வியாழன், ஆகஸ்ட் 17, 2017

பல் மூன்றுஒரு விசும்பல்...
எனக்கென பிறந்தாய்...
என்னுடன் வளர்ந்தாய்...
எனக்காக மலர்ந்தாய்...
அழகாய் இருந்தாய்...
கண்ணுக்கு விருந்தாய்...
தோட்டக்காரன் வந்தான்,
பறித்து கொண்டு சென்றான்,
பறி கொடுத்து நின்றேன்,
என் மனதையும் கொன்றான்.
வாடாமல்லி நீ வாடிச்சென்றாய்...
வாடாமல் நீ என்மனதில் நின்றாய்...
- ஒரு வாடாமல்லிச்செடி.

ஒரு புலம்பல்...
அவள் என்னைப்பார்த்து...
சிரிக்காமல் போயிருந்தால் ?
நான் ஐ லவ் யூ சொல்லியிருப்பேனா ?
அவளை காணாமல் இருந்திருப்பேனா ?
அவளைப்பற்றியே நினைத்திருப்பேனா ?
ஒரு நாளாவது அவளை மறந்திருப்பேனா ?
அவள் வீட்டை கடக்காமல் போயிருப்பேனா ?
அவளும் நேசித்தால், விட்டுக்கொடுப்பேனா ?
அவளை அவனுக்கு, தாரை வார்த்திருப்பேனா ?
அவளால் நான் குடிகாரன் ஆகியிருப்பேனா ?
அவளது சரித்திரம் எழுதப்போகிறது... என் பேனா.
- எழுத்தாளன் எழில்.

ஒரு அலம்பல்...
யாருடா அங்கே  டாஸ்மாக் எங்கே ?
டேபிள்போடு பிரன்ட்ல வருவான் ஃபிரண்டு
நான்தான் குமாரு... அடிப்பேன் டமாரு..
கெனிக்கன் பீரு... குடிப்பேன் பாரு...
முட்டை ஆம்லெட்டு வரயேண்டா லேட்டு ?
சிக்கன் கொண்டா சொக்கன் வருவான்.
ரம்’’மும் எடுத்து வா ! ரம்பாவும் வருவாள்.
சிவசம்போ வந்துட்டான் Chivas Regal எங்கே ?
ஊறுகாய் கொண்டு வா ! ஊறுதே வாயி.
ஸ்நாக்குக்கு பூந்தி எடுப்பேன் வாந்தி.
வருவோம் முந்தி போவோம் பிந்தி.
- குடிமகன் குமார்.

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

முழுசும் எதற்கு ?

வணக்கம் மேடம் சுதந்திர தினத்துக்காக பேட்டி கொடுக்க வந்திருக்கும் உங்களுக்கு எங்கள் மோடோ தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
வன்க்காம் எண்ணுடொயா ரசிகாருக்கு சொதந்திரா வாத்துகால்

நீங்கள் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தது எப்படி அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா ?
ஆக்செலி இத்து ஆக்ஸிடெண்ட்தான் ணான் லண்டன் கேம் ப்ரிட்ஜ் கோலேஜ்ல ஃபைனல் இயர் பன்னிகுட்டி இருந்துச்சு அப்போதான் டைரக்டர் மிஸ்டர் பாடாவதி ராஜா கன்னுல பட்ருச்சு சட்டர்ன்லி நீங்க ஃபிலிம்ல ஆக்ட் பன்னு முடியிதானு கேட்டுச்சு ணான் மம்மி, டாடியை கேட்டு சொல்லுதுனு சொல்லி ஆப்டர் பெர்மிஷன் ஐ ஸ்டார்டட் ஆக்ட்டிங்

உங்களுடைய முதல் படம் முழுசும் எதற்கு இதில் நீங்கள் நடித்த முதல் காட்சி அந்த அனுபவம் பற்றி....
ஆங் ஃபர்ஸ்ட் ஸீன் ஃபர்ஸ்ட் நைட்தான் காமெரா மென்னடி நிக்குராதுக்கு வெளக்கமாரு... ஸாரி வெக்குமாச்சு ஹீரோ ஸார்தான் அத்தை கொஞ்சும் கொஞ்சும் சறியாக்கிச்சு.

