புகைப்படத்தை சொடுக்கி பார்க்கவும்.
ஜெர்மனியிலிருந்து.... ஸ்விட்சர்லாண்டுக்கு
ரயிலில் பயணம் போனேன் அந்தப்பெட்டியில் நான் மட்டுமே லிங்கென் என்ற இடத்தில்
இரண்டு கல்லூரி மாணவர்கள் ஏறினார்கள் புன்னகையை வீசி சிறிது பேசியதும் ஸ்விஸ்
போகும்வரை தொடர்ந்தது நட்பு. ஒருவனது பெயர் ராபர்ட் மற்றவன் பெயர் டேனியல் எனது
நாடு, வந்ததின் நோக்கம், போகுமிடம் அனைத்தும் பகிர்ந்து கொண்டதும் பேச்சில்
சுவாரஸ்யம் தொடங்கியது இந்தியா என்றதும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியுடன்
தாஜ்மஹாலைப்பற்றி கேட்டார்கள் நான் சொன்னேன் அதன் எதிரில்தான் எனது வீடு.
காலையில்
எழுந்ததும் தாஜ்மஹாலைப் பார்ப்பதுதான் எனது முதல் வேளை சட்டென எழுந்து எனது
கையைப்பிடித்து குலுக்கி நீ அதிர்ஷ்டக்காரன் என்றார்கள், மேலும் வாழ்வில் ஒரு முறையேனும்
தாஜ்மஹால் காண வருவோம் என்றார்கள், கண்டிப்பாக வாருங்கள் வரவேற்பேன் என்றேன் டெல்லி
என்றால் உனது தாய்மொழி ஹிந்திதானே ? எனக்கு ஆச்சர்யமாகி தயங்கினாலும் ஆம் என்றேன், அவர்களுடன் எனக்கு பேச
விருப்பம் கொண்டதற்க்கு முக்கிய காரணம் அவர்கள் இருவருமே மொழி ஆர்வலர்களாக
இருந்தார்கள் சைனா மொழிகூட தெரியும் என்றும் இருவரும் உலக அளவில் மொழிகளைக்
குறித்து ஆய்வில் இருப்பதாகவும் சொன்னார்கள், இந்தியாவில் மொத்தம் எத்தனை ? மொழிகள் இருக்கின்றது இதில் அங்கீகாரம்
பெற்றவை எத்தனை ? அனைத்தும் கேட்டார்கள்.
(இந்தியாவில் 1652 மொழிகளும், இதில் 18 மொழிகள் அங்கீகாரம் பெற்றவை என்றும் எனது செல்பேசியில்
நான் குறித்து வைத்திருந்த விபரங்களைப்பார்த்து)
சொன்னேன் ஹிந்தியில்
நிறைய வார்த்தைகள் சொன்னார்கள் நிறைய வார்த்தைகள் கேட்டுக் கொண்டதோடு உடனே
குறித்துக் கொண்டார்கள் விடுவேனா ? பதிலுக்குப்பதில் ஜெர்மன்
வார்த்தைகளை கேட்டுக் கொண்டேன் அதுவும் அங்கு உதவியது ஸ்விஸில் காணவேண்டிய இடங்கள்
எல்லாம் விபரம் தந்தார்கள் நான் சொன்னேன் நாளை மறுதினம் நான் அபுதாபி போகவேண்டும்
இன்று மட்டும் ஷாப்பன் ஹவுஸ் என்ற இடத்தை மட்டும் பார்த்து விட்டு திரும்பி
விடுவேன் அவர்களுடன் பேசியதில் ஆச்சர்யமான விசயம் என்ன தெரியுமா ? நான் ஜாதி மதத்தைப்பற்றி பேச வரவில்லை, நான்
அப்படிப்பட்டவனும் இல்லை, அவர்கள் இருவரும் கிருஸ்டியன் ஆனால் இராமேஸ்வரத்தைப்பற்றி கேட்டார்கள் எனக்கு
எப்படி ? இருந்திருக்கும் எனது ஊர்
தேவகோட்டையிலிருந்து இராமேஸ்வரம் 105 k.m என்று சொல்ல முடியுமா ? நான்தான் சொந்த ஊர் டெல்லி என்று சொல்லி
விட்டேனே... பொய் சொன்னதற்காக வருந்தினேன். மேலும் கேள்விகள் என்ன தெரியுமா ? டெல்லியில் பேசும் மொழிதான் ராமேஸ்வரத்திலும்
பேசுவார்களா ? இல்லை அங்கு பேசுவது தமிழ் மொழி நண்பர்களே
அடுத்த கேள்வி என்ன தெரியுமா ? உனக்கு தமிழ் தெரியுமா ? உண்மையிலேயே மின்சாரம் தாக்கியவன் நிலைக்கு
ஆனேன்.
