தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மார்ச் 30, 2015

தமிழ்ச்சங்கு


1993 மார்ச் 30
இனையான்குடி மருத்துவர் திருமதி. ரஹிமா உஸ்மான் மருத்துவமனை.

எனது வாழ்வில் அன்றுதான் பெண்களின் பிரசவ வேதனையினை உணர்வுப்பூர்வமாக ஒருநாள் முழுவதும் உணர்ந்து கொண்ட நாள். செவிலித்தாய் வந்து கேட்டார்... இங்கே, கலைச்செல்வியோட கணவர் யாரு ? நான்தான் இதில் கையெழுத்து போடுங்கள் போட்டேன் சிறிது நேரத்தில்... இங்கே, கலைச்செல்வியோட கணவர்  யாரு ? இப்பத்தானே போட்டேன். நீங்க ? எந்த கலைச்செல்வியோட கணவர்... தேவகோட்டை கலைச்செல்வி. அப்ப, நீங்க ? நான் சூராணம் கலைச்செல்வியோட கணவர் இன்னொருவர் வந்தார் உங்க பேரு ? சண்முகம். அப்ப இதில் நீங்க கையெழுத்து போடுங்க, ஒரு நிமிசம் இது யாருடைய பேப்பர் ? தேவகோட்டை கலைச்செல்வியுடையது அப்ப நான்தானே கையெழுத்து போடணும் நீங்கதான் போட்டீங்களே... அது எனது மனைவியுடைய பேப்பர் இல்லையே... அதனால் என்ன ? அவருடைய மனைவி பேப்பரில் நீங்க கையெழுத்து போட்டீங்க இது சும்மா சம்பிரதாயத்துக்காக வாங்குறோம். இது அவசியமில்லாதது இதை நான் ஒத்துக்கிற முடியாது அந்தப்பேப்பரை கிழிச்சுப் போடுங்க, இதில நான்தான் கையெழுத்து போடுவேன். நான் சடக்கென அந்தப்பேப்பரை பிடுங்கி கையெழுத்து இட்டுக்கொடுத்தேன் அவள் என்னை நெற்றிக்கண்ணின்றி சுடுவதுபோல் பார்க்க, இவர் (சண்முகம்) எனது பேப்பர் எனகேட்க, அவள் வெடுக்கென அதெல்லாம் வேண்டாமென சொல்லி விட்டு சடக்கென உள்ளே நுழைந்து விட்டாள் இவர் என்னைப்பார்க்க, எனக்கு பாவமாக போய் விட்டது பக்கத்தில் நின்றிருந்த எனது மனைவியின் தாய்-தந்தையினரின் பார்வை சொன்னது இவன் எங்கே போனாலும் வில்லங்கம்தானா ? நான் எனது உரிமையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் இதனாலேயே என்னை பலருக்கும் பிடிப்பதில்லை அதைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை என் மனசாட்சியே எனக்கு இறைவன் இதுவே எமது கொள்கை.

சிறிது நேரத்தில் வெளியே வந்த செவிலித்தாய் இரண்டு பேருக்குமே ....ண் குழந்தை பிறந்ததாக சொல்ல, நான் அவரிடம் சொன்னேன் உங்கள் மனைவியுடைய பெயர் கலைச்செல்வி, எனது மனைவியின் பெயரும் கலைச்செல்வி இரண்டு பேருக்குமே ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரம் என்றுகூட சொல்லலாம் இரண்டும் ....ண் குழந்தை ஆகவே, ஒரே பெயர் வைப்போமா ? என்ன பெயர்  ? சொன்னேன் என்னோட மனைவிக்கிட்டே கேட்கணும்... நான் வச்சிட்டேன் என்னங்க குழந்தை இப்பத்தானே பிறந்துச்சு புண்ணியானம் செய்து ஐயர் வந்து பெயர் வைக்கவேண்டாமா ? புண்ணியம் செய்ததாலேதானே இந்தக்குழந்தை பிறந்தது எனக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்க ஐயர் யாரு ? சரிங்க உடனே எப்படி பெயர் வச்சீங்க ? நான் பெயர் வச்சு இருபது வருஷமாச்சே... என்னை ஒரு மாதிரியாக பார்த்தவர் நகர்ந்து கொண்டார், அதன் பிறகு நான் அவர்களை சந்திக்கவே இல்லை நான் சொன்ன பெயர் வைத்திருக்க மாட்டார்கள் என்பது எமது கருத்து.

