தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 26, 2015

பேபி - பர்ஹானாஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது என்னுடனேயே இருக்கும் தினம் வேலை முடிந்து வந்ததும் நான் நேரப்படி அவர்கள் இருக்கும் பில்டிங்குக்கு கீழே வந்து விடுவேன் நண்பரோ, சகோதரியோ குழந்தையை கொண்டு வந்து காரில் உட்கார வைத்து ஷீட் பெல்ட்டை மாட்டி விட்டு போய் விடுவார்கள்... பிறகு இரவு வந்துதான் குழந்தையை கொடுப்பேன் பலநேரங்களில் விடுறை நாட்களில் எனது ஆபீஸ் மீட்டிங்குகள் வெளிப்புற ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் அங்கும் கொண்டு போவேன், சில நேரங்களில் துபாய்கூட போய் வந்து விடுவேன் அந்த அளவுக்கு என்னுடன் பழகி விட்டது இதற்கு இன்னொரு காரணமும் உண்டு எனது மகனையோ, மகளையோ நான் தூக்கி வளர்க்கும் சந்தர்ப்பத்தை இறைவன் எனக்கு கொடுக்கவில்லை அந்த ஏக்கத்தின் பிரபலிப்பே இந்த மருமகளோடு இறைவன் என்னை பழக விட்டு விட்டான், என் அன்பு மகள் பலமுறை புகைப்படங்களை பார்த்து கேட்ட கேள்வி. 

இந்தக் குழந்தை எப்படிப்பா... உங்களைப் பார்த்து பயப்படாமல் உங்களோடு எல்லா இடத்திற்கும் வருகிறது ?பேசப்பழகிய பொழுது என்னை மாமா என்று சொல்லத் தொடங்கி பிறகு ஒசாமா என்றாகி இன்று மீசை மாமா என்று தெளிவாகி விட்டேன் இப்பொழுது ஸ்கூல் போய்க்கொண்டு இருக்கிறது நன்றாக வாய்பேசும்.

ஒருமுறை பப்ளிக் கார்டனில் உட்கார்ந்து ஒளிந்து விளையாடிக் கொண்டு இருந்தேன் பேசத் தொடங்கிய பருவம் நான் புதரில் ஒளிந்து கொள்ள என்னைக் காணாமல் மாமா மாமா என்று அழத்தொடங்கி விட்டது அந்த பக்கமாக பாக்கிஸ்தானியர்கள் இதை கவனித்து விட்டார்கள் குழந்தை நல்ல சிவப்பு நிறமாக இருக்கும் அவர்கள் நினைத்தது இது யாரோ அரபி வீட்டுக் குழந்தையென... இதற்கு 4 காரணங்கள் உண்டு ஒன்று உடை அரபிக்குழந்தைகள் அணியும் ஜிகினா உடை, மற்றொன்று நல்ல சிவப்பு, அடுத்தது அரபு மொழியில் ‘’மாமா’’ என்றால் ‘’அம்மா’’ என்று அர்த்தம் கூடுதலாக எனது தோற்றம்  போதாதா குழப்பம் ?அந்த இருவரும் குழந்தையை நெருங்க நான் சட்டென புதரை விட்டு வெளியே வந்து குழந்தையை தூக்கி விட்டேன் அந்த பாக்கிஸ்தானியரைக் கண்ட குழந்தை மேலும் அழ ஆரம்பித்தது காரணம் இருவருமே முகம் முழுவதும் நெஞ்சு வரை வளர்(த்)ந்த தாடி என்பது எனக்கு புரிந்தது ஆனால் அவர்கள் புரிந்து கொண்டது நானொரு பிள்ளை புடிக்கும் ‘’பூச்சாண்டி’’ அவர்கள் இந்தக் குழந்தை யாருடையது ? எனக்கேட்க, நான் உனக்கென்ன ? எனக்கேட்க, எனக்கும், பாக்கிஸ்தானியர்களுக்கும் வாக்கு வாதமாக, நான் எனது சகோதரியின் மகள் எனச்சொல்ல, கூட்டம் கூடி விட, கூட்டத்தை கண்ட குழந்தை மேலும் கதற ஆரம்பித்துவிட, குழந்தை ஏன் மாமா என அழுகிறது ? டேய் மாமா என்றால் எனது தமிழ் மொழியில் மாமாடா எந்த மாமா அம்மாதானே... ? டேய் மாமானா, மாமாடா அதாவது, அங்கிள்டா அவர்கள் வேறு ஆங்கிலில் பார்த்தார்கள் கூட்டத்தில் ஒரு பெண் வந்து குழந்தையை கேட்க, குழந்தை போகாததால், பாக்கிஸ்தானியர்கள் சொல்லி விட்டார்கள் இவன் ‘’பூச்சாண்டி’’ அல்ல ‘’மந்திரவாதி’’