இந்த படத்தின் ஹீரோ மிஸ்டர். ஜீரா இவரைப்பற்றி என்ன நினைக்கிறீங்க ?
அவுறு வெறி ஜென்டில்மேன் என்கூ நடுப்பு ஜொள்ளி கொடுத்துச்சு

நீங்க ரொம்ப அழகாக தமிழ் பேசுறீங்களே எப்படி ?
ஆக்செலி எங்கு டாடி இண்டியாவுல பன்டிசெறிக்கார்ருதான் மம்மிதான் லண்டன். ஹவுஸ்ல ணான் டமில் பேச்சூம்

தமிழ் நடிகைகளில் உங்களுக்கு பிடித்தவர் யார் ?
என்கூ புட்சது சவுத்ரி மேடம் நடுப்புதான் ணானும் அவுங்களா மாறி பேருடக்கணும்.

தமிழ் ரசிகர்களைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ?
ரெம்பே நள்ளுவங்க ஃபிலிம் ரிலிஸ் அணைக்கு ணான், டைரக்டர், ஹீரோ முன்னுபேரும் தியேட்டருக்கு போச்சு ரசிகாரு எண்ணுடொயா கட்டவுட்டுக்கு பாளுத்துச்சு.

முதல் முறையாக தியேட்டரில் நீங்கள் நடித்த படத்தை காணும் பொழுது அதுவும் படத்தின் டைரக்டரும், ஹீரோவும் வந்துருக்காங்க நீங்க பெரிய அதிஷ்டசாலிதான் அந்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்களேன்
டைரக்டரூம், ஹீரோவூம் என்கூ லெப்ட் அன்ட் ரைட்ல உக்கந்து நள்ளா கோமெடி பன்னிகுட்டி இருந்துச்சு தட் வாஸ் எ குட் எக்ஸ்பீரியன்ஸ்

உங்களுக்கு சகோதரர்கள், சகோதரிகள் ?
எங்கூ ஃபேமிலியில ணான் மட்டும்தான்

நீங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் செல்லப்பிள்ளை இல்லையா.... இப்போ உங்களுடைய அம்மா அப்பா எங்கே இருக்காங்க ?
மம்மி டாடியை டைவேர்ஸ் பன்னிட்டு அவுங்குளுட ஓல்ட் பாய் ஃப்ரண்ட்கூட செட்டில் ஆகிச்சு டாடி ஐ..... திங்க் நௌ ஸ்டேய்ஸ் இன் ஃப்ரான்ஸ்

இப்பொழுது உங்களுடைய பாதுகாப்புக்கு யார் ?
இப்பூ எங்கூட மை கோலேஜ் ஃப்ரண்ட் மிஸ்டர். ஃப்ரேய் இருக்கூ

மிஸ்டர். ஃப்ரேய்தான் உங்களை திருமணம் செய்வாரா ?
அத்து மை பாய் ஃப்ரண்ட் மிஸ்டர். கெண்ட்லிய கேட்டு டெஸைட் செய்யும்

நல்லது தங்களது திருமண வாழ்க்கை நல்ல விதமாக அமைய எங்களது மோடோ தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துகள். சுதந்திர தினத்துக்காக உங்களுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க ?
ரசிகாரு அல்லாரும் சொதந்திராவுக்கு தியேட்டருல பொய்யி படாம் பாருங்கானு சொள்ளி வாத்துகால்.

நன்றி வணக்கம்.
நண்ரி வன்க்காம்.

