தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 10, 2016

தாய்மார்கள் ஓட்டு தாலிக்கே...


கோந்தமடை தொகுதி வேட்பாளர் கோவிந்தன் வீட்டில் உறங்கி கொண்டு இருந்தார் பக்கத்தில் மனைவி மரகதவள்ளி கடந்த ஒரு மாதமாகவே ம.வ.க்கு (மரகதவள்ளியின் சுருக்கம் ம.வ. என்று எண்ணிக் கொள்ளவும்) உறக்கமே இல்லை காரணம் தேர்தலில் நிற்கும் கணவன் கோவிந்தன் தூக்கத்திலும் அரசியல் பேசுவதால் மேலும் அவர்களது வீடு பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்து வரும் பாரம்பரியமான பழைய காலத்து ஓட்டு வீடு எவ்வளவோ சொத்துகள் இருந்தாலும் இது ராசியான வீடு இந்த வீட்டில்தான் இவனது கொள்ளுத் தாத்தா கொள்ளி வேந்தன் மிராசுதாராக வாழ்ந்தார், பின்பு தாத்தா தாண்டவமூர்த்தி நாட்டாமையாக வாழ்ந்தார், பிறகு அப்பா அப்புச்சாமி பஞ்சாயத்து தலைவராக வாழ்ந்தார், அடுத்து நாம் சட்டமன்ற உறுப்பினராக ஆகலாம் என்ற கனவுகளோடு வாழந்து வருகின்றார்.

நமது நாயகன் கோவிந்தன் ம.வ.யால் ஒன்றும் சொல்ல முடியவில்லை பகலிலும் கட்சியின் மகளிர் அணியுடன் சேர்ந்து கொண்டு வேட்பாளரின் மனைவி என்ற காரணத்தால் அக்கம் பக்கத்துக் கிராமமெல்லாம் நடந்து சென்று வீடு வீடாக பிச்சை கேட்க... மன்னிக்கவும் ஓட்டுக் கேட்கவேண்டும் இதில் உடல் சோர்வானது வீட்டுக்கு வந்தால் உறங்க முடியவில்லை காரணம் கணவன் உறக்கத்திலும் மேடைப்பேச்சு அவனுக்கென்ன, ரெண்டு ரவுண்டு ஊற்றி விட்டு காலை நீட்டி விட்டு உறங்கி விடுவான் அதற்காக ம.வ.யும் ரெண்டு ரவுண்டு விட முடியுமா ? தெரிந்தால் ரவுண்டு கட்டி அடிப்பானே பாவி பறப்பான்.

சரி வெளியில் ஒரு ரவுண்டு போய் வரலாம் என்றால் தேர்தல் அறிவித்த நாள்முதல் சொந்த பந்தமும், அரசியலில் வேலையற்ற வெட்டிக்கூ....... அதாவது வெட்டிக் கூட்டமும் வீட்டை முற்றுகையிட்டு விட்டது சாப்பிடுவது, உறங்குவது எல்லாமே இங்குதான் இவங்கெளுக்கு குடும்பம், குட்டி என்று ஏதும் கிடையாதோ ? இவ்வளவு நாளா எங்கே இருந்தாங்கே ? சாப்பிட உட்கார்ந்தால் பாத்திகட்டி அடிக்கிறாங்களே... சாப்பிட வரும்முன் அந்த பழைய கார் செட்டுக்குள் சென்று விட்டுத்தான் வர்றாங்கே அங்கே என்னதான் இருக்கும் ? கணவன் தேர்தல் முடியும்வரை அந்தப்பக்கம் போகாதே என்று மிரட்டி சொன்னது ஏன் ? வீட்டில் கொல்லைப்புறத்தில் தினம் அண்டா, அண்டாவாக சோறு வடிக்க ஆட்கள் நியமித்த கடந்த ஒரு மாதமும் கிடாவும், கோழியும், மீனும்தான் உணவு அதனால் இவளுக்கும் சமையல் வேலை இல்லை இந்த வீட்டுக்கு விளக்கு ஏற்ற வந்து மறுமாதமும், அதற்கடுத்த மாதமும் மாமனார்-மாமியாருக்கு (சிவலோக) பதவி கொடுத்து அனுப்பியவள் கடந்த15 வருசத்தில் இதுவரை காணாத அளவு பணத்தை பெட்டி, பெட்டியாக பார்த்து அதிசயித்தாள் இவளுக்கு பணத்தைப் பார்ப்பது பெரிய விசயம் இல்லைதான் பிறந்த வீட்டிலும் பார்த்தவள்தான் இருந்தாலும் இப்பொழுது காண்பது மிகவும் அதிசயமாகத்தான் இருந்தது.