(பொய் சொன்ன வாய்க்கு போஜனம்
கிடைக்காது என்பது இதுதானோ
? எனக்கு
சரியான தண்டனை கிடைத்தது)
அடுத்து பேச்சு கோயில் பற்றி திரும்பியது அந்தக்கோயில்
கட்டுவதற்க்கு ரயில் பாலம் இடுவதற்க்கு முன்பே கற்கள் அங்கு எப்படிப் போனது ? திகைத்து விட்டேன் எனக்கு தெரிந்த வகையில்
சொல்லி விட்டேன் இதில் எனது கூடுதல் ஆச்சயர்யம் தாஜ்மஹாலைக்கூட டாஜ்மஹால்
என்றார்கள் ஆனால் இராமேஸ்வரத்தை மிகத்தெளிவாக ‘’ராமேஸ்வரம்’’ என்று தமிழனைப்போல உச்சரித்ததுதான் அவர்களிடம் உறுதி கொடுத்தேன் நீங்கள்
இந்தியா வரும்போது கண்டிப்பாக டெல்லியிலிருந்து இராமேஸ்வரத்துக்கு மட்டுமல்ல
தாங்கள் காண வேண்டிய அனைத்து இடத்துக்கும் அழைத்துப் போவேன் அவர்கள் முகத்தில்
பிரகாசம் மின்னஞ்சல், தொலைபேசி இலக்கங்கள் இடம் மாற எங்கள் வழிகளின் தடம் மாறியது
பிரிவில் புகைப்படமும் காணொளியும் எடுத்துக் கொண்டோம்.
குறிப்பு – நான் இதுவரை டெல்லி போனதே இல்லை வலைப்பூ நண்பர்கள் மனது வைத்து வாக்களித்தால்
பாராளுமன்றத்துக்குள் நுழைவதாக திட்டம்.
‘’சரித்திர
நாயகர்’’ இனிய நண்பர் திரு. கரந்தையார் அவர்களுக்கு உங்களால் கண்டிப்பாக முடியும்
இராமேஸ்வரம் கோயில் வரலாறு பற்றி எழுதுங்களேன்.
நம்பிக்கையுடன் கணினியில்
காத்திருக்கும் உங்கள். கில்லர்ஜி.
காணொளியை முழுமையாக
காணவும்.
அனைவருக்கும் இனிய மே தின
வாழ்த்துகள்.
இராமேஸ்வரம் சரித்திர பயணம் எப்போது நண்பா!
பதிலளிநீக்குகரந்தையாரின் காசில்லாத காசிப் பயணம் என்று தலைப்பு வைக்காமல் இருக்க
காசி விசாலாட்சி அருள் செய்வாராக!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
வருக நண்பரே கரந்தையார் அவர்கள் வந்து சொல்வார்கள் காத்திருக்கின்றேன் முதல் வருகைக்கு நன்றி.
நீக்குமுன்னால் தண்டவாளம் கண்டிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் டிரைவர் ரயிலை ஓட்டுகிறார். நாமும் அதே நம்பிக்கையில் அந்த ரயிலில் பயணிக்கிறோம். எல்லாம் ஆண்டவன் கிருபை.
பதிலளிநீக்குஆம் ஐயா ஆண்டவளை நம்பியே அனைத்தும்.
நீக்குஉங்களைப் பாராளுமன்றம்
பதிலளிநீக்குநுழையவிட்டால் - உங்கள்
பதிவுகள் வெளிவராதே!
சிறந்த பதிவு
தொடருங்கள்
அதனால்தான் நீங்கள் ஓட்டு போடுவதில்லையோ..
நீக்குஏன் நண்பரே பொய் சொன்னீர்கள்? அப்புறமாவது சொல்லி இருக்கலாமே. :))))
பதிலளிநீக்குதமிழ் உச்சரிப்பைத் தெளிவாக உச்சரித்தார்கள் அவர்கள் என்பதும் ஆச்சர்யம். உங்கள் காணொளி ரசித்தேன். பனியைக் கிழித்து வரும் ரயில் பற்றிய காணொளி முனனரே எங்கோ ரசித்திருக்கிறேன்.
