தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 12, 2018

லேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் ?


புதாபியில் ஒரு மால் அதன் அண்டர்க்ரௌண்டின் கீழ்நிலை நான்காவது தளத்தின் கார் பார்க்கிங்கிலிருந்து நான் காரை எடுத்து வெளியேறிக்கொண்டு இருக்கின்றேன் பொதுவாக கார் பார்க்கிங் மேல்புறத்தில் கருப்பு நிற பெயிண்ட்தான் அடித்து இருக்கும் இதன் காரணமாக எவ்வளவுதான் விளக்குகள் போட்டாலும் சற்று இருட்டாகவே காணப்படும் அதுவும் கீழே நான்காவது நிலை எப்படியிருக்கும் ? மெதுவாக உருட்டிக்கொண்டுதான் வரமுடியும் காரணம் காரிலிருந்து ஆட்கள் குறுக்கும் நெடுக்குமாக வந்து போய்க்கொண்டுதான் இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே... எனது பின்புறத்தில் வந்த கார் ஹாரனை அடித்துக் கொண்டு லைட் அடித்துக் கொண்டும் வர.. (பொதுவாக இந்த நாட்டில் ஹாரன் அடிக்ககூடாது)  எனக்கு குழப்பம் நமது காரில் ஏதும் குழப்பம் இருக்கிறதா ?

கண்ணாடி வழியே பார்த்தேன் அவன் வேகமாக போ சத்தமாக கத்துவது தெரிந்தது இருப்பினும் வந்து கொண்டுதான் இருக்கிறேன் ஒரு இடத்தில் என்ட்ரன்ஸில் ஒரு குழந்தை திடீரென குறுக்கே வர சட்டென பிரேக் போட்டேன் சட்டப்படி முதலில் அவர்களுக்குதான் முதலிடம் பிறகே நமக்கு காரணம் அந்த இடத்தின் சூழல் பின்னால் வந்தவன் வேண்டும் என்றே எனது காரை அவனது காரால் மூன்றுமுறை புஷ் செய்து தள்ள... நான் ஹேண்ட் பிரேக் போட்டு விட்டு காரை விட்டு இறங்கினேன் இதை அனைவரும் பிரமித்துப்போய் பார்த்தார்கள் காரணம் சினிமாவில் காண்பதுபோல் இந்த நாட்டில் இப்படியெல்லாம் செய்யவே முடியாது செய்யவும் கூடாது அவனும் இறங்கினான் அரேபியர் உடையணிந்து இருந்தான் தலையில் வட்டு இல்லை நான் சைகையால் ஏன் ? எனக்கேட்க அவன் ஆங்கிலத்தில் கோ ட்டூ குயிக்லி எனக்கத்தினான் வெயிட் ஐ வில் கால் த போலீஸ் என்று கூறிக்கொண்டே காரைக் குனிந்து பார்த்தேன் ஒன்றும் அடிபட்டதாக தெரியவில்லை காரோ கருப்பு நிறம் இவன் டேக் த கார் என்று கத்தினான் பின்புறத்திலிருந்து கார்கள் வரிசையாக வந்து ஹாரன் அடிக்க ஒரு பாக்கிஸ்தானி வந்து அவன் ஏதோ லூசுத்தனமா செய்துட்டான் காரில் பிரச்சனை இல்லை எடுத்துக் கொண்டு போ என்று ஹிந்தியில் சமாதானம் கூற.... மற்றவர்களும் அப்படியே சொல்ல நான் காரை எடுத்தேன் ஒரு வளைவில் வரும்போது ஒதுங்கினேன் அவன் சட்டென அந்த இடத்திலும் ஒவர் டேக் எடுத்து போய் விட்டான் நான் அவனது கார் நம்பரை கவனித்தேன் BMW 11/ 5468 Abu Dhabi ரெஜிஸ்ட்ரேஷன்.

