மனிதநேயம் மரத்தையும் மதித்தது
மனதின் காயம் மனிதனை மிதித்தது.
கண்டகாட்சி மனதில் வலித்தது
கண்ணை மூடினால் காதில் ஒலித்தது.
சிறையின் வாசல் கதவு திறந்தது
சிறகை விரித்து பறவை பறந்தது.
சிலிர்த்து பறந்து உலகை மறந்தது
சிறிய உலகம் கனவில் தெரிந்தது.
சுற்றுலா செல்வது மனதுக்கு ஏற்றது
கொடைக்கானலிலே நீச்சல் கற்றது.
பள்ளி விடுமுறை விடுதலை பெற்றது
பள்ளி செல்லவே விருப்பம் முற்றது.
நீயும் நானும் கனவில் கலந்தது
நினைக்க நினைக்க நெஞ்சம் இனித்தது.
உறக்கம் கலைந்ததும் காட்சி மறைந்தது
உண்மை தெரிந்ததும் வெறுப்பு வந்தது.
ஒளியின் காட்சி கண்ணில் பட்டது
உணர்வின் ஆசை மனதை தொட்டது.
உன்னால் எனது, வாழ்வு கெட்டது
குற்ற உணர்வோ நெஞ்சை சுட்டது.
தமிழ்மணத்தில இணைக்காமல் விட்டிட்டீங்களே..:).. முதேல் மை என்னோடது:).
பதிலளிநீக்குகவிதை நன்றாகவே இருக்கிறது.. எதுகை மோனையோடு.. அழகாக சொல்லிட்டீங்க..
“என் கணவனை நினைத்தேன் மனமே வெறுத்தது”... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா இந்தப் பந்தியை மிக அழகாக ஆரம்பிச்சு.. அருமையா நகர்த்தி வந்து முடிவில கவிட்டுப்போட்டீங்களே..?:)..
வாங்க தமிழ் மணத்தில் இணைத்த’’மை’’க்கு நன்றி
நீக்குஹா... ஹா... ஹா... ஒரு வரி சொதப்பி விட்டதோ.....
வரவர கில்லர்ஜி யும் அதிராமாதிரியே சிரிக்கிறார்:).. ஹையோ மீ ஓடிடுறேன்ன்:).. எங்கே சாம்பசிவம் அங்கிள்?:)
நீக்குவாங்க திரு. சாம்பசிவம் அடுத்த பதிவில் வருவாரோ...
நீக்கு”உன்னால் எனது வாழ்வு கெட்டது”...
பதிலளிநீக்குஇது சரியாக எனக்குப் படவில்லை... இருவராலும்தான் வாழ்வு கெட்டிருக்கும்...
“கண்ணை எங்கோ மேய விட்டுக்..
கல்லைக் காலால் மோதிவிட்டு...
என்ன சொல்வான் சந்தர்ப்பவாதி..
“கல்லடித்துவிட்டது”...
நினைவுக்கு வந்த ஒரு குட்டிக் கவிதை..
ஆமாம் இருவருமே கெட்டவர்கள்தானே...
நீக்குதங்களது கவிதை நன்று
அதிரா நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் அதற்குப் பதிலாகத்தான் கடைசி வரி வந்துவிட்டதே!! குற்ற உணர்வு என்று! எனக்கு அப்படித்தான் பட்டது!
நீக்குகீதா
ஆம் மன்னிப்பு கேட்பதுபோல் சொன்னேன்.
நீக்குரசித்தேன் நண்பரே...
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம் ஜி நன்றி
நீக்குபடம் அருமை. வரிகளும் நல்லாயிருந்தது. த ம
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கு நன்றி
நீக்குமனிதநேயம் போற்றுவோம் நண்பரே
பதிலளிநீக்குதம +1
வருக நண்பரே மிக்க நன்றி.
நீக்குமனித நேயம் மரத்தை மதித்தது//
பதிலளிநீக்குமனித நேயம் மலரட்டும்.
வருக சகோ வருகைக்கு நன்றி
நீக்குகுற்ற உணர்வு நெஞ்சைச் சுடத்தான் ஐயா செய்யும்.
பதிலளிநீக்குவருக முனைவரே அப்படி சுட்டால் குற்றங்கள் குறையும்தானே...
நீக்குரசித்தேன்,அருமை.
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
நன்றி நண்பரே
நீக்கு>>> என் கணவனை நினைத்தேன்.. மனமே வெறுத்தது.. <<<
பதிலளிநீக்குஅடப் பாவமே!..
ஊரெல்லாம் தேடிக்கிட்டு இருக்காங்க..
ஆளைக் காணோம்..ன்னு!..
வாங்க ஜி கள்ளக்காதல் என்றாவது உடையும்தானே...
நீக்குஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய கவிதை இல்லையா இது? சிறை என்பது திருமணமா?
பதிலளிநீக்குநண்பர் வான்மதி மதிவாணன் அவர்களின் முதல் வருகைக்கு நன்றி
நீக்குகவிதை ஐந்தும் ஐந்து விடயங்களே..
சிறை பறவையின் வாழ்வைக் குறித்து எழுதியது.
நல்ல கவிதை! அதிரா சொன்னதை வழிமொழிகிறேன். எனக்கும் அந்த வரி பிடிக்கவில்லை! :(
பதிலளிநீக்குவருக சகோ உண்மையாக கருத்துரை சொன்னமைக்கு நன்றி
நீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி.
