எனக்கு கொஞ்ச காலமாகவே ஒரு சந்தேகம் பெருங்கொண்ட தொழில்
அதிபர்கள் தங்களது கடைகளை திறக்க உதாரணத்திற்கு அவர்கள் நுங்கு வியாபாரத்தில்
கொடிகட்டி பறக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் மென்மேலும் வளர இவர்கள்
இந்தியாவின் பல இடங்களிலும், ஏன் ? வெளிநாட்டிலும் கூட
கடைகளைத் திறக்கிறார்கள் அதைத்திறக்க பல கோடிகள் கொடுத்து திரைப்பட நடிகர் –
நடிகைகளை வரவைக்கின்றார்கள் இவர்களை வைத்து திறக்கின்றார்களே ஏன் ? அறிவுஜீவி
மக்’’கல்’’ வேலை வெட்டியைப் போட்டு
விட்டு அன்றே இவர்களின் திருமுகத்தை பார்க்க கூட்டமாக கூடுகின்றார்கள் இந்தக்கடையை
அவரு வந்து திறந்தாரு, இவரு வந்து திறந்தாரு என்று அனைவருமே அங்கு வந்தே நுங்கு
குடிக்கின்றார்கள் அது நல்லா இருக்கா ? இல்லையா ? என்பது
முக்கியமில்லை அந்த நடிகை வந்து திறந்தாள் ஆகவே இங்கு வந்து நுங்கு வாங்கி குடிப்போம்
இதுதான் கொள்கை.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வியாழன், செப்டம்பர் 07, 2017
செவ்வாய், செப்டம்பர் 05, 2017
ஞாயிறு, செப்டம்பர் 03, 2017
எனக்கும் விடியுமா ?
மரணமில்லாத வாழ்க்கை எப்படியிருக்கும் ?
குழந்தை பருவத்தில்
தொடங்கி.... இளமையை கடந்து, முதுமை வரை செல்கிறது. முதுமைக்குபின் அப்படியே
இருக்குமென்றே வைத்துக் கொள்வோம், முதலில் இடப்பற்றாக்குறை வந்து விடும், பிறகு
உணவுப் பற்றாக்குறை, மனிதன் அனைத்து வகை மிருகங்கள், பறவைகள், ஜந்துக்களை
உண்ணப்பழகி இருப்பான், மனிதனை, மனிதன் கொலை செய்யவேண்டிய அவசியங்கள் இருக்காது
காரணம் அவன்தான் இறக்க மாட்டானே ? பிறகு அவனை என்ன
செய்யமுடியும் ? பாமரர்களை, ஏழைகளை, பணக்காரர்கள்
கொத்தடிமைகளாக்கி வாழ்வார்கள், இயலாதோர் எனக்கும் விடியுமா ? எனபெருமூச்சிடுவர், சரி
அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் ? வாரிசு இல்லாதோர்கூட கோடி
கோடிகளாக சேர்த்து வைக்கும்போது ? ? ? வாரிசு உள்ளவர்கள் தனக்கும்
மரணமில்லை என்றபோது என்ன நடக்கும் ?
அபுதாபியில் இருக்கும் பொழுது
உறக்கம் வராத ஒரு இரவில் நினைத்துப் பார்த்தேன். மறுநாள் காலையில் நான் OFFICE போகவில்லை HOSPITALலுக்கு சென்றேன், காரணம்
இரவில் நினைத்ததின் விளைவு குளிர் காய்ச்சல் வந்து விட்டது, DOCTORரிடம் என்ன சொல்வது உண்மையை
சொல்ல முடியுமா ? அப்புறம் ‘’வேறு’’ HOSPITAL லுக்கு போகச் சொல்லுவார்
இரவில் A/c கூடுதல் அதனால்தான் என்றேன்
வேறுவழி ?
சே... என்ன இது ? எவனோ ஒருத்தன் மஞ்சக்குளிக்க
நாமேன் சுடு தண்ணியில நிற்க வேண்டும் ? இப்படித்தான் அவசியமில்லாதவர்களை
எல்லாம் நினைத்து, நினைத்து என்மீது எனக்கே வெறுப்பு வந்து விட்டது இதனால்
காரணமில்லாமல்கூட என்னை எனக்கே பிடிக்க வில்லை.
Chivas
Regal Sivasambo-
God does
everything for some important reason...
That’s why he downloads like birth and death option & rotates the
life until death.
சாம்பசிவம்-
பரவாயில்லையே துரை இங்கிலீஸூ பேசுது.
வெள்ளி, செப்டம்பர் 01, 2017
மனம் கெட்டது, கேட்டது
மனிதநேயம் மரத்தையும் மதித்தது
மனதின் காயம் மனிதனை மிதித்தது.
கண்டகாட்சி மனதில் வலித்தது
கண்ணை மூடினால் காதில் ஒலித்தது.
சிறையின் வாசல் கதவு திறந்தது
சிறகை விரித்து பறவை பறந்தது.
சிலிர்த்து பறந்து உலகை மறந்தது
சிறிய உலகம் கனவில் தெரிந்தது.
சுற்றுலா செல்வது மனதுக்கு ஏற்றது
கொடைக்கானலிலே நீச்சல் கற்றது.
பள்ளி விடுமுறை விடுதலை பெற்றது
பள்ளி செல்லவே விருப்பம் முற்றது.
நீயும் நானும் கனவில் கலந்தது
நினைக்க நினைக்க நெஞ்சம் இனித்தது.
உறக்கம் கலைந்ததும் காட்சி மறைந்தது
உண்மை தெரிந்ததும் வெறுப்பு வந்தது.
ஒளியின் காட்சி கண்ணில் பட்டது
உணர்வின் ஆசை மனதை தொட்டது.
உன்னால் எனது, வாழ்வு கெட்டது
குற்ற உணர்வோ நெஞ்சை சுட்டது.





