தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 03, 2017

எனக்கும் விடியுமா ?

மரணமில்லாத வாழ்க்கை எப்படியிருக்கும் ?

குழந்தை பருவத்தில் தொடங்கி.... இளமையை கடந்து, முதுமை வரை செல்கிறது. முதுமைக்குபின் அப்படியே இருக்குமென்றே வைத்துக் கொள்வோம், முதலில் இடப்பற்றாக்குறை வந்து விடும், பிறகு உணவுப் பற்றாக்குறை, மனிதன் அனைத்து வகை மிருகங்கள், பறவைகள், ஜந்துக்களை உண்ணப்பழகி இருப்பான், மனிதனை, மனிதன் கொலை செய்யவேண்டிய அவசியங்கள் இருக்காது காரணம் அவன்தான் இறக்க மாட்டானே ? பிறகு அவனை என்ன செய்யமுடியும் ? பாமரர்களை, ஏழைகளை, பணக்காரர்கள் கொத்தடிமைகளாக்கி வாழ்வார்கள், இயலாதோர் எனக்கும் விடியுமா ? எனபெருமூச்சிடுவர், சரி அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் ? வாரிசு இல்லாதோர்கூட கோடி கோடிகளாக சேர்த்து வைக்கும்போது ? ? ? வாரிசு உள்ளவர்கள் தனக்கும் மரணமில்லை என்றபோது என்ன நடக்கும் ?

அபுதாபியில் இருக்கும் பொழுது உறக்கம் வராத ஒரு இரவில் நினைத்துப் பார்த்தேன். மறுநாள் காலையில் நான் OFFICE போகவில்லை HOSPITALலுக்கு சென்றேன், காரணம் இரவில் நினைத்ததின் விளைவு குளிர் காய்ச்சல் வந்து விட்டது, DOCTORரிடம் என்ன சொல்வது உண்மையை சொல்ல முடியுமா ? அப்புறம் ‘’வேறு’’ HOSPITAL லுக்கு போகச் சொல்லுவார் இரவில் A/c கூடுதல் அதனால்தான் என்றேன் வேறுவழி ?

சே... என்ன இது ? எவனோ ஒருத்தன் மஞ்சக்குளிக்க நாமேன் சுடு தண்ணியில நிற்க வேண்டும் ? இப்படித்தான் அவசியமில்லாதவர்களை எல்லாம் நினைத்து, நினைத்து என்மீது எனக்கே வெறுப்பு வந்து விட்டது இதனால் காரணமில்லாமல்கூட என்னை எனக்கே பிடிக்க வில்லை.

Chivas Regal Sivasambo-
God does everything for some important reason...  That’s why he downloads like birth and death option & rotates the life until death.
சாம்பசிவம்-
பரவாயில்லையே துரை இங்கிலீஸூ பேசுது.

48 கருத்துகள்:

  1. உங்கள் சிந்தனை உங்களுக்கு மட்டுமல்ல.. பலபேருக்கும் ஏற்படும் ஒன்றுதான்.. காரணம் பல இழக்கமுடியாத இழப்புக்களைச் சந்திக்கும்போது இப்படியான நினைப்பு வந்து விடுகிறது.

    நான் நினைப்பதுண்டு.. ஒரு வயதெல்லை இருக்க வேண்டும்.. 90/100.. இப்படி இதுக்கு மேல் தான் எந்நேரமும் மரணம் வரலாம் அதுவரை யாருக்கும் வரக்கூடாதென...

    ஆனா அதிலும் ஒரு சிக்கல் இருக்கு... சிலருக்கு தாங்கவே முடியாத.. சுகப்படுத்தவே முடியாத வியாதி வந்திட்டால்ல்ல்... நாமே கடவுளைக் கேட்பதுண்டுதானே.. இப்படி ஒரு மனிதரை அவஸ்தைப்பட விடாதே.. நீயே அழைத்து அவருக்கு நிம்மதியைக் கொடு என... அப்படி நிலைமைகள் வரும்போது கஸ்டமாகிடும்.. 90 வரும்வரை அனுபவித்தே திர வேண்டியிருக்கும்...