பிறகு வெளியே ரோட்டுக்கு வந்து பார்க்கிங்கில் நிறுத்திப் பார்த்தால் ? பின்புறம் நெளிந்து உள்ளே போய் இருந்தது அடச்சே இருட்டுக்குள் தெரியவில்லையே... உடன் 999 அடித்தேன் விபரத்தை சொன்னேன் உனது கார் அடிபட்ட இடத்திற்குப் போ அங்கு இப்பொழுது போலீஸ் வரும் என்றார்கள் மீண்டும் மாலுக்கு வந்து அதே இடத்தில் பார்க்கிங் கிடைக்காததால் ஓரமாக நிறுத்தும்போது போலீஸ் காரும் சரியாக அதே இடத்துக்கு வர இருவரும் சலாம் சொல்லி கை கொடுத்துக் கொண்டவுடன் அரபு மொழியில் விவரித்தேன் இது ஆக்ஸிடெண்ட் ஆனாலும் எதிர்ப்பார்ட்டி இல்லாததால் இது வேறுவகையான கொலை முயற்சி கேஸ் நான் மெஜேஸ் அனுப்பி விட்டேன் நீ உடன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அங்குள்ள உயர் அதிகாரியைப்பார் என ஒரு பேப்பர் கொடுத்தார் நான் வாங்கிக் கொண்டு அந்த உயர் அதிகாரி ரூமுக்குப்போய் அவரிடம் விவரித்தேன் இருவரும் அரபு மொழியிதான் பேசினோம் நான் சொன்ன நம்பரை கணினியில் அடித்துப் பார்த்து எனது பக்கம் கணினியை திருப்பிக் காண்பித்தார் பாரு இவனா ? ஆமா நான் எனது காரை இடித்த நபரின் போட்டோ ஜாதகத்துடன் வந்தது எஜிப்த்தியன் அதிகாரி சொன்னார் ஹும் முத்தஃபா.

(நண்பர்களே முத்தஃபா என்றால் நம்மூரில் சொல்வோமே பள்ளியில் தொழுகை வைக்கும் ஆலீமூஷா மேலே அவரது புகைப்படத்தைப் பாருங்கள்)

உடன் தொலைபேசியிலிருந்து அவனது செல்பேசிக்கு கால் செய்தார் ஸ்பீக்கரில் போய்க்கொண்டு இருந்தது சுமார் ஐந்து முறை இருக்கும் எடுக்கவில்லை அவரது முகத்தில் கோபத்தைக் கண்டேன் மேலே கடிகாரத்தைப் பார்த்தார் தொழுகை நேரமும் இல்லையே.... ம்... பெல் அடித்து ஆஃபீஸ் பாய் வர இரண்டு விரலைக் காண்பித்தார் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடச் சொல்றாரா ? இவரும் அ.தி.மு.க.காரரோ ? நமக்கு நீதி கிடைக்குமா ? சிறிது நேரத்தில் இருவருக்கும் டீ வந்தது எடுத்துக்கொள் எடுத்துக் குடித்தேன். டீக்குதான் விரலை காண்பித்து இருக்கிறார்.
நட்புகளே நினைத்துப் பாருங்கள் நம்மூரில் இதெல்லாம் சாத்தியமா ?


மீண்டும் கால் செய்தார் இரண்டுமுறை எடுக்கவில்லை சரி நீ போ நான் கால் செய்ததும் வா வீட்டுக்கு வந்தேன் அருகில்தான் எனது வில்லா உடன் கால் வந்தது அவன் இப்பொழுது வருவான் உடனே நீயும் வா மறுநிமிடம் பறந்து போனேன் உள்ளே போனதும் உட்கார் என்றார் சில விடயங்களைக் கேட்க சொன்னேன் சிறிது நேரத்தில் என் காருடன் மோதியவர்ன் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று உயர் அதிகாரிக்கு முதலில் சலாம் சொல்லி விட்டு பிறகு என்னைப் பார்க்க இருவரும் GUNகளால் நேருக்கு நேர் நிகழ்ச்சி தொடங்கியது உயர் அதிகாரி எஜிப்தியனை நோக்கி அறையே அதிரக் கத்தினார்.