எனது மனைவி தெய்வத்திருமதி. கலைச்செல்வி கில்லர்ஜி காலை 06.00 மணிக்கு தொடங்கிய பிரசவ வலி மாலை 06.00 மணிக்குத்தான் எங்கள் அன்புச்செல்வம் பிறந்தது அறுவை சிகிச்சை இல்லை சுகப்பிரசவம் என பெருமையாக வெளியில் சொல்லிக் கொண்டோம் ஆனால் அன்று முழுவதும் எனது மனைவியோடு நானும், மனைவியுடைய அம்மா, அப்பா, சின்னம்மாவும் பட்ட வேதனை இருக்கிறதே சொல்லிமாளாது அன்றைய முதல் உணவு எங்களுக்கு இரவு 08.00 மணி. அன்று மட்டும் காலையிலிருந்து... சுமார் 12 பெண்களுக்கு குழந்தை பிறந்திருக்கும் எனது மனைவியின் அலறல் சத்தம் மட்டுமில்லை, பிற பெண்களின் சத்தம் கேட்டு எதற்க்கும் கலங்காத நான் கலங்கியதும் அன்றுதான் அந்தப்பெண்களின் அலறல் சத்தத்தோடு எனது தாயின் முகம் நிழலாடியது நமது தாயும் நம்மைப்பெற இப்படித்தானே கஷ்டப்பட்டு இருப்பார்கள் இயல்பாகவே எனது தாயுடன் பாசமாக இருக்கும் நான் அன்றுமுதல் தாயின் அருமையை கூடுதலாக அறிந்து கொண்டேன். நாட்டில் அறியாமைவாதிகள் யார், யாரையோ தாய் எனச்சொல்கிறார்கள் என்னைப்பொருத்தவரை நடமாடும் தெய்வம் என்றால் ? அது அவனவனைப்பெற்ற தாயே தவிற வேறில்லை இது தவறென்று எந்த மானிடனோ, மதக்கொள்கைகளோ, சொன்னால் அதை ஏற்றுக்கொள்வதில் எமக்கு கசப்புணர்வு உண்டு. ஒவ்வொரு மனிதனும் தாய்ப்பாசத்தை உணர்ந்து பார்க்கும் ஒரு சந்தப்பத்தை இறைவன் மனைவி மூலமாகவும் கொடுக்கின்றான் என்பதற்க்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

குழந்தை பிறந்தவுடன் சீக்கிரம் போய் பேபி சோப், பவுடர், அப்படியே பாத்திரக்கடையில் ஒரு சிறிய சங்கும் வாங்கி வாருங்கள் என்று சொன்னார்கள் வெளியே போய் மருந்தகத்தில் சோப்பும், பாத்திரக்கடையில் சில்வர் சங்கும் பத்து நிமிஷத்தில் வாங்கி வந்து கொடுத்தேன் சிறிது நேரத்தில் எனக்கு தகப்பன் அந்தஸ்து கொடுத்த என்னவள் மயக்கம் தெளிந்து விழிக்க... 