சிவாதாமஸ்அலி-
கொட்டாம்பட்டி கண்மாயில விறகு பொறுக்கி வித்தவ... கொஞ்சம் எடுப்பா இருந்ததால சினிமா சான்ஸ் கிடைச்சதும் தமிழே தெரியாதது மாதிரி என்னா... உடான்ஸ் விடுறா...

சாம்பசிவம்-
இது அழகான தமிழாடா ? அடப்பேதியில ஓயிறுவியலா எல்லாப் பயலும் வாய் கூசாமல் எல்லாச் சிறுக்கிகளையும் இப்படித்தானடா சொல்றீங்க... உங்க வாயில வசம்பு வச்சு தேய்க்கணும்டா... நான் மட்டும் ஆச்சியை புடிச்சேன்


Chivas Regal சிவசம்போ-
அடப்பாவிகளா... வெள்ளைக்காரன்கிட்டே அடி வாங்கி இன்னும் தழும்போடு இருக்கிற எத்தனையோ ஐயாக்கள்மார் ஊர்ல இருக்காங்க தெரியுமாடா ? சுதந்திரத்தைப்பற்றி முடிச்சவித்த சிறுக்கிகளுக்கு என்னங்கடா தெரியும் ?

நட்பூக்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகள் – கில்லர்ஜி

சனி, ஆகஸ்ட் 12, 2017

என் நினைவுக்கூண்டு (5)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


நீ உறங்கும் இடத்துக்கு வந்தேன் உள்ளே நுழைந்தவுடன் உன்னை அடக்கம் செய்திருந்த இடத்தில் கண்ட காட்சியால் அதிர்ச்சி. ஆனாலும் ஆச்சர்யமான சந்தோஷமே...

ண்ட காட்சியால் பிரமித்து நின்றேன் காரணம் உன்னைச்சுற்றி மூன்று மயில்கள் நின்று கொண்டு இருந்தன அமரர் பூங்காவில் மயில்கள் வருவதை இன்றுதான் முதன் முறையாக காண்கிறேன் ஒருவேளை மாலையில் வீட்டின் திறந்தவெளி மையப்பகுதியில் நீ மயில்களோடு பேசிக்கொண்டு இருப்பாயே உன்னை காணவில்லை என்பதால் தேடி இங்கு வந்து விட்டனவா பக்கத்தில் போவதற்கு சற்று நின்று யோசித்தேன் காரணம் நான் வந்தால் மயில்கள் பறந்து விடலாம் இருப்பினும் என்னைக் கண்ட மயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்தன... நான் உன்னருகே வந்தேன் நேற்று வழி நெடுகிலும் வீசி எறிந்த பூமாலைகள் போக இன்னும் மலைபோல் இவ்வளவு மாலைகளா ? வனிதா உன்மீது எனக்கே சற்று பொறாமையாக இருந்தது நாளை எனக்கும் இவ்வளவு கிடைக்குமா ? ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக எனக்கு இப்படிப்பட்ட பொறாமையே வருகின்றது வேறு ஆசைகள் ஏதுமில்லை அமைதியாக உனது தலைமாட்டில் உட்கார்ந்து இருந்தேன் மயில்களைப்பற்றி யோசித்தேன் அதை புகைப்படம் எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.