    அதனால் இது ஒரு இடியப்ப சிக்கல் நம்மால் இதுக்கு தீர்வு காண முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முதல் வருகை தந்து முத்தாய்ப்பாய் கருத்துரையை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. ஹா ஹா ஹா இன்று சாம்பவசிவம் அங்கிளுடன் இங்கிலிஸ் ல பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி!!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... இங்கிலீஷ் பேசியது உங்கள் அங்கிள் இல்லை Chivas Regal Sivasambo

      நீக்கு
  3. கில்லர்ஜி... நீங்க, உங்களை வெறுத்தாலும் வெறுக்காவிட்டாலும்.. உங்கள் ஸ்டேஷன் வரும்வரை நீங்கள் ரெயினை விட்டு இறங்கவே முடியாது.... எனவே வெறுப்பைத்தூக்கி கங்கையில் வீசிவிட்டு.. உங்களை நீங்களே ரசித்துக் கொண்டிருக்க முயற்சியுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஆறுதலான விசயம் நன்றி இனி இன்று முதல்...

      நீக்கு
  4. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யார்க்கும் தெரியாது பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
    மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் "
    எவ்வளவு எளிமையாக சொல்லிவிட்டார் கண்ணதாசன் உங்களை நேசிக்க தொடங்குங்கள் நண்பரே உங்கள் மனம் பூக்கள் நிரம்பிய வனமாக மாறட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கவிஞர் திரு. வாலி அவர்களை மரணத்திலிருந்து மீட்டு எடுத்து மகத்துவமான கவிஞனாக்கிய கவியரசுவின் வைர வரிகள்.
      வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. / கவிஞர் திரு வாலி அவர்களை மரணத்திலிருந்து மீட்டு எடுத்து //

      அவர் இனி வாய்ப்பு எங்கே கிடைக்கப்போகிறது என்று சொந்த ஊர் திரும்பத்தான் கிளம்பினார் என்று எழுதியிருக்கிறார். தற்கொலை செய்துகொள்ள அல்ல. மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த பொது பி பி எஸ் வந்து அறைக்கதவைத் தட்டி "இன்று ஒரு பாடல் பாடினேன்..." என்று பாடிக்காட்டியதும் மனம் மாறினார் என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. விமல் செம கருத்து! ரசித்தேன்

      கீதா

      நீக்கு
    4. உண்மை விளக்கமளித்த ஸ்ரீராம் ஜி அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  5. வணக்கம் ஜி !

    அவ்வப்போது எனக்கும் இதே சிந்தனைகள் வருவதுண்டு
    வாழ்வின் நிலையாமையை எப்போது உணர்ந்தேனோ அன்றில் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டேன் இறையே இறுதி வடிவம் என்பதால் ஆனால் காலத்தின் சில தேவைகளுக்கு நானே அடிமாடு ஆனதால்.....உழைத்து வாழ வேண்டியதாகி விட்டது.....என்செய்வேன்

    தொடர வாழ்த்துகள் ஜி
    தமன்னா 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே...
      வாழ்வியல் உண்மையை அழகிய கருத்துரை வழியாய் பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  6. 105 வயது வரை வாழ்ந்து இந்த வருடம் மே மாதம் மறைந்த என் பாட்டி, அவரை நாங்கள் சென்று நமஸ்கரிக்கும்போது சொல்வார், "100 வயசு வாழணும்னு வாழ்த்த மாட்டேன். ஏன்னா, அந்த கஷ்டம் என்னன்னு எனக்குதான் தெரியும். வேலை முடிஞ்சுதா? சௌகர்யமா உடம்பு இருக்கும்போதே போயிடணும்" என்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டியின் வார்த்தை சிந்திக்க வைக்கிறது.

      நீக்கு
  7. இறப்பு இல்லாத மனிதன்.. இது ரொம்ப சுலபம். (சொல்றதுக்கு). மத்தவங்களுக்கு உபயோகமா, அவங்கள் வாழ்வுல பங்கெடுத்துக்கறமாதிரி வாழ்ந்தாலே போதுமே. இல்லைனா பிறருக்கு உபயோகப்படுறமாதிரி சாதனைகள் செய்தாலும், ஆயிரம் வருஷமானாலும் நினைவில் வைத்திருப்பர். த ம

    பதிலளிநீக்கு
  8. சிந்தனைகள் பெருகட்டும் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  9. கில்லர்ஜி! இதுக்குத்தான் இப்படி எல்லாம் சிந்திக்கக் கூடாதுன்றது!!ஹாஹாஹாஹா!