(பலரும் தன்னை ஆண்மகன் என மார்தட்டிக் கொள்கின்றான் அந்த பெயரை இந்த சமூகத்திற்க்கு முழுமையாக அங்கீகாரம் கொடுப்பவள் அவனது அங்கீகாரம் பெற்ற அவனது மனைவியன்றி வேறு யாருமல்ல சிறிது தாமதமானாலும் ‘’மலடி’’ எனச்சொல்லி விட்டு மறுமணத்திக்கு தயாராகின்றான் ஆண்மகன் தானும்கூட ‘’மலடன்’’ ஆக இருக்கலாமே 80தை சிந்திக்காமல் எனது வாழ்வில் பலரையும் நான் கண்டதுண்டு) 

அவளது முகம் மறுபிறவி எடுத்து வந்திருக்கின்றோம் 80தை எனச்சொல்லாமல் சொல்லியது எல்லோரும் சுற்றி நின்று கொண்டிருக்க... குழந்தைக்கு சங்கில் ஊற்றி ஏதோ கொடுத்தார்கள் அந்த சங்கை எடுத்து பார்த்த என்னவளின் முகத்தில் பிரகாசத்தைக் கண்டேன் சங்கில் எழுதியிருந்தது ‘’தமிழ்’’ ஆம் பாத்திரக்கடையில் வாங்கிய அந்த அவசரத்திலும் பெயர் வெட்டச் சொன்னேன்.


எங்கள் வம்சவிருத்தியை தளைக்க வந்த அந்த எங்கள் அன்புச்செல்வம் தமிழ்வாணன் இன்று (30.03.2015) 23 வது பிறந்தநாள் அன்பு உள்ளங்களே... நீங்களும் வாழ்தலாமே...  
ஸ்வீட் எடுத்துக்கொள்ளுங்கள்.
காணொளி.
வந்தீர்கள் சாப்பிடுங்கள், நேரமில்லையெனில் எடுத்துக்கொண்டு போங்கள்.
 
குறிப்பு - அன்று இன்னொரு சம்பவம் எனக்கும், மற்றொரு நபருக்கும் இரவு 8 மணிக்கு மேல் 7 ½ ஆகியது அதை அடுத்தொரு பதிவில் சொல்கிறேன்.


87 கருத்துகள்:

 1. மீண்டும் வருகிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டு(ம்) வாங்க நண்பரே 24 மணி நேரமும் உங்களுக்காகவே திறந்திருக்கும்.

   நீக்கு
 2. கையெழுத்தை நான் தான் போடுவேன் என்று சொன்னது மிகச் சரியே. பிரசவ வலி கடினமாக உழைப்பவர்களுக்கு சற்று குறைவாக இருக்கும் என நினைக்கிறேன். இரண்டாவது, மூன்றாவது குழந்தைகளுக்கு இருக்கவே இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பிரசவவலி உழைப்பவர்களுக்கு சுலபம்தான் அதற்காக இரண்டாவது, மூன்றாவது இருக்காது என்று சொல்லாதீர்கள்.

   நீக்கு
 3. வாழ்க வாழ்கவே தமிழும்
  தமிழ்செல்வத்தை பெற்றவரும்
  கொஞ்சம் பொறாமையா இருக்கு
  தாயன்பு என்பது தனித்தன்மை வாய்ந்தது
  அதையும் சேர்த்த தரும் எம் அன்பு கில்லார்ஜியின்
  தந்தைப்பாசம் கண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அன்பே.... தனது குழந்தை தனக்குத்தான் பிறந்தது என்ற நம்பிக்கை உள்ளவன் குழந்தைகளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்கமாட்டான் 80 எமது கருத்து.

   நீக்கு
 4. தமிழ்வாணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் இன்னும் பல பல பிறந்த நாட்கள் காண வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது குழந்தைக்கு ஐயாவின் ஆசிகள் கிடைத்தமைக்கு நன்றி

   நீக்கு
 5. வணக்கம்
  ஜி
  கையெழுத்து தலை எழுதை மாற்றி விடும்.. என்பார்கள் எதிலும் கவனம் தேவை... அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
  தங்களின் மகனுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள் நீண்ட ஆயுள் பெற்று என்றென்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். த.ம6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ரூபன், நான் எனது உரிமையை எப்பொழுதும் விட்டுக்கொடுத்ததில்லை, மகனை வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 6. தங்களின் அன்பு மகனுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது மகனை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே....

   நீக்கு
 7. மனசாட்சியே இறைவன்...