பிறகு சொல்ல மனம் வரவில்லை நண்பரே காணொளியை ரசித்தமைக்கு நன்றி.
நீக்குஅடடா! ஒரு பொய்யால் தமிழகத்தின் பெருமையை பறை சாற்ற முடியாமல் போய் விட்டதே.
பதிலளிநீக்குராமேஸ்வரம் பற்றி ஒருபுதிய வலை தளத்தை தொடங்கி இருக்கிறார் பதிவர் விஜயன்
மே தின வாழ்த்துகள்
வருக நண்பரே தவறுக்கு வருந்தினேன் தகவலுக்கு நன்றி தங்களுக்கும் மே தின வாழ்த்துகள்.
நீக்குஉங்களுக்கு நல்ல பாடம் ஜி...
பதிலளிநீக்குஆமாம் ஜி பாடம் கற்றேன்.
நீக்குராமேஸ்வரத்தினை ரசித்தோம். பாராளுமன்றமா? வேண்டாம்.
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி முனைவரே நான் நுழையக்கூடாதோ....
நீக்குமதுரையில் ,அதுவும் மகால் பக்கத்திலேயே நான் பிறந்து வளர்ந்து இருந்தாலும் திருமலை நாயக்கர் மகால் உள்ளே போனதில்லை ,ஆனால் டெல்லியை
பதிலளிநீக்குபார்த்திருக்கிறேன் ,நீங்களும் பாராளுமன்றத்தில் நுழைய ..இதோ என் வாக்கைப் போட்டுட்டேன் :)
நான் டெல்லியை பிடிக்க வாக்களித்தமைக்கு நன்றி ஜி.
நீக்குஒரு போய் சொன்னால் அதை மறைக்க ஒன்பது பொய்கள் சொல்ல வேண்டும்
பதிலளிநீக்குஎன்று முன்னோர்கள் சொன்னது சும்மாவா?
இராமேஸ்வரம் மண்டபம் பாலம் எனக்கு மிகவும் பிடித்த இடம்
நண்பரே கரிகாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி பெரியோர்களின் வாக்கு உண்மையே நண்பரே பாம்பன் பாலம் 80தே பொருத்தமானது.
நீக்குஅன்பின் ஜி!..
பதிலளிநீக்குஉழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்..
தங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள் ஜி.
நீக்குபார்த்தீர்களா..
பதிலளிநீக்குஆனைக்கும் அடி சறுக்கும் என்றார்கள்..
அது எப்படி?.. அங்கே நாக்கு குழறி விட்டதா!..
அமுதத்தமிழின் பெருமையைப் பேசுதற்கான வாய்ப்புத் தவறிப் போனதே!..
சாதாரணமாக நினைத்து சொன்ன பொய் எனது காலை வாரி விட்டது ஜி.
நீக்குதேர்தல் பாதை திருடர் பாதை என்ற கொள்கை உடையவன் என்றாலும் நண்பர் .டெல்லி சென்று அங்குள்ளவற்றை பதிவாக வெளியிடுவார் என்பதற்க்காக எனது முதல் ஓட்டு...
பதிலளிநீக்குநண்பரே நான் உள்ளே நுழைந்தால் தினம் அரசியல் காமெடி பதிவுதான்.
நீக்குசரி இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டுமே ஜீ. இதுக்கு தான் முதியோர் சொல் வார்த்தையும் முதிர்ந்த நெல்லிக் கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்று சொன்னா கேட்கவா போகிறீர்கள். பட்டால் தான் நினைவில் நிற்கும் என்றால் யார் என்ன செய்வது. பட்டுத் தான் தெளியனும்.
பதிலளிநீக்குதமிழும் தெரியும் என்றாவது சொல்லி இருக்கலாமே. ம்..ம்..ம் பொய்ய் சொன்ன காரணத்தால் உங்களுக்கு இந்த முறை ஓட்டு இல்லை. அடுத்தமுறை வேணு மின்னா யோசித்து பார்க்கிறேன் சகோ ok வா ....
ஆமா ராமேஸ்வரத்தில தானே சுடுதண்ணிக் கிணறு உள்ளது. ரசித்தேன் பதி வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ....!
