தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 24, 2016

ஊத்துக்குளி வெண்ணை


OMAN நாட்டில் வாழும் என்னையறியாத, நானறிந்த இந்த இந்திய ஜோடிகள் ஒரு குழந்தையை பெற்று கொஞ்ச வேண்டிய தருணத்தில் நாயை கொஞ்சுகின்றார்கள் இதன் பின்னணி என்ன தெரியுமா ? இருவருமே வேலைக்கு போகிறவர்கள் பணம் சம்பாரித்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறவேண்டும் அதாவது குழந்தை பெற்றால் முதல் காரணம் இளமை குறைந்து விடும், இரண்டாவது வளர்பதற்க்கு வேலைக்கு ஆள் வைக்க வேண்டும் அவர்களுக்கு சம்பளம் கொடுத்தால் ஒருபகுதி வருமானம் அதில் போய் விடும் வீட்டிலுள்ள பெரியவர்களை கொண்டு வந்து வைத்துக் கொண்டால் தமக்கும் இடையூறு மேலும் செலவு பின்னால் பார்த்துக் கொள்ளலாம் பின்"நாள்" இறைவனும் பார்ப்பானா ? என்பதறியா மடந்தைகள்.


மென்மையான மனித மனங்களைவிட SOFTடான CURRENCY நோட்டுகள்தான் மேலானது என்ற கொள்கையாளர்கள் பணம் இவர்களை என்னபாடு படுத்துகிறது நாளை கொள்ளி வைக்க மக்கள் வேண்டாமா ? ஒருவேளை பணம் கட்டினால் எலக்ட்ரிக் சுடுகாட்டில் ஸ்விட்ச் போட்டு விடுவார்கள் என்ற எண்ணமா ? இருப்பினும் கௌண்டரில் பணம் கட்டவாவது மகனோ அல்லது மருமகனோ வேண்டுமே ?      

சாம்பசிவம்-
கையில வெண்ணை இருக்கையிலதான் நெய் கடைய முடியும்னு தெரியாத வெண்ணை.

 காணொளி

32 கருத்துகள்:

  1. எதற்காகச் சம்பாதிக்கிறோம் என்பதை அறியாமலே வாழ்கின்றவர்கள் அநேகம் பேர்.
    பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பது அவர்களுக்குப் புரிவதில்லை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் பலருக்கும் வாழ்க்கை புரிவதில்லை.

      நீக்கு
  2. பதில்கள்
    1. முனைவர் ஐயாவின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  3. நிஜமாகவா?!!!



    ஊத்துக்குழியா, ஊத்துக்குளியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே நான் அறிந்தவர்களே...

      தவறை திருத்தி விட்டேன் தவறுகளை சுட்டிக்காட்ட தயக்கம் வேண்டாம் நண்பரே எந்நிலைலும் தவறை ஏற்றுக்கொள்வேன்.

      நீக்கு
  4. போதும் என்ற அளவுக்கு சம்பாதித்ததும் மரணம் நெருங்கி விடுகிறது :)

    பதிலளிநீக்கு
  5. தெரியாத வெண்ணைகளுக்கத்தான் எல்லாமும் கிடைக்கிறது..

    பதிலளிநீக்கு
  6. நாயினால் தொந்தரவு இல்லை என்பதை உணர்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்தானோ...

      நீக்கு
  7. இறைவன் படைப்பில் மனித வெண்ணைகளா...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இரண்டு வகை வெண்ணைகள்தான்.

      நீக்கு
  8. அன்பின் ஜி!..

    நான் சும்மா இருக்க நினைத்தாலும் - இருக்க முடியாது!..

    அதாகப்பட்டது என்ன என்றால்!..

    வெண்ணெய் - என்பதே சரி!..

    கொண்ட கொள்கைகள் தவறாகப் போனதால்
    வெண்ணெயும் வெண்ணை என்றானது என்று நினைக்கின்றேன்!..

    இந்த வெண்ணைகள்(!) மறந்து விட்டார்கள்
    காத்திருக்கும் மண்ணை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி தாங்கள் வெண்ணெய் என்று சொல்வதே சரி அதே நேரம் இது திட்டுவதைச் சார்ந்த காரணத்தால் வெண்ணை என்பதை மக்கள் கொண்டு வந்து விட்டார்களோ... என்று நினைக்கிறேன்.
      ஆம் இவர்கள் மண்ணை மறந்த மடந்தைகள்.

      நீக்கு



  9. மக்கள் செல்வம் பெறாமல் பொருட் செல்வம் மட்டும் ஈட்ட விரும்போவோரை பார்க்கும்போது ‘நல்வழி’யில் ஔவைப்பாட்டி சொன்ன

    பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
    ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
    பாவிகாள் அந்தப் பணம்

    பாடல் நினைவுக்கு வருகிறது.

