுலகில் யாரும் சைவம் இல்லை. வெள்ளைச் சர்க்கரை, மாத்திரைகள் எல்லாம் இண்டைரக்டாக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையாக சொன்னீர்கள் அனைவருமே ஒருவகையில் அசைவம்தான்.

   நீக்கு