தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 01, 2017

சிக்கன் குனியா, மட்டன் சனியா, பீப் கனியா


விரைவாக வளர்ச்சி பெறவேண்டும் என்ற மனிதனின் விஞ்ஞான சிந்தனை இன்று நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது... நோயை குணப்படுத்த ஒரு மாத்திரை பிறகு அது தொடுத்த மற்ற நோயை தடுக்க மற்றொரு மாத்திரை இப்படியே போனால்... நாளைய மனிதனின் நிலையென்ன ? இயந்திரமாகவே செயல்படும் நிலையே உருவாகும் உணவே மருந்து என்ற பெரியோரின் வாக்கு மருந்தே உணவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்து விட்டதே இது மனிதனுக்கு வளர்ச்சியா ? வீழ்ச்சியா ? நம் முன்னோர் சர்வ சாதாரணமாக 16 பிள்ளைகளை பெற்றெடுத்தவர்கள் இன்று மனிதன் ஒரு குழந்தையைப் பெறுவதற்கு இந்தியாவின் தலைசிறந்த 7 தலைமுறை வைத்தியர்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே ? இப்படியே போனால் மனித இனம் அழிவைத்தானே நாடும் இதை உலக அளவிலான விஞ்ஞானிகள் உணர்ந்து பார்ப்பார்களா ? இந்த விஞ்ஞானிகளுக்கு தான் சாதிக்க வேண்டும் என்ற சிந்தையே மேலோங்கி இருக்கும் அதன் பின் புலனைப்பற்றியும் கொஞ்சம் நினைவில் கொள்ளவேண்டும் என்பதே எமது அவா இவர்களுக்கு சராசரி மனிதர்களைப் போல ஆசைகள் இருப்பது குறைவு இதன் காரணமாகவே சில விஞ்ஞானிகள் திருமண வாழ்க்கையையும் நிராகரித்து இருக்கின்றார்கள் மற்றொன்று இவர்களில் பெரும்பாலானோர் நியாயமானவர்களாகவே இருப்பார்கள் இவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சுமார் 18,529 K.M அளவுகள் தூரமிருக்கும் அதாவது உதாரணம் சொல்ல வேண்டுமானால் விஞ்ஞானிகள் அந்த வானத்தைப் போல மனதிலும் உயரமானவர்கள் என்பது எமது கருத்து என்றாலும், அரசியல்வாதி அதே அளவு பூமிக்கு கீழே குழி தோண்டி தள்ளப்பட வேண்டியவர்கள் என்று நான் சொல்லவில்லை உங்களுக்கு தோன்றக்கூடும் என்பதும் எமது கருத்து.

வியாதி என்பது இப்பொழுது புதிது புதிதாக தோன்றிக் கொண்டே வருகின்றது உணவகங்களுக்கு போகும் போது சர்வர்கள் சொல்லக்கேட்டு இருக்கின்றோம் சிக்கன் சிக்கா, மட்டன் ஃப்ரே என்பது போன்ற வார்த்தைகளை கேட்கும் பொழுதே நாவில் எச்சில் ஊறி அடிவயிறு அதை கேட்கச் சொல்லும், அதே போன்று இன்று மருத்துவர்களிடம் சென்றால் அவர்களும் சொல்கின்றார்கள் சிக்கன் குனியா, மட்டன் சனியா, ஃபீப் கனியா என்று இதைக் கேட்கும் பொழுது பேசுவதற்க்கு நாவு வறண்டு அடி வயிற்றைக் கலக்குகின்றது எதிர்கால மனிதகுலத்தின் நலனுக்கு வேண்டி இதற்கெல்லாம் நல்லதொரு தீர்மானம் எடுக்க வேண்டி நல்ல நோக்கத்துடன் எனது கருத்தை தாழ்மையுடன் முன் வைத்து International Scientist Association Committee க்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளேன் ஆனால்... கடிதம் ஆங்கிலத்தில் எழுத வேண்டுமாமே... எழுதினேன்... பொதுவாக எனக்கு ஆங்கிலம் எழுதினால் முதுகுவலி வரும் ஆகவே அந்த வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து முதுகுவலி தீர மருத்துவரைக் காணப்போனேன் (ஐயா. திரு. ராமதாஸ் அவர்களை அல்ல) அவரும் ஒரு மாத்திரை கொடுத்தார் சாப்பிட்டேன் முதல்நாள் வலி இல்லை, மறுநாள் இடுப்பு வலித்தது மீண்டும் மருத்துவரைக் காணப்போனேன், அவர் மற்றொரு மாத்திரை கொடுத்தார் சாப்பிட்டேன் முதல்நாள் வலி இல்லை, மறுநாள் நெஞ்சு வலிக்கின்றது இதற்கு பதிவுலக நண்பர் திரு. வலிப்போக்கன் வழி சொல்வாரா ? அவர் பதிவுக்கு வருவாரா ? பதில் தருவாரா ? ஆவலுடன் எனது கணினியில் விழி வைத்து கில்லர்ஜி.