வாங்க சகோ பெரியோர்களின் அனைத்து வாக்குகளும் நமது நன்மைக்கே இது பல நேரங்களில் புரிவதில்லை 80 உண்மையே தமிழ் தெரியும் என சொல்ல முடியாத நிலைக்கு ஆளாகி விட்டேன்.
நீக்குகிணறு விபரங்கள் திரு. கரந்தையார் அவர்கள் தருவார்கள் சகோ.
ஆஹா...சுவாரஸ்யத்தில் சொந்த ஊரை மாற்றி விட்டீர்கள் போலும். பின் சொல்ல முடியாமல் தவிப்பு...
பதிலளிநீக்குஇந்தியா...முழுக்க ஒரு பயணம் இருக்குன்னு சொல்லுங்க...
தம +1
மீண்டும் வலையுலகம் வந்தமைக்கு வாழ்த்துகள் சகோ அவர்களை சாதாரணமாக நினைத்து சொல்லி விட்டேன் பிறகுதான் தெரிந்தது அவர்கள் இந்தியாவைப் பற்றிய விபரங்கள் விரல் நுணியில் வைத்திருக்கின்றார்கள். விட்டால் தேவகோட்டை சிவன் கோவில் ஊரணியில் தண்ணீர் கிடக்கிறாதா ? என்று கேட்பார்கள் போல.
நீக்குதேவகோட்டை சிவன் கோவில் ஊரணி தூர் வாரப்பட்டு விட்டது. எவ்வளவு பெரிதாக இருக்கிறது இப்போது பார்க்க. சிவன் அருளால் மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தூர்வாரிய ஊரணி நிரம்பும் என்பது என் நம்பிக்கை.
நீக்கு2 வருடங்களாக ஊரணியைப் பார்க்கும் போது தூர்வார வேண்டும்..அது எப்போது நடக்கும் என நினைந்துக் கொண்டே.....இருந்தேன்...இப்போது கண்டவுடன் மனது துள்ளி குதித்து விட்டது. அதை புகைப்படம் எடுக்காமல் வந்து விட்டோமே..என கவலை கொண்டிருந்தேன். ஊரணியை முழுமையாக கண்டேன். நடுப்பகுதி நீர் நிறைந்து விட்டதையும் கண்டேன்.
அடுத்த முறை செல்லும் போது பழையபடி..படிகள் தழும்ப காண்பேன் என நம்பிக்கை கொண்டு இருக்கிறேன்.
ஊர் பற்றி ஒரு வார்த்தை படிக்கவும் பொல பொலன்னு வந்து கொட்டுதே...எழுத...!!!
மீள் வருகைக்கு நன்றி நான் எப்பொழுதும் ஊரின் சிந்தனையோடு வாழ்பவன் ஆகவேதான் பெயரோடு ஊரையும் இணைத்துக்கொண்டேன் ஆனால் ஸ்விஸில் போய் தேவையில்லாமல் பொய் சொல்லி மாட்டிக்கொண்டேன் சிவன் கோவில் ஊரணியைப்பற்றி தகவல் தந்தமைக்கு மீண்டும் நன்றி.
நீக்குஇனி மறந்தும் விளையாட்டுக்கு கூட இப்படி செய்ய வேண்டாம்!
பதிலளிநீக்குதவறுதான் ஐயா உணர்ந்து கொண்டேன்.
நீக்குசகோ பாராளுமன்றம் வேண்டாம்.
பதிலளிநீக்குகாணொளியை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
வருக சகோ M.P நான் ஆககூடாது M.T ஆக இருக்கனும் அப்படித்தானே ?
நீக்குவருகைக்கு நன்றி சகோ.
வணக்கம்
பதிலளிநீக்குஜி
நீங்கள் வக்கிலாக போகலாம் போல தெரிகிறது... நல்ல உறையாடல்.
தொடர்வண்டி செல்வதை பார்த்தால் பயமாக உள்ளது... முன்னுக்கு யார் வருகிறார்கள் என்பதை சாரதி அறியமுடியாத நிலை... வேகமாக ஓடுகிறது. பகிர்வுக்கு நன்றி ஜி த.ம12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் நான் வக்கீலாக போகனுமா ? எது குற்றவாளிகளை நிரபராதினு வாதாடி வெளியே விடச்சொல்லி பாவத்தை சேர்க்கனுமா ? உங்களுக்கு ஏன் ? இந்த ஆசை
நீக்குமுதலில் தாஜ் மஹால் அருகே வீடு என்று ஏன் பொய் சொன்னீர்கள். ?இந்தப் பதிவும் பொய்யா புனைவா?ஒரு பொய்யை மறைக்க இன்னும் இன்னும் பொய்கள். உங்களுக்குப் போஜனம் கிடைத்துக் கொண்டுதானே இருக்கிறது காணொளியில் ரயிலில் பயணிப்பவர்தான் ராமேஸ்வரம் என்று திருத்தமாகச் சொன்னவரா.?