  தமிழ்வாணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி எமது கொள்கை அதுவே... வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 8. தமிழ்வாணனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....!

  பையன் ஜம்மின்னு பார்க்க ஹீரோ மாதிரியே நிற்கிறார். ஹா ஹா என் கண்ணே பட்டிடும் போல இருக்கே. யாரங்கே சுத்திப் போடுங்கப்பா பையனுக்கு.

  நல்லன எல்லாம் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன் ...!
  என்ன cake ஐ வெட்டி சாப்பிடணுமா ஏன் வெட்டித் தந்தா குறைஞ்சு போய் விடுவீங்களா என்ன இது கூட பையனுக்காக செய்யக் கூடாதா ஹா ஹா ....
  சாப்பாடு பிரமாதம் ஆனால் எதோ ஒன்றுக்கு உப்பு குறையுதே. சரிசரி பரவாய் இல்லை உப்பு எனக்கு ஆகாதுப்பா ஆகையால ok .
  வாழ்த்துக்கள் ஜி ...!மறுபடி காண்பதில் மகிழ்ச்சியே ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க வாழ்த்துக்களை வழங்கியமைக்கு நன்றி என்ன ? சுத்தி போடணும் கம்ப்யூட்டரையா ?
   கேக்’’கும் கொடுத்து கத்தியும், வாங்கி வச்சிருக்கேன் வெட்டிக்கிறவேண்டியதுதானே...
   விருந்துனா கொஞ்சம் அப்படியும், இப்படியும் இருக்கத்தான் செய்யும்.

   நீக்கு
 9. தமிழ்வாணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  என் மனைவியின் பிரசவத்துக்கும் நான் உடனிருந்திருக்கிறேன். சுகப்பிரசவம் என்றாலும் மனைவியின் வலியும் வேதனையும் தாங்க முடியாததாக இருந்தது. தங்கள் பதிவு அந்த நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டு வந்து விட்டது.

  பிரசவம் என்றதும் இன்னொரு சம்பவமும் எனக்கு நினைவுக்கு வருகிறது. கொடைக்கானல் மலையில் ஒரு பழங்குடிகள் கிராமத்திற்கு செண்டிருந்தேன். நான் போன சமயம் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருந்தது. அதற்கென்று ஒரு சிறிய குடிசை அங்கிருந்தது.

  அந்த குடிசைக்குள் யார் உதவியும் இல்லாமல் தன்னந்தனியாக சென்ற அந்தப் பெண் சிறிது நேரத்தில் குழந்தையை பெற்று கையேடு கொண்டு வந்து விட்டார். தொப்புள் கொடியை அங்கிருக்கும் கூர்மையான கல்லின் மூலம் துண்டித்துக் கொண்டார்.

  இதில் இன்னொரு ஆச்சரியம் என்வென்றால் அந்த பெண்கள் நின்ற நிலையில் மிக சுலபமாக பிள்ளை பெறுகிறார்கள். அது ஒரு ஆச்சரியமான நிகழ்வு.

  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! நண்பரே! பழங்குடி மக்கள் மட்டுமல்ல, சில கிராமத்து மக்கள், மிகவும் ஒதுங்கி, ஒரு சில வீடுகளே உள்ள கிராமங்களில் கூட பெண்கள் சிலர் நின்று கொண்டு குழந்தை பெற்று, நீங்கள் சொல்லி இருப்பது போல்....தொப்புள் கொடி....வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கூட குழந்தை பிறந்து, உடன் பாலூட்டி விட்டு மீண்டும் வயலில் வேலை செய்யும் பெண்களையும் பார்த்திருக்கின்றோம் நண்பரே! காட்டிற்குள் சுள்ளி பொருக்கச் செல்லும் பெண்...இப்படி...இதை எனது நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கின்றேன். நாம் தான் இன்ஃபெக்ஷன் அது இது என்று சொல்லுகின்றோம்......அந்தக் குழந்தைகளும் நன்றாகத்தான் இருக்கின்றார்கள்...