சாம்பசிவம்-
Dr. 7 மலையை பார்த்தால் சரியாக்கி விடுவாரே....
Chivas Regal சிவசம்போ-
அவரு Dr. 6 முகத்தை பார்க்கச் சொல்வாரே... 
  
காணொளி
இனிய 2017 புத்தாண்டு வாழ்த்துகள்

48 கருத்துகள்:

  1. நோய் நொடிகள் இல்லாத வருடமாக இந்தப் புத்தாண்டு மலரட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இவ்வருடத்தின் முதல் வருகையே வருக... உங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  2. ஆங்கிலம் வேண்டாம் ஜி... இருந்தாலும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...! ஹிஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இது பொதுவான நக்கல்ஸ் மாதிரி இருக்கே...

      நீக்கு
  3. நோய் நொடியற்ற புத்தாண்டாய் மலரட்டும்! வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. என்றைக்கு இயல்பான வாழ்க்கையை விட்டு அதிவேக வாழ்க்கைக்கு மாறினோமோ அன்றே இந்த அவலங்கள் தொடங்கிவிட்டன. மக்களாய் பார்த்து வாழ்வின் முறையை மாற்றினால் ஒழிய இதற்கு தீர்வு இல்லை என எண்ணுகிறேன்.

    காணொளியை இரசித்தேன்!

    தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியான கருத்து தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      நீக்கு
  6. நோய் நொடியற்ற வாழ்வு கிடைக்கட்டும்....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. புத்தாண்டு நல்வாழ்த்துகள்! தாயகம் வந்தாச்சா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஆம் விரைவில் சந்திப்போம்

      நீக்கு
  8. ஆங்கிலப் புத்தாண்டில் சபதம் ஏற்போம் ஆங்கில மருத்துவம் வேண்டாம் ,நம் மண்ணுக்கேற்ற மருத்துவமே போதுமென்று :)

    பதிலளிநீக்கு
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. (நோயற்ற) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. தொழில் நுட்பங்களின் உடனடிப் பலன்கள் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது. நாம்பக்க விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை.

    புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    இந்தப் புத்தாண்டு உடல் நலமும் மன நலமும் அருளட்டும் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நன்றியோடு.... உங்களுக்கும்

      நீக்கு
  14. இங்கிலீஸ் புத்தண்டாலும் சரி..தமிழ் புத்தாண்டாலும்சரி..நோயற்ற புத்தாண்டு வராது ஜி.. தங்களுக்கு முதுகுவலி வருவதற்கு முக்கிய காரணம்..அந்த கிலோமீட்டரை கண்டுபிடித்தால் வந்தது. உணவே மருந்து என்றாலும் அந்த உணவைிலும் இராசாயணம் கலக்காமல் இல்லை.. சும்மா ரவண்டு கட்டி அடிக்கிறார்கள் ஆளுவோர்கள்18,529 ...அந்த 18,529 கிலோமீட்டரை மறந்துவிட்டால் முதுகுவலி நீங்கும் திரும்ப வராது என்று உறுதி கூறுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணத்தை கண்டுபிடித்து சொன்னமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  15. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  16. //விஞ்ஞானிகளுக்குச் சராசரி மனிதர்களைப் போல ஆசை இருப்பது குறைவு. நியாயமானவர்களாகவே இருப்பார்கள்//

    சரியான கணிப்பு.