இவளது அப்பா மதுசூதனன் தனது பாட்டன் சம்பாரித்தை வைத்திருந்த ஏலக்காய் தோட்டங்களை மொத்தமாக விற்று விட்டு அந்தப்பணத்தில் சாராயக்கடைகள் மட்டுமே ஏலம் எடுத்து நடத்தியவர்தான் ம.வ.க்கு ஒரே மகன் ஊட்டியில் படித்துக் கொண்டு இருக்கின்றான் இருக்கும் சொத்து முழுவதும் மகன் மந்திரமூர்த்தி ஒருவனே வாரிசு இவர் அரசியலில் குதித்தது சம்பாரிக்கவா ? இருக்கும் பணத்தை செலவு செய்யவா ? பேங்கிலிருந்து பணம் எடுத்து வந்து கொண்டே இருக்கின்றரே... இவர் ஜெயிப்பாரா ? ஜெயித்து விட்டால் தாயே தலமாடு காப்பாற்றும் தேவகோட்டை தேவையறிந்த தேவதையம்மனுக்கு இந்த வருடம் களரிக்கு கிடா வெட்டணும்.

‘’வெட்டுடா... வெட்டுடா... அவனை’’

பதறி திடுக்கிட்டாள் வேறொன்றுமில்லை கணவன் தூக்கத்தில் உளறியதுதான் எல்லாம் பரம்பரை புத்தி இப்ப தேர்தல் வேட்பாளர் போற இடமெல்லாம் தகராறு வீட்டுக்கு வந்த கணவனை ஏங்க... இப்படி என்று கேட்பாள் 
இதுதான்டி வரலாறு 
என்பான் இவனோடு மாரடிச்சே காலம் பகுதி ஓடி விட்டது இனி மாற்றம் வருமா ? மக்கள் கூடத்தான் மாற்றம் வருமா ? அப்படின்னு எதிர் பார்த்துக்கிட்டு இருக்காங்க.. கேட்டால் வரும்.... ஆனா... வரா’’தூ அப்படின்னு மூஞ்சியிலே எச்சியைத் துப்புறாங்கே... இவன் நல்லநாள்லயே தில்லைநாயகம் எம்.எல்.ஏ. ஆனால் மேற்கொண்டு ரௌடியாகிடுவானே.... சும்மாவே ஊருல ஊடகழி ஜாதிக்காரன்னா ரௌடிக் கூட்டம்னு சொல்லுவாங்கே நம்ம ஜாதிக்காரங்களும் அப்படித்தானே இருக்காங்கே..... திடீரென்று...

 ’’நாங்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறினால்.... ’’

அதே கணவன்தான் செல்லை அழுத்திப் பார்த்தாள் டிஜிடல் ஒளியில் 2:23 am என்று காண்பித்தது ச்சே விடிய வச்சுருவான் போலயே பேதியில, பெறண்டு ஓயிருவான் நம்மளை தூங்கவே விடலையே.... சரி இப்படி செலவு செய்தால் பணம் திரும்பவும் கிடைக்குமா ? தோற்று விட்டால் பணமெல்லாம் போய் விடுமோ ? பிறகு நம் மகனுக்கு ? ஒருவேளை ஜெயித்து விட்டால் சம்பாரித்து விடுவார்தான் இவரென்ன... கோல்மால் தெரியாதவரா ? பரம்பரை புத்தி இவருக்கு இல்லாமலா இருக்கும் ஒருவேளை ஜெயித்து விட்டால் ? அகம்பாவத்துல நம்மளை ஒதுக்கி வச்சுட்டு எவளையாவது சேர்த்து வச்சுக்கிருவானோ ? ஏற்கனவே நம்ம தங்கச்சி தமயந்தி மேல ஒரு கண்ணாத்தான் இருக்கான், அதுக்கு இப்பவே தலையணையை மூஞ்சியல வச்சு அமுக்கி உட்கார்ந்து இவன் கதையை முடிச்சுட்டு இவனோட மாரடிக்கிறதுக்கு முண்டச்சியா வாழலாமே... அதோட தலைவர் தண்டபாணியிடம் சொல்லி நாமளே இந்த தொகுதியில் நிற்கலாமே தலைவர்தான் இப்ப நமக்கும் பழக்கமாயிட்டாரே... இதை வச்சே அனுதாப ஓட்டு வாங்கிடலாமே... 