    நல்ல பதிவு .பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையான பொருத்தமான ஔவையின் பாடல் வரிகளை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. இன்றை சூழலில் இப்படி யோசிப்பவர்களும் உண்டு தான் ஐயா.நல்ல பதிவு ஐயா.அருமை நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இந்த எண்ணங்கள் நமது வாழ்க்கைக்கு அர்த்தமற்றது மட்டுமல்ல நம்மோடு முற்றுப்பெற்று விடும் இது சிலருக்கு தென்படவில்லை என்பது வேதனையானதே..

      நீக்கு
  11. கவுண்டரில் பணம் கட்ட மகனோ அல்லது மருமகனோ வேண்டுமா ?

    இது என்ன கொடுமையா இருக்கு ?

    அம்மா கிட்ட சொல்லி இதுக்கு ஒரு வழி பண்ணியாகணும்.

    இப்பவே பணத்தைக் கட்டி டோக்கன் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னால்,

    டோக்கன் எல்லாம் கொடுக்கறது இதற்கு கிடையாது என்கிறார்கள்.
    கவலைப்படாதே பெரிசு.! அன்னிக்குன்னு யாருனாச்சும் தமிழ் பதிவர் உங்க பக்கத்திலே இருப்பாக. என்கிறது என்னைப்போன்ற இன்னொரு பெரிசு.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா அப்படின்னா... ரேஷன்கார்டு இல்லாதவங்களுக்கு டோக்கன் கிடைக்கா விட்டால் அவர்களை என்ன செய்வது ?
      அது சரி தாத்தா உங்களுக்கும் அம்மாதானா ?

      நீக்கு
  12. தவறான பதிவு. நீங்கள் இங்கே பதிவிட்டது அவர்களுக்கு தெரியுமா?. தனிமனித மீறல். அவர்களின் கமிட்மென்ட்ஸ் என்னவோ?. அதை அவர்களிடம் கேட்டு நீங்கள் சொல்வது போல் இருந்தால் பிறகு விவாதிக்கலாம் அதைப் பற்றி அவர்களின் அடையாளங்களை மறைத்துவிட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கு பதிவுக்கு அப்பாற்பட்ட தங்களது கருத்தை ஏற்கிறேன், தனிமனிதமீறல் என்றும், தவறு என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.
      இவர்களைப்பற்றி அறிந்தவன் பகிர்வுக்கு இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதும் ஒரு முக்கிய காரணம் இக் காணொளி முகநூலின் வழியாக எடுத்து எனது சிறிய வேலைகளையும் புகுத்தினேன்.

      இது மற்ற சிலருக்கு பயன் படலாம் என்ற நோக்கத்தில்தான் பதிவிட்டேன் மேலும் இவர்கள் என்னைக் காண்பதும், நான் இவர்களைக் காண்பதும் அரிது காரணம் இருவரும் வசிப்பது வேறு நாட்டில்.
      தாங்கள் யாரோ எவரோ எனக்கு தெரியாது இருப்பினும் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. குழந்தை ஒன்றுக்கு ஏங்கும் தம்பதியர் மத்தியில் இப்படியும் சிலர். ஆனால் பெற்றாலும் இவர்கள் எல்லாம் ஒழுங்காக வளர்ப்பார்களா என்பதே சந்தேகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சதோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  14. இக்கரையில் நின்று நீங்கள் பார்க்கிறீர்கள் அக்கரையிலிருந்து தெரிவது என்னவோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அங்கும் பச்சையாகத்தான் இருக்கணும்...

      நீக்கு
  15. நாலுகால் செல்லங்கள் வளர்ப்பதில் தவறில்லை ஜி. ஆனால், அவர்களின் காரணங்கள்தான் சரியில்லை....

    உலகின் போக்கு அப்படியாகிப் போனது.ஹும்....வேறு என்ன சொல்ல...

    ஆனால், சிலர் பணத்திற்காக அல்லாமல், உறவுகளின் மீது அன்பு செலுத்திக் கொண்டும், தங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்றோ, இல்லை குழந்தை இல்லாமையாலோ, அனாதைகளான நாலுகால் செல்லங்களை வளர்த்து அவர்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நல்லுள்ளங்களும் உண்டு ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நான் அதை வளர்ப்பது தவறு என்று சொல்ல வரவில்லை எங்கள் வீட்டில்கூட ஒரு காலத்தில் 15 யானைகள் வளர்த்தோம் பராமரிக்க முடியாத காரணத்தால் ஆளுக்கு ஒன்று கொடுத்து விட்டோம்
      இதன் அடிப்படை காரணங்கள் தவறு என்பதை குறிப்பிட்டேன் வேறொன்றுமில்லை.
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. என்ன செய்ய சுடுகாட்ல பொணத்த எரிக்கும்போதே நேரே சொர்க்கத்துக்கு சம்பந்தப்பட்டவர்களின் பணத்தை நெட்பேங்கில் கட்டிவிடுவார்கள் என்ற நம்பிக்‌கையோ என்னவோ, அதான் இப்படி ஏன் எதற்கு என்று வரைமுறை இல்லாமல பணம் என்ற ஒன்றிற்காக வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும், ரசனைகளையும், உறவுகளையும் இழக்கிறார்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான தங்களது கருத்து உண்மைதான் நண்பரே

      நீக்கு