   நீக்கு
  2. வருக நண்பரே வாழ்த்தியமைக்கு நன்றி.
   அன்றைய பெண்கள்
   அம்மி அரைத்தார்கள்,
   உரல் நெல் குத்தினார்கள்,
   ஊதாங்குழலால் ஊதி சமையல் செய்தார்கள்
   மூச்சுக்குழாய் சீராக இயங்கியது
   துணி துவைத்தார்கள்,
   விறகு வெட்டினார்கள்,
   காலையில் குனிந்து கோலம் போட்டார்கள்,
   கணவனுக்கு குனிந்து நின்று சோறு போட்டார்கள்,
   வயற்காட்டில் வேலை செய்தார்கள்,
   இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் இவையெல்லாம் காணாமல் போனது.
   குக்கரில் 15 நிமிடத்தில் சோறு வடிக்கிறார்கள்.
   கிரைண்டரில் மாவு ஆட்டுகிறார்கள்,
   மிக்ஸியில் மசாலா அரைக்கின்றார்கள்,
   நின்று கொண்டு சோறு போடுகிறார்கள்,
   ஷோபாவில் விழுந்து கிடக்கின்றார்கள்,

   ஆனால் அந்த மலைவாசிகள் இன்றுவரை விஞ்ஞான வளர்ச்சியை காணவில்லை ஆகவே கூடுதல் காலம் வாழவும் செய்கிறார்கள்.

   நீக்கு
 10. மனைவியின் மீதான பாசம், தாயின் மீதான நேசம், மகனின் மீதான அன்பு என அனைத்தையும் ஒருசேரப் பகிர்ந்து எங்களையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஆக்கிவிட்டீர்கள் உங்கள் எழுத்து மூலமாக. தங்கள் மகனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும், விரிவுரையான கருத்துரைக்கும் எமது மகனை வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 11. தமிழ்வாணன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

  எனது நினைவுகளை மீட்டிய பகிர்வு. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 12. மனசாட்சி நேர்மையை கடைபிடிக்கும் வழி.வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 13. சகோதரர் தமிழ்வாணன் அவர்களுக்கு இனிமையான பிறந்தநாள் வாழ்த்துகள் .

  நான் சிறுவயதிலேயே பிரசவ வேதனையை உடனிருந்து பார்த்திருக்கிறேன் . கிட்டத்தட்ட என்னுடைய பத்தாவது வயதில் , செவிலியாக இருந்த என் பாட்டியின் மருத்துவமனையில் , நான் சென்றிருந்தபோது நிகழ்ந்தது . அன்றிலிருந்தே பெண்கள் மீதான என் எண்ணம் இதுவாய்த்தானிருந்தது . கடவுள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே, தாயை இறைவனுடன் ஒப்பிடுவதில் தவறில்லை ஆனால் தந்தை இதன் வட்டத்திற்க்குள் வரமுடியாது.

   நீக்கு
 14. தங்களின் அன்பு மகனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  அம்மாவுக்கு இணையாக எதுவுமே இல்லை. பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் மாதிரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மகனை வாழ்த்தியமைக்கு நன்றி
   உண்மையான வார்த்தை தாய்க்கு இணையில்லை இவ்வுலகில்.

   நீக்கு
 15. தங்கள் மகன் தமிழ்வாணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 16. தாய்பாசத்தை மிஞ்சிய உங்களது தந்தைப் பாசம் வியக்க வைக்கிறது. தமிழ்வாணனுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மாது தாயின் பாசத்திற்க்கு இணையாக ஒருக்காலும் தந்தை வரமுடியாது
   மகனை வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 17. தங்களின் வாரிசு தமிழ்வாணன் அவர்களுக்கு.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! நண்பரே....வாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 18. அன்புள்ள ஜி,


  இன்று போல் என்றும் வாழ்க...!  1993 மார்ச் 30- அன்று...

  தமிழ்ச் சங்கில் பால்குடித்த

  தமிழ்ச் சங்கமே!