அடப்பாவிகளா அப்பாவியை பூச்சாண்டினு சொன்னது மட்டுமில்லாமல், மந்திரவாதியா ? என்ன உலகமடா ? புரியா மடந்தைகள் நிறைந்த உலகம். ஒருவன் சொன்னான் போலீஸுக்கு கால் பண்ணு.

பெரிதாக காண ஒருமுறை சொடுக்கவும்ஒருவன் சட்டென 999 அடிக்க, மறுநொடியில் ஸுருத்தா (POLICE) அவர் வந்ததும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்.

இத்தனை வருஷமாக எத்தனை ? ஸுருத்தாவை பார்த்திருப்போம், பார்த்திருக்காங்க, பாக்கிஸ்தானியர்கள் போலீஸிடம் அரபு மொழியில் அவர்கள் தரப்பு விபரம் சொல்ல, நான் கடகடவென அரபு மொழியில் எனது தரப்பு வாதத்தை வைத்ததோடு நான் வேலை செய்யும் அலுவலகத்தையும், குறிப்பாக எனது வேலையையும் சொன்னேன் விரிவாக... 
(காரணம் எனக்கு அதன் மூலம் சிறிய அளவில் மரியாதை கிடைத்து விடும் நாளை இவரும் இங்குதானே வரவேண்டும் ஓய்வூதியம் பெற இவணுடைய ஃபைலும்கூட எனது கையில்) 
சரி உனது நண்பனை உடன் இங்கே வரவை நான் நண்பரை அழைக்க அவர் வரவும் உண்மை தெரிந்து விட்டது அவர் வந்ததும் குழந்தை சிரித்து விட்டு என்னிடமே இருந்ததை கண்ட ஸுருத்தா சிரித்து விட்டு.
(போகும்போது எனது கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு போனதும் மறுமாதம் என்னை அழைத்து அவரது பைலில் ஒரு விபரம் கேட்டுக் கொண்டதும் ராணுவ ரகசியங்கள்) 
போய் விட்டார் நான் பாக்கிஸ்தானியர்களை கர்ண கொடூரமாய் ஒரு பார்வை பார்த்தேன்.

சாரி, நீ மீசையை இப்படி வச்சிருந்ததால நாங்க தப்பா நினைச்சிட்டோம்.
நீங்க கூடத்தான் மொத்தமாக தாடியோட இருக்கீங்க, நான் உங்களை தப்பா நினைச்சேனா ? போங்கடா, வீட்டுக்குப் போயி பாரதிராஜாவோட கல்லுக்குள் ஈரம் படம் பாருங்கடா...

எனத்திட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டோம் வரும்போது நண்பர் சொன்னார் முதல்ல மீசையை மாத்துங்கங்க... ஏங்க, வந்ததும் பாக்கிஸ்தானிகளை மாத்துல விடாம, என்னை மீசையை மாத்தச் சொல்றீங்க ? சரி நண்பர் சொல்லி விட்டாரே உடன் மாற்றினேன். 
இப்படி, எப்பூடி ?
மீண்டும் நண்பர் சொன்னார்.
ஹும், இதுக்கு அதுவே தேவலை.

 
காணொளி
நண்பர்களே இத்தனை வருடமாக அபுதாபியில் இருந்து இந்த வருடம் 2015 ஜூலை மாதம் முதல் மதுரையில் தமிழ்க்கல்வி பயிலும் மருமகள் பர்ஹானாவுக்கு இன்று 7 வது பிறந்தநாள் தாங்களும் வாழ்த்தலாமே...

58 கருத்துகள்:

 1. தங்கள் மருமகளுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

  பாகிஸ்தானி - மாமா - மம்மா ---- ம்... மீசையால பேசியிருக்கீங்க...
  பார்க்கும் வேலையைச் சொல்லி தப்பிட்டீங்க...