தமிழ் நாட்டு மக்களுக்கு அனுதாப ஓட்டு போடுறது அல்வா சாப்பிடுறது மாதிரியாச்சே.. நாம போற இடமெல்லாம் கட்சித்தொண்டர்களும் நம்மளை ‘’அண்ணி’’ அப்படின்னு அன்போடு கோஷம் போடுறாங்களே... பலவாறு யோசித்தவள் எழுந்து மெதுவாக எலியின் எதிரிபோல் நடந்து கதைவைத் திறந்தவள் வெளியே பார்த்தா(ள்)ல் ? அரை விளக்கொளியில் வராண்டாவில் தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கொரு பக்கமாக கிடந்தார்கள் பலரது கரை வேஷ்டிகள் எங்கெங்கோ சுருண்டு கிடந்தது சிலர் சுடர்மணியுடன், சிலர் சுடர்மணியை விரும்பாதவர்களும் கிடந்தார்கள் ச்சே இப்படிக் கிடக்கின்றார்களே... போவோமா ? வேண்டாமா ? இருட்டுக்குள் எதிலாவது மிதித்து விட்டால் ? WEEL என்று கத்துவார்களே... போவோம் என்று நினைத்தபோது... திடீரென உள்ளிருந்து குரல்.

‘’ஓட்டைப் பிரிக்கிறான்... ‘’ஓட்டைப் பிரிக்கிறான்....’’

கதவு திறந்து கிடந்ததால் சத்தம் கேட்டு தொண்டர்கள் பதறி எழுந்து டேய் தலைவர் கத்துறார்டா... எவனோ திருடன் ஓட்டைப் பிரிக்கிறான் எந்திரிங்கடா... சொன்ன வேகத்தில் பக்கத்தில் இதற்காகவே போட்டு வைத்திருந்த முரட்டுத் தடியை எடுத்த தொண்டன் ஒருவன் இருட்டுக்குள் நின்றிருந்த உருவத்தை இந்தா திருடன் என்று நடு மண்டையில் ஒருபோடு போட்டான் ‘’ஐயோ அம்மா’’ என்று அலறி விழுந்தாள் மரகதவள்ளி மறுநாள் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் கிடந்த ம.வ. நிருபர் கேட்ட கேள்விக்கு கணவன் மிரட்டி சொல்லி வைத்ததைப் போலவே சொன்னாள்.

நேற்று இரவு எனது கணவர் உறங்கி கொண்டு இருக்கும் பொழுது கொ.இ.க. கட்சிக்காரங்க சிலர் எனது வீட்டுக்குள் புகுந்து எனது கணவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் அந்த நேரம் எனது கணவர் பாத்ரூம் போயிருந்தார் அதனால் தப்பித்து விட்டார், நான் அவர் இல்லை என்று சொல்லவும் கோபத்தில் என்னை தலையில் கம்பால் அடித்து விட்டு ஓடி விட்டார்கள்’’ 

அதேநேரம் கணவன் கோவிந்தன் தேவபுரம் மேடையில் பேசிக்கொண்டு இருந்தான் கீழ்கண்டவாறு....

தாய்மார்களே.... நேற்று நள்ளிரவு கொ.இ.க. குண்டர்கள் என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள் அந்த நேரம் என்னைக் காப்பாற்ற உயிரை துச்சமாக நினைத்து குறுக்கே பாய்ந்த எனது துணைவியார் திருமதி. மரகதவள்ளி கோவிந்தனார் அவர்கள் தலையில் அடிபட்டு இதோ மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார் நான் கேட்கின்றேன் எதிர்க் கட்சியினரைப் பார்த்து நாட்டில் சுமங்கலிகள் வாழ்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா ? எல்லோருமே தங்களைப்போல் கணவன் இல்லாமல் வாழவேண்டும் என்று நினைக்கின்றீர்களா ? நாட்டில் பெண்களுக்கு 111 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திட, பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்திட, விலைவாசி குறைந்திட, வாக்களிப்பீர் தாலி சின்னத்திற்கே.... சொல்லுங்கள்..... மக்குழே......

பலத்த கோஷத்துடன் மக்கள் உணர்ச்சிகரமாய் சொன்னார்கள்
தாலிக்கே....


வலைப்பூ நட்பூக்களே... மரகதவள்ளிக்கு தாலிப்பாக்கியம் கிடைக்க நீங்களும் தாலிக்கே வாக்களிப்பீர் - கில்லர்ஜி

சிவாதாமஸ்அலி-
இவன் ஆட்சியில் இல்லாமலயே... பலபேரு தாலியை அறுத்தவனாச்சே... இவனுக்கு ஓட்டுப்போட்டு.....