  தமிழ்வாணன் ஜி...!

  2015 மார்ச் 30- இன்று

  பிறந்தாள் காணும் தமிழுக்கு...

  தமிழனின் உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...!

  தாயின் வலியை உணரவைத்த...

  தந்தைக்கு...

  ‘தலைவாழை இலைபோட்டு விருந்து வைப்பேன்...

  தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்....’

  அறு விருந்து வைப்பீர்கள் என்றால்...

  சட்டைப் பையில் வைத்துக் கொண்டீரே...!

  ஆமாம்... பிறந்தநாள் விருந்து எப்போ?


  எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்!

  நன்றி.

  த.ம.14.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே...
   கவிதைபோலவே வாழ்த்துபா தந்தமைக்கு நன்றி
   அவரைப்போலவே தாங்களும் எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொள்ளலாம்.
   அதற்காகத்தான் கேக் இருக்கிறது.

   நீக்கு
 19. தமிழ்வாணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....சிறப்புடன் என்றும் வாழ வாழ்த்துகிறேன்.....பிரசவவலி...நினைவுகள் மீண்டும் வந்து போனது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மனம் நிறைந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 20. அப்படியானால்!?...

  சின்ன ஜி!...

  பல்லாண்டு பல்லாண்டு பல்வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சின்னாசிதான் ஜி
   பல்லாண்டு காலம் வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 21. மாப்பிள்ளைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லோரும் இப்படியே இருந்தால்,,,,,,,,,,,,,,,, தங்கள் மனசாட்சிபடியே இருங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மனம் திறந்து வாழ்த்தியமைக்கு நன்றி
   எல்லோரும் இப்படி இருந்தால்....
   நாட்டில்
   போலீஸ் ஸ்டேஷன் தேவையில்லை.
   நீதி மன்றங்கள் இருக்காது.
   வயற்காட்டில் வரப்புகளின் அளவுகள் குறையாது சுஸபமாக நடந்து போகலாம் மூன்று போகம் விளையும், மழை மும்மாரி பொழியும். உணவுப்பஞ்சம் இருக்காது, பிச்சைக்காரர்கள் இருக்கமாட்டார்கள்.

   நீக்கு
 22. தமிழ் சங்கில் பால் குடித்த தமிழ்வாணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அவர் தனது வாழ்வில் பல நல்ல நிலைகளை அடையவும், நல்ல ஒரு மனிதனாக இருக்கவும் வாழ்த்துகக்ள்! இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்...வாழ்த்துக்கள் தமிழ்வாணன்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஒரு நல்ல மனிதனாக வாழ வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி காரணம் நான் எதிர்பார்ப்பது அது மட்டும்தான் மற்றவைகளை தேடிக்கொடுத்து விட்டேன்.

   நீக்கு
 23. படம், வீடியோ போட்டு ஏமாத்திப்புட்டீங்களே! ஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரு ஏமாத்தினா ? வேண்டியதை சாப்பிடுங்க, இல்லைனா எடுத்துட்டுப்போங்க.

   நீக்கு
 24. நலம்வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்...!
  “தமிழ்“ கூறும் பல்லாண்டு ‘உம்‘ வார்த்தைகள்!
  நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே இதுதான் கவிஞர் 80 பாடலை இப்புறம் மாற்றி விட்டீங்களே.... ஸூப்பர்.

   நீக்கு
 25. கையை - காலைக் கழுவி விட்டு சாப்பிட வந்தால் -
  சாப்பாட்டைக் கண்ணில் காட்டியதோடு -
  இலையை மடக்கிச் சுருட்டி சட்டைப் பையில் வைத்துக் கொண்டாயிற்று..

  அதற்கப்புறம் எதற்கு விரல் வித்தை!?..