நீக்குநகர்ப் புறங்களில் அப்படி மரத்தை விலக்கி சாலை அமைக்க முடியுமா கனவு வேறு நினைவு வேறு
பதிலளிநீக்குவாங்க ஐயா நல்ல கேள்விதான் வருகைக்கு நன்றி
நீக்குகவிதை படித்தேன் மனதை கவ்விப்பிடித்தது.
பதிலளிநீக்குஅருமை.
நன்றி நண்பரே வருகைக்கு.
நீக்குகவிதை அருமை
பதிலளிநீக்குவருக நன்றி
நீக்குஅருமை ஜி !
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குதப்பா எழுதிட்டேனோ. என் கருத்துரை வெளியாகவில்லையே?
பதிலளிநீக்குதரமான கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
தங்களது கருத்துரை வரவில்லை நண்பரே வாக்கு மட்டும் விழுந்து இருந்தது.
நீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குகவிதை நல்லா இருக்கு சகோ //கண்ட காட்சி மனதில் வலித்தது // இப்போல்லாம் முகத்தை கண்ணால் மூடிக்கிட்டுதான் மெதுவா பார்க்கிறேன் :) வலி நான்ஸ்டாப்ப்பா தொடரும் இல்லைன்னா
பதிலளிநீக்குகுற்றவுணர்வு /// இதில் மட்டும் விழுந்தா எழும்ப கஷ்டம் அதனால் உணர்ந்துதிரும்ப செய்யாதிருந்தாலே போதும் ..
அப்புறம் நேற்றே வாக்காளிச்சாச்சு ஜெஸி அதோட குட்டி காலால மை வச்சிடுச்சி இதை ஜெசியோட பாட்டி அதிராகிட்ட மறக்காம சொல்லிடுங்க :)
வருக குற்றவுணர்வு இருந்தால் மீண்டும் குற்றங்கள் நடப்பது தவிர்க்கப்படும்.
நீக்குஅதிரா பாட்டி என்பது தாங்கள் சொல்லியே அறிந்தேன்.
ஹாஹாஹாஹாஹா...சைக்கிள் காப்ல அதிரா பாட்டியை நுழைச்சுட்டீங்களா சூப்பர்!!!
நீக்குகீதா
ஹையோ அது வந்து குழந்தைகளை செல்லமாக பாட்டீஈஈ எனக் கூப்பிடுவினமெல்லோ அந்தப்பாட்டியைச் சொன்னவ அஞ்சு:)
நீக்குநான் அப்படி சொல்லவில்லை.
நீக்குஇந்த கவிதைக்கு மெட்டு போட்டால் சிறப்புதான் மிக்க நன்றி பகிர்வுக்கு
பதிலளிநீக்குவருக நண்பரே இப்பொழுது சோகபாட்டுக்கு மெட்டு போடும் அளவுக்கு இசையமைப்பாளர்கள் இல்லையே...
நீக்குஇளையராஜாவும் ஒதுங்கி விட்டார்.
நல்லா எழுதியிருக்கீங்க கிலல்ர்ஜி!!! ரசித்தோம்!!!
பதிலளிநீக்குரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குகவிதை இனிக்குது தொடரலாமே! த ம 16
பதிலளிநீக்குஐயாவுக்கு பிடித்து இருந்தால் மகிழ்ச்சி.
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குநீண்டநாளின் பின்னர் வலைப்பக்கம் வருகிறேன் ( ஈத் விடுமுறை இரண்டு நாள் )அழகான படமும் கவிதையும் நெஞ்சைத் தொட்டது இடைக்கிடை கவிதையும் எழுதலாமே ஜி உங்களால் முடியும் !
ஒற்றை மரத்துக் காகப் பாதை
ஓரம் கண்டது - விழி
இற்றை வரைக்கும் காணாக் காட்சி
இதயம் உண்டது !
நெஞ்சில் பசுமை வளர்க்கும் மாந்தர்
நிலத்தில் இருக்கிறார் - அவர்
பிஞ்சில் பெற்றோர் வளர்த்த தைப்போல்
பிறருக் குதவுறார் !
இயற்கை வளர்க்கும் இளையோர் தம்மை
இனிக்க வாழ்த்துவோம் - வளம்
செயற்கை தன்னால் அழிப்போர் எண்ணம்
சிதைத்து வீழ்த்துவோம் !
தொடர வாழ்த்துகள் ஜி
தமன்னா +1
வருக பாவலரே அருமையாக கவிதை வடித்தீர்கள் நன்றி
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்ல கவிதை ,
பதிலளிநீக்குநல்ல எதுகை மோனை ,
வாழ்த்துக்கள்,,,/
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே
நீக்குபடத்தில்....
பதிலளிநீக்குரோட்டோரம் ஒரு மரம்
அந்த மரத்துக்கு அருகில்
ஒரு நாலுகால் பிராணி
அது என்ன என்ன
வருக நண்பரே சாம்"பிராணியாக இருக்குமோ...
நீக்குஅருமை... இன்று வாசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி ஜி... எப்படி இந்த பதிவிற்கு வரவில்லை...? வியாபார சுற்றலில் இருந்திருக்கலாம்...
பதிலளிநீக்குவாங்க ஜி கவிதையை ரசித்தமைக்கு நன்றி ஆம் அந்த தருணத்தில் யாருடைய பதிவுக்கும் நீங்கள் செல்லவில்லை.
நீக்கு