வனிதா விடிந்தும், விடியாமலும் நான் இங்கு ஏன் வந்தேன் தெரியுமா ? உறவுகள் சொன்னார்கள் உன்னுடன் உனது துணிகளை கிழித்து போட்டு மூடினால் நாளை நீ கிழிந்த துணியுடன் வீட்டில் வந்து நிற்பாய் என்று ஆனால் எனது கவலை என்னவெனில் நான் பலமுறை கேட்டு இருக்கிறேன் விலை உயர்ந்த துணிகளை போட்டு மூடினால் உறவினர்கள் சென்றவுடன் வெட்டியான்கள் மீண்டும் குழிகளை தோண்டி அந்த துணிகளை எடுத்து விடுவார்கள் என்று இது உண்மையோ, பொய்யோ ஆனால் இது உண்மையானால் உன்னை இப்படி செய்வது அறிந்தால் ? யாரால்தான் இதை தாங்கி கொள்ளமுடியும் ஆகவேதான் கட்டாயமாக கிழித்து போடச் சொன்னேன் சமீபத்தில் நமது பாலு மாமா இறந்தாரே அவரையும் இங்குதான் கொண்டு வந்து எரியூட்டினோம் உறவுகள் போனபிறகு கேவலம் விறகுக்காக என்ன நடக்கும் என்பதை மறுநாள் இரண்டாம்நாள் காரியத்துக்கு வந்த பிறகு ஆதாரப்பூர்வமாக இதே தொழிலில் அனுபவப்பட்டவர் எனக்காக சொன்னார் அதிர்ந்து விட்டேன் நேற்று மாலையில் கொள்ளி வைத்தோம் இது தெரிந்து இருந்தால் இரவு பத்து மணிவரை இடுகாட்டில் நின்று முழுவதும் எரிந்த பிறகு வீட்டுக்கு சென்று இருக்கலாம் என்று மைத்துனர் வாசுவிடம் சொல்லி வருந்தினேன்.

மேலும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் இடுகாட்டில் நள்ளிரவில் நரிகள் வந்து குழிகளை தோண்டலாம் என்று நேற்றே கவனித்தேன் குழியின் ஆழம் குறைவு ஆனால் எதுவும் வந்ததற்கான அடையாளம் இல்லை மயில்கள் உனது தலைமாட்டில் மண்களை கீறியதுதான் இருந்தன மனம் நிம்மதியானது ஆகவேதான் வந்தேன். உனது தலையணையை யாரும் எடுக்க மாட்டார்கள் இருப்பினும் விளையாட்டுக்கு எடுத்தாலும் சண்டை போட்டு வாங்கி விடுவாய் உனது சிறிய தலையணையை மட்டுமே நீ உபயோகிப்பாய் இதோ கேட்பாரற்று உனது தலையணை கண்டதும் எனது விழிகள் கசிந்தன. அமைதியாக உனது தலைமாட்டில் உட்கார்ந்து இருந்தேன் சற்று தூரத்தில் விருசுழி ஆற்றில் வாகனங்கள் செல்வதற்கான சப்தம் மற்றபடி மயான அமைதி உன்மீது கிடத்திய மாலைகளை கண்டேன் இப்பொழுதுதான் பூத்தது போன்ற செழிப்பு இரவின் பனியோ... ஏனோ தெரியவில்லை தலைமாட்டில் இருந்ததால் காணொளி எடுக்க தோன்றியது எடுத்தேன். புகைப்படமும்...

சுமார் அரை மணிநேரம் அமர்ந்து இருப்பேன் சட்டென ஒரு குரல் தம்பி யாருப்பா ? நிமிர்ந்து பார்த்தேன் வெள்ளை வேட்டி-சட்டையுடன் நீண்ட வெண்தாடியுடன் ஒரு பெரியவரின் குரல்.... உன்னை காண்பித்து தங்கச்சி.... என்றேன் தலையை மெதுவாக அசைத்தவர் சரி வீட்டுக்கு போ இங்கே இருக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு போய் விட்டார். போனவுடன் எனக்கு நினைவு வந்தது யாரிவர் ? சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாமல் கல்யாணத்திற்கு போவதுபோல் வந்து இருக்கின்றாரே.... என்ற குழப்பத்தால் உடன் கிளம்பி வேகமாக கேட்டைக்கடந்து மெயின் ரோட்டைப் பார்த்தேன் இருபுறமும் யாரும் வந்ததற்கான அடையாளமில்லை வந்தவர் ஏதோவொரு வாகனத்தில் வந்திருந்தால்தான் இந்த நீண்ட சாலையை கடக்க முடியும் ? சடுதியில் காணாமல் போய் விட்டாரே... மனக்குழப்பத்தில் மீண்டும் உன்னருகே வந்து வெகுநேரம் அமர்ந்திருந்தேன். வெயில் சுள்ளென்று அடித்தது மனதார உன்னை நினைத்து இறைவனிடம் பிரார்த்தித்தேன் இறைவன் காலடியில் நீ அமைதியாக இளைப்பார வேண்டும் என்று அந்த நம்பிக்கையோடு உன்னை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வீட்டுக்கு புறப்பட்டேன் பொதுவாக இடுகாட்டுக்கு வந்தால் திரும்பி பார்க்ககூடாது என்பது மரபு அதற்காக உன்னையும் இப்படி செய்ய முடியுமா ? நான் உனது விருப்பத்துக்குறிய அண்ணனாகி விட்டேனே... பிறகு மூன்று தினங்கள் கழித்து உன்னை பார்க்க வந்தேன், மீண்டும் ஒருவாரம் கழித்து உன்னை காண வந்தேன் சமீபத்தில் பாலு மாமாவுக்காக வந்த பொழுது உன்னருகே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் தற்பொழுது உனது அடையாளங்கள் மறைந்து வருகிறது என் நெஞ்சில் மட்டும் பசுமையாய்... நீ