  அன்னதானம் செஞ்சா ரொம்ப நல்லது .. ஜி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   //பந்திக்கு முந்து படைக்கு பிந்து// அப்படினு குவைத் பழமொழி சும்மாவா சொன்னாங்க... முந்துனவங்க சுருட்டிட்டாங்க பரவாயில்லை அடுத்தமுறை சந்திக்கும் பொழுது படாபட் விருந்து வச்சுடுவோம்.

   நீக்கு
 26. தங்கள் மகன் தமிழ்வாணன் வாழ்க!
  தங்கள் தாய்ப்பற்றும் தமிழ்ப்பற்றும் வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலவர் ஐயாவின் வாழ்த்து பலிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

   நீக்கு
 27. தமிழ் வாணனுக்கு பிறந்த வாழ்த்துக்கள் .....
  விருந்து சாப்பிட நான் கையை வைக்க முயன்றேன் ,ஆனால் அவர் மடக்கிப் பறித்துக் கொண்டதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை ,யாருக்கு எது எது பிடிக்குமோ ,அதை எடுத்துக் கொள்வதில் தவறில்லையே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வாழ்த்துகளுக்கு நன்றி ஜி நீங்க கேக் K ஒரு வெட்டு வெட்டி இருக்கலாமே ?

   நீக்கு
 28. எனது வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க அண்ணா...
  உரிமையை விடாமல் கையெழுத்து இட்டமை சரிதான்...

  பதிலளிநீக்கு
 29. சங்கெடுத்து தந்தாயே தமிழ் அமுதை
  தங்க மகன் தமிழ் வாணன் வருகவென்று!
  அங்கத்தில் ஆருயிரை பதித்த உன்பாவை
  மங்காத சுடரொளியாய் வாழ்த்துவாரே!

  புதுவை வேலு

  இனிய அகவை காணும் அன்பின்
  தமிழ் வாணனுக்கு
  வாழ்த்துகள்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புல்லாங்குழலின்சையோடு வாழ்த்தியமைக்கு நன்றி நண்பா.

   நீக்கு
 30. பதில்கள்
  1. திருப்பூராரின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு.
   வாழ்த்தி வாக்கும் இட்டமைக்கு நன்றி

   நீக்கு
 31. தமிழ்வாணன்அவர்களுக்கு,என்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 32. நல்லது அந்த 8மணி ஏழரையை பற்றி . தெரிந்து கொள்ள ...காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 33. உங்கள் அன்பு மகனுக்கு எங்கள் அன்பு வாழ்த்துகளும். இன்றுதான் தாய் பற்றிய வாட்சப் வீடியோ ஒன்றும் பார்த்து நெகிழ்ந்திருந்தேன். உங்கள் பதிவுகளை நீங்கள் ப்ளஸ்ஸில் பகிர்வது இல்லையோ? ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷனும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வாழ்த்துக்கு நன்றி ப்ளஸில் வருகிறதே....

   நீக்கு
 34. தாய்மையை போற்றும் ஓர் நல்ல பதிவு. மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகனை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 35. தமிழ்வாணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! அருமையான பதிவு சகோ.
  12 மணிநேர பிரசவ வலி நினைவு வந்தது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எமது செல்வத்தை வாழ்த்தியமைக்கு நன்றி தங்களின் நினைவாற்றளுக்கும் நன்றி.

   நீக்கு
 36. பதில்கள்
  1. 24 மணி நேரத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 37. பிரசவ வலி பெண்களுக்கு மறு ஜென்மம் மாதிரி! ஆனால் அதை அவள் விரும்பியே ஏற்றுக்கொள்கிறாள்! ஆனால் இன்றைய உலகில் மிக‌வும் சிலர் தான் அந்த வலியை உணர்ந்து கொள்கிறார்க‌ள். அந்த வலி புரிந்து உங்கள் இல்லத்து பெண்களை நீங்கள் கெள‌ரவித்த விதத்திற்கு நான் தலை வணங்குகிறேன்!

  நல்லதொரு தந்தையைப்பெற்ற‌ உங்கள் மகனின் பிறந்த நாளிற்கு இனிய நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அழகாக தெளிவு படுத்தி கருத்திட்டமைக்கும் எனது மகனை வாழ்த்தியமைக்கும் மனமார்ந்த நன்றி.