  ஹா... ஹா... ரசிச்சி படிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகை தந்து மருமகளை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே..

   நீக்கு
 2. நவம்பர் 14 நேரு மாமா தினம்
  ஆகஸ்ட் 26 மீசை மாமா தினம்
  வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா, உடனே சரித்திர நிகழ்வுடன் ஒப்பிட்டு விட்டீர்களே... நேருடன் என்னை சேர்க்கலாமா ? அவர் நேரானவர் நான் கோணலானவன்.

   நீக்கு
 3. உங்கள் பெண் கேட்ட கேள்வியை நானும் கேட்க விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குமா ? சந்தேகம் ஐயா வருகைக்கு நன்றி.

   நீக்கு
 4. //நீங்க கூடத்தான் தாடியோட இருக்கீங்க//

  ஹா...ஹா..ஹா... அதானே!

  பர்ஹானாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே பின்னே என்னாங்கறேன் நன்றி நண்பரே...

   நீக்கு
 5. தங்களின் அன்பு மருமகளுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருமகளை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே..

   நீக்கு
 6. பதிவினைப் படிக்கும் நாங்களும் குழந்தையாகிவிட்டோம். அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை. இவ்வாறான உறவுகள் தரும் தாக்கங்கள் என்றுமே மனதைவிட்டு அகலாது. தாங்கள் அதிகம் கொடுத்துவைத்தவர்கள். பாப்பாவுக்கு எங்களின் வாழ்த்துக்கள். அக்குழந்தையை அறிமுகப்படுத்திய உங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் விரிவான கருத்துரைக்கும் மருமகளை வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 7. பதிவு பர்ஹானாவிடம் உங்கள் மனதிலிருக்கும் எல்லையில்லா பாசத்தைக்காட்டியது. உங்கள் மரு[மகளுக்கு] என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை தந்து மருமகளை வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சியோடு நன்றி சகோ.

   நீக்கு
 8. நண்பரே உங்கள் இந்த கதையை கலங்கிய கண்களுடன் படித்தேன். இது அபுதாபியில் நடந்தது. நானறிய நம் தேசத்தில் எதனை இல்லங்களில், நண்பர்களுக்கிடையில் நடந்து வந்தது. இன்று மாபாதகர்கள் வந்து நெஞ்சிலே நஞ்சிட்டு....... அன்னியோன்யத்தை அசைத்து விட்டார்களே????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு நண்பரே..
   இதை கதையென்றில்லாமல் பதிவு அல்லது சம்பவம் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் பரவாயில்லை
   சமூக பொதுநலம் வேண்டிய தங்களின் ஆதங்கமான உள்ளக் குமுறலை கருத்துரையின் வாயிலாக தந்ததை உணர்ந்தேன் என்ன செய்வது நண்பரே... காலம் ஒருநாள் மீண்டு(ம்) மாறும்

   15 வருடங்களுக்கும் மேலான நட்பு இன்று கடந்த 8 வருடங்களாக அண்ணன் – தங்கை பாசத்தை கொடுத்து விட்டது
   வருகைக்கு நன்றி நண்பரே தொடர்க...
   மனிதன்
   மதம் மறந்தால் மனிதம் தழைக்கும்.

   நீக்கு
 9. உங்களுக்கு அரபு மொழி தெரிந்ததாலும், காவலர்களின் ஓய்வூதியம் பெறும் கோப்புகள் உங்களிடம் தான் இருக்கும் என்ற இரகசியத்தை மறைமுகமாக வெளியிட்டதாலும் தப்பித்தீர்கள் என நினைக்கிறேன். பதிவை இரசித்தேன்!

  இன்று 7 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் தங்கள் மருமகள் பர்ஹானாவிற்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மைதான் இல்லையெனில் நான் காவல் நிலையம் போய் திரும்பி வரவேண்டியது இருந்திருக்கும்தான் அதேநேரம் இங்கு தவறு செய்யாதவர்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை 80தே இந்த நாட்டின் சிறப்பு தங்களுக்காக காவல் நிலைய அனுபவத்தையும் விரைவில் எழுதுவேன்.
   மருமகளை வாழ்த்தியமை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 10. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!..

  நெஞ்சம் இளகியது - ஜி!..

  உங்களுக்கு மருமகள் எனில் - எமக்கும் அல்லவோ!..

  பல நலங்களும் பெற்று - சீருடனும் சிறப்புடனும்
  பல்லாண்டு பல்லாண்டு வாழ்தற்கு
  எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   மருமகளை நெஞ்சம் நிறைந்த மனதுடன் வாழ்த்தியமை கண்டு நெகிழ்ச்சியான மகிழ்ச்சி நன்றியோடு....

   நீக்கு
 11. நிகழ்வை நினைத்து சிரிப்பு வந்துவிட்டது. பாவம் குழந்தை.
  பர்ஹானாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பர்ஹானாவை வாழ்த்தியமைக்கு நன்றி சகோ...

   நீக்கு
 12. கல்லுக்குள் ஈரம். உங்களைத்தான் சொல்கிறேன். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கு நன்றி நான் கல் ஆஆஆஆஆஆ

   நீக்கு
 13. கல்லுக்குள் ஈரம் , தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோடக்கூடது என்பதை அழகாய் பதிவில் சொல்லிவிட்டீர்கள்.
  மருமகள் பர்ஹானவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வருகைக்கும், கருத்துரைக்கும், மருமகளை வாழ்த்தியமைக்கும் நன்றி

   நீக்கு
 14. உங்களுடைய இந்த பதிவு நீங்கள் பர்ஹானாவின் மேல் வைத்துள்ள அளவு கடந்த பாசத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது சகோ.

  தங்களின் மருமகளுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ உண்மையே... பர்ஹானாவை வாழ்த்தியமைக்கு நன்றி

   நீக்கு
 15. கொடுவா மீசைக்காரர் கேட்டாரேஒரு கேள்வி..."நீங்ககூடத்தான் தாடியோட இருக்கீங்க"...அப்படிப் போடு அருவாளை...ஸாரி அருவா மீசையை..அஹ்ஹஹஹ்
  தங்கள் மகள் போன்ற மருமகளுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  கொடுவா மீசைக்குள் ஈரம் கல்லுக்குள் ஈரத்தை விட அதிக ஈரம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க, பின்னே சும்மா விடலாமோ..... மருமகளை வாழ்த்தியமைக்கு நன்றி

   நீக்கு
 16. நல்ல கூத்து! எப்படியோ, கடைசியில் தப்பினீரே! அந்த மட்டுக்கும் மகிழ்ச்சி! ஆனால், உம்மை நம்பி விளையாட வந்த குழந்தையை ஒளிந்து கொண்டு அப்படி அழ விடலாமா? அதுவும் தெருவில் போகிறவர்கள் நெருங்குகிற வரைக்கும்? அதற்கு உமக்கு இந்தத் தண்டனை தேவைதான்.

  சிறுமி பர்கானாவுக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! தமிழ் போல் வாழ்க! குழந்தையிடம் அதன் பிறந்தநாளை ஒட்டி நீங்கள் இப்படி ஒரு பதிவு இட்டிருப்பதைச் சொல்லிப் படித்துப் பார்க்கச் சொல்லுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே... பூங்கா 80தே விளையாடுவதற்க்குத்தானே மருமகளை வாழ்த்தியமைக்கு நன்றி மருமகள் பார்த்துக்கொண்டு இருக்கின்றது...

   நீக்கு
 17. அழகான குழந்தை!பர்ஹானாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 18. மருமகள் பர்ஹானாவை வாழ்த்தியமைக்கு நன்றி சுரேஷ்

  பதிலளிநீக்கு
 19. உங்கள் ஆசை மருமகளுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!

  உங்களின் பாசப் பிணைப்பைக் கண்டதும் ஏனோ என் கண்கள் கலங்கிவிட்டன. அதிலும் என் மகனையோ மகளையோ நான் தூக்கி வளர்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அந்த ஏக்கத்தை நிறைவு செய்ய...என்ற இடம் உள்ளத்தை தொட்டது சகோ!

  தங்களின் அன்பு மனத்திற்குக் கிடைத்த ஒரு பரிசு பர்ஹானா!
  தொடரட்டும் உங்கள் பாசப் பிணைப்பு!

  வாழ்த்துக்கள் சகோ!

  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும், மருமகளை வாழ்த்தியமைக்கும் நன்றி

   நீக்கு
 20. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்!

  பதிலளிநீக்கு
 21. அன்புள்ள ஜி,

  தங்களின் பாசமுள்ள பர்ஹானா காணொளியில் கண்டு களித்தோம். பாசங்களும் நேசங்களும் பிரித்தாலும் பிரியாதது.