    சரி ஜோக் அபார்ட்! ஜி! நீங்கள் என்ன நினைத்தாலும், உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு வந்தாலும் உங்களால் மனதை வேண்டுமென்றால் நல்ல வழியில் திசை திருப்பிக் கொள்ளலாம் அதற்கும் ஒருவரின் மனது ஒத்துழைக்க வேண்டும். வாழ்க்கை ரயில் பயணம் போலத்தான். இடையில் இறங்கி இளைப்பாறலாம். ஆனால் போய்ச் சேரும் இடம் வரை ஒன்றும் செய்ய இயலாது. சிவாஸ் ரீகல் பேசியதைக் கொஞ்சம் கேளுங்க..பாருங்க ரீகல் அடிச்சாலும் என்னா தத்துவம் பேசுறாரு. ஒரு வேளை ரீகல் போட்டாத்தான் தத்துவப் பித்துகள் ஸாரி டங்க் ஸ்லிப்பு...முத்துகள் வருமோ?!! ஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்படி சிந்திச்சுதான் தண்டச்செலவு செய்யிறேன்.

      நீக்கு
  10. அடியே ராமக்கா!..
    என்னா இது கெரகம்!..

    இதுவரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சு!?..

    இம்புட்டு நாளுக்கும் பச்சப்புள்ளயாட்டமா இருக்குறது!..

    மனசுக்கு ஒரு தெகிரியம் வேணாமாக்கும்!..
    ஆணானாலும் பொண்ணானாலும் தெகிரியந்தானே லெச்சனம்!..

    மூஞ்சைக் கழுவிக்கிட்டு அடுத்த வேலையப் பாத்தா -
    ஓடிப் போகாதா ரோதனை எல்லாம்!?..

    பதிலளிநீக்கு
  11. யாரோ மஞ்சக்குளிக்க....ரசித்தேன். ஆமாம். நமக்கு இது தேவையில்லைதானே?

    பதிலளிநீக்கு
  12. சில விஷயங்கள் நமது சக்திக்கு அப்பாற்பட்டது... அவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது கில்லர்ஜி!

    சிந்தனைகள்.... அதற்கேது எல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஏற்றுக்கொள்வோம் உண்மையை...

      நீக்கு
  13. எதையும் காலப் போக்கில் விட்டு விட வேண்டும்! த ம 11

    பதிலளிநீக்கு
  14. நல்ல சிந்தனை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  15. இதெல்லாம் நம் கையில் இல்லை! இப்போ எனக்கு நினைவில் வருவது ராஜீவ் காந்திக்கு ஜாதக ரீதியாக மாபெரும் கண்டம் இருப்பதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என்றும் அப்படிப் பிழைத்தால் அவர் பிரதமர் ஆவார் என்றும் ஜோசியர் ஒருவர் சொல்லி இருந்ததாகக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் யாருமே அவர் அப்போது இறந்து போவார் என்று சொல்லவில்லை. சொல்லவும் முடியாது என்கிறார்கள். யாருக்கு இறப்பு எப்போது என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று! அரை விநாடி கூடவும் கூடாது! குறையவும் குறையாது! எத்தனை மூச்சுகள் நம்மால் விடப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருக்கோ அத்தனை மூச்சுகள் நாம் விட்டே ஆகவேண்டும்! ஆக இது எங்கோ இருப்பவன் நம்மை எல்லாம் கயிறு கொண்டு ஆட்டி வைக்கிறான். நாம் ஆடுகிறோம். ஆட்டத்தை நிறுத்தினால் விழுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜீவ் காந்தி அவர்களின் வாழ்க்கையை வைத்து விளக்கிய விதம் அருமை சகோ.

      ஆம் நம்மை ஒருவன் ஆட்டுவிக்கின்றான் இதுதான் உண்மை.

      நீக்கு
  16. துரை.செல்வராஜுவை ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. கீதா சாம்பசிவம், சொன்னது போல் நம்மை படைத்தவன் பிறக்கும் தேதி இறக்கும் தேதி எல்லாம் போட்டுதான் அனுப்புவான் என்று அம்மா சொல்வார்கள். அன்று எழுதிய எழுத்தை அழிச்சு எழுத முடியாது என்று சொல்வார்கள் அம்மா.
    அது தெரிந்து கொண்டால் மனிதனின் ஆட்டம் அதிகமாகி விடும். அதனால் அது பரமரகசியம் என்றார்கள்.

    என் மாமா 105 வயது வரை வாழ்ந்தார்கள். 120 வயது மனிதனுக்கு என்னை இன்னும் 15 வருடம் வாழ வேண்டுமா ? கடவுளே என்பார்கள். கடைசிகாலம் வரை யார் தயவையும் எதிர்பாராமல் இருந்தால் முதுமை வரம். அடுத்தவர் கையை எதிர்ப்பார்த்தால் சாபம். வரமோ , சாபமோ நமக்கு தெரியாது முடிந்தவரை வாழ்ந்து பார்ப்போம்.

    அடுத்தபதிவு நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பதிவாய் எழுதுங்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முதுமை வரமா ? சாபமா ? என்பது நாம் வாழும் முறையில்தான் இருக்கிறது.

      நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதில் அர்த்தம் உள்ளது

      நீக்கு
  18. சிந்தித்தால் சிரிப்பு வரும்..மனம் நொந்தால் அழுகை வரும்..இந்த வரிகள்தான் நிணைவுக்கு வருகிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
  19. இடப்பற்றாக்குறை வரும்போது சந்திரன் செவ்வாய்னு மற்ற கிரகங்களுக்குக் குடிபெயர்ந்துவிடலாம்.

    கவலை வேண்டாம் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே பதிவு செய்து விடுவோம் விரைவில்.

      நீக்கு
  20. பயப்படாதீர்கள்! மரணமில்லா வாழ்வு -அதாவது எல்லோரும் எப்போதும் உயிரோடிருத்தல்- அது இந்த உலகில் நிகழவே நிகழாது. விஞ்ஞானம் எத்தனைக் குட்டிக்கரணம் அடித்தாலும் அதன் எல்லைகள் ஒரு குறிப்பிட்ட விஸ்தீரணத்தைத் தாண்டாது. இது இயற்கை.

    மனதைப் பற்றி சொல்வதானால் பின்னூட்டம் பதிவாகிவிடும்! ஆரோக்யமான மனம், உணர்வுபூர்வமான மனம் நீங்கள் சொல்லியதுபோல் அவ்வப்போது சிந்திப்பதுண்டு; மன அழுத்தத்திற்கு ஆளாவதுண்டு. தன்னைத்தானே நொந்துகொள்வதுண்டு. இப்படி இதற்குமுன்னும் அனேகருக்கு நடந்துள்ளது. இனியும் அவ்வாறே! மன அழுத்தம், உளைச்சல் என்பதெல்லாம் மன இயக்கத்தின் பல்வேறு நிலைகள். இவற்றைத்தாண்டியும் மனம் செல்லும். நல்லதைக்காணும். அமைதிபெறும். கவலை விடுக

    இந்த மாதிரி சமயங்களில் டாக்டரை விட ஷிவாஸ் ரீகல் பரவாயில்லை! அளவோடிருந்தால் நஞ்சும் ஔஷதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான விளக்கங்கள் அருமை.
      மமுடிவில் சிவசம்போ வழியில் வந்து விட்டீர்களே.... ஹா.. ஹா..

      நீக்கு
  21. மரணமிலாப் பெருவாழ்வு பற்றி யோசித்தால் நமக்கு உறக்கமில்லா இரவுகள் தான் மிஞ்சும் எனப்தை அறிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய கருத்தை படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நன்பரே நன்றி நிச்சயம் படிக்கிறேன்.

      நீக்கு
  22. சில நேரம் எனக்கும் இப்படியெல்லாம் தோணும். உடனே அடுத்த பெக் அடித்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இத்தனை காலமாக தெரியாமல் போச்சே...

      நீக்கு