video
காணொளி
உனது தலைமாட்டில் அமர்ந்தபடி...

கூண்டுகள் சுழலும்...

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

கொஞ்சம் ரிலாக்ஸ்

தமிழ் வாழ்க ! தமிழ் வாழ்க ! ! தமிழ் வாழ்க ! ! !
நன்றி கன்னடத்து கிளிக்கு
உள் நாட்டானுக்கு விளங்கலையே...
செல்ஃபி மன்னர் மோடியே தோற்றார் போ !
வேற்றுமையில் ஒற்றுமை
இந்திய கலாச்சாரம் காப்பவர்கள்
ராமாயி ஆண்டாலும் ராக்காயி ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லை.
விஞ்ஞானம் வளர்ந்தாலும் நாங்களும் வளர்வோம்
மதம் மறந்தால் மனிதம் தளைக்கும்
நானென்ன சொல்வது ?
பந்தா பத்மாவதி
காவல்துறையில் இதெல்லாம் சகஜமப்பா
பெண்களின் பாதுகாவலர்கள்
கோபப்படாமல் சற்று சிந்தி நண்பா...
குப்புறத்தான் விழுந்தீக மண்ணு ஒட்டலையே...
அப்பவே சொன்னேன் M.B.B.S வேண்டாம்னு
தன்வினை தன்னைச்சுடும்
இது எங்கள் தமிழ் நாட்டில்தான்டா சாத்தியம்
கடவுளை கண்டு பிடித்தவர்கள்
அடுத்த ஜென்மத்திலும் நீதான் என் மனைவி
தியாகத்துக்கு மரியாதை
பாரதிராஜாவுக்கு சொந்தக்காரராம்
பின்னே என்ன மசுத்துக்கு லாக்கர் வாடகை ?
நேற்று எங்கள் வீட்டில் சாமி கும்பிட்டபோது எடுத்தபடம்
சபாஷ் சரியான இடத்துல சரியான ஃபோட்டோ 

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2017

மீசை मूछ మీసం മീശ ಮೀಸೆ Bigote ரவுலே Mustache شنـــب

திரு. நக்கீரன் கோபால் அவர்கள்
இதன் தொடர்பான முந்தைய பதிவு போவோமா... ஊர்கோலம்...

ந்த பாக்கிஸ்தான் பெரியவர் என்னை ஏன் முறைத்தார் ? எனது மீசைதான் எனது மீசை அவரை என்ன செய்தது ? மீசை பெரிதாக வைத்தவன் அராமி அதாவது அயோக்கியன், கெட்டவன் என்பது அரேபியர்கள், லெபனானியர்கள், எஜிப்தியர்கள், சிரியர்கள், குவைத்தியர்கள், சவூதியர்கள், பஹ்ரைனியர்கள், கத்தாரியர்கள், சூடானியர்கள், ஒமானியர்கள், யெமனியர்கள் மொத்தத்தில் அரபு மொழி பேசும் தேசத்தினரின் எண்ணம். அந்த வரிசையில் பாக்கிஸ்தான் வாலாக்களும் உண்டு. பதிலுக்கு வழக்கம் போலவே நானும் முறைத்துக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டே வந்தேன். மனங்களையும், அவர்களின் குணங்களையும் ஊடுறுவிப் பார்க்கும் அறிவுத்திறன் இவர்களுக்கு கிடையாது என்னைப்பற்றி இவர்களுக்கு க்யா மாலுமே ?

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
Thanks to Kaviyarasu Kannadasan (1978)

நான் வருடத்திற்கு ஒருமுறை மீசையின் வடிவமைப்பை மாற்றி விடவேண்டும் என்பது ஸ்காட்லாண்டிலிருந்து வந்த இரகசிய தகவல் இதை இதுவரை வெளியில் சொல்லாமல் வைத்திருக்கிறேன் என்பது நான் மட்டுமே அறிந்த உண்மை எனது அலுவலகத்தில் அரேபியர்கள் கேட்பார்கள்.

அதா ஸினப் மாஃபி ஜெயின் சவி தர்த்திப் ஸஹீர்
இந்த மீசை சரியில்லை சிறியதாக சரி செய்

இன்ஷா அல்லாஹ் புக்கரா சவி தர்த்திப்
இறைவன் நினைத்தால் நாளை சரி செய்கிறேன்

மறுநாள் கேட்பார்கள்

லேஷ் இந்தே மாஃபி சவி தர்த்திப் ?
ஏன் நீ சரி செய்யவில்லை ?

இன்ஷா அல்லாஹ் புக்கரா
இறைவன் நினைத்தால் நாளை

அம்ஸு இந்தே கூல் அதா ஸகில்
நேற்றும் இதேதான் சொன்னாய்

ஐவா, அம்ஸு கூல் புக்கரா மாஃபி அல்யூம்
ஆமா, நேற்று சொன்னது நாளை இன்றல்ல

இந்தே முஸீபத் கலம்த் மாஃபி ஜெயின்
நீ வில்லங்கம் புடிச்சவன் பேசுறது சரியில்லை

கடைசிவரை இன்று போய் நாளை வா கதைதான். அவர்கள் விட்டு விடுவார்கள் சைத்தான் தொலையட்டும் என்று ஒரு நாளா ? இரண்டு நாளா ? இருபது வருடங்கள் உருண்டோடி விட்டது எனது சமாளிப்பு அன்பின் ஜி குவைத் மன்னர் திரு.துரை செல்வராஜூ அவர்களுக்கு தெரியும் நான் மீசையை வெள்ளாமை போட்டு களை எடுத்து பாத்தி கட்டுவதற்கு பட்ட கஷ்டங்கள் அடுத்து நான் சொல்லப் போகும் ஒரே விசயம் பலமுறை சந்தித்து இருக்கிறேன் பில்டிங்கில் ஃப்ளாட்டுக்கு போவதற்கு லிப்டுக்காக கீழே நின்றிருப்பேன் அப்பொழுது என்னைப் போலவே மேலே போவதற்கு பலரும் வருவார்கள் குறிப்பாக எஜிப்தியர்கள் என்னைக் கண்டதும் ஏதோ நான் அவனது கொழுந்தியாள் கையைப் பிடித்து இழுத்து விட்டவனைப்போல் என்னை முறைப்பார்கள் லிப்ட் புறப்படும் பொழுது நான் தயாராகி விடுவேன் அடுத்து என்ன கேட்பான் ? இதற்கு பதில் என்ன சொல்ல ?

லேஷ் இந்தே ரெக்கப் ஸினப் அதா ஸகில் ?
ஏன் நீ இந்த மாதிரி மீசை வச்சுருக்கே ?

இதற்கு என்ன சொல்வது ? உனக்கென்ன என்று கேட்பதா ? இல்லை நான் ஆசைப்படுகிறேன் என்று விளக்கம் சொல்வதா ? இல்லை மறைந்து விட்ட என்னவள் ஆசைப்பட்டாள் என்று சொல்வதா ? எனக்கு அரபு பேசத்தெரியாமல் இல்லை மணிக்கணக்காய், நாட்கணக்காய் பேசுவேன் வாய் வலித்தாலும் பெயின் கில்லர் போட்டு விட்டு பேசுவேன் முதலில் இவன் யாரோ வழிப்போக்கன் (வலைப்பதிவர் திரு.வலிப்போக்கன் அல்ல) சந்திப்பே இரண்டு, அல்லது மூன்று நிமிடமே எதற்காக வாதம் ? பிறகு அவன் மதவாதம் பேசுவான் நம்ம வாயும் சும்மா இருக்காது ஏற்கனவே எனது வாய் காதுவரை இருக்கிறது என்று கலீஜ் டைம்ஸ் நாளிதழில் போட்டவங்கே.... பேசினால் சண்டை வரும் பிறகு அந்த சண்டையைப்பற்றி விரல் வலிக்க டைப்பி பதிவு எழுத வேண்டும் எதற்கு வம்பு நாமும் சமாதானப்புறாவாக பறப்போமே... முடிவு ? அவன் தனது வாழ்நாளில் இனி யாரையும் இந்தக்கேள்வி கேட்ககூடாது அப்படியொரு பதில் சொல்ல வேண்டும் அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து மாஃபி என்ற வார்த்தை சேர்த்து சொன்னேன் இல்லை கேட்டேன் என்று சொல்லல் நன்று ஆம்...

அவர்கள் கேட்டது...
லேஷ் இந்தே ரெக்கப் ஸினப் அதா ஸகில் ?
ஏன் நீ இந்த மாதிரி மீசை வச்சுருக்கே ?

நான் சொன்னது...
லேஷ் இந்தே மாஃபி ரெக்கப் ஸினப் அதா ஸகில் ?
ஏன் நீ இந்த மாதிரி மீசை வைக்கவில்லை ?

அவர்களுக்கு எப்படியிருக்கும் ? இந்த மாதிரி மீசை வைப்பது இறைகுற்றம் என ஆத்மார்த்தமாய் நம்புபவன், பிறரையும் இப்படி வைக்ககூடாது என்று சொல்பவனை நீயும் இந்த மாதிரி மீசை வை என்று சொன்னால் ? மறுமொழி இல்லாமல் அதிர்ந்து இருக்கின்றார்கள் பலர். பல தமிழ் நண்பர்கள் என்னிடம் கேட்டு இருக்கின்றார்கள் சாதாரண மயிர் அதற்காக பிரச்சனையை வளர்க்கிறாய் ? அது மயிர்தான் என்னை விட்டு போகும் பொழுது அதுவரை அதற்கும் இறுக்கிறது உயிர் நான் மீசையை வளர்த்து பராமரிப்பதைவிட கேள்விக்கணை மனிதர்களை சமாளிப்பதில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இதே எனது இந்தியாவில் எவனாவது கேட்க முடியுமா ?

மீசையை வைத்து பராமரிப்பது ஒரு கலையே இது எல்லோருக்கும் புரியாது ஏன் இந்தியாவில் வடநாட்டில் வாழ்பவனுக்கே புரியாதே... அது பரம்பரையில் ஏற்படும் இரத்தஉணர்வு எனது தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா அதாவது புரியும்படி ஜொள்ளு’’கிறேன்.

எனது சேயோனார் தெய்வத்திரு. உமையன் ஆச்சாரியார்
எனது ஓட்டனார் தெய்வத்திரு. உ. வெள்ளையன் ஆச்சாரியார்
எனது பூட்டனார் தெய்வத்திரு. வெ. முத்து மரையான் ஆச்சாரி
எனது பாட்டனார் தெய்வத்திரு. மு. தென்கரை முத்து ஆச்சாரி
எனது தாத்தனார் தெய்வத்திரு. தெ. பூவலிங்கம் ஆசாரி
எனது தகப்பனார் தெய்வத்திரு. பூ. கணபதி ஆசாரி

இவர்கள் எல்லோரும் மீசை கட்டி வாழ்ந்தவர்கள் அவர்கள் வழியில் வந்த நாந்தேன் கில்லர்ஜி எனக்கு மட்டும் அந்த ஆசைகளும், மீசை உணர்வுகளும் வராதா ? எனது மகன் தமிழ்வாணனுக்கே வந்து விட்டதே மீசைக்கு எதிராக யூ.ஏ.ஈ படையென்ன ? யூ.எஸ்.ஏ. படைகளே வந்தாலும் எதிர்ப்பேன்.

ஜாதியை சுட்டிக்காட்டி இருப்பதாக நினைக்க வேண்டாம் வாழ்ந்து முடிந்த எமது முன்னோர்களை பெயரோடு மட்டும் நிறுத்தினால் அவர்களை நான் அவமதித்ததாக ஆகிவிடும் என்று நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் எமக்கு தந்தை போன்றவர்களின் கருத்துகளை ஏற்று எழுத வேண்டிய சூழ்நிலை நான் அனைவரையும் சமாளிப்பது கடினமான காரியம் காரணம் எனது தந்தையாரோடு பிறந்தவர்கள் பதினாறு நபர்கள். அதாவது எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் வாரிசுகள் இருப்பினும் ஜாதி அழிந்து கொண்டு வந்ததை எனது வார்த்தைகளில் கொண்டு வந்து இருக்கிறேன். எனது தந்தையாரோடு முடித்து விட்டேன் இனிமேல் ஜாதி வரக்கூடாது எம்மைப் பொருத்தவரை ஜாதிகள் இல்லையடி பாப்பா ஆனால் இப்பொழுதும் இருக்குதடி டாப்பா.

ஆகவே முகத்துக்கொரு மீசை வளர்ப்போம். இந்த வாசகம் எமது சந்ததியினருக்கு மற்றவர்களும் ஏற்றுக்கொண்டால் சந்தோஷமே...

திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள்
திரு. அடோல்ஃப் ஹிட்லர் அவர்கள்
திரு. வீரப்பன் அவர்கள்
திரு. மொக்கைராசு அவர்கள்
திரு. கில்லர்ஜி அவர்கள்
திரு. ரிச்சர்ட் ஸ்டீவன் அவர்கள்

பிற மொழிகளில் மீசையின் பெயர்
 (Tamil) மீசை
मूछ (Hindi) மூஜ்
మీసం (Telugu) மீசம்
മീശ (Malayalam) மீச
ಮೀಸೆ (Kannada) மீசே
(Arabic) ஸினப்شنـــب
(Sri Lanka) ரவுலே
Bigote (Philippine) பிகோட்டி
Mustache (English) முஸ்டாஜ்

தேவகோட்டை கில்லர்ஜி

சிவாதாமஸ்அலி-
என்னங்கையா... இது பழனி சித்த வைத்தியசாலை மாதிரி இருக்கு.

Chivas Regal சிவசம்போ-
பள்ளிக்கூடத்துல சேர்க்கும் பொழுது என்ன ஜாதினு கேட்டுப்புட்டு மறுநாள் ஜாதிகள் இல்லையடி பாப்பானு பாடம் நடத்துன கதைதான்.

சாம்பசிவம்-
குடிகார மட்டையா இருந்தாலும் கேள்வி நல்லாத்தான் கேட்கிறே...
Related Posts Plugin for WordPress, Blogger...