   நீக்கு
 38. பெயரில்லா4/02/2015 4:10 PM

  Happy Birthday Thamizhvanan!.

  பதிலளிநீக்கு
 39. அழகிய அற்புதமான பெயர் தமிழ் வாழிய பல்லாண்டு. தாயையும் தாரத்தையும் போற்றிய தங்களுக்கு நன்றி. காணொளி சிறப்பு. ஆனாலும் இப்படியெல்லாம்ஏமாற்றக்கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் எமது மகனை வாழ்த்தியமைக்கும் நன்றி சகோ.
   பந்திக்கு முந்து படைக்கு பிந்து அப்பளம் னு, சும்மாவா சொன்னாங்க...

   தமிழ் மணத்தில் கால் சதம் அடிக்க வைத்தமைக்கு ஸ்பெஷல் நன்றி சகோ.

   நீக்கு
 40. முதலில் தாமதத்துக் கு மன்னிக்கவும் இருந்தால் என்ன. எங்கள் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு மகனுக்கு. மனைவி பிரசவ லலியால் துடிப்பதை நானும் கண்டவன் அதுவே எங்களுக்கு அந்த இரண்டாவது மகனோடு குழந்தைச் செல்வம் போதும் எனத் தீர்மானிக்க வைத்தது. நான் மிகச் சிறிய வயதிலேயே தாயை இழந்தவன். அனாலும் என் மனைவியிடமும் பிற பெண்களிடமும் தாய்ன்மையைக் கண்டவன். என் பதிவுகளில் பல இடங்களில் எழுதி இருக்கிறேன். பின்னூட்டங்களில் பிள்ளை பேறு பற்றி பல கருத்துக்கள் கண்டேன் எதையும் சொல்வது எளிது. அனுபவிப்பது கொடுமை வைர முத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் நூலில் ஒரு பெண்யார் உதவியுமின்றி தானாகவே பிரசவம் பார்ப்பதை நுணுக்கமாகஎழுதி இருப்பார். ஒரு கொசுறுச் செய்தி. என் இரண்டாம் மகனின் பிரசவத்துக்குவலி எடுத்தபின் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே கூட்டிக் கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்த ஓரிரு மணிக்குள் சுகப் பிரசவம் ஆயிற்று. ignorance is bliss என்று பதிவு எழுதி இருந்தேன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 41. மன்னிப்பெல்லாம் எதற்க்கு ஐயா தாங்கள் வந்து எனது மகனை வாழ்த்தியதே சந்தோஷம் தாய்மையைப்பற்றி நல்ல விளக்கவுரை தந்தீர்கள். தாங்கள் சொன்ன நடை பயிற்சி நல்லது ஆனால் இன்றைய பெண்கள் ஏற்றுக்கொள்வதில்லை. வருகைக்கு மனமார்ந்த நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் சகோதரரே!

  தாமதமாக வந்தாலும் நிதானமாக தங்கள் பதிவினையும், அதற்கு வந்திருந்த கருத்துரைகளையும் படித்து ரசித்தேன். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தவப்பேறு! பத்து மாதங்கள் தவமிருந்து அந்த குழந்தையின் முகம் பார்க்கும் போது தன் தவிப்புகளை மறக்கும் அந்த இனிமையான பொழுதை தவத்திற்கு வரமாக கடவுள் ஒவ்வொரு பெண்ணிற்கும் தந்திருக்கிறான்.

  தமிழ் மீது தாங்கள் வைத்திருக்கும் பற்றிற்கும் என் பணிவான வணக்கங்கள்.

  தங்கள் மகன் வாழ்வில் அனைத்தும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ இறைவனை மனதாற பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன் எனும் என் வாழ்த்துக்களையும் அவருக்குச் சொல்லவும்.(தாமதமானலும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.) நன்றி

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வருகையும் மனமார்ந்த வாழ்த்துகளும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு