தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

போலி‘’ஸ் ஸ்டேஷனில்....

 
நேரம் மதியம் 02.10 ஐ.ஜி ஐயப்பன் வெளியிலிருந்து அலுவலகத்தின் உள்ளே நுழைய... பின்னாலேயே வந்தார் அஸிஸ்டெண்ட் கமிஷனர் அஜித்குமார்.
ஷ்ஷ் அப்பாடா என்ன ? வெயிலு... கார்ட்ஸ் பட்டுனு  A/Cயைப் போடுங்க...
சொல்லி விட்டு தனது இருக்கையில் அமரும்போது.... ட்டுமீல்... மிரண்டு போய்ப் பார்த்தால் பக்கத்தில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் அஜித்குமார் நெற்றிப் பொட்டில் குண்டு பதிந்து விழிகள் விரிய கீழே விழுந்து கிடந்தார் அனேகமாக இறந்திருப்பார்...
யோவ்... எதுக்குயா.....? இவரை சுட்....டே.... ?
நீங்கதானே ஸார் A/Cயை போடுனு.... சொன்னீங்க..
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
 
வெளியிலிருந்து உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் இளமாறன் கேட்டார்.
ஏய்யா ? அவனைப்போட்டு அடிக்கிறீங்க ?
ஸார், இவன் வீட்டுல மான் கறி பதுக்கி வச்சு இருக்கான் கேட்டதுக்கு எம்பேரும் சல்மான்தான் உங்களுக்கு தைரியம் இருந்தால் அவரையும் இந்த மா3 அடிக்க முடியுமா ? அப்படினு திணாவட்டா கேட்கிறான் ஸார்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
 
கான்ஸ்டபிள் அங்கே என்ன ? பிரட்சினை
பிளேடு பிச்சை முத்து 5 ம்-நம்பர் லாக்கப்புக்குள்ளே போக மாட்றான் ஸார்.
ஏன் ?
இவனுக்கு ஒத்தப்படை நம்பர் ராசி இல்லையாம் மற்ற லாக்கப் எல்லாமே ஃபுல்லா இருக்கு ஸார்.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
 
ஸார் எவ்வளவு அடிச்சாலும், ரௌடி ராக்கப்பன் வாயிலிருந்து எதையுமே புடுங்க முடியலை.
ஏன் ? பல்லைக்கூடவா ? புடுங்க முடியலை.
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
 
ஸார் இவன்தான் அருணா தியேட்டருக்கு பாதுகாப்புக்கு போயிருந்தபோது என்னை கவுண்டருல விட்டு அடிச்சவன்.
அப்படினா.... என்கவுண்டருல போட்ரு...
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

ஏட்டு, என்னய்யா ? விஷேசம் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்குறே...
என்னோடது இல்லை ஸார் கைதி கண்ணாயிரம் இன்றைக்கு லாக்கப்புக்கு வருவது1000 வது முறையாம் அதான் அவனோட ட்ரீட்...
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
 
ஏன்டா, உன்னை எத்தனை தடவை பிடிச்சு உள்ளே போட்டாலும் பிட்பாக்கெட் அடிக்கிறதை நிறுத்த மாட்டியா ?
ஸார்... ஸார்... இந்த ஒருதடவை மட்டும் விடுங்க ஸார் தீபாவளி நேரம் ஆஃப்பர் தாரேன்....
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
 
ஐ.ஜி வீட்டுக்குள்ளே எதுக்குடா ? சுவர் ஏறிக்குதிச்சே ?
இல்லை ஸார் இன்ஸ்பெக்டர் வீடுதானே... அப்படினு நினைச்சேன் ஐ.ஜி வீடுனு சத்தியமா தெரியாது ஸார்.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
 
ஏன்டா, உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா... போலீஸ் ஸ்டேஷனிலேயே வந்து 2 நாளைக்கு துப்பாக்கியை வாடகைக்கு கேட்பே ?
நான் படிக்காதவன் ஸார் அதெல்லாம் வேணும்னா ? லைசென்ஸ் எடுத்து வா’’னு சொல்றாங்க.. ஸார்.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
 
உட்காருமா.... அழாமல் சொல்லு கான்ஸ்டபிள் இந்த அம்மாவுக்கு ஒரு டீ சொல்லு உன் புருஷன் எதுக்காக ? உன்னை அடிச்சுக் கொடுமைப் படுத்துறான்.
எங்க மச்சான் கில்லர்ஜி சினிமாவுக்கு கூப்பிட்டாருனு போனேன் இதுக்குப்போட்டு அடிக்கிறான் கூறுகெட்ட மனுஷன்.
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
 
தொடர் வருகை தந்து நல்ல கருத்துரைகளை வழங்கி எனது சிந்தனையை (கேசரியைப்போல்) கிளறி விடும் அனைத்து நண்பர், நண்பிகளுக்கும் நன்றி.
– கில்லர்ஜி.
காணொளி.72 கருத்துகள்:

 1. ஹஹஹாஹ்ஹ் செம ! நண்பரே! தீபாவளி ஆஃபர் சூப்பர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... என்ன அபுதாபியில் தூறல் ? குழப்பமாக இருந்தது முதல் வரவு இதுதான் காரணமா ?

   நீக்கு
  2. ஹஹஹ் டேஷ் போர்ட் ஓபனா இருந்துச்சுல்ல.....ஆனா பாருங்க மெயிலுக்கு உங்க பதிவு வரவே இல்லை.....இப்ப மீண்டும் சப்ஸ்க்ரைப் பண்ணுகின்றோம்...ஒழுங்கா வரச் சொல்லுங்க....
   அது சரி தமிழ்மண ஓட்டுப்பட்டை மீண்டும் யாருக்கும் வரவில்லை....பிரச்சனை போலும்....டிடி எங்க போயிட்டீங்க?

   நீக்கு
  3. ஏசி ஜோக் ரொம்ப ரசிச்சோம்...

   நீக்கு
  4. வாங்க ஒரு மனுஷனை கொன்னுப்புட்டாங்களேனு நான் வேதனையிலே இருக்கேன் இதுல நீங்க ரொம்ப ரசிச்சீங்களோ....

   நீக்கு
 2. கூறுகெட்ட மனுஷன்கிட்ட கில்லர்ஜி மாட்டினாக்க கூறு போட்டுடுவானே?
  உடனே கிளம்பி புதுக்கோட்டைக்கு ஓடிடுங்க! காப்பாத்த வலைப் பதிவர்கள் இருக்காங்க!மீசைக்கு எடுத்த இன்சூரன்ஸ், உங்க உடம்புக்கும் எடுத்திருக்கலாம் கில்லர்ஜி!
  கேசரி நல்ல கலர்புல்ஃ!
  ஹா !!!
  அடிக்க வராதிங்க...
  வராதிங்க

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா நீங்களே போட்டுக் கொடுத்துடுவீங்களோ ?

   நீக்கு
 3. A/C யைப் போடும் முதல் ஜோக்கை மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இப்படி அர்த்தம் தெரியாத முடுமைகளையெல்லாம் செக்யூரிட்டியாப் போட்டால் இப்படித்தான் தேவையில்லாமல் ஒரு உயிர் போயிடுச்சு.

   நீக்கு
 4. யாரு அந்த கூறு கெட்ட மனுசன் எங்க கில்லர்ஜியோட தங்க மனசு

  பத்தி அறியாதவனாகத்தான் இருப்பான்.சரி போனாபோவுது அடுத்த

  முறை போறப்ப அந்த ஆளையும் அழைச்சுட்டு போயிடுங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா அவரை எதுக்கு ? கூட்டிப்போக சொல்றீங்க ? துணைக்கு துணையா தொண்டை வலிக்கு வினையானு போறதுக்கா ?