  தாங்கள் புதருக்குள் மறைந்து... பின் பட்ட அவஸ்தையை அறிந்தோம். ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்பார்கள். மரு(று) மகள் போல் வளர்த்தவளை தற்பொழுது பிரிந்து இருப்பது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ‘மது’ரை தானே...தமிழலால் இணைந்து... தமிழுக்காக பிரிந்து... மீண்டும் தமிழே சேர்த்து வைக்கும்.

  இன்று பிறந்தநாள் காணும் குழந்தைக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.


  இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
  தொட்டிலில் கட்டிவைத்தேன்
  அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
  மெல்லென இட்டு வைத்தேன்
  நான் ஆராரோ என்று தாலாட்ட
  இன்னும் யாராரோ வந்து பாராட்ட

  ஆறு கரை அடங்கி நடந்ததில்
  காடு வளம் பெறலாம்
  தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
  நாடும் நலம் பெறலாம்........!

  நன்றி.
  த.ம.10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே....
   தாலாட்டு கீதத்தோடு வாழ்த்து மழை பொழிந்தமைக்கு எமது நன்றி.

   நீக்கு
 22. உங்கள் அன்பு மருமகள் பேபி பர்ஹானாவுக்கு என்னுடையை உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மீசை மீது உங்களுக்கு வந்த ஆசை பற்றி இதுவரை சொல்லாவிடின், ஒரு பதிவாக எழுதவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹ்ஹா... ஹா மீசையைப்பற்றி நிறைய எழுதலாம் எழுதுகிறேன் மருமகளை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே... தொடர்ந்தால் நலம்

   நீக்கு
 23. நீங்க மீசை வச்ச குழந்தை பாஸ்... பல்லாண்டு பர்ஹானா வாழ வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சிறிது காலமாக வரவில்லையே மருமகள் பிறந்தநாள் பதிவுக்காவது வாழ்த்த வந்தீர்களே நன்றி

   நீக்கு
 24. அரபி மொழி அறிந்திருந்தால், உண்மையை சொல்லமுடிந்தது. இல்லையென்றால், நிலைமை கொஞ்சம் மோசமாகத்தானே ஆகி இருக்கும்! எது எப்படியோ? அன்பிருக்கும் இடத்தில் குழந்தைகள் இருக்கும். தங்களின் பாசப்பிணைப்பில் சிக்குண்ட குழந்தைக்கு ஆசிகள் பல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தோழரே மோசமாக சாத்தியமில்லை கொஞ்ச அலைய வேண்டியது வந்திருக்கும் காரணம் தவறு செய்யாதவன் இங்கு பயப்பட வேணஅடிய அவசியமில்லை குழந்தையை ஆசீர்வதித்தமைக்கு நன்றிகள் பல...

   நீக்கு
 25. மருமகள் பர்ஹாணாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .!!
  நீங்க எழுதியதை வாசிக்க கனத்தது மனம். நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு நல்லதே நடக்கும் அண்ணா ஜி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 26. உங்கள் மருமகள் மதுரையின் மகள் ஆனதில் எனக்கு சந்தோஷம்.இரட்டை வாழ்த்துகள்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா பகவானின் வாழ்த்து தாமதமாகி விட்டதே.... அதனால்தான் இரட்டையா ?

   நீக்கு
 27. தங்களின் மருமகள் பர்ஹானாவுக்கும் ..பர்ஹானாவின் மாமாவுக்கும் வாழ்த்துக்கள்!!!..

  பதிலளிநீக்கு
 28. வணக்கம்
  ஜி

  குழந்தைகள் என்றால் குது கலந்தான்... மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
  த.ம14
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 29. மிகவும் இக்கட்டான சூழ்நிலை, great escape.............

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் சகோ,
  சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் எதிர்நோக்கும் அந்த அசாத்திய தையிரியம்,,,,,,,,,,, வாழ்த்துக்கள் சகோ,
  என் மகனுக்கும் இதே தேதி தான், இதே வயது தான் வாழ்த்துக்கள் தங்கள் குட்டி செல்லத்திற்கு.
  புகைப்படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் தளத்தில் கண்டேன் தங்களின் மகனுக்கும் எமது வாழ்த்துகள்.

   நீக்கு