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு முதலில் நன்றி ஐயா பேச்சின் தொடக்கத்தில் அவர்களுடன் ஒரு இணக்கைத்தை உருவாக்குவதற்காக அவர்கள் தாஜ்மஹாலைப்பற்றி கேட்கவும் சட்டென வீடு எதிர்புறம் என்று சொல்லி விட்டேன்.
நீக்குஆனால் ? அவர்கள் இந்தியாவைப்பற்றி மட்டுமல்ல நிறைய உலகஞானம் உள்ளவர்கள் 80தை தெரிந்து கொண்டேன் மேலும் அவர்கள் மொழிகளைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள் நிறைய நாடுகள் போய் வந்திருக்கின்றார்கள் மேலும் அவர்கள் பேசும்போது ஆங்கிலந் அப்படியே இந்தியன் ஸ்டைலில் பேசினார்கள் எனக்கே புரிந்து விட்டது என்றால் பாருங்களேன்.
மேலும் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு போண் வந்தது ஆங்கிலத்தில்தான் பேசினான் ஐயா சட்டென ப்ரெஞ்ச் ஸ்டைலுக்கு மாறிவிட்டது எனக்கு சுத்தமாக புரியவில்லை பிறகு என்னிடம் பேசும்போது சாதாரணமாக பேசினான்.
ரயிலில் எனக்கு முன்புறம் அமர்ந்திருந்தவன் பெயர்தான் ராபர்ட் மற்றவன் பெயர்தான் டேனியல். இதில் ராபர்ட்தான் மிகவும் தெளிவாக ராமேஸ்வரம் என்று சொன்னான் மேலும் ஹிந்தி வார்த்தைகளை சரளமாக சொல்லி விளக்கம் கேட்டான்.
அடிக்கடி கனவில் பல ஊர்களுக்கு செல்லும் போதே தெரியும், என்றாவது ஒருநாள் இப்படி சொந்த ஊர் மறந்து போகுமென்று, அது இவ்வளவு விரைவில் நடக்குமென்று நினைக்கவில்லை.
பதிலளிநீக்குநல்ல பதிவு
த ம 13
மனுஷன் நொந்து போயி பதிவு போட்டா, படிச்சுப்புட்டு லந்தா ?
நீக்குநீங்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து விட்டால் உங்களுடைய அருமையான பதிவுகளை எப்படி பார்க்க முடியும் ? என்னுடைய பதிவு கொத்து பரோட்டா சுவைத்து பார்த்து கருத்து சொல்ல வாருங்கள்.
பதிலளிநீக்குமே தின வாழ்த்துக்கள் சகோ !
வருக சகோ அதற்காக நான் பாராளுமன்றம் போககூடாதா ? இதோ வருகிறேன் கொத்துப் புரோட்டா சாப்பிட... தங்களுக்கும் மே தின வாழ்த்துகள்.
நீக்குமே தின வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குதம +1
தங்களுக்கும் மே தின வாழ்த்துகள் நண்பரே... பதில் ஒன்றும் சொல்லவில்லையே நண்பரே...
நீக்குஅருமையான சந்திப்பு;
பதிலளிநீக்குசுவையான உரையாடல்!
வருக நண்பரே கருத்துரைக்கு நன்றி.
நீக்குசரியான தமாஷ்!!
பதிலளிநீக்குதமாஷ் இல்லை நண்பா காலக்கொடுமை.
நீக்குசிலருக்கு சொந்த ஊரைச் சொல்வதில் அப்படி ஓர் தயக்கம்! அல்லது வெட்கம்! எங்கள் ஊர்க்காரர்கள் கூட வெளியூரியில் யாராவது கேட்டால் பஞ்செட்டி என்று பக்கத்து ஊர் பெயரைச் சொல்வார்கள்! ஏன்? என்று கேட்டால் அந்த ஊரு அவர்களுக்குத் தெரியும் நம்ம ஊரைத் தெரியுமா? என்பார்கள்! அதுபோலவே நீங்களும் நடந்து கொண்டீர்கள் போல! சுவாரஸ்யம்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஇல்லை நண்பரே நான் அப்படிப்பட்டவன் அல்ல எனது பெயரோடு ஊர்ப்பெயரையும் இணைத்தே சொல்லி வருகிறேன் ஆனால் அவர்கள் எங்கோ உள்ளவர்கள் என்பதால் தவறுதலாக ஆமா சொன்னதால் வந்த வினையே இது.