    சீரியஸ், சிரிப்பு என்று இரண்டையும் கலந்ததால் இது ஒரு கலக்கல் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியான விடயத்தை குறிப்பிட்டமைக்கு நன்றி

      நீக்கு
  17. ஒரு ஆங்கில மருத்துவரை பார்க்கப் போயிருந்தேன். இருக்கையில் அவர் இல்லை. தனக்கு வைத்தியம் பார்க்க நாட்டு மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தாராம்! இன்னொரு சமயம், ஒரு நாட்டு மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர், தன மனைவிக்காக ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் போயிருந்தார்!... - இராய செல்லப்பா நியுஜெர்சி

    பதிலளிநீக்கு
  18. ஒரு சில நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் தான் உடனடித் தீர்வு கொடுக்கும். மற்றபடி தேவைக்கு ஏற்ப சித்த மருத்துவமோ, ஆயுர்வேத மருத்துவமோ மேற்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்விலே இது தவிர்க்கமுடியாததுதானே நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. வியாதிகள் என்றைக்கும் இருந்திருக்கவேண்டும் ஒரு வேளை அந்தக்காலத்திய மரணங்களுக்கு இது பற்றிய அறிவு இல்லாத்ததாகவும் இருந்திருக்கலாம் இப்போதெல்லாம் வியதிகளின் பெயர் தெரிகிறது. மருந்துகள் இருக்கின்றன. எனக்கென்னவோ அன்றைய நாளாஐவிட இன்று எவ்வளவோ மாறி இருக்கிறோம் என்று தோன்றுகிறது சராசரி வயது 35 போல் இருந்தது இப்போது 60க்கும் மேல். இது ஒன்றே நாம் எவ்வளவோ முன்னேறி விட்டோம் என்று காட்டுகிறது அந்தக்காலப் புகழ் பாடுவதில் நமக்கோர் இன்பம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மாறுபட்ட கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய காலகட்டத்தில்,உணவுடன் மருந்து மாத்திரை ஒரு கட்டாயமாகி விட்டது. திருமணம் போன்ற விஷேடங்களுக்கு செல்லும் போது சந்திக்கும் உறவுகள் ஒருவரையொருவர் விட்டு உணவருந்தும் வேளையில் "மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் விரைவாக சாப்பிட சென்று விட்டேன்.' என மன்னிப்பு கோறும் பாவனையில் சொல்வதுண்டு.அந்தளவு இன்று மருந்துக்கு முக்கியத்துவம் வந்து விட்டது. தங்கள் கூறுவது போல் விதவிதமான பெயர்கள் வேறு பயமுறுத்துகின்றன. பகிர்வுக்கு நன்றி.

    தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்ததாண்டு வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  22. நான் திரு.ஜி.எம்.பி. அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. ஜி.எம்.பி ஐயா சொன்னது ஓரளவு சரி. அந்தக் காலத்தில் (50 வருடங்களுக்கு முன்பு) வந்து மக்களைக் காவு கொண்ட பல வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம். அவைகள் இப்போது பெரும்பாலும் இல்லை. (காலரா, டி.பி, போலியோ, அம்மை போன்ற பெரிய நோய்கள்). ஆனால் இப்போது, வளர்ச்சி மற்றும் வணிகக் கவர்ச்சி என்ற பெயரால் பலவித புது நோய்களை உற்பத்தி செய்திருக்கிறோம். இது பி.டி என்று சொல்லப்படுகிற, உடற்கூறுகளை மாற்றிய உணவினால் வருவது (பால், பிராய்லர் கோழி/முட்டை, நூடுல்ஸ், மைதா, பாக்கெட் உணவுகள், கவர்ச்சிக் கலர்கள் போன்றவைகள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விரிவான தகவலுக்கு நன்றி நண்பரே

      நீக்கு