‘’லேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் ?’’
‘’நீ ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை ?’’

எனக்கு நேற்று சாப்பிட்ட எலிக்கறி அடி வயிற்றைக் கலக்கியது.

தொடரும்...

ஞாயிறு, ஜூன் 10, 2018

ஒரு நாயின் கதறல்


1986 இல் வெளியான ஒரு தாயின் சபதம் படப்பாடலை அதே மெட்டில் பாடிப் பாருங்களேன் வீட்டில் பழைய மூடையை கிளறியபோது நிறைய கிடைத்தது எனக்கே சில விடயங்கள் ஆச்சர்யம் நமது சிந்தையா என்று.

வியாழன், ஜூன் 07, 2018

முடிந்தால் நகைக்கலாம்


அமைச்சரே எதிரி நாட்டுப்படைகள் போர் புரிவதற்கு தயாராக இருப்பதாக ஓலை அனுப்பி இருக்கின்றார்களே... கத்தியின்றி ரத்தமின்றி சுலபமான தீர்வு காண்பதற்கு அமைச்சரவையில் என்ன ஆலோசனை செய்தீர் ?
ஆம் மன்னா, நேற்று இரவு முழுவதும் மெரிட்டனில் சீரியல் நடிகைகளுடன் ஆலோசித்ததில் நாட்டை எதிரி நாடுகளிடம் ஒப்படைத்து விட்டால் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து விடலாம் மன்னா.
யாரங்கே... முதலில் இந்த அமைச்சரை பலி பீடத்தில் வைத்து தீர்த்துக் கட்டுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

வணக்கம் மன்னா, இவன் நேற்று மகாராணியார் அந்தப்புரத்தில் குளித்து ஆடை மாற்றிய சுமார் 1 ½ நாழிகை வரை பார்த்துக்கொண்டே இருந்தான் மன்னா ஆகவே மகாராணியை முழுமையாக பார்த்த இவனது கண்களை பிடுங்க உத்தரவு கொடுங்கள்.
யாரங்கே... மகாராணியாரை 1 ½ நாழிகை வரை பார்த்த அன்னிய தேசத்து கயவனை உடன் பிடிக்காமல் கூடவே இருந்த பார்த்த அரண்மனை சேவகனின் கண்களைப் பிடுங்கி எறியுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *

வணக்கம் அரசே... நேற்று இளவரசி தேரில் ஜேம்ஸ் ஊரணியோரம் வீதிஉலா வரும் பொழுது இளவரசி மீது தூக்கிப் போடப்பட்ட முயல் குட்டியை தேரின் சக்கரத்தில் வைத்து நசுக்கி விட்டேன் மன்னா.
யாரங்கே... இளவரசி மீது முயல் குட்டியை வீசியவனைப் பிடிக்காமல் வந்த இந்த தேரோட்டின் தலையை தேரின் சக்கரத்தில் வைத்து நசுக்குங்கள்.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *

மன்னிக்க வேண்டும் மன்னா இந்த மாதம் சம்பளம் தாமதமானதால்தான் எனது போர் வாளை கறிக்கடை கரீம்பாயிடம் அடகு வைத்தேன் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் மன்னா.
யாரங்கே... இந்த போர் வீரனை கறிக்கடை கரீம்பாயை விட்டே தலையை வெட்டச்சொல்லி இவன் தலையை பத்தமடைப் பாயில் சுருட்டி வீசுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *

மன்னா நேற்று இளவரசியாருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த இனைஞனை எனது செல்லில் காணொளி எடுத்திருக்கிறேன் இதோ ஆதாரம் அவனின் கைகளை வெட்ட ஆணையிடுங்கள் மன்னா.
யாரங்கே... இளவரசிக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவனின் கையை வெட்டாமல் அதை காணொளி எடுத்த இந்த காவல் வீரனின் கைகளை வெட்டி எறியுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