நீக்குவணக்கம் நண்பரே!
பதிலளிநீக்குபன்மொழி அறிந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் நடுவில் எனக்கென்ன வேலை?
அவர்கள் ஒரு வேளை இந்தியாவந்தால் அவர்களை அழைத்துச் செல்லும் போது பட்டியலில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
த மி ழ் மணம் உள்ளே விட மறுக்கிறது.
நன்றி
வருக கவிஞரே உண்மையிலேயே அவர்கள் பனிமொழி கலைஞர்களே சைனா மொழி தெரியும் என்றார்களே மிரண்டு விட்டேன் எனக்கும் அந்த ஆசை இருக்கிறது .
நீக்குதமிழ் மணத்திடம் எமது கோடரியை காட்டுங்கள்.
அதைக்காட்டாமல் இருப்பேனா..?
நீக்குஅதற்குத் தமிழ்மணம் சொல்கிறது,
“கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாரி
இருங்கதலித் தண்டுக்கு நாணும் – பெருங்கானிற்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்ற
தீரிரவும் துஞ்சாதென் கண்”
என்று....
ஈரிரவும் துஞ்சாதென் கண்...!
என்ன செய்ய நண்பரே!
சரியாகிவிடும் பார்ப்போம்.
தமிழ் மனத்தைப் புறக்கணிக்காதல்லவா தமிழ் மணம் :)
பூப்பறிக்கக் கோடரி எதற்கு :))
மீள் வருகை தந்து விளத்தமளித்தமைக்கு நன்றி கவிஞரே.
நீக்குஇராமேசுவரம் கோயில் பற்றி எழுத
பதிலளிநீக்குமுயற்சிக்கின்றேன் நண்பரே
நன்றி நண்பரே
தகவலுக்கு நன்றி நண்பரே..
நீக்குபாராளுமன்றம் தானே, வாங்கிட்டா போச்சு. என்ன நான் சொல்றது,,,,,,,,,,,,
பதிலளிநீக்குவாங்குறதுக்கு அதென்ன வீடா ?
நீக்குஅட! நல்ல அனுபவம். நாங்களும் கூட இப்படித்தான் பயணத்தின் போது பலருடனும் நட்பு வளர்த்துக் கொள்வது.....
பதிலளிநீக்குபனி கிழித்து வரும் ரயில் முதலில் உங்கள் தளத்தில் வேறு ஒரு பதிவில் பார்த்த நினைவு சரியா? யூட்யூபிலும் பார்த்திருக்கின்றோம்....
ட்ரைவருக்கு ரோடு தெரியாதது போல....நடக்கறவங்களுக்கும் ரயில் வருவது தெரியாதே......அது சரி அங்க எப்படி ஜன நடமாட்டம் இருக்கும் பனி மலையில்....ஸ்விஸ் என்றாலே பனிதான்....
சரி கொஞ்சம் இந்தியாவையும் சுற்றுங்க்ள். ஆனால் ஒரு ஆச்சரியம் உலகம் முழுவதும் இந்த தாஜ்மஹாலுக்கு இவ்வளவு க்ரேஸ்! ம்ம்ம் அதை விட மிக அழகான மோனுமென்ட்ஸ் இந்தியாவில் இருக்கின்றதே. எத்தனையோ கூலித் தொழிலாளிகளின் உயிரை வாங்கிய இந்த தாஜ்மஹாலுக்கு என்ன பெயரோ. ஏனோ தெரியவில்லை இதை உலக அதிசயம் என்றோ இல்லை ரசிக்கவோ முடியவில்லை. பார்த்திருக்கின்றோம்....அவ்வளவு ஒன்றும் ஈர்க்கும் ஒன்று அல்ல.....அதை விட மிகவும் நல்ல நல்ல இடங்கள் இருக்கின்றன இந்தியாவில்.....கொஞ்சம் எடுத்து விட்டுருக்கலாமே ஜி!
தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி.
நீக்கு