   நீக்கு
 5. ஆகா
  அருமைஅருமை
  ஜோக்காளிக்குப் போட்டியாக ஒரு கில்லர்ஜி
  வாழ்த்துக்கள் நண்பரே
  அதிலும் அந்த ஏசி
  அருமையோஅருமை
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே அவருக்கு போட்டி அவர் மட்டுமே...
   ஏசி போட்டால் நல்லாத்தானே இருக்கும் வெயில் காலத்துக்கு....

   நீக்கு
 6. நகைச்சுவை துணுக்குகள் அனைத்தையும் இரசித்தேன்! அதுவும் குறிப்பாக 4 ஆவது நகைச்சுவை துணுக்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...எல்லோருமே சொல்றாங்களே எதையுமே புடுங்க முடியலைனு பொய்தானே....

   நீக்கு
 7. சுவை.. நகைச்சுவை!..
  காலையிலேயே - கரும்புச் சாறு குடித்ததைப் போல உற்சாகம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கரும்புச்சாறு உச்சி வெயிலுக்கு ஏசியை போட்டு வி்ட்டு குடித்தால் ஸூப்பரா இருக்குமே...

   நீக்கு
 8. எல்லா நகைச்வையும் ரசித்தேன் சகோ. முதல் நகைச்வை ஏசி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ ஏசியை யாருக்குத்தான் பிடி்காது.

   நீக்கு
 9. போன ஜென்மத்திலே தலைவர் 'கொல்'லுன்னு சிரிச்சதுக்கே எதிரியைக் கொன்னவன் ஆச்சே ,இந்த போலீசு:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உள்ளதுதானே ஜி சிரிக்கும்போது ''கொல்'' என்று சிரித்தால் எவிடென்ஸ் கிடைச்சுப்போகுதே... அதுனாலதான் தில்லை அகத்தார்போல ஹாஹா ஹ்ஹா அப்படினு சிரிக்கனும்.

   நீக்கு
 10. புருசன்கிட்ட ..மச்சான் கூட சினிமாவுக்கு போறேன்னு சொல்லி ஒரு குவாட்டர் வாங்கி கொடுத்துட்டு போனா...கூறுகெட்ட புருசன் அடிப்பாரா....???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல நண்பருக்கு அழகு நல்ல யோசனைகள் கொடுப்பதே தங்களை எனது நண்பன் 80ல் பெருமைப்படுகிறேன் நண்பா.... அடுத்த முறைக்கு உதவும் நன்றி.

   நீக்கு
 11. இந்தமுறை பொலீஸ்காரர்கள் அகப் பட்டார்களா. முதல் கார்ட்டூன் நடந்து போக லைசென்ஸ் மிகவும் ரசித்தேன் உங்கள் பதிவுகளில் பல இடங்களில் ”ன்” க்குப் பதில் “ண்’ வருகிறதே இதுவும் 80 போல ஏதாவதா.? வாழ்த்துக்கள். .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா வருகைக்கு நன்றி இதோ தவறினை சரி செய்கிறேன் ஐயா சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கவனக்குறைவே காரணம் மன்னிக்க...

   நீக்கு
 12. இப்படியா எல்லாரையும் அழவைப்பது.!! மற்றவங்க அழுதாங்களோ இல்லையோ எனக்கு சிரித்து கண்ணீரே வந்துவிட்டது. காணொளி உட்பட அனைத்துமே சூப்பர் அண்ணா ஜி.!!

  பதிலளிநீக்கு
 13. என்ன சகோ அனைவரும் ரசித்தேன், சிரித்தேன் என்று எழுதியிருக்கின்றார்கள் நீங்கள் அழுதேன் என்கிறீர்கள்..... காணொளியைக் குறிப்பிட்டமைக்கு ஸ்பெஷல் நன்றி யாருமே அதனைப்பற்றி சொல்லவில்லையே என்று இருந்தேன்.

  அண்ணாஜி இதுகூட நல்லா அன்னாசிப்பழம் போல் இனிக்கிறதே...

  பதிலளிநீக்கு
 14. நல்ல நகைச்சுவைகள் ரசித்தேன். தொடர் சிரிப்புக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. பகவான்ஜிக்கு போட்டியா கில்லர்ஜியும் இறங்கியாச்சா...?
  அண்ணா நகைச்சுவைகளும் காணொளியும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நண்பரே அவர் எனது சகோதரர் என்றுமே அவர்தான் நகைச்சுவை மன்னர்.

   நீக்கு
 16. பகவான்ஜீக்கு போட்டியாக எழுத ஆரம்பித்துவிட்டீர்களோ?
  அசத்தல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ நான் அனைத்து விடயத்திலுமே கை வைக்கின்றேன் இப்படிச் சொல்லலாமா ? வருகைக்கு நன்றி.

   நீக்கு
 17. சிரித்து விட்டு மட்டும் நகர்ந்து விடாத படி கொஞ்சம் யோசிக்கவும் வைக்க வேண்டும் என பொதுவாக நகைச்சுவைக்கு அளவீடாகச் சொல்வார்கள், அந்த அளவீடுகளோடு நிறைந்து நிற்பவற்றில் கடைசி ஐந்து நிறையவே பிடித்திருக்கிறது ஜி......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நண்பரே தங்களின் ஆழ்ந்த கருத்துரை கண்டு மகிழ்ச்சி தொடர்ந்தால் நலமே...

   நீக்கு
 18. சிரித்து மகிழ்ந்தேன்! அனைத்தும் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
 19. எந்திரன் படத்தில சிட்டி கிட்ட டிவியைப் போடுன்னு சொன்ன மாதிரி ஏசியைப் போடச் சொன்னாப் போட்டுட்டாங்க! :))))
  வயக்கமான மொய் நான் வச்சுட்டேங்கோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சேர்க்க நினைத்த காணொளியை சரியாக சொன்னீர்கள் பிறகு அங்கு துப்பாக்கி இங்கு கத்தி 80 போல மாற்றினேன் வருகைக்கு நன்றிங்கோ.....

   நீக்கு
 20. அருமையான ஜோக்குகள். முத்தாய்ப்பாக காணொளி. ஒவ்வொரு டயலாக்கும் சிரிப்பை தூண்டியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் சம்பத் கல்யாண் அவர்களின் கருத்துரைக்கு நன்றி தொடர்ந்தால் சந்தோஷமே

   நீக்கு
 21. ஹாஹாஹா:) இப்போ தமிழ்நாடே போலிஸ் பிழைப்பை பார்த்து சிரிப்பா சிரிக்கிது, இது நீங்கவேற வெந்த புண்ணில் வேலை சொருக்கிடிங்களே அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ வந்தால் நல்லதாக 4 வார்த்தை எழுதாமல் ???
   என்னை போலீஸுல மாட்டி வச்சுடுவீங்களோ..... பயமாவுல இருக்கு பதிவு போடுவதற்க்கு.

   நீக்கு
 22. முதல் துணுக்கைப் படித்து ஆடிப் போனேன்! காவலர் நகைச்சுவை என்றதும் மதுவிலக்குத் தொடர்பாக ஒன்றாவது இருக்கும் என நினைத்தேன். ஏமாற்றி விட்டீர்கள். பத்தாவது துணுக்கு உண்மையில் நகைச்சுவைத் துணுக்கே இல்லை, உமது குறும்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் மதுவைத் தொடாதவன் என்பதால் எனக்கு அந்த நினைவுகள் வரவில்லை என்று நினைக்றேன் இருப்பினும் தங்களுக்காகவே குடிகாரனைப்பற்றி பதிவு எழுதினால் போச்சு வருகைக்கு நன்றி நண்பரே தளத்தில் இணைந்து கொண்டமை கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
  2. ஆம் ஐயா! நான் பெரும்பாலான தளங்களை பிளாகர் பின்பற்றுநர் செயலி மூலம்தான் தொடர்கிறேன். உங்கள் தளத்தில் அண்மைக்காலம் வரை அஃது இல்லாததால்தான் அருமை நண்பரான தங்களுடைய பல பதிவுகளைத் தவறிவிட நேர்ந்தது. இனி அப்படி ஆகாது என நம்புகிறேன்.

   நீக்கு
 23. //உறுப்பினர்கள் (99) //

  விரைவில் 100 போட நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 24. அசிஸ்டண்ட் கமிஷனர் அஜித்குமாரின் வீர, தீர, பிரதாபங்களை விலாவா(வ)ரியாய் போடுவீங்கன்னு பார்த்தால், பத்தாவது வரியிலேயே அவரை மண்டையில் போட்டுட்டீங்களே! பாவங்க அவரு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே தாங்கள் சரியாகத்தான் படித்தீர்களா ? ஐ.ஜி சொல்லி செக்யூரிட்டி ஏசியை போட்டு விட்டான் என்னமோ நான்தான் கொன்றதுபோல் கேட்கின்றீர்களே... என்னைப்புரிந்து கொண்டது இவ்வளவுதானா ?

   நீக்கு
 25. அருமை! நான் திருப்பதி போயிருந்தேன்! யார்பதிவும் பார்கவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ஐயா நலம்தானே... தாங்கள் யார் பதிவுக்கும் செல்லவில்லை 80தை நானும் அறிந்து இருந்தேன் திருப்பதி வெங்கடாசலபதி தங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து தங்கள் மூலம் எங்களுக்கு நல்ல கவிதைகளை கொடுப்பார் என்று நம்புகிறேன் வாழ்க நலம்.

   நீக்கு
 26. கற்பனை அருமை அதி சீக்கிரம் நீங்க படம் எடுப்பீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே நான் தயாரிப்பாளரும் அல்ல பாம்பும் அல்ல பிறகு எப்படி..... இருப்பினும் உங்கள் ஆசை நிறைவேறட்டும்,

   நீக்கு
 27. ரசித்தேன் அதுவும் 5 நம்பர் லாக்கப் செம கமடி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா அவன் சோஸியத்தில் நம்பிக்கை உள்ளவனாக இருப்பானோ....

   நீக்கு
 28. அன்புள்ள ஜி,

  போலி‘ஸ்’ ஸ்டேஷன் அனைத்துக் காமடியும் எங்க மச்சான் கில்லர் ஜி ’ உட்பட இரசித்துச் சிரித்தேன். காணொளியும் கண்டு மகிழ்ந்தேன்.

  த.ம. 15

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே... தமாமதமாகவே வருவதென்ற கொள்கையாளரே வருக நல்ல கருத்துகளை தருக...

   நீக்கு
 29. \\ஏன்டா, உன்னை எத்தனை தடவை பிடிச்சு உள்ளே போட்டாலும் பிட்பாக்கெட் அடிக்கிறதை நிறுத்த மாட்டியா ?\\ நிஜத்தில் நடப்பதே வேறு. இவர்கள் கிடைக்கும் வருமானத்திற்கு தகுந்தவாறு கமிஷன் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நாட்டில் இவர்களே இல்லை, எல்லோரும் நல்லவனாகிவிட்டார்கள் என்றால் இவர்களுக்கு வருமானமே நின்றுபோகும், யாராவது அதை விரும்புவார்களா?

  All are nice..................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா நலம்தானே... உண்மையின் நிலை வேறு ஆகவேதானே தலைப்பிலேயே போலி இருக்கிறது வருகைக்கு நன்றி நண்பா.

   நீக்கு
 30. அனைத்தும் அருமை சகோ,
  சினிமா பார்த்த பிறகு தானா???????
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யய்யோ நான் சினிமா பார்த்து 18 வருடங்கள் ஆகி விட்டது.

   நீக்கு
 31. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 32. ஜோக்குகளை வாரி வழங்கி சிரிக்கவைத்து விட்டீர்கள் நன்றி கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 33. அனைத்தும் அருமை.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 34. ஹா...ஹா..ஹா.அத்தனையும் அருமை நண்பரே... தங்களுக்கு நகைச்சுவையும் நன்றாக வருகிறது. அப்படியே அடித்து ஆடுங்கள்.

  பதிலளிநீக்கு