புலவரே என்னைப் புகழ்ந்து எழுதிய கவிதையை படித்துக் காண்பீர் கில்லர்ஜியின் நண்பர் - நண்பிகளும் கேட்டு எனது பெருமை அறியட்டும்.
தேக்கு மரத்தில் தூக்கு மேடை போட்ட ஜோக்கு மன்னா
உன்னை எதிர்த்து நாக்கு பேசத்தடை போட்ட பேக்கு மன்னா
மக்கள் வாயில் பாக்கு போடவும் தடை ஏன் மன்னா ?  
உன் மொட்டைத் தலையில் இருப்பது களி மண்ணா ?  
யாரங்கே... என்னை களி மண் என்று சொன்ன இந்த புலவரை உயிருடன் களி மண்ணால் பூசி மூடுங்கள்.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *


சிவாதாமஸ்அலி-
தண்டனை பெறுபவர்கள் எல்லோருக்குமே தீர்வு அவர்களது வாயிலிருந்தே வருகிறதே...

Chivas Regal சிவசம்போ-
அரசருக்கு சொந்த சரக்கு கிடையாது போலயே...

செவ்வாய், ஜூன் 05, 2018

காக்காசு குதிரை முக்காகாசு Full’ஐ குடிச்சுருச்சு


வணக்கம் நட்பூக்களே... கீழே புகைப்படத்தில் இருக்கும் பொருள் என்னவென்று தெரியாமலா இருக்கும் தெரியும்தானே ? சமீபத்தில் கோவை எனது வீட்டிற்கு பக்கத்தில் வீடு கட்டுவதால் எமது பிளம்பிங் வேலைகளை கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டியநிலை நானே செய்ய முடியும் நான் எந்த வேலைகளையும் செய்து விடுவேன் டூல்ஸ் இல்லாத காரணத்தால் பிளம்பரை அமர்த்தி இருந்தேன் அவர் மிகுந்த தெள்ளுமணி. சைடுச்சுவற்றில் பைப் வைத்து க்ளிப் அடிக்க நானும் உதவினேன். ஆணியை கிழக்கில் வைத்து, சுத்தியலை மேற்கிலிருந்து சாத்தினான். ஆணியும், க்ளிப்பும் புடுங்கி கொண்டு அடுத்த வீட்டு தோட்டமான வடக்கு திசையில் பாய்ந்தது ஒன்றா இரண்டா ? பத்துக்கும் மேல் பிறகு நானே வாங்கி சாத்தினேன். வேலை முடிந்து அவனும் வியர்வை உலரும் முன் கூலியை வாங்கி கொண்டு போய் விட்டான். எல்லாம் முடிந்த பிறகு வடக்கு திசை தோட்டத்தில் சிதறிக் கிடந்த ஆணிகளும். க்ளிப்புகளும் எமது கண்ணை உறுத்தியது. எல்லாம் உழைத்த பணத்தில் வாங்கியது இப்படி விடலாமா ? பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி உள்ளே நுழைந்து எடுக்கலாம் என்றால் இதைப்போய் எடுக்கிறானே... என்று இழிவாக நினைப்பாரோ ? என்ற வரட்டு கௌரவம் எட்டி, எட்டி பார்த்தது. வேண்டாம் சொல்லாமல் எடுப்போம் நமக்குதான் மூளை இருக்கிறதே...

