ராமமூர்த்தி ஊரிலிருந்து புதிதாக துபாய்
வந்திருந்தான், (ஊரிலிருந்து கொண்டு அக்கா RIMOT மூலம் இயக்கியதால் அத்தான்
எடுத்தனுப்பிய VISA) இன்னும் MEDICAL கூடபோடவில்லை,
லாண்டரி SHOP உள்ளேயே வேலை, சம்பளம் 1200/
Dhs மூடை மூடையாக வரும், துணிகளை MACHINEனில் போட்டு POWDER கொட்டி விட்டால்
போதும், பிறகு எடுத்து IRONING கொடுக்கவேண்டும், இதுதான் அவன் வேலை, அருகிலேயே ROOM
தமிழ் நண்பர்களோடு தங்கினான், வாடகை COMPANY கொடுத்து
விடும்.
மதிய இடைவேளை நேரத்தில் ROOMக்கு, வருவான் அவனுடைய
பங்குக்கு சோறு மட்டும் வடித்து வைத்தால் போதுமென நண்பர்கள் சொல்லி விட்டார்கள்,
புதிது என்பதால் சோறு வடிக்க ஒருவன் சொல்லிக்கொடுத்தான், கொதிக்கும்போது உப்பு
போடவேண்டும் உப்பு பாக்கெட்டிலிருந்து உள்ளங்கையில் கொட்டி அளவு காண்பித்தான்
பிறகு சோற்றில் கொட்டி கரண்டியை எடுத்து கிண்டி விட்டான், எல்லாம்
படித்துக்கொண்டதுபோல் தலையாட்டி விட்டு நாளை முதல் நான் சோறு வடிக்கிறேன் எனசொல்லி
விட்டான், மறுநாள் சோறு வடிக்க KITCHENக்கு
வந்தான், சோறு கொதித்துக்கொண்டு இருந்தது.... இதுதான் உப்புபோட சரியான நேரமென
உப்பு பாக்கெட்டிலிருந்து கையில் கொட்டி அளவு பார்த்தான், (லாண்டரியில் MACHINE ல் துணிகளை போட்டுவிட்டு SURF POWDER ரை கையில்தான் கணக்காகாக
கொட்டுவான் கொட்டிவிட்டு தண்ணீர் சுழலும்போது கையை உள்ளே விட்டு ஆட்டி கையை கழுவிக் கொள்வான்) அதே ஞாபகத்தில் உப்புக் கையோடு உள்ளே விட்டு விட்டான்,
''அய்யய்யோ,
அய்யய்யோ'' அலறல் சத்தம் கேட்டு அடுத்தடுத்த ROOM நண்பர்கள் ஓடி வந்தார்கள், ராமமூர்த்தி கையை
பிடித்துக்கொண்டு கீழே விழுந்து உருண்டு கொண்டிருக்க... அதிலொருவன் 999 அழைக்க AMBULANCE வந்தது, With POLICE STRETCHER ரில், தூக்கிப்போட்டு AL MAKTOOM HOSPITAL கொண்டு போனார்கள், ஒருமாதம் சிகிச்சை கழிந்து ROOMக்கு வந்தான், மறுநாள்
வேலைக்கு போக முதலில் MEDICAL போட்டு வா, என அனுப்பி விட்டார்கள், MEDICAL போட்டுவர SKIN பிரட்சினையென UNFIT
போட்டு ஊருக்கு அனுப்பி விட்டார்கள்,
சோத்துக்காக பிழைப்புத் தேடிவர அந்த சோறே வினையாகி விட்டதே....
CHIVAS REGAL சிவசம்போ-
இதுக்குத்தான் வடநாட்டுக்காரன்
சப்பாத்தியிலேயே காலத்த... ஓட்டுறான்
வட நாட்டுக்காரன் சப்பாத்தியிலே காலத்தை ஓட்டுவது இருக்கட்டும்! நண்பா!
பதிலளிநீக்குஉப்பு ஊரை விட்டே துரத்தும் என்பதை பதிவின் மூலம் தூள் பரப்பி விட்ட
கில்லர்ஜியின் பதிவு பளீச்! பளீச்!
அருவா மீசை...
கொடுவா மீசை....
பதிவு தூள்
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
வாங்க நண்பா உப்புக்கூட சில நேரங்களில் ப்ளீச்சிங் பவுடர் மா3தான் இருக்கும்.
நீக்குநல்லா இருக்கு.
பதிலளிநீக்குஎது ? கை வெந்ததுதானே...
நீக்குஅடப்பாவமே...
பதிலளிநீக்குஎன்னசெய்வது விதி.
நீக்குஅடடா... பழக்க"தோசம்" இப்படி ஆகி விட்டதே...
பதிலளிநீக்குஆம் ஜி செவ்வாய் தோஷம்போல இதுவும்1
நீக்குஉப்பு பிழைப்பில்
பதிலளிநீக்குமண்ணை அல்லவா அள்ளிப் போட்டுவிட்டது
தம +1
விபரம் இல்லாமல் பிழைத்தால் இப்படித்தானே நண்பரே...
நீக்குaiyyo paavam...
பதிலளிநீக்குவேறென்ன ? சொல்ல முடியும்.
நீக்குஅரைவேக்காடு... எதையும் கவனத்துடன் செய்யத் தெரியாமல் கடல் தாண்டி வந்தது தவறு..ஊருக்குப் போனதே நல்லது!..
பதிலளிநீக்குஇப்படித்தான் -
இங்கே ஒருவன் - Orange Juicer க்குள் கையை விட்டு கட்டை விரலை முழுதுமாகப் பறிகொடுத்தான்..
ஏதோ ஓரளவுக்கு இழப்பீடு கிடைத்தது.. பாவம்.. மிகவும் அழுதான்..
வரப்போகும் மனைவிக்குத் தாலி கட்ட முடியாமல் போயிற்றே!.. என்று..
சரியாச்சொன்னீங்க ஜி அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.
நீக்குமோதிர விரலையும், சுண்டு விரலையும் வைத்து தாலியை பிடிச்சுக் கொடுத்து நாத்துனாமார்கள் கட்டவேண்டியதுதான் வேறென்ன செய்வது ?
விவரமான தலைவர் ஒருவரை திருமணத்திற்கு தலைமை தாங்க அழைத்தால் ,அவரே தாலி கட்டிவிடுவாரே:)
நீக்குஅதுக்குப்பிறகு அவள் யாருக்கு சொந்தம் ?
நீக்குதலைவரிடமே கேளுங்கள் :)
நீக்குகடனை வாங்கி கஷ்டப்பட்டு ஊருக்கு வந்தவனுக்கு உப்பு வினையாகி விட்டதே...
பதிலளிநீக்குஅத்தான் எடுத்த விசாதானே... இதிலிருந்து நமக்கு தெரிவது என்ன ? வாழ்க்கையில உப்பு சேர்க்காமல் வாழப்பழகிக்கோணும்.
நீக்குபழக்கதோஷம் ராமமூர்த்தி சோற்றுக்கு வைத்த உலை வேலைக்கே உலை வைத்து விட்டது. இப்படியும் சிலபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குஆம் நண்பரே சரியாக சொன்னீர்கள்.
நீக்குவடநாட்டுக்காரன் சப்பாத்தியிலே காலத்தை ஓட்டுற கதை இதுதானா...!!!!
பதிலளிநீக்குஅப்படித்தானு நினைக்கிறேன் நண்பரே...
நீக்குநம்ம ஊரில் சோறு வடிக்கத் தெரியாத ராமமூர்த்தி மாதிரி ,சப்பாத்தி சுடத் தெரியாத ராஜேஷ் ரோஷன் இருக்க மாட்டானா:)
நீக்குதோசைக்கல்லில் வையை வச்சு தேச்சுடுவானோ....
நீக்குஊரிலிருந்து துபாய் வந்த ராமமூர்த்திக்கு உப்பு பிழைப்பை கெடுத்துவிட்டது . பாவம் ராமமூர்த்தி.
பதிலளிநீக்குஇதுக்குத்தான் உப்பு இல்லாமல் சாப்பிட்டு பழகனும்...
நீக்குகற்பனை நிகழ்வென்றால் சரி..
பதிலளிநீக்குவருக சகோ கற்பனையே....
நீக்குஉண்மை நிகழ்வென்றால் பர்னால் அனுப்பி வைக்கலாமா :)
நீக்குஹா ஹ் ஹா...
நீக்குஇனி உள்ளளவும் உப்பிட்டதை அவர் மறக்கமாட்டார்!
பதிலளிநீக்குஆம் நண்பரே இதனால் அவன் இப்பொழுது லாண்டரியில்கூட துணி போடுவதில்லையாம்
நீக்குசோறு வடிக்கும் போது உப்பு போடுவார்களா?
பதிலளிநீக்குசிலர் போடுவார்கள் சிலர் குழம்பில் கூடுதலாக போட்டுக்கொள்வார்கள் எனது ரூமில் நான்தான் சோறு வடிப்பேன் அதனால்தான் நேற்று சோறு வடிக்கும் பொழுது இந்த கற்பனை வந்தது.
நீக்குஏன் குக்கர் வைக்கலாமே
நீக்குஅந்த அளவுக்கு விபரம் இருந்தால் நான் ஏன் இங்கு இருக்கப் போறேன்...
நீக்குகுக்கர் விசில் அடித்து கூப்பிட்டால் உங்களுக்கு பிடிக்காதா :)
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குஉணவுக்காய் போனது, உணவாலே போனதே,,,,,,
நன்றி சகோ பகிர்வுக்கு,
இதுக்குத்தான் ரோட்டுல ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டு போகனும்னு சொல்றாங்க...
நீக்குவருத்தமாக இருந்தது.
பதிலளிநீக்குகற்பனைதானே முனைவரே...
நீக்குசிந்தனை செய் மனமே! செய்திட்டால் தீர்ந்துவிடும் பின்விளைவுகளற்ற நிலை ! சிந்தனை மட்டுமல்ல முன் யோசனையுடன் செயல்பட வேண்டுமென்பதனை கதை சொல்லி விளக்கியமைக்கு நன்றி அய்யா!
பதிலளிநீக்குஆம் நண்பரே எதிலும் முன்னெச்சரிக்கை வேண்டும் 80தே கருத்து
நீக்குஇது உண்மையா ? கற்பனையா!
பதிலளிநீக்குவாங்க ஐயா கற்பனைதான் நகைச்சுவைக்காக எழுதியது....
நீக்குஐயோ பாவமே!..
பதிலளிநீக்குமனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு சகோ!
வாங்க சகோ கற்பனைக்கே இப்படியா.....
நீக்குஇப்படிக்கூட மனிதர்கள் இருக்கிறார்கள்! பாவப்பட்ட மனிதர்கள்!
பதிலளிநீக்குஆம் நண்பரே அரைவேக்காட்டு மனிதர்கள்....
நீக்குசோதனனை எப்படியெல்லாம் வருது!
பதிலளிநீக்குஇதுதான் ஐயா சோத்துச் சோதனை.
நீக்குசோத்துக்கு வந்தா அந்த சோறெ வினை வைக்குது..உங்களின் இந்த வரிகள் உட்பட சூப்பர் கற்பனைக் கதை....
பதிலளிநீக்குவாங்க நிறையபேர் உண்மையென நம்பி விட்டார்களே....
நீக்குபழக்க தோஷம்
பதிலளிநீக்குஅதுவே வழக்கமாகி விட்டதே...
நீக்குGodd Comedy!!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே நலம்தானே....
நீக்குஇதை நான் ஒரு முறை உணர்ந்திருக்கிறேன் - நல்ல தகவல்
பதிலளிநீக்குவாங்க நண்பா அப்படியா நான் எழுதிய கற்பனையும் நடந்திருக்கின்றதா...
நீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குநல்ல கற்பனையுடன் ௬டிய நகைச்சுவைப் பதிவு. நானும் உண்மை சம்பவம் என நினைத்து வருந்தம் மிகவும் அடைந்து விட்டேன். கருத்துரைகளை கண்ட பின் கற்பனை என அறிந்து மனசு லேசானது.
கற்பனையே என்றாலும் பழக்கங்களை மாற்ற இயலாமல் இது போல் சில சம்பவங்கள் நடந்துதான் விடுகிறது .விதியை மாற்ற யாரால் இயலும்.?
தங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வருக சகோ சோறு வடித்துக் கொண்டு இருக்கும்போது தோன்றிய கற்பனையே இந்தப்பதிவு.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
உண்மையா...கற்பனையா... இருந்தாலும் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 22
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கற்பனைதான் நண்பரே..... வருகைக்கு நன்றி.
நீக்குகற்பனையாக இருந்தாலும், கொஞ்சம் டெரராத் தான் இருக்கு - வெந்து போன கைகளை நினைத்தால்.....
பதிலளிநீக்குவெந்து போன கை அப்படித்தானே இருக்கும் நண்பரே
நீக்குபடித்தவுடன் மிகவும் வருத்தமாகி விட்டது. கூடவே, "என்ன இவர்? கூடப் பிறந்த அக்காள் மகன் கை வெந்து போனதை இப்படி நகைச்சுவை போலச் சொல்கிறாரே!" எனச் சிறிது சீற்றமும் எழுந்தது. ஆனால், ஒன்றே ஒன்று உறுத்தியது!...
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் கொதிக்கிற நீரில் உப்பைப் போடுகிறவன் அவ்வளவு உணர்வுகெட்டத்தனமாகக் கையை உள்ளே விட்டு விடுவானா? அப்படியே பழக்கம் காரணமாக உள்ளே விட முனைந்தாலும் கை உள்ளே போகும்பொழுதே சுடுமே? அதிலேயே எச்சரிக்கையாகிக் கையை இழுத்துக் கொண்டு விடுவோமே, கைவிட்டுக் கலக்கும் அளவுக்குப் போவோமா என்று தோன்றியது. ஒருவேளை புதிதாகக் கதை எழுதும் முயற்சியோ என்றும் எண்ணினேன். ஆனால், இது போல் நிறைய அனுபவப் பதிவுகளை நீங்கள் எழுதியிருப்பதால் இதுவும் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் நினைத்தேன். மேலும், நீங்கள் இப்படியெல்லாம் பொய் சொல்ல மாட்டீர்கள் என்றும் நம்பினேன். கருத்திடக் கீழே வரும்பொழுதுதான் நீங்கள் பதில் கருத்துரைகளில் இதைக் கற்பனை என்று கூறியிருப்பது தெரிந்தது. ஏன் இப்படி ஒரு கற்பனை ஐயா? நன்றாகவே இல்லை.
நண்பரே ரூமில் சோறு வடித்துக்கொண்டு இருந்தேன் சும்மா நிற்கும் பொழுது //போவோமா... புதுக்கோட்டை// பதிவில் லாண்டரி வேலை பந்தமாய் வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும் சோறு வடிக்கும் பொழுது அதை இதனுடன் சேர்த்து வடித்த கற்பனையில் கை வெந்து விட்டது அவ்வளவே...
பதிலளிநீக்கு:-D
நீக்கு