சாம்பசிவம்-
ஹூம் விற்கிற விலைவாசியில தாளிக்கிறதுக்கு கடுகு வாங்க முடியலை இதுல இவங்கே வேற.... காமெடி பண்ணிக்கிட்டு.

Chivas Regal சிவசம்போ-
எல்லாப்பயலுமே... வாக்களிப்’’பீர்’’ அப்படின்னுதான் சொல்றான் ஒருத்தன்கூட விஸ்கி, பிராந்தி’’ன்னு சொல்லலையே.... பீர் அடிச்சா நமக்கு போதை ஏறுமா ?

காணொளி

36 கருத்துகள்:

  1. கோவிந்தன் நிச்சயம் ஜெயிப்பான் ,இழவுக்கு விழும் வோட் ,நம்ம தங்கத் தமிழ்நாட்டில் ஏராளம் ,ஏராளம் !ஆட்சியைப் பிடித்த சரித்திரமும் உள்ளதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இது தெரிந்துதானே ம.வ. தலையணையை வைத்து அமுக்கப் பார்த்தாள்.

      நீக்கு
  2. அபாரமான கற்பனை வாழ்க, வளர்க, எங்கள் ஓட்டு உங்களுக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா கோவிந்தனை வெற்றி பெற வையுங்கள்.
      முனைவர் ஐயாவின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  3. ஹா.... ஹா..... ஹா.... ரசித்தேன், சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து சிரித்தமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  4. ஓட்டைப் பிரிக்கிறான்... ஓட்டைப் பிரிக்கிறான்!..

    ஆகா.. அருமை...

    எப்படிங்க.. ஜி!. இதெல்லாம்!?...

    கைதேர்ந்த ஆனா வானாவும் பிச்சை எடுக்கணும் போல இருக்கே!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஏதோ மனதில் பட்டதை எழுதினேன் அது யாரு ஜி ? (ஆனா வானா) உண்மையிலேயே தெரியவில்லையே....

      நீக்கு
  5. ஹா ஹா நண்பரே...
    உங்கள் ஓட்டு எதுக்கோ
    அதுக்கே என் ஓட்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அப்படி மட்டும் எப்பவுமே சொல்லக்கூடாது நீங்களாகவே சுயமாக சிந்திக்கோணும் அப்பத்தான் நாடு உருப்படும்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாங்க ஐயா அனுதாப ஓட்டு தமிழகத்தில் பிரபலமாயிற்றே... இப்பொழுது ஏதாவது கட்சியில் யாராவது இறந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம் அந்தக்கட்சி அமோக வெற்றி பெறும் இது தமிழ் நாட்டின் மரபு.

      நீக்கு
  7. தேர்தல் நேரம் தொலைகாட்சிபெட்டியில். ரேடியோ பெட்டியில் தான் தேர்தல் நாடகங்கள் அரங்கேறுகிறது என்றால் தேவகோட்டையார் தளத்திலும் இதேதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ ஏன் தொலைக்காட்சியில் பார்ப்பதை எனது தளத்தில் பார்க்க கூடாதா ?

      நீக்கு
  8. நல்ல கற்பனை வளம், வாழ்க

    பதிலளிநீக்கு
  9. சகோ,, சும்மா எழுதித் தள்ளுங்க,,,,

    சரி யாருக்கு ஓட்டு,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோந்தமடை கோவிந்தனுக்கு போடுங்களேன்.

      நீக்கு
  10. ஹா.ஹா.... ரசித்தேன் கில்லர்ஜி!

    காணொளி - கலக்கல்....

    பதிலளிநீக்கு
  11. தாலி பாக்கியம் கிடைக்க..தாலிக்கே..ஓட்டு போடலாம்தான்...ஆனா என் கொள்கை தடுக்குதே...தேர்தல் பாதை திருடர்பாதை... என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கொள்கையிலேயே இருங்கள் நண்பரே கோவிந்தன் யாரு மாமனா ? மச்சானா ? பிராடுக்காரன் கெடக்கான் விடுங்க...

      நீக்கு
  12. சரி, நீங்கள் கூறியபடியே செய்வேன்.

    பதிலளிநீக்கு
  13. உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கிறீர்கள். அனுதாப அலையில் வாக்குகள் பெற்ற மாநிலமாயிற்றே இது. இரசித்தேன்! காணொளி அற்புதம். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  14. எப்படி இப்படி எல்லாம் கற்பனைகள் கண்டு எழுதறீங்களோ தெரியலை! :) ரசனையாகவும் இருக்கு! யதார்த்தமும் இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நடைமுறை உண்மையைத்தானே எழுதுகிறேன்.

      நீக்கு