திடீரென்று சந்தேகம் இருக்கிறதா ? மீண்டும் யோசித்து இருப்பதை உறுதி செய்து விட்டு, வீட்டிலிருந்து நீளமான நைலான் கயிற்றின் முனையில் காந்த வளையத்தை கட்டிக்கொண்டு மாடிப்படியின் பகுதியில் நின்று கொண்டு மீனவன் வலை வீசுவது போல வீசினேன் அது பக்கென்று பிடிக்க சந்தோஷமாக அடுத்தவர்களுக்கு தெரியாமல் ஒவ்வொன்றாக ஆணியையும், க்ளிப்புகளையும் எடுத்தேன். கடைசியாக ஒரேயொரு ஆணி சற்று தூரத்தில் கல்தூணின் அருகில் கிடக்க... அதையும் எடுப்போம் என்று சற்று வேகமாக வீசினேன். ‘’டங்’’ என்ற சத்தம் மறுநொடி காந்தவளையம் இரண்டு துண்டாக உடைந்து தெற்கிலும், வடகிழக்கிலும் பறந்தது கயிறு மட்டும் மேலே வந்தது ச்சே கடைசி ஆணியை விட்டுத் தொலைந்திருக்கலாம்

கடைசியில் காக்காசு குதிரை முக்காகாசு ஃபுல்’’ஐ குடிச்சுருச்சே உழைத்த பணம் இப்படி போச்சே சட்டென சந்தேகம் இது உழைத்த பணமா ? மனம் பின்னோக்கி ஓடியது இந்த Magnet Ring ஐ எப்போது எங்கு வாங்கினோம் ? அபுதாபியில் நான் அரசு அலுவலகத்தில் வேலை செய்து விசா ரத்து செய்து முடித்து வரும்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டேகால் லட்சம் கோப்புகளும், கோப்புகளை அடக்கிய முப்பத்தி எட்டு மிஷின்கள், எனது மேசை, நாற்காலி, கணினி, தொலைபேசி, வாக்கிடாக்கி, ஸ்டாப்ளர், அழி ரப்பர், பின் ரிமோவர், பஞ்சிங் மிசின், பேனாக்கள், பென்சில்கள், மற்ற இத்யாதி, இத்யாதிகளோடு அனைத்தையும் திருப்பி ஒப்படைக்குபோது இவ்வளவு காலம் வேலை செய்த அலுவலகத்தின் ஞாபகார்த்தமாக ஸ்டாப்ளர் பின்களை பொறுக்குவதற்காக கொடுத்திருந்த Magnet Ring ஐ இப்படியே அனாதையாக விட்டுப் போனால் துருப்பிடித்து வீணாகி விடுமே என்ற கவலையால் அதை இந்தியாவுக்கு கொண்டு செல்வோம் என்ற உயர்ந்த சிந்தனையின் காரணமாக கொண்டு வந்தது தவறோ ? அதனால்தான் உடைந்து போனதோ ? சரி உழைத்த செல்வம் கை விட்டுப் போகாது என்றார்களே காந்த வளையம் போனது சரி அரசு பணம். ஆனால் எனது சொந்த பணத்தில் வாங்கிய அந்த கடைசி ஒரு ஆணி போய் விட்டதே காரணமென்ன ? ஏதாவது சாமியாரைக் கண்டு அருள் வாக்கு கேட்க வேண்டுமென்று இருக்கிறேன்.


Chivas Regal சிவசம்போ-
ஆந்தைமடை, ஆருடர் ஆண்டியப்பனை கேட்டால் எல்லாம் சொல்வாரே...

சனி, ஜூன் 02, 2018

சந்தேகச்செடி


ஹாரன் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தாள் பார்வதி தனது கணவன் பரதன் வாசலில் டி.வி.எஸ். 50யில் உட்கார்ந்திருக்க, பின்புறம் கணவனது நண்பனின் மனைவி மஞ்சுளா உட்கார்ந்திருந்தாள் மனைவியிடம் அவசரமாய்
பார்வதி சீக்கிரம் தயாரா.. இரு இப்போ வந்துருவேன்
சொன்ன அடுத்த நொடி பறந்து விட்டான். சிலையாய் நின்றாள் பார்வதி என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் ? நமக்கு முன்னாடியே அடுத்தவன் பொண்டாட்டியை ஏத்திக்கிட்டு வந்து நிற்பாரு.. வரட்டும்